Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? சில விளக்கங்கள்!

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? சில விளக்கங்கள்!

print

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? 

Part 1

டுத்து வரவிருக்கும் சனிப்பெயர்ச்சியை பற்றி ஒரு சார்ட் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வலம் வருகிறது. இந்த ராசிக்கு சுமார், இந்த ராசிக்கு மிகவும் தீமை, இவர்களுக்கு மிக மிகத் தீமை என்றெல்லாம் சார்ட் போட்டு சுற்றிக்கொண்டிருக்கிறது. இதைவிட அபத்தம் வேறு எதுவும் இல்லை.

இவர்கள் கிரகங்களையும் புரிந்துகொள்ளவில்லை… தெய்வத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் புரிந்துகொண்டது – மக்களின் அறியாமை மற்றும் கிரகங்கள் குறித்த அவர்களின் அர்த்தமற்ற அச்சம் இந்த இரண்டையும் தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல ஒரு சனிப் பெயர்ச்சியின் போது நம் வாசர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் அளிக்க வேண்டி இதே போல ஒரு பதிவை அளித்தோம். இன்றும் அதே நம்பிக்கையை பலருக்கு அளிக்கவேண்டியிருக்கிறது. அன்று நாம் சொன்ன பல பாயிண்ட்டுகள் இன்று எந்தளவு பொருந்துகின்றன என்பதை நமது நீண்ட நாள் வாசகர்கள் அறிவார்கள்.

sani-bhagwan

ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். எந்த கிரகத்தையும் காட்டி இப்படி பயமுறுத்துவது, பழிப்பது இதெல்லாம் மிகப் பெரிய பாவம். இவற்றை கண்டு யார் கலங்குகிறார்களோ அவர்கள் தோஷங்கள் அனைத்தும் இப்படி பயமுறுத்துகிறவர்களுக்கு தான் சேரும். ஏனெனில் இதையெல்லாம் யார் செய்கிறார்களோ அவர்களைத் தான் அக்கிரகங்கள் சற்று கடுமையாக அணுகும். (உங்களைப் பற்றி ஒருவர் இல்லாததையும் பொல்லாததையும் உங்கள் சுபாவத்துக்கு மாறாக சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?) எனவே எந்த கிரகத்தையும் பழிக்காதீர்கள்.

அடுத்து சிலர் குறிப்பிட்ட நட்சத்திரங்களை தூஷித்துக்கொண்டே இருப்பார்கள். “இந்த நட்சத்திரம் சரியில்லை… அந்த நட்சத்திரம் சரியில்லை… இது ராசியில்லை… அது ராசியில்லை… அந்த நட்சத்திரத்துல பொண்ணு வேண்டாம்… இந்த நட்சத்திரத்துல பையன் வேண்டாம்..” என்று இவர்களே ஏதோ ஜோதிட சிகாமணிகள் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள். நட்சத்திரங்கள் அனைத்தும் தெய்வாம்சம் மிக்கவை. அவற்றை இப்படி பழித்துக்கொண்டிருந்தால் எந்த நட்சத்திரத்தை அவர்கள் தவிர்க்க நினைக்கிறார்களோ எந்த நட்சத்திரத்தை பழிக்கிறார்களோ அந்த நட்சத்திரத்தில் தான் அவர்கள் வீட்டில் குழந்தைகள் பிறக்கும்.

விரும்பியதை வெறுக்க வைப்பான். வெறுத்ததை விரும்ப வைப்பான் இறைவன் என்பதை மறக்கக்கூடாது.

சனிப்பெயர்ச்சி குறித்த மிரட்டலுக்கு வருகிறோம்…

இந்த மிரட்டலை பார்க்கும் சம்பந்தப்பட்ட ராசிக்கார்கள் பலர் தன்னம்பிக்கையை இழந்து, தெய்வ பக்தியும் குறைந்து ஒரு வித விரக்தியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நம்மிடம் சிலர் பேசும்போதே இதை உணர முடிந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரிக்கத் தான் முடிந்தது.

எதற்கு சனீஸ்வரனை கண்டு இந்த பீதி? காவலரை கண்டால் கள்வன் தானே பயப்படவேண்டும்? நல்லவர்கள் எதற்கு பயப்படவேண்டும்?

சனீச்வரன் பாடாய்படுத்துவான், மிகவும் சிரமம் கொடுப்பான், ஏழரைச் சனியின் போது சிறைத் தண்டனை கூட கொடுப்பான் என்று கூறுவதெல்லாம் உண்மை தான்.

ஆனால் அதெல்லாம் யாருக்கு தெரியுமா?

சனீஸ்வரரை கண்டு யார் பயப்படவேண்டும்?

தீயவைகளையே சிந்தித்து தீயவைகளையே செய்துகொண்டு இருப்பவர்களுக்கு. அவர்கள் தான் பயப்படவேண்டும். அவர்களுக்கு தான் இப்போது நேரம் சரில்லை.

இதுவரை செய்த தவறுகளுக்கெல்லாம் தப்பித்து வந்தவர்கள், இனி செய்யாத தவறுக்கு மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வரும். ‘பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பதெல்லாம் சனிப்பெயர்ச்சியில் தான் நடக்கும்.

இதுவரை அல்லது செய்தாலும் அது நல்லதாய் முடியக் கண்ட தீயவர்கள் இனி நல்லது செய்தாலும் அது அல்லதாய் போய் முடியும். (நல்லது என்றால் புண்ணிய செயல்கள் அல்ல. அவர்களுக்கு லாபம் தரும் என்று கருதி அவர்கள் செய்யும் லௌகீக காரியங்கள். கொடுக்கல் வாங்கல், சொத்து விற்பனை, வாகனம் வாங்குவது etc. etc.,)

* அடுத்தவர்களை பழி சுமத்தி வாழ்ந்து வந்தவர்கள் தாங்கள் வீண் பழிகளில் இனி சிக்குவார்கள்.

* துடுக்கத்தனமாக பேசிக்கொண்டு திரிந்தவர்கள், அந்த துடுக்குத்தனத்தின் காரணமாக பிரச்னையில் சிக்குவார்கள்.

* ஏய்த்து பிழைத்து வந்தவர்கள், குடி கெடுத்து வாழ்ந்து வந்தவர்கள் இனி அவ்வாறு செய்ய முடியாது. அவர்கள் முடக்கப்படுவார்கள்.

* முதியோர்களையும், பெண்களையும், திருநங்கைகளையும், பிராமணர்களையும் கேலி செய்தவர்களுக்கு அதற்குரிய தண்டனையை சனீச்வரன் கொடுப்பான்.

* சுயநலமே வாழ்க்கை என்று கருதி, தான தர்மங்களில் ஈடுபடாமல், தன் மனைவி மக்களுக்கு சொத்து சேர்க்க மட்டுமே நேரத்தை செலவழித்தவன் இனி சனீஸ்வரனிடம் சிக்கி படாத படுவான். இனி அவன் நேரம் வழக்காடு மன்றங்களிலும், வழக்கறிஞர்களிடமும் தான் அதிகம் செலவாகும்.

* சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் விரதம் அனுஷ்டிக்காமல் அன்று வயிறு புடைக்கத் தின்றவனும் (நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் வியாதியஸ்தர்கள் விதிவிலக்கு), இறைவனை தொழாதவனும் ஆலயங்களுக்கு செல்லாதவனும், அறச்செயல்களில் ஈடுபடாதவனும் சனீஸ்வரனிடம் தப்பிக்க இயலாது. அவர்களுக்கு சோதனை மேல் சோதனை தந்து, “உன் கையில் ஒன்றுமில்லை… ஓடு… போ சர்வேஸ்வரனை சரணடை” என்று இறைவனை நோக்கி ஓடவைப்பது சனீஸ்வரனின் முதல் வேலையாக இருக்கும்.

* கேளிக்கையும் கொண்டாட்டமுமே வாழ்க்கை என்று கருதி, அறநெறியை மறந்து, கடமையை புறக்கணித்து, மது மயக்கத்தில் ஆட்டம்போட்டு வந்தவர்கள் வாழ்க்கை இனி ஆட்டம் காணும்.

* ‘காலம் சிவ ஸ்வரூபம்’ என்று கூறுவார்கள். அத்தகைய நேரத்தை வெட்டிப் பேச்சு பேசுவது, வம்பு பேசுவது, புறம் பேசுவது, தகுதியற்றவர்களை புகழ்ந்து பேசுவது, அரசியல் சண்டை சச்சரவு செய்வது, உள்ளிட்ட பயனற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தவர்கள் அதற்குரிய விலையை சனீஸ்வரனிடம் கொடுக்கவேண்டியிருக்கும்.

* பொறாமையின் காரணமாக பிறர் முன்னேற்றத்தை தடுத்தவர்களின் பாடு இனி திண்டாட்டம் தான்.

* தான தர்மங்களில் ஈடுபடாத கருமிகள் தங்கள் சொத்துக்களை கள்வர்களிடம் பறிகொடுப்பார்கள். ‘ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்’ என்பதன் அர்த்தம் இது தான்.

சனீஸ்வரனை கண்டு மேற்படி பாபச் செயல்கள் செய்தவர்கள் தான் பயப்படவேண்டும்.

ஹரியையும் ஹரனையும் சுப்ரமணியனையும் ஒயாமல் தொழும் நாம் ஏன் பயப்படவேண்டும்?

மன்னன் சுண்ணாம்பு கால்வாயில் தள்ளியபோது, “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” கர்ஜித்த நாவுக்கரசரின் வழி வந்தவர்களல்லவா நாம் அனைவரும்?

Part 2

“உங்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை போலருக்கே…”

“உங்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை போலருக்கே…” என்று யாராவது உங்களிடம் சொன்னால், “அது எனக்கில்லை ஊரை அடிச்சி உலையில் போடுறவனுக்கு” என்று தைரியமாக சொல்லுங்கள்.

தான தர்மங்களில் ஈடுபடுபவர்கள், பாப காரியங்களுக்கு அஞ்சுபவர்கள், சிவராத்திரி, ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள், கிரிவலம் செல்பவர்கள், கோ-சம்ரோக்ஷனம் செய்பவர்கள், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவியவர்கள், ஏழை எளியோருக்கு ஆடை தானம் செய்தவர்கள், உதிரம் (ரத்தம்) தானம் செய்பவர்கள், அற்றார் அழிப்பசி தீர்க்கும் அன்னதானம் செய்பவர்கள், ஏழை குழந்தைகளுக்கு சேவை நோக்கோடு வித்தை சொல்லித் தருபவர்கள், அம்பிகை வளர்த்த அறங்களில் ஒன்றையேனும் செய்பவர்கள் இவர்கள் யாரும் சனீஸ்வரனை கண்டு பயப்படவேண்டியதில்லை.

மேலும் ரைட்மந்த்ரா வாசகர்கள் மற்றும் இந்த தளத்தின் கருத்துக்கள் படி வாழ முயற்சிப்பவர்கள் வாழ்ந்து வருபவர்கள் நிச்சயம் கலங்க வேண்டியதில்லை. சரிதானுங்களே? (காரணத்தை வேறொரு பதிவில் சொல்கிறோம்!)

உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை என்று கூறப்பட்டிருந்தால் தயவு செய்து அச்சப்படவேண்டாம். சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மையே செய்யும்.

ஏற்கனவே ஒரு பதிவில் கூறியபடி இந்த சனிப் பெயர்ச்சி போன்ற கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை ஒரு எச்சரிக்கையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதுவே இறுதியானதல்ல. முடிவும் அல்ல.

ஒரு ஊருக்கு போகிறீர்கள். பாதை எப்படி இருக்கும் என்று தெரியாது. “இன்னின்ன இடத்தில் இன்னின்ன தடைகள் இருக்கும்…. சாலை இத்தனை மோசமாக இருக்கும்… அங்கு பார்த்து ஜாக்கிரதையாக செல்லுங்கள்!” என்று உங்களுக்கு சொன்னால், அது உங்கள் பயணத்திற்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்! அது போலத் தான் இந்த பெயர்ச்சி பலன்கள். இவை அனைத்தும், நமது சுமூகமான வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிடவே கூறப்படுபவை. நம்மை பயமுறுத்த அல்ல.

மேலும் நவக்கிரகங்கள் என்பவை இறைவன் இட்ட ஏவலை, அவன் வகுத்த நெறிமுறைகளின்படி அவன் சார்பாக செய்பவை. எனவே, எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நவக்கிரகங்களை விட, நாம் வணங்கும் இறைவன் பெரியவன் என்பதை மறக்கக்கூடாது.

Lord Muruga

”நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.”

பொருள் : எல்லாம் வல்ல முருகபெருமானின் குஞ்சித பாதங்களும்,கால்சிலம்பும்,’ஜல் ஜல்’ என ஜலஜலக்கும் கால் சதங்கையும், தண்டையும்,அழகிய ஷண்முகனின் தோள்களும்,கடம்பும் எனக்கு முன் தெரியும் போது நாள், நக்ஷத்ரம், கொடிய விதி என்று எதுவுமே என்னை எதுவும் பண்ணமுடியாது!

சனிப்பெயர்ச்சியால் கலங்குவதற்கு பதில் இறைவனை சிந்திப்பதற்கும், தான தர்ம காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கும் அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதி நல்ல செயல்களில் ஈடுபட்டு வாருங்கள்.

நல்லதே நினையுங்கள். நல்லதே பேசுங்கள். நல்லதே செய்யுங்கள். நல்லதே நடக்கும்!

காலதேவனும், சனீஸ்வரனும் கடமையை செய்யும் தர்ம தேவதைகள். காக்கும் நேரம் வரும்போது நிச்சயம் ஓடி வந்து காப்பார்கள்.

சனீஸ்வரனுக்கு பரிகாரம் செய்ய விரும்புகிறவர்கள் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்ற சிந்தனையை வளர்த்துகொள்ளவேண்டும். எல்லாரும் எப்பொழுதும் நன்றாக இருக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

மேலும் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சுத்த பத்தமாக நீராடி முடித்து, காக்கைக்கு எள்ளும் தயிரும் கலந்த சாதம் கொடுத்து வரவேண்டும்.

கருங்குவளை மலர்களால் எமனுக்கு அர்ச்சனை செய்து, சிவாலயங்களில் சனீஸ்வரனுக்கு எள் முத்தளத்துடன் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி, எள்ளுருண்டை தானம் செய்யவேண்டும். எள்ளுருண்டையை தானமாக ஏற்க சிலர் தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நல்லெண்ணையை தானமாக தரலாம். ஆலயங்களில் தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கித் தரலாம்.

Thirunallaru 1

திருநள்ளாறுக்கு ஒரு முறை சென்று அங்கிருக்கும் தர்பாரண்யேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்யுங்கள்.

ஆலய தரிசனம், கோ சம்ரோக்ஷனம், அன்னதானம், ஊனமுற்றோர்களுக்கு உதவி, பார்வையற்ற மாணவ மாணவியர் தேர்வு எழுத உதவுது, திருகோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி, மரம் நடுதல், ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வாருங்கள். சனீச்வரன் உங்களுக்கு நல்லதே செய்வான். “சனி கொடுத்தால் எவர் தடுப்பர்?” என்ற பழமொழியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள் குறித்து மேலும் ஒரு விரிவான பதிவு இடம்பெறும். அதில் பல கூடுதல் தகவல்களை அளிக்கிறோம். நன்றி!

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே!

copyright-notice-2

==========================================================

Like our website? Kindly extend your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. | IFSC Code : UTIB0001182

==========================================================

கிரகங்களின் பெயர்ச்சி குறித்து நம் தளத்தில் வந்த பதிவுகளுக்கு :

சனீஸ்வர பிரசாதம் பரம பவித்ரம், சர்வ மங்களம்! – சனிப்பெயர்ச்சி தரிசன அனுபவம்!

‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்!

சனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்?

சனியின் கொடுமை தாளவில்லையா?

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

ராகு கேது பெயர்ச்சி சரியில்லையா ? கவலை வேண்டாம்! இதோ எளிய பரிகாரங்கள்!!

குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

நன்மையை தரும் குருவை கண்டு பயமெதற்கு ? 

ஜன்ம குரு கஷ்டம் தருமா?

==========================================================

நம் தளத்தில் வெளியான பரிகாரம் குறித்த பல்வேறு பதிவுகளுக்கு :

எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு?

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம்

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)

==========================================================

குலதெய்வ வழிபாடு பற்றி நம் தளத்தில் வந்த பதிவுகளுக்கு :

உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லையா?

குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….! 

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

==========================================================

[END]

One thought on “சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? சில விளக்கங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *