Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > எல்லாம் அறிந்த கடவுளை தினமும் வணங்க வேண்டுமா? Rightmantra Prayer Club

எல்லாம் அறிந்த கடவுளை தினமும் வணங்க வேண்டுமா? Rightmantra Prayer Club

print
கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் விளக்கிக் கொண்டிருந்த குரு, தினமும் கடவுளை வணங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். “கடவுள்தான் எல்லாம் அறிந்தவராயிற்றே. அவரை தினமும் வணங்க வேண்டுமா? நமது பிரார்த்தனையை சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா? எப்போதாவது வணங்கினால் போதாதா?” என்று கேட்டான் அன்றைக்கு அவருடைய உபன்யாசத்தைக் கேட்க வந்த ஓர் இளைஞன்.

Siva Parvathi Silhoutte

துறவி அவனுடைய கேள்விக்கு நேரடியாக பதில் தராமல், தன் முன்னே பளப்பள என மின்னும் பித்தளை சொம்பு ஒன்றை வைத்தார். அந்த இளைஞனை அடுத்த வாரமும் தன் பிரசங்கத்துக்கு வரச் சொன்னார்.

அடுத்த வாரம் வந்த அவன் கண்களில் மேடைக்கு முன்னே வைக்கப்பட்டிருந்த அந்த சொம்பு பட்டது. போன வாரம்தான் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த அந்தச் சொம்பு இப்போது களிம்பு பிடித்துப் போயிருப்பதைக் கண்டான்.

குருவிடம் வேறு எதையும் கேட்கும் முன், “ஏன் இப்படி இந்த செம்பை அழுக்காக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? போன வாரம்கூட பளிச்சென இருந்ததே!” என்று கேட்டான்,

Brass Sombu“தினமும் இதை புளிபோட்டு தேய்த்து வைப்பது வழக்கம். ஒரு வாரமாகச் செய்யவில்லை. அதனால்தான் இப்படி!” என்ற துறவி, “வெளியே வெறுமனே வைக்கப்பட்டதாலேயே இந்தச் செம்பு இப்படிக் களிம்பு பூத்துவிட்டதே. நம் மனசு ஐம்புலன்களாலும் எப்படி அலைக்கழிக்கப்படுகிறது. அதைத் தடுக்க, அது மேலும் மேலும் அழுக்கடைந்து விடாமல் இருக்க, கடவுள் வழிபாடுதானே ஒரே வழி. சொம்பை எப்படி தினம் தினம் துலக்கி வைக்கிறோமோ, அதேபோல மனதைத் துலக்க, தினமும் இறை வழிபாடு மிக அவசியம்!” என்றார்.

இறைவழிபாடு மற்றும் பிரார்த்தனைகளால் இறைவனுக்கு எதுவும் நன்மை கிடையாது. நன்மை நமக்குத் தான். நெருப்பை நோக்கி செல்ல செல்ல எப்படி அழுக்குகள், தூசி தும்புகள் எரிந்து பஸ்பமாகிவிடுகிறதோ அதே போல, இறைவனை நாம் நெருங்க நெருங்க நமது அகத்தில் உள்ள அழுக்குகள் யாவும் எரிந்து சாம்பலாகி மனம் தூய்மை அடைகிறது. தூய்மையான மனத்தினாலே தான் இறையருளை பரிபூரணமாக பெறமுடியும். எனவே இறைவழிபாடு ஒருவர் வாழ்க்கையில் மிக மிக அவசியமாகிறது.

================================================================

நம் பிரார்த்தனை கிளபிற்கு தலைமை ஏற்பவர்களில் மிக மிக வித்தியாசமானவர் திரு.பலராமன்.
DSCN4369 copy

நம் பிரார்த்தனை கிளப்பிற்கு இதுவரை வந்த கோரிக்கைகளில் மிக மிக உருக்கமான அவசியமான கோரிக்கைகள் சிலவற்றை திரு.பலராமனிடம் கூறி அதற்க்கு சேர்த்து பிரார்த்திக்க  சொல்லியிருக்கிறோம். ஞாயிறு பிரார்த்தனை நேரத்தில் நாம் அவருடன் தான் இருப்போம் என்பதால் மேலும் சில வாசகர்களின் முந்தைய கோரிக்கைகளை தெரிவிக்கவிருக்கிறோம்.

