Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > “லைஃபை என்ஜாய் பண்ணுங்க தப்பு இல்லே, ஆனா…” – திரு.பஞ்சு அருணாசலம் அவர்களுடன் சில மணித்துளிகள்!

“லைஃபை என்ஜாய் பண்ணுங்க தப்பு இல்லே, ஆனா…” – திரு.பஞ்சு அருணாசலம் அவர்களுடன் சில மணித்துளிகள்!

print
பிரபல தயாரிப்பாளரும் கவிஞருமான திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் (ரைட்மந்த்ரா துவங்குவதற்கு முன்) தி.நகர் பாகீரதியம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடியது மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. அவரை நாம் கண்ட பேட்டியிலிருந்து முக்கியமான சில EXCERPTS.

Panju Aruncahalam Bheemaradha Shanthi
பஞ்சு அருணாசலம் அவர்களின் பீமரத சாந்தியின்போது துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள்

பஞ்சு அருணாச்சலம் அவர்களை பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்டவர். இசைஞானி இளையராஜாவை ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தி தமிழ் திரையுலகின் தலையெழுத்தை மாற்றியவர். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து ஆரம்ப காலம் முதல் 90களின் மத்தி வரை பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர்.

தற்காலங்களில் (அதாவது நாம் பேட்டி கண்டபோது) திரையுலகம் செல்லும்போக்கு, அவரது மனதில் ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்தியிருந்ததை பேட்டியின்போது உணர்ந்துகொள்ளமுடிந்தது. மக்களின் பல்ஸ் தெரிந்த, இண்டஸ்ட்ரியின் நெளிவு சுளிவுகள் ஓரளவு அறிந்த இவரைப் போன்ற சீனியர் தயாரிப்பாளர்கள் மறைவது திரையுலகிற்கு தான் நஷ்டம்.

இன்றைய இளைஞர்களுக்கு அவர் சொன்ன அறிவுரை, அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்று.

========================================

Panju sir copy2“நல்லாயிருக்கிறதை ரசிங்க, நல்லாயில்லாததை விட்டுடுங்க!”

– மனம் திறக்கிறார் பஞ்சு அருணாச்சலம்

“இப்போ உள்ள சூழ்நிலைல, வளர்ச்சி என்பது ஒரு காளான் மாதிரி. அது கிடுகிடுனு வந்துடும். ஆனா நிரந்தரமா அதாவது ஒரு 20, 30 வருஷத்துக்கெல்லாம் இருக்காது. நடிப்பு மட்டுமில்லே எந்தத் துறையிலும் இனிமே நீண்ட நாள் தாக்கு பிடிக்க முடியாது. முன்னெல்லாம் பாட்டு பாடனும்னா… சிங்கரா வரணும்னா நல்லா பாடனும். ஒரே பாட்டை சோலோவா பாடனும். முழு சாங்கும் ஒரே டேக்ல ஓ.கே. ஆகணும். இப்போ அப்படி கிடையாது. பாடவே தெரியலேன்னாலும், குரல் நல்லா இருந்தா கொஞ்ச கொஞ்சமா பாட வெச்சு அதை கம்ப்யூட்டர்ல ஒண்ணா சேர்த்து ஒரு ஃபுல் பாடலா பாட வைக்கிறதுக்கு டெக்னாலஜி வந்துடுச்சு. சினிமாவும் அப்படித்தான். கஷ்டப்பட்டு ஃபைட் பண்ணனும், நடிக்கணும் அப்படியெல்லாம் இனிமே இல்லே. “ஒரு 10 நாள் கால்ஷீட் கொடுங்க போதும். மீதியைஎல்லாம் நாங்களே பார்த்துக்குவோம் அப்படின்னு சொல்லுவாங்க.” பாதி ஃபைட் இவங்க பண்ணினா… மீதி ஃபைட்டை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பண்ணிடுறாங்க. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா… கம்ப்யூட்டரே எல்லாம் பாத்துக்கும். நடிகர்களை உருவாக்குறது… அவங்களை நடிக்க வைக்கிறது எல்லாம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்லயே நடந்துடும். ஏற்கனவே அமெரிக்காவுல இந்த தொழில்நுட்பம் வந்துடுச்சு. இங்கேயும் சீக்கிரம் வந்துடும். இப்போதைக்கு அந்த தொழில் நுட்பம் ரொம்ப காஸ்ட்லி. அது வரும்போது, ரவிவர்மாவின் ஓவியத்துல இருக்குற உருவங்களுக்கு கூட உயிர் கொடுத்து நடிக்கவைக்க முடியும். எதிர்காலத்துல கதாநாயகன், கதாநாயகி எல்லாம் கம்ப்யூட்டரே உருவாக்கிடும்.”

“அதே மாதிரி கஷடப்பட்டு சம்பாதிக்கணும் என்கிற அவசியம் இருக்காது. ஒரே ஒரு பாட்டுல புகழ் வந்துடும். ரெண்டு விளம்பரத்துல நடிச்சு சம்பாதிச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க. ஆனா அன்னைக்கு அப்படியில்லே. ‘அன்னக்கிளி’ (1976) படத்துக்கப்புறம், இளையராஜா ஃலைப்ல செட்டிலாகுறதுக்கு 100 படம் பண்ணவேண்டியிருந்தது. 3500, 4000, 5000, 6000, 8000, 10,000 இப்படித்தான் படிப்படியா சம்பளம் வாங்கிட்டு இருந்தாரு. So, இளையராஜா ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறதுக்கு 100 படம் பண்ணவேண்டியிருந்தது. ஆனா இன்னக்கு? ஒரே பாட்டுல கோடிக்கணக்குல வாங்குற அளவுக்கு போய்ட்டாங்க.”

Sundar _Panchu

“இப்போ இருக்குற கலைஞர்கள் வேகமா வளர்றாங்கன்னு சொல்றதைவிட அவ்வளவு வேகமா வர்றாங்கன்னு தான் சொல்வேன். ஜனங்களும் அப்படித்தான் இருக்குறாங்க. ஒரு பாட்டு நல்லாயிருக்குன்னு சொன்னா அதை ரசிக்கிறாங்க. அடுத்த மாசம் வேற ரெண்டு பாட்டு வந்து நல்லாயிருந்தா அதை ரசிக்கிறாங்க. இதை மறந்துடுறாங்க.”

“இந்த வருஷம் இருக்குற மியூசிக் டைரக்டர் அடுத்த வருஷம் இருக்குறதில்லே. ஒரு வருஷத்துக்கு எத்தனை மியூசிக் டைரக்டருங்க இங்கே வர்றாங்க… அந்த காலத்துல ஒரு வருஷத்துக்கு ரெண்டு பேர் வந்தாலே பெரிய விஷயம். ஏன்னா அப்போ, இசையமைப்பாளரா வர்றவங்களுக்கு எல்லாம் விஷயமும் தெரிஞ்சிருக்கணும். கண்டவன் மியூசிக் டைரக்டரா வர முடியாது. ஆனா இன்னைக்கு பார்த்தீங்கன்னா… மியூசிக்ல மொத்தம் 75% அவங்களுக்கு ஹெல்ப் பண்றது மெஷினரீஸ் தான். அதாவது கம்ப்யூட்டர், ஆட்டோமேடிக் கீபோர்ட் இப்படி. உலகத்துல எத்தனை விதமான இசைக்கருவிகள் இருக்கோ அத்துனை விதமான இசைக்கருவிகளும், அத்துனை விதமான தாள வாத்தியங்களின் சவுண்டும் ஏற்கனவே ப்ரீ-ரெக்கார்ட்டட்டா வருது. இந்த பீட் நல்லாயிருக்கா… அந்த பீட் நல்லாயிருக்றா… அப்படின்னு போட்டு பார்த்து அதையெல்லாம் சேர்த்து ஒரு பாட்டை உருவாக்கிடுறாங்க. ஆனா அப்போ, இது எல்லாத்தையும் மியூசிக் டைரக்டர் தெரிஞ்சி வெச்சிருக்கணும். இப்போ… மியூசிக் கொஞ்சம் தெரிஞ்சிருந்தாலும் போதும்… மியூசிக் டைரக்டராயிடலாம். எல்லாமே ரெடிமேடா கிடைக்குது. ஏன் சாப்பாடு கூட அப்படி ஆயிடிச்சு. ஃபாஸ்ட் புட் அது இதெல்லாம் கிடைக்குது.”

Panju Aruncahalam Bheemaradha Shanthi 2

Panju Aruncahalam family
குடும்பத்தினருடன் பஞ்சு அருணாசலம் அவர்கள்

“நல்ல படைப்புக்களை ரசிச்சி பாருங்க. வொர்ஷிப் எல்லாம் விட்டுடுங்க. அந்த காலம் முடிஞ்சி போச்சு. அப்போ பொழுதுபோக்கு என்பது சினிமா மட்டுமே. வேற எதுவும் இருக்கலே. ஆனால் இப்போ பொழுதுபோக்குக்கு நிறைய விஷயங்கள் வந்துடுச்சு. உலகம்னா என்னன்னே மக்களுக்கு அந்தக் காலத்துல தெரியாது. வெளிநாடுன்னாலே சிங்கப்பூர் தான் எல்லாருக்கும் அப்போ. இப்போ வீட்டுக்கு ஒருத்தரு யூ.எஸ்.போறாங்க. So, நல்லாயிருக்கிறதை ரசிங்க. நல்லாயில்லாததை விட்டுடுங்க. அதை திட்டவும் வேணாம். அதை ஆஹா…ஓஹோன்னு புகழ்றதும் வேண்டாம். உங்கள் வேலையையும் கெடுத்துகிட்டு….எதுக்கு?”

“மூணு படம் ஓடுறதுக்குள்லே… சூப்பர் டூப்பர் ஹீரோன்னு ஒருத்தரை தூக்கி விடுறதும் வேண்டாம். பொத்னு கீழே போடுறதும் வேண்டாம். அவங்க அவங்க எய்ம்ல கரெக்டா இருப்பாங்க. அவங்க பாட்டுக்கு சம்பாதிச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க. ஆனா உங்க நிலைமை? லைஃபை என்ஜாய் பண்ணுங்க தப்பு இல்லே. டைம் டேபிள் போட்டுக்கிட்டு, உங்கள் வேலைக்கு இடையே பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்க.”

“நீங்க ஒரு ரசிகரா இருந்தா ரசிப்பு தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆனா ஒரு படத்தை பார்த்து ரசிச்சீங்கன்னா… அவனுக்கு தான் என் வாழ்க்கைன்னு சொல்லி கெடுத்துக்காதீங்க. சினிமாவை சினிமாவா பாருங்க. குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே சிக்கிக்காதீங்க. வெளியே வாங்க. உலக ரொம்ப பெரிசு. ரசிக்க வேண்டிய விஷயங்கள் உலகத்துல நிறைய இருக்கு.”

பேட்டியின் இறுதியில் அவரிடம் ஆசி பெற நாம் தவறவில்லை. ¶¶

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்!’

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

==========================================================

[END]

3 thoughts on ““லைஃபை என்ஜாய் பண்ணுங்க தப்பு இல்லே, ஆனா…” – திரு.பஞ்சு அருணாசலம் அவர்களுடன் சில மணித்துளிகள்!

  1. நெத்தியடி சார்///

    எல்லோருக்குமே சரியான நேரத்திலே சரியான அட்வைஸ். வாழ்க அவர் புகழ்”’.

    நன்றி,

    சோ ரவிச்சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *