“மகனே… காலங்காத்தால உனக்கு ஃபோன் பண்ணி இப்படி ஒரு செய்தியை சொல்றதுக்கு மன்னிக்கணும். உங்கம்மாவோட வாழ எனக்கு பிடிக்கலே. என்னோட 35 வருட திருமண வாழ்க்கை கசந்துடுச்சு. சீக்கிரம் அவளை விவாகரத்து பண்ணப்போறேன்!”
மகன் அதிரிச்சியில் உறைந்து போகிறான். “என்னப்பா… சொல்றீங்க நீங்க?”
“இனிமே அவ முகத்துல முழிக்க கூட எனக்கு விருப்பம் இல்லே! பட்டதெல்லாம் போதும்னு முடிவு பண்ணிட்டேன் மை டியர் சன்!”
தீர்மானமாக சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிடுகிறார் தந்தை.
இவன் உடனே ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்கைக்கு போன் செய்கிறான்.
“அப்பா போன் செஞ்சி அம்மாவை டைவோர்ஸ் பண்ணப்போறேன்னு சொல்றார்… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே…”
“என்னது……….. விவாகரத்தா? அதுவும் இந்த வயசுல? அவங்களுக்குள்ளே அடிக்கடி சின்ன சின்ன பிரச்சனை வரும் ஆனா அது இப்படி போய் முடியும்னு நான் எதிர்பார்க்கலை அண்ணா. சரி விடுங்க இதை நான் டீல் பண்றேன்!”
உடனே சென்னையில் உள்ள அப்பாவுக்கு ஃபோன் செய்கிறாள் மகள்.
“ஏன் என்னாச்சு உங்களுக்கு? என்னையும் அண்ணாவையும் நிம்மதியா இருக்க விடுறதில்லேன்னு முடிவு பண்ணிட்டீங்களா? நீங்க விவாகரத்தெல்லாம் பண்ணமுடியாது. அதுக்கு நாங்க அனுமதிக்க முடியாது. ரெண்டு பேரும் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு மெட்ராஸ் வர்றோம். நாங்க அங்கே வர்ற வரைக்கும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. புரிஞ்சதா?”
கோபமாக பேசிவிட்டு ஃபோனை கட் செய்துவிடுகிறாள்.
இந்த பக்கம் அப்பா போனை வைத்துவிட்டு மனைவியிடம் “ஒகே…செல்லம்… ரெண்டு பேரும் தீபாவளிக்கு வர்றாங்க… அதுவும் அவங்க சொந்த செலவுல!” என்கிறார் கண்ணடித்துக்கொண்டே!
இன்னும் சில ஆண்டுகளில் (ஏன் இப்போது கூட!) அயல்நாடுகளில் பணிபுரியும் என்.ஆர்.ஐ. மகன்களையும் மகள்களையும் தங்களை பார்க்கவும் பண்டிகைக்கு வீட்டுக்கு வரவழைக்கவும் இது போன்ற தந்திரங்களைத் தான் பெற்றோர்கள் பயன்படுத்தவேண்டியிருக்கும்.
SAVINGS, TAX, LOAN, PROJECT என்று பல்வேறு காரணங்களை கூறி பெற்றோர்களை பார்ப்பதை ஒத்திப்போட்டுக்கொண்டே செல்லும் பிள்ளைகளை பின்னர் வேறு எப்படித் தான் வரவழைப்பதாம்?
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================
நல்ல வித்தியாசமான கற்ப்பனைதிரன் ….
அருமை ..
சிம்ப்லி சூப்பர் ..
-மனோகர்
டியர் சுந்தர்ஜி
Monday ஸ்பெஷல் superb நிகழ் காலத்திற்கு பொருந்தும் அருமையான கதை.
நன்றி
உமா
டியர் சுந்தர், மிகவும் அருமையான கருத்துல செய்தி .இது கொஞ்சம் எனக்கும் பொருந்தும்.
அருமையான பதிவு நன்றி சுந்தர் சார் …
Dear Anna,
Vanakkam . Vazhga Valamudan.
Nice article .
With Best Wishes,
Kannathasan
ஹா.. ஹா.. nice .
அருமையான கருத்து வாழ்த்துக்கள்