Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > சிவபெருமான் கட்டச் சொன்ன பெருமாள் கோவில் — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

சிவபெருமான் கட்டச் சொன்ன பெருமாள் கோவில் — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

print
மிழ்நாட்டில் உள்ள ‘திரு’ என்கிற எழுத்துக்களில் துவங்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பழமை வாய்ந்த ஆலயம் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு ஆலயத்தின் பின்னணியிலும் ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் வரலாறும் இருக்கும். நம் ஆலயங்கள், வெறும் கற்களால் கட்டப்பட்டவை அல்ல. பக்தியும், பொதுநலனும் சேர்த்து கட்டப்பட்டவை. ஆகையால் தான் பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்லும்போதெல்லாம் ஒருவிதமான அதிர்வலைகளை நம்மால் உணரமுடிகிறது.

அப்படி ஒரு திவ்யமான வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கோவிலைப் பற்றி தற்போது பார்ப்போம்.

அவரவருக்குரிய சம்பிரதாயங்களை தவறாமல் பின்பற்றும் அதே நேரம் மூர்த்தி பேதங்களை ஒழித்து அனைத்து தெய்வங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது கீழ்கண்ட வரலாற்றை படித்தால் உங்களுக்கு புரியும்.

வரம் கேட்ட பக்தனை ஹரியிடம் அனுப்பிய ஹரன் !

Koviladi

பரிசரவசு என்ற பாண்டிய மன்னன், மதம் பிடித்த ஒரு யானையை வேட்டையாடச் சென்றபோது, தவம் செய்து கொண்டிருந்த ஒரு யோகியைத் தவறுதலாகக் கொன்று விட்டான். அதனால் மனமுடைந்த அவன், தன் அரச பதவியைத் துறந்து, பாவ விமோசனம் வேண்டி, திருப்பேர் நகரில் கடுந்தவம் செய்தவுடன், சிவபெருமான், மன்னன் முன் தோன்றி, அருளாசிகள் வழங்கி, அவ்விடத்தில் பெருமாள் கோயில் ஒன்றைக் கட்டுமாறு பணித்தார்.

ஸ்ரீமன் நாராயணன், அவனுக்குப் பாவ விமோசனம் அளிக்கும் வரை, தினம் பெருமாளைத் தொழுது, பிராமணர்களுக்கு அப்பத்தையும், பாயசத்தையும் பிட்சையாக வழங்குமாறும் சிவபெருமான் கூறினார். அதன்படி, திருப்பேர் நகரில் கோயில் கட்டிய உபரிசரவசு, தினம் அவ்வாறே பிட்சை வழங்கி வந்தான். ஒரு நாள், பெருமாள் ஓர் ஏழை பிராமணர் உருவில் மன்னன் முன் வந்து, தான் நெடுந்தூரத்தில் இருந்து வருவதாயும், கடும்பசியில் உள்ளதாயும் கூறி, உணவளிக்குமாறு வேண்டினார். நூறு பேருக்கான உணவை (அப்பங்களை) உண்ட பின்னரும் பெருமாள் தன் பசி தீர்ந்தபாடில்லை என்றுரைத்ததால், மேலும் உணவு சமைத்து வழங்க சற்று நேரம் ஆகுமென்பதால், பெருமாளை தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மன்னன் வேண்டினான்.

Appakudathan

அதே நேரத்தில், தன் பக்தனான மார்க்கண்டேயரின் முன் தோன்றிய சிவபெருமான், திருப்பேர் நகரில், ஒரு ஏழை பிராமணர் வடிவில், பெருமாள் வந்து தங்கியிருக்கும் விஷயத்தை (மார்க்கண்டேயர் தனது 16-வது வயதில் மரணம் அடைவார் என்று விதிக்கப்பட்ட காரணத்தின் பேரில்) அவரிடம் கூறி, அவருக்கு இறவா வரம் கிடைக்க, பெருமாளின் அருளாசியைப் பெறுவதே ஒரே வழி என்று கூறி மறைந்தார்.

மன்னனின் வீட்டுக்குச் சென்ற மார்க்கண்டேய ரிஷி, சயன கோலத்தில், ஒரு கையில் அப்பக்குடத்துடன் இருந்த ஏழை பிராமணரை நூறு முறை பணிந்தெழுந்தார். உடனே பெருமாள் அவருக்குத் தன் சுயரூபம் காட்டி, வலக்கையை உயர்த்தி அவரை ஆசிர்வதித்து, இறவா வரமளித்தார். உபரிசரவசுவுக்கும் சாப விமோசனம் வழங்கினார்.

மார்க்கண்டேயருக்கு ஆசி வழங்கிய அத்திருக்கோலத்திலேயே, திருப்பேர் நகரில் மூலவர் காட்சியளிக்கிறார். பெருமாளுக்குத் தினமும் இரவில் அப்பம் பிரசாதமாக நைவேத்யம் செய்வதும் மரபானது. மார்க்கண்டேய ரிஷி இத்திருத்தலத்தில் இறவா வரம் வேண்டிப் பெற்றதால், அவர் தினம் ஸ்நானம் செய்த குளம் ‘மிருத்யு விநாசினி’ என்று போற்றப்படுகிறது.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : விதி முடக்கிபோட்டுவிட்டபோதும் ஒன் மேன் ஆர்மியாக ஜெயித்துக் காட்டியிருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி சூரியா அவர்கள்.

நண்பர் விஜய் ஆனந்த் சூரியாவுக்கு நம் தளம் சார்பாக 'தினசரி பிரார்த்தனை' படம் பரிசளிக்கிறார்.
நண்பர் விஜய் ஆனந்த் சூரியாவுக்கு நம் தளம் சார்பாக ‘தினசரி பிரார்த்தனை’ படம் பரிசளிக்கிறார்.

இவரைப் பற்றி ஏற்கனவே நமது தளத்தில் பதிவு வெளியாகியிருக்கிறது. பார்க்க : “வணக்கம் அண்ணா!”

சூரியாவை பொருத்தவரை அவருக்கு தற்போது வயது 23. ஆனால் ஒரு 40 வயது மனிதருக்குரிய பக்குவம் அவரிடம் காணப்படுவது அதிசயம். அவருக்கு திக்குவாய் பிரச்னை உள்ளதால் வார்த்தைகள் தடுமாறுகின்றன. ஆனால் நோக்கம் தடுமாறவில்லை. நன்றாக பேச்சு வரக்கூடிய பலர் தங்கள் பேசும் திறனை, அரசியல், சினிமா, வம்பு என வெட்டிப் பேச்சு பேசுவதில் கழிக்கின்றனர். ஆனால், இவரோ அர்த்தத்துடன் தான் பேசுகிறார். இவரது ஒவ்வொரு வார்த்தையும் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய அளவு வைர வரிகள். நமது ஆண்டுவிழாவில் இவர் பேசும்போது கேளுங்கள். பிறகு புரியும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுகொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். திரு.சூரியாவுக்கு நம் நன்றிகள்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Brother suffering from diabetes

Sir,

My brother Sittampalam Kasinathan, (63) who lives in Jaffna Sri Lanka lost his both legs because of diabetes. He was seperated fro her wife and three children for seven years. Just now his family come and see him in hospital. Last week he had a heart attack. I pray GOD to my brother get well and live with his family for long time and happily and healthily.

– Sylvie Usha

==================================================================

இழந்த சொத்துக்களை பெறவேண்டும்!

சுந்தர் சார் & ரைட்மந்த்ரா வாசகர்ளுக்கு வணக்கம்.

என் உடன் பிறந்தவர்களே என் கையெழுத்தை மாற்றிப் போட்டு என் பாட்டனார் வழி சொத்துக்களை ஏமாற்றி பறித்துக்கொண்டனர். உடல் நலமில்லா கணவருடன்  நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். பிள்ளைகள் இன்னும் வளர்ந்து ஆளாகவில்லை. கோர்ட்டில் வழக்கு  தொடர்ந்திருக்கிறேன். ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று தெரியவில்லை. என் கணவர் விரைவில் நலம் பெறவும், வழக்கில் நான் வெற்றி பெறவும் என் சொத்துக்கள் எனக்கு கிடைக்கவும் பிரார்த்திக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

நன்றி!

வசந்தா & அருண்குமார் , சேலம்

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2014/10/Bharathi-Blood.jpgபொது பிரார்த்தனை

இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டும் !

“என்னிடம் 100 இளைஞர்களைத் தாருங்கள். இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்” என்றார் விவேகானந்தர். இளைஞர் சக்தியின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு அது. ஆனால் இன்றைய இளைஞர்களின் செயல்கள், நம்மை வெட்கி தலை குனிய வைக்கிறது. சமீபத்தில் நடந்த சில செயல்களே அதற்கு உதாரணம்.

பார்க்க : நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…

மது போதையும் சினிமா போதையும் இளைஞர்களை கட்டிப் போட்டிருக்கிறது ! ரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்த பெற்றோரின் கனவுகளில் மண்ணை போட்டுவிட்டு அபிமான நடிகருக்காக ஒரு இளைஞன் உயிரை விடும் கொடுமை இங்கு மட்டுமே சாத்தியம். “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி” என்று இந்த நாடு காத்திருக்க, அவர்களோ தகுதியற்ற விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தையும், திறமையையும் வீணடிக்கிறார்கள். நடிகர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடும் எத்தனை பேருக்கு தங்கள் பெற்றோரின் பிறந்த நாள் தெரியும்? நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த வ.உ.சி, பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் பிறந்தநாள் தெரியும்?

இந்த நிலை மாற வேண்டும். உலக நாடுகள் இந்தியாவின் இளைஞர் சக்தியை பயம் கலந்த வியப்புடன் பார்க்கும் நிலை வரவேண்டும். இளைஞர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, தங்கள் அறிவையும் திறமையையும் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். இந்தியாவை உலக அளவில் வல்லரசாக தலை நிமிரச் செய்ய வேண்டும் !

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

==================================================================
http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg சில்வி உஷா அவர்களின் சகோதரர் சித்தம்பலம் காசிநாதன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சர்க்கரை நோய் பாதிப்பு நீங்கி, குடும்பத்துடன் அவர் சௌக்கியமாக சந்தோஷமாக ஒற்றுமையுடன் வாழவும், சேலத்தை சேர்ந்த வாசகி வசந்தா மற்றும் அருண்குமார் தம்பதிகளின் சொத்து பிரச்னை தீர்ந்து அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவும் இழந்த சொத்துக்களை அவர்கள் திரும்ப பெறவும், அவர் கணவர் அருண் குமார் அவர்கள் நலம் பெறவும், நம் நாட்டில் இளைஞர்கள் மது போதையும் சினிமா போதையும் விடுத்து நல்வழியை நாடவும் இறைவனை வேண்டுவோம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் சூரியா அவர்கள் மேன்மேலும் பல சாதனைகள் நிகழ்த்தவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கோவையை சேர்ந்த சாதனையாளர் & ‘மாற்று(ம்) திறனாளி’ நண்பர் ஜெகதீஷ் அவர்கள்.

[END]

8 thoughts on “சிவபெருமான் கட்டச் சொன்ன பெருமாள் கோவில் — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

  1. மார்கண்டேயருக்கு ஆசி வழங்கிய திருப்பேர் பெருமாள் கோவில் பற்றி நம் தளம் வாயிலாக அறிவதில் மிக்க மகிழ்ச்சி.

    இந்த கோவில் அமைவிடம் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் சூரியவிற்கு எமது வாழ்த்துக்கள். சூரிய பல அறிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஆக இறைவன் அருள் புரிய வேண்டும்

    மற்றும் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருப்பவர்களுக்காகவும் மற்றும் லோக ஷேமத்திர்க்காகவும் பிரார்த்தனை செய்வோம். இளைஞர் சமுதாயம் பொறுப்புள்ள மனிதர்களாக மாற வேண்டும்,

    மகா பெரியவா அனைவரின் கோரிக்கையையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

    லோக சமஸ்த சுகினோ பவந்தோ

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  2. என்னுடைய பிரார்த்தனையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. இப்போதே பாதி பிரச்சனை தீர்ந்தது போன்ற மனநிறைவு ஏற்படுகிறது.

    ஹரி வேறு ஹரன் வேறு அல்ல என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது திருப்பேரூர் கோவில் வரலாறு.

    எப்படிப்பட்ட ஒரு நாட்டில் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது.

    இந்த வார பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கும் சில்வியா உஷா அவர்களின் சகோதரர் சித்தம்பல காசிநாதன் அவர்கள் குணம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மேலும் இளைன்ஞர்கள் சினிமா மோகம், மது மோகம் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை பெறவும் வேண்டிக்கொள்கிறேன்.

    பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சூரியா அவர்களுக்கு என் நன்றி. பிரார்த்தனை செய்யப்போகும் நம் தல வாசகர்களுக்கும் என் நன்றி.

    வசந்தா அருண், சேலம்

  3. அருமையான கதை. அற்புதமான கருத்து. மார்கண்டேயரை எமனின் பாசக்கயிற்றிமிருந்து சிவபெருமான் காத்த விஷயம் தான் இதுவரை எனக்கு தெரியும். அவருக்கு பின்னே இப்படி ஒரு வரலாறு ஒளிந்திருப்பது தெரியாது. இன்று தெரிந்துகொண்டேன்.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

    ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்தவுடன் மனம் மிகவம் லேசாகிவிடுகிறது. அது இந்த பிரார்த்தனையில் தொடர்ந்து ஈடுபகிறவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

    நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. திருப்பேர் பெருமாள் கோவில் பற்றிய கதை மிகவும் அருமையானது..
    இவ்வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவரது
    வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திப்போம்..
    ஓம் சாய் ராம்

  5. இந்த வார பொது பிரார்த்தனையில் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை இறைவனுக்கே ஒரு பெரிய சவால். வேலை வெட்டி இல்லாமல் திரியும் உதவாக்கரைகள் செய்யும் அற்ப விஷயங்களை இறைவன் எப்படி சரிசெய்ய முடியும்.

    இருந்தாலும் நம் நாட்டின் இளைஞர்களின் நல்வாழ்விற்காக நம் தாய் நாட்டின் நல்ல எதிர்காலத்திற்க்காக பிரார்த்தனை செய்கிறேன்.

  6. வணக்கம்,

    இன்று நடைபெறும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பது எனது பாக்கியமாகக் கருதுகிறேன். என்னை வாழ்த்தி ஆசிர்வதித்து இந்நிலைக்கு உயர்த்திய அனைத்து நலுள்ளங்களுக்கும் வாய்ப்பளித்த ரைட் மந்தர தளத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு மற்றொரு கோரிக்கையையும் இப்பிரார்த்தனையில் சேர்த்துக்கொள்ளுமாறு இரு கரம் கூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

    வாழ வழி இன்றித் தவிக்கும் என் போன்றோருக்காக (மாற்றுத் திரனளிகளுக்காக) ஒரு நிறுவனம் ஆரபித்து அவர்களுக்கு வாய்ப்பளித்து அவரவர்களே முன்னெரச் செய்ய வேண்டும் என்ற எனது முயற்ச்சிகள் உங்கள் ஆதரவால் வெற்றிப்பெற பிரார்த்தியுங்கள்.

    வறுமைக்குப் பிறந்தவரை வாழ்விக்கச் சக்திக்கொடுங்கள்…
    பள்ளத்தில் கிடப்பவரை மெடேற்றச் சக்திக்கொடுங்கள்…

    பணியுடன்,
    சூர்யா
    97907 41542

  7. திருப்பேர் பெருமாள் கோவில் பற்றிய கதை மிகவும் அருமையானது..சகோதரர் சூர்யாவிற்கு வாழ்த்துகள். அவரது கோரிக்கையுடன் இவ்வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவரது வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திப்போம்..

  8. சேலம் வசந்தாஅருண்குமார்……. நம்பிக்கை துரோகம் , செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர், தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க, தங்களுக்கு நீதி கிடைக்க கொல்லங்குடி வெட்டுடையா காளி திருக்கோயில்[சிவகங்கை ,காளையார் கோயில் ,நாட்டரசன் கோட்டை அருகில் உள்ளது ] சென்று ,காசு வெட்டி போட்டு வழிபட்டு வாங்க ,90 நாட்களில் நல்ல செய்தி உங்களை வந்தடையும் .”நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு’ என்று சொல்லும் வழக்கம் இங்கு தான் ஆரம்பித்தது .வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை “நீதிபதி’ என்றே அழைக்கின்றனர்.அங்கு உள்ள பைரவர் வழிபாடும் செய்யுங்க… .ஒருமுறை பகைவர்களை வெல்லும் சக்தியை உங்களுக்கு தரும் மதுரை மடப்புரம் காளியம்மனை தரிசனம் செய்து வாருங்கள் அங்கும் காசு வெட்டி போட்டு வழிபடுங்கள் .மதுரை மடப்புரம் காளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது.கூடவே தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடும் செய்து வாருங்கள் .பித்ருகள் வழிபாடு ,குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் ….விரைவில் உங்கள் சொத்து உங்களை தானே தேடி வரும் ..பதிகம்களை படித்து வாருங்கள் …..
    திருச்சிற்றம்பலம்

    பித்தாபிறை சூடீபெரு
    மானே அருளாளா
    எத்தான்மற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னை
    வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அத்தாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    நாயேன்பல நாளும்நினைப்
    பின்றிமனத் துன்னைப்
    பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
    லாகாவருள் பெற்றேன்
    வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆயாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    மன்னேமற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னைப்
    பொன்னேமணி தானேவயி
    ரம்மேபொரு துந்தி
    மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அன்னேஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    முடியேன்இனிப் பிறவேன்பெறின்
    மூவேன்பெற்றம் ஊர்தீ
    கொடியேன்பல பொய்யேஉரைப்
    பேனைக்குறிக் கொள்நீ
    செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அடிகேளுனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    பாதம்பணி வார்கள்பெறும்
    பண்டம்மது பணியாய்
    ஆதன்பொருள் ஆனேன்அறி
    வில்லேன் அருளாளா
    தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆதீஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    தண்ணார்மதி சூடீதழல்
    போலும்திரு மேனீ
    எண்ணார்புரம் மூன்றும்எரி
    உண்ணநகை செய்தாய்
    மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அண்ணாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    ஊனாய்உயிர் ஆனாய்உடல்
    ஆனாய்உல கானாய்
    வானாய்நிலன் ஆனாய்கடல்
    ஆனாய்மலை ஆனாய்
    தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆனாய்உனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    ஏற்றார்புரம் மூன்றும்எரி
    உண்ணச்சிலை தொட்டாய்
    தேற்றாதன சொல்லித்திரி
    வேனோசெக்கர் வானீர்
    ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆற்றாயுனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    மழுவாள்வலன் ஏந்தீமறை
    ஓதீமங்கை பங்கா
    தொழுவார்அவர் துயர்ஆயின
    தீர்த்தல்உன தொழிலே
    செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அழகாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    காரூர்புனல் எய்திக்கரை
    கல்லித்திரைக் கையால்
    பாரூர்புகழ் எய்தித்திகழ்
    பன்மாமணி உந்திச்
    சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆரூரன்எம் பெருமாற்காள்
    அல்லேன்எனல் ஆமே.
    திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *