நமது சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நினைவூட்டுவதே இதன் நோக்கம்.
காந்தியடிகளிடம் கொள்கை ரீதியாக மாற்றுக்கருத்து கொண்டோர் கூட அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர் காந்தியடிகள் என்றால் மிகையல்ல.
“இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” – ஐன்ஸ்டீன் காந்தியடிகள் பற்றி கூறியது!
1948 ஜனவரி 30ம் தேதி, காந்தியடிகள், சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியடிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்நாளே தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
நம் தலைவர்கள் தியாகங்கள் பல புரிந்து அல்லும் பகலும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் அருமையை உணர்வோம்.
மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே !
சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
எதையும் எதிர்பார்க்காத எதற்கும் துணிந்த தியாக சீலர்களின் நரம்புகளில் ஏற்றப்பட்டது தான் – பாரதத் தாயின் மணிக்கொடி!
சுதந்திரத்திற்க்காக உயிர் தியாகம் செய்த அந்த அக்கினிக் குஞ்சுகளின் மூச்சில் தான் இன்றும் நம் கொடி பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்கிறது.
சாதி, சமய, கலாச்சார வேறுபாடுகளை மறந்து அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
[END]
Dear Sundarji
Thank u for your information on Martyr’s Day.
Regards
Uma
வணக்கம் சுந்தர் ,
Rapeயய் கண்டிக்கலாம் ஆனால்அது நடப்பதை வெளிப்படையாக சொல்கிறோம் என்று காட்சி படுத்துதல் சரியாக தெரியவில்லை . நம் பாரத மாதாவை இந்தக் காட்சியில் காண்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து இந்த கார்டூன்னை எடுத்து விடுங்களேன் . நன்றி
அன்பு நண்பன்
செல்வகணபதி.வே
done. thanks.
I accept your views sir.
– Sundar
உங்களின் புரிதலுக்கு மற்றும் அதை செயல்படுத்தியதற்கும் மிக்க நன்றி சுந்தர்