பலராமனின் பிரார்த்தனை நிச்சயம் ஒரு  மாற்றத்தை ஏற்படுத்தும்  நமக்கிருக்கிறது. பின்னே சிவபெருமானே நம் அன்னையுடன் எழுந்தருளி ஆமோதித்தவராயிற்றே….

கபாலீஸ்வரரே தோன்றி இவரை பரிந்துரைத்த கதைக்கு கீழ்கண்ட பதிவை செக் செய்யவும்.http://rightmantra.com/?p=11861

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை முதல் கோரிக்கையை அனுப்பியிருக்கும் ராஜா துரைசாமி நம் நண்பர். ரைட்மந்த்ரா வாசகர்.

ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் பிரச்னை தேடி வரும் என்பதற்கு இவருக்கு நிகழ்ந்த அனுபவம் பெரிய உதாரணம். சமீபத்தில் ஒரு நாள் டூ-வீலரில் பயணம் செய்யும்போது சிறிய விபத்து ஏற்பட்டு இவர் வண்டி மீது மோதிய ஒருவருக்கு கால் கட்டைவிரலில் காயம் ஏற்பட அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்து ட்ரீட்மென்ட் கொடுக்க, அதன் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

தவறு இவர் மீது இல்லையென்றாலும் விபத்தை காரணம் காட்டி பணம் பறிக்கும் கும்பல் அந்த நபரின் பின்னணியில் செயல்பட, இவர் நிம்மதி இழந்து தவிக்கிறார். காயப்பட்டவருடன் சட்டரீதியாக மட்டுமே இதை அணுகும்படி வலியுறுத்தி, நமக்கு தெரிந்த வழக்கறிஞர் ஒருவரின் உதவியை நாடச் சொல்லியிருக்கிறோம்.

சாலையில் வாகனத்தில் பயணிப்பவர்கள் குறிப்பாக டூ-வீலரில் பயணிப்பவர்கள் மிகுந்த கவனுத்துடனும் எச்சரிக்கையுடனும் பயணிக்கவேண்டும். தவறு நம் மீது இல்லை என்றாலும் கூட சில சமயம் வேண்டாத விபத்துக்களில் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேர்கிறது.

வாகனத்தில் பயணம் செய்யும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்:

சம்போ மகாதேவ தேவா – சிவ சம்போ மகாதேவ
தேவாதி தேவா நமோ மார்க்க பந்தோ

என்ற இந்தத் துதியை உங்க பயணம் ஆரம்பிக்கும் முன் குறைந்தது 11 முறை சொல்லுங்கள். நீங்கள் எந்தத் தடையுமின்றி பத்திரமாக உங்கள் பயணத்தை முடித்து விடுவீர்கள்.

அடுத்த கோரிக்கை வீடு கட்டுவது பற்றியது.

‘கல்யாணம் பண்ணிப்பார். வீட்டை கட்டிப்பார்’ என்று சும்மாவா சொன்னார்கள். வாசகர்கள் மற்றும் நண்பர்கள், வீடு கட்ட நிலம் வாங்கும்போது கூடுமானவரை வங்கி மூலம் நிலத்தை வாங்கி வீடு கட்டுவது மிகவும் சிறந்தது, பாதுகாப்பானது. நிலத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்று சம்பந்தப்பட்ட வங்கியினர் சல்லடையாக தோண்டிப் பார்த்துவிடுவார். நமக்கு தேவையற்ற அலைச்சல் மிச்சம்.

இப்போதெல்லாம் பணத்தை கூட செலவழிக்க முடிகிறது நேரத்தை தான் எவராலும் செலவழிக்க முடியவில்லை.

================================================================

விபத்து ஏற்படுத்தும் மன உளைச்சல்!

ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் ஆசிரியர் நண்பர் சுந்தர் அவர்களுக்கு என் வணக்கம்.

சென்ற மே மாதம் ஒரு நாள் அன்று மாலை அலுவலகத்திற்கு செல்லும் போது  ஒரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினேன்.  விபத்தில் கால் பெரு விரலில் காயமடைந்த பையனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உதவினேன். வாகன விபத்திற்கு எந்த வகையிலும் நான் தொடர்பில்லாத வேளையிலும் அதன் தொடர்ச்சியாக தேவையற்ற இன்னல்கள் வந்த வண்ணம் உள்ளன. தேவையற்ற சந்திப்ப்க்களிலும் பஞ்சாயத்துக்களிலும் என் நேரம் வீணாகிறது. இந்தநாள் அலுவலக பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. பிரச்சனை தீர்ந்து இந்த மன உளைச்சலிலிருந்து மீண்டு வர எனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

– ராஜா துரைசாமி,
சென்னை – 89.

================================================================

நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கம் மறைந்து  விரைவில் சொந்த வீடு கட்டவேண்டும்!

அனைவருக்கு வணக்கம்.

நண்பர் ஒருவர் இந்த தளத்தை பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் கூறியதை அடுத்து என் பிரார்த்தனையை இங்கு பதிவு செய்கிறேன்.

என் பெயர் தியாகராஜன். செங்கல்பட்டு அருகே ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். வீடு கட்ட ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே கடனை உடனை வாங்கி ஒரு அரைகிரவுண்டு நிலம் வாங்கினேன். அன்றைய மதிப்பில் அது ரூ.6 லட்சம். தற்போது பன்மடங்கு விலை போகிறது.

அந்த நிலத்தில் வீடுகட்ட சமீபத்தில் வங்கியை அணுகியபோது தான் தெரிந்தது அந்த நிலத்தில் பிரச்னையும் வில்லங்கமும் உள்ளது என்று. அதை தீர்த்துக்கொண்டு வந்தால் தான் வங்கிக் கடன் வழங்கமுடியும் என்று வங்கியில் சொல்லிவிட்டார்கள். பிரச்னையை மூடி மறைத்து நிலத்தை எனக்கு விற்பனை செய்துவிட்டார்கள். நிலத்தை யார் மூலம் வாங்கினேனோ அந்த ரியல் எஸ்டேட் கம்பெனி தற்போது எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. யாரிடம் போவது எங்கு போய் பிரச்னையை தீர்ப்பது என்று தெரியவில்லை. ஒரு வேலையும் நடக்கமால் மாதக்கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு அலையோ அலை என்று அலைந்தது தான் மிச்சம். பிரச்சனைக்குரிய நிலம் என்பதால் விற்கவும் முடியவில்லை. பணம் வேறு லட்சகணக்கில் முடங்கிவிட்டது.

விரைவில் என் நிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்ந்து நான் சொந்த வீடு கட்ட எனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– கே.தியாகராஜன்,
கூடுவாஞ்சேரி.

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

ஹிமாச்சல் பிரதேச விபத்தில் சிக்கி பலியான மாணவர்களின் குடும்பத்தினர் ஆறுதல் பெறவேண்டும்!

தென்னிந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி இது. இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற, ஆந்திர பொறியியல் கல்லூரி மாணவர்கள், 24 பேர், எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

himachal_pradesh_tragedy_1402294081_540x540ஆந்திர மாநிலம், ஐதராபாத் அருகேயுள்ள பச்சுபள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு, மாணவ மாணவிகள் சுமார் 48 பேர், இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றபோது குல்லு என்ற இடத்தில ஓடும், பியாஸ் நதியின் அழகை ரசிக்க விரும்பி, நதியின் கரையில் இறங்கினர். அப்போது, மாணவர்களில் பலர், நதியின் மையப்பகுதியில் உள்ள பாறை ஒன்றுக்கு சென்று புகைப்படம் எடுக்க விரும்பி நதியின் மையப்பகுதிக்கு சென்றனர். அங்கு நின்றபடி 24க்கும் மேற்பட்ட மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, அருகேயுள்ள லார்ஜி நீர் மின் திட்ட அணையிலிருந்து, திடீரென தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டதால், பியாஸ் நதியில், திடீர் வெள்ளம் உருவானது. இதை பார்த்த கரையில் நின்ற மாணவர்கள், நதியின் குறுக்கேயுள்ள பாறையில் நின்று படமெடுத்துக் கொண்டிருந்த மாணவர்களை எச்சரித்தனர். உடன் அந்த மாணவர்கள் திரும்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் சுற்றுலா ஏற்பாட்டாளர், பிரகலாத் என்பவரும், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அவர்களை காப்பாற்ற மற்ற மாணவர்களும், உள்ளூர் மக்களும் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை ஒரு சில நிமிடங்களில், 25 பேரும் நதியின் வெள்ளத்தில் மாயமாகினர். இதுவரை ஐந்து மாணவர்களின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இமாசலப் பிரதேச தீயணைப்பு துறையினரும் போலீசாரும் மாயமான மாணவர்களின்  உடல்களை தேடிவருகின்றனர்.

கல்லூரியை முற்றுகையிட்டு மறைந்த மாணவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

மாணவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் பெறவும், அம்மாணவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இறைவனை வேண்டுவோம்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நண்பர் ராஜா துரைசாமி அவர்கள் வழக்குகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கவும், நண்பர் தியாகராஜன் அவர்களுக்கு நிலத்தில் ஏற்பட்டுள்ள வில்லங்கம் நீங்கி, அவர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் காணவும், இமாச்சல் பிரதேசத்தில் ஆற்று நீரில் சிக்கி பலியான மாணவர்களின் ஆன்மா சாந்தியடைந்து அவர்தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், இந்த வார பிரார்த்தனைக்கு தலை ஏற்றிருக்கும் திரு.பலராமன் அவர்கள் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் ஏற்படவும் இறைவனை வேண்டுவோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூன் 15,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை சேவை மையத்தின் நிறுவனர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள்.

9 thoughts on “எல்லாம் அறிந்த கடவுளை தினமும் வணங்க வேண்டுமா? Rightmantra Prayer Club

  1. இவ்வாரப் பிரார்த்தனைக்குத் தலைமை தாங்க இசைந்திருக்கும் திரு.பலராமன் அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன். பேராசை உள்ளம் கொண்ட இவ்வுலகில் உதவி செய்து உபத்திரவத்தைப் பரிசாகப் பெற்றிருக்கிறார் திரு.ராஜாதுரைசாமி அவர்கள். அவர்களது துயர் தீரவேண்டும். வீடு கட்டும் ஆசை என்பது நடுத்தரவர்க்கத்தினருக்கு பெரும்பாலும் கனவாகவே ஆகிவிடுகிறது. திரு.தியாகராஜன் அவர்களின் கோரிக்கையும் நிறைவேறவேண்டுகிறேன். ஒருசிலரின் சுயநலத்திற்காகவே முன்னறிவிப்பில்லாமல் திடீரென தேக்கி வைத்திருக்கும் நீரினை திறந்து விடுவதாகக் கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக இத்தனை உயிர்களை இழந்திருப்பது வேதனையே!. எத்தனை எதிர்கால கணவுகளுடன் அக்குழந்தைகள் இருந்திருப்பார்கள்…………நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

  2. இந்த வார பிரார்த்தனைக்கு, தலைமை தாங்கும் பலராமன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

    நல்லதே நினைத்து உதவிய ராஜா துரைசாமி அவர்கள், சங்கடத்திலிருந்து விடுபட்டு, விரைவில் மன அமைதி பெறவும், தியாகராஜன் அவர்கள் வாங்கிய இடம், பிரச்சனைகள் தீர்ந்து, வீடு கட்டி விரைவில் குடியேறவும்,

    ஹிமாச்சல் பிரதேச விபத்தில் சிக்கி பலியான மாணவர்களின் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் மகா பெரியவாவை வணங்கி, மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

    மூன்று வருடங்களுக்கு முன்பே வந்த இந்த வீடியோ, மனதை பதை பதைக்க வைத்தது.
    http://www.youtube.com/watch?v=ptH1AMUVro4

    இப்படித்தானே 24 மாணவர்களும் அடித்து செல்லபட்டிருப்பார்கள், இளம் ஆற்றலும், சக்தியும் பெற்ற இந்த உயிர் பலிக்கு யார் பொறுப்பு? இருபதுகளில் இருக்கும் அவர்களும், கொஞ்சம் பொறுப்புடன் இருந்து இருந்தால் இது நடந்திருக்குமா?
    தனது கனவை, தன பிள்ளைகளின் வழி நிறைவேற்ற துடித்த அந்த பெற்றோர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? நம்மால் பிரார்த்தனை மட்டும் தான் செய்ய முடியும்,அவர்கள் விரைவில் ஆறுதல் பெற. வாழ்க வளமுடன். நன்றி.

  3. சொம்பு கதையின் தாத்பர்யம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பித்தளை சொம்பை போல் தான் நம் மனமும். இறைவன் குடி கொண்டிருக்கும் நம் மனதை தினமும் கடவுள் சிந்தனையால் நிரப்பி மனதை தூய்மை படித்தினால் இறைவன் நம் மனதில் தினமும் குடியிரூப்பார். இல்லாவிட்டால் அழுக்கடைந்த சொம்பை போல் நம் மனம் இறை சிந்தனை இல்லாமல் அழுக்காகி விடும். பின் இறைவன் எப்படி நம் மனதில் நிலைத்திருப்பார். மிகவும் தத்துவமான கதை.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.பலராமனுக்கு வாழ்த்துகள். அவருடைய நோய் மற்றும் வறுமை ஒழிந்து அடுத்த ஜன்மாவிலாவது நன்றாக இருக்க வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிய வேண்டும்

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். மகா பெரியவா பிரார்த்தனையின் பொழுது நம்முடன் இருப்பார்.

    //லோக சமஸ்தா சுகினோ பவந்து//

    ராம் ராம் ராம்

    நன்றி

  4. இறைவழிபாடு ஒருவர் வாழ்க்கையில் அவசியம் என்பதை எடுத்துக்காட்டிய உதாரணம் நன்றாக உள்ளது.
    தினவழிபாடு மூலமே நம் மனம் தூய்மையானதாக இருக்கும்.
    இந்த வார பிரார்த்தனை தலைவர் நம் தலைவராலேயே தேர்ந்தேடுக்க் பட்டவர். இந்த வாரம் மிகவும் சிறப்பு பொருந்திய வாரம்.
    திரு.பலராமன் அவர்கள் நன்றாக வாழ்ந்த மனிதர். இன்று இந்த நிலை கடவுள் ஏன் கொடுத்தாரோ தெரியவில்லை.
    திரு.ராஜதுரைசாமி அவர்கள் சங்கடத்தில் இருந்து விடுபடவும், திரு தியாகராஜன் அவர்கள் இட பிரச்னை நீங்கி விரைவில் வீடு கட்டவும் பிரார்த்திப்போம்.
    இந்த வார பொது கோரிக்கை படிக்கும் போது அனுராதா மேடம் சொன்னதை தான் நானும் நினைத்தேன். மாணவர்களின் பெற்றோர்கள் மன அமைதி பெற வேண்டுவோம்.
    நன்றி.

  5. சுந்தர்ஜி
    திரு.பலராமன் அவர்கள் தலைமையில் நடக்கும் இந்த வார பிரார்த்தனைகளை மயிலை கற்பகம்பாள் மற்றும் கபாலீச்வரர் அவர்கள் இருவரும் ஏற்று இனிதே நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம். நாமும் அவருடன் இணைந்து பிரார்த்திப்போம். நன்றி

  6. ஜி,

    தங்களின் ஆலோசனை, உதவி மற்றும் பிரார்த்தனைக்கு எனது நன்றிகள். உங்கள் பணி, தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக…!

    அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வள்ளலார் போற்றி…!!

    ராஜா கே துரைசாமி
    சென்னை – 78.

  7. ராஜா துரைசாமி அய்யா ,தாங்கள் ஒருமுறை விரிஞ்சிபுரம் மரகதவல்லி உடனுறை வழித்துணைநாதர்[மார்க்கபந்தீசுவரர்] ஆலயம் [வேலூர்லிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.]சென்று வழிபடவும் .. ஸ்ரீ மத் அப்பய்ய தீட்சிதர் பிறந்த இடம் இது. அப்பைய தீக்ஷிதர் மார்கபந்து ஸ்தோத்திரம், மார்க்க சகாய லிங்க ஸ்துதி ஆகியவற்றை வழங்கி இருக்கிறார். விரிஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிசங்கரரின் பீஜாட்சர பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை உடையது ஆகும்.வணிகனுக்கு இறைவன் வழித் துணையாகச் சென்றதால் விரிஞ்சிபுரம் சிவபெருமான் வழித்துணை நாதர் என்று பெயர் பெற்றார்.நாம் அழைத்தாலும் நம் வழிக்கும் ,வாழ்க்கைக்கும் துணையாக வருவார் ஈசன் .விரிஞ்சிபுரம் எல்லா வகைப் பெருமைகளையும் கொண்ட ஒரு திருத்தலம் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளி இருக்கிறார்கள். நமது சுந்தர் சார் கூறியுள்ள இத்தல அப்பைய தீக்ஷிதர் மார்கபந்து ஸ்தோத்திரம் தினமும் படித்து விட்டு பயணம் செல்லுங்கள் …கூடவே தினமும் பயணம் புறப்படும் முன் “ஈச்சனாரி விநாயகர் துணை ,முப்பந்தல் இசக்கியம்மன் துணை” என்றும் மனதில் நினைத்துகொண்டு பயணம் தொடங்குங்கள் ..எந்த விதமான பிரச்சனைகளும் உங்கள் பயணத்தில் வராது …வருடம் ஒரு தடவை கோவை அருகில் உள்ள ஈச்சனாரி விநாயகர் திருகோயில் மற்றும் கன்னியாகுமரி அருகில் உள்ள முப்பந்தல் இசக்கி அம்மன் திருகோயில் சென்றும் வழிபட்டு வாருங்கள் …

    தற்போது உங்களுக்கு உள்ள மன உளைச்சலிலிருந்து மீண்டு வர,தொடர்ந்து 6 ஞயிறு ராகு காலத்தில் சென்னை மயிலாப்பூர் தெற்கு ரத வீதியில் உள்ள வெள்ளிச்சரம் திருகோயில் சென்று அங்கு உள்ள ஆகாச பைரவர் என்று கூறப்படும் சரபேஸ்வரரிடம் உங்கள் மனக்குறையை கூறி நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் …
    தினமும் இருமுறை கால பைரவாஷ்டகம் படியுங்கள் …பதிகம் தினமும் 3 முறை படியுங்கள் …
    திருச்சிற்றம்பலம்

    சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
    அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
    பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
    நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.

    பிரமன் மாலறி யாத பெருமையன்
    தரும மாகிய தத்துவன் எம்பிரான்
    பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
    கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

    ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
    தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
    ஈச னேயெனும் இத்தனை யல்லது
    பேசு மாறறி யாளொரு பேதையே.

    தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
    காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப்
    பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
    காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.

    நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
    இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்
    திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்
    கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.[அப்பர்]

    திருச்சிற்றம்பலம்

  8. தியாகராஜன் அய்யா ,நீங்கள் தொடர்ந்து 6 வாரம் செவ்வாய்கிழமைகளில் குடும்பத்துடன் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் [செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் ] [94441 71529] சென்று அங்கு உள்ள முறை படி சொந்த வீடு அமைய முருகரிடம் வேண்டி வழிபடுங்கள் …”சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே!” என்று இவரை “எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்” எனக்கூறுகிறார் அருணகிரிநாதர். .திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு…அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு “மயிலுமாடி நீயுமாடி வரவேணும்” என்று பாடியதற்கு இணையாக, இங்கு ”மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்” என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.சென்னை கோயம் பேட்டில் இருந்தும் செங்குன்றத்தில் இருந்தும் மாநகர பேருந்துகள் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு உள்ளன .சென்னையிலிருந்து செங்குன்றம், காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இத்திருத்தலத்தை அடையலாம்..இத்தல அருணகிரி நாதரின் திருப்புகழ் தினமும் எப்போதும் படித்து வாருங்கள் உங்கள் நிலம் சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வும் ,சொந்த வீடு கட்டும் பாக்கியம் ஏற்படும் …தொடர்ந்து 3 மாதங்கள் முழு நிலா நாளில் திருஅண்ணாமலை கிரிவலம் நல்லது …

    திருச்சிற்றம்பலம்

    “அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
    அண்டர்மன மகிழ்மீற அருளாலே
    அந்தரியொ (டு) உடனாடு சங்கரனு மகிழ்கூர
    ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
    மண்டலமும் முனிவோரும் எண்திசையில் உளபேரும்
    மஞ்சினும் அயனாரும் எதிர்காண
    மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
    மைந்துமயிலுடனாடி வரவேணும்
    புண்டரிக விழியாள! அண்டர்மகள் மணவாள!
    புந்திநிறை அறிவாள! உயர்தோளா
    பொங்குடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
    பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
    தண்தரண மணிமார்ப! செம்பொன் எழில் செறிரூப!
    தண்தமிழின் மிகுநேய முருகேசா
    சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
    தண்சிறுவை தனில்மேவு பெருமாளே” திருச்சிற்றம்பலம்
    [அருணகிரி நாதரின் சிறுவாபுரி திருப்புகழ் இது ..இதனை படித்து வந்தால் நிலம் சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு,சொந்த வீடு கட்டும் பாக்கியம்
    கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் கூறியுள்ளார் ]

    ……………………………………………………………………………………………………………..

    பதிகம் 48 நாட்கள் படித்து வரவும் ….

    திருச்சிற்றம்பலம்

    தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்வி னுந்தொண்டர் தருகிலாப்
    பொய்ம்மை யாளரைப் பாடாதேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
    இம்மை யேதரும் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
    அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக் கிவனென்று
    கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
    கூறி னுங்கொடுப் பார்இலை
    பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
    அடுக்கு மேல்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    காணி யேற்பெரி துடைய னேகற்று
    நல்லனே சுற்றம் நற்கிளை
    பேணி யேவிருந் தோம்பு மேயென்று
    பேசி னுங்கொடுப் பார்இலை
    பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
    ஆணி யாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
    நடுங்கி நிற்கும்இக் கிழவனை
    வரைகள் போல்திரள் தோளனேயென்று
    வாழ்த்தி னுங்கொடுப் பார்இலை
    புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
    அரையனாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
    பாவி யைவழக் கில்லியைப்
    பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
    பாடி னுங்கொடுப் பார்இலை
    பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
    நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    நலம்இ லாதானை நல்ல னேயென்று
    நரைத்த மாந்தரை இளையனே
    குலம்இ லாதானைக் குலவ னேயென்று
    கூறி னுங்கொடுப் பார்இலை
    புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
    அலம ராதமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    நோயனைத்தடந் தோள னேயென்று
    நொய்ய மாந்தரை விழுமிய
    தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
    சாற்றி னுங்கொடுப் பார்இலை
    போயு ழன்றுகண் குழியாதேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
    ஆயம் இன்றிப்போய் அண்டம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    எள்வி ழுந்திடம் பார்க்கும் ஆகிலும்
    ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
    வள்ள லேயெங்கள் மைந்த னேயென்று
    வாழ்த்தி னுங்கொடுப் பார்இலை
    புள்ளெ லாஞ்சென்று சேரும்பூம்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    அள்ளற் பட்டழுந் தாதுபோவதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    கற்றி லாதானைக் கற்று நல்லனே
    காம தேவனை ஒக்குமே
    முற்றி லாதானை முற்ற னேயென்று
    மொழியி னுங்கொடுப் பார்இலை
    பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    அத்தனாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    தைய லாருக்கோர் காமனேயென்றும்
    சால நல்வழக் குடையனே
    கையு லாவிய வேல னேயென்று
    கழறி னுங்கொடுப் பார்இலை
    பொய்கை ஆவியின் மேதி பாய்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    ஐயனாய் அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
    புகலூர் மேவிய செல்வனை
    நறவம் பூம்பொழில் நாவலூரன்
    வனப்பகை யப்பன் சடையன்றன்
    சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
    பாடல் பத்திவை வல்லவர்
    அறவனார்அடி சென்று சேர்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

    திருச்சிற்றம்பலம் [
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் “திருப்புகலூர்” பதிகம் இது .]

  9. கபாலீஸ்வரர் கோவில் வாசலில் யாசகம் பெறும் சிவனடியார் திரு.பலராமன் அய்யா அவர்களை வணங்கி அவரிடம் நம் அப்பன் பைரவர் சொருபமாய் விளங்கும் கபாலீஸ்வரர்கற்பகம்அம்பாள் கண்டு துதிகின்டேன்….

    “சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து
    தரணியொடு வானாளத் தருவ ரேனும்
    மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
    அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
    அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே”[அப்பர்]…..

    சுந்தர் சார் உங்களுக்கு மேற்கண்ட நம் திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பதிகம் அப்படியே பொருந்துகிறது …தொடரட்டும் உங்கள் சிவ பணி….அன்பே சிவம் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *