முந்தைய யுகங்களில் இறைவனின் அருளை பெறுவது என்பது அத்தனை சுலபமல்ல. கிருதயுகத்தில் கடுந்தவம் செய்து, திரேதாயுகத்தில் தானங்கள், மற்றும் யாக முதலான வேள்விகள் செய்து, துவாபர யுகத்தில் அர்ச்சனை, மந்திரம் ஜெபித்து எந்த உயர்நிலையை அடைந்தனரோ, அந்த உன்னத நிலையை இந்த கலியுகத்தில் இறைவனின் பெருமையை சொல்வதாலும் கேட்பதாலும் படிப்பதினாலுமே அடைந்து விடலாம்! சுருங்கக் கூறின் நாம சங்கீர்த்தனமே கலியில் நாம் கடைத்தேற ஒரே வழி!
கலியுகத்தில் பின்பற்ற வேண்டிய ஒன்பது வித பக்தி மார்க்கங்களைப் பற்றி சாஸ்திரங்கள் கூறியிருந்தாலும், இறைவனைப் போற்றும் நல்ல விஷயங்களைக் காதால் கேட்கும் ‘ஸ்ரவண பக்தி’யே மிக உயர்ந்ததாகும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனின் பெருமைகளை திருநாமங்களைச் சொல்லும் இடங்களுக்குச் சென்று அவற்றைக் கேட்டு உணர வேண்டும்.
காதால் கேட்கும்”ஸ்ரவணத்தின்’ மகிமையை உணர்த்தும் பொருட்டே, பெருமாளே “ஸ்ரவண’ நட்சத்திரத்தில், திருமலை ஸ்ரீநிவாசனாக அவதரித்தார். ஸ்ரவண பக்திக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்தவர் ஆஞ்சநேயர். அவர் வைகுந்தம் கூடச் செல்ல விருப்பமில்லாமல், எங்கெல்லாம் ராமாயண மகாகாவியம் சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம் தான் நேரிலேயே, ராமனின் புகழைக் கேட்க வந்து அமர்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. கலியுகத்தில், கடவுளின் திருநாமங்களை, நாமசங்கீர்த்தனம் மூலமாகக் கேட்டு இறைவனை இதயத்தில் இருத்தி, பேரருள் பெறலாம்.
இப்படி கேட்பதால் சகல பாவங்களும் நீங்கும். ஆழ்ந்த மனத்துயரங்கள் நீங்கும். கொடிய நோய்கள் விலகும். கலியின் தோஷம் விலகி ஆனந்த வாழ்வு அடைவார்கள்.
இதோ அதற்கு ஒரு அரிய வாய்ப்பு. கீழே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்வாழ்வு பெறுங்கள்.
தலைசிறந்த இசைக் கலைஞர்கள் & பக்தி சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் பன்னிரு திருமுறை இசை விழா!
தேவார திருமுறைகளும், பக்தி இசையும், சமய சொற்பொழிவுகளும் நமது பாரம்பரியங்களில் ஒன்று. கோவில் திருவிழாக்கள் நடைபெறும்போது இவை தவறாது தினசரி இடம்பெறும். நமது பக்தி இலக்கியங்ககளின் பொருளையும் மேன்மையையும் பாமரர்களும் புரிந்துகொண்டு பயன்பெறவேண்டும் என்று கருதி நம் முன்னோர்கள் காலம் காலமாக இவற்றை கோவில் திருவிழாக்களில் இடம்பெற செய்து வந்தார்கள்.
இன்றும் சென்னையில் பல்வேறு கோவில்களில் தினசரி இசை நிகழ்ச்சிகளும் பக்தி சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றன. தினத்தந்தி மற்றும் தினமலர் ஆகிய நாளிதழ்களில் ‘இன்றைய நிகழ்ச்சி’ பகுதியில் இவை பற்றிய விபரங்களை அறியலாம். இவற்றை கேட்பதின் பெருமையும் மகத்துவமும் இன்றைய நாகரீக உலகில் பலருக்கு தெரிவதில்லை. நாம சங்கீர்த்தனமும் தெய்வீக இசையையும் சொல்பவர்களுக்கும் இசைப்பவர்களுக்கும் எவ்வளவு புண்ணியமோ அதே புண்ணியம் அதை கேட்பவர்களுக்கும் உண்டு.
வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றமும், ஸ்ரீ கிருஷ்ணகான சபாவும், இணைந்து 8வது பன்னிரு திருமுறை இசை விழாவை வரும் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை நடத்துகின்றன.
வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பல்வேறு இசைக்கலைஞர்கள் மற்றும் சொற்பொழிவாளர்களை வைத்து பன்னிரு திருமுறை இசை விழாவை நடத்துவது வழக்கம். இது வரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த இசை விழா நடைபெற்று வந்துள்ளது. வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம் எட்டாம் ஆண்டின் விழா விரைவில் துவங்கவுள்ளது.
இவ்விழாவில் தமிழ் நாட்டில் உள்ள தலை சிறந்த ஒதுவா மூர்த்திகள், சொற்பொழிவாளர்கள், இசை சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
விழா துவக்க நாளன்று வேத விற்பன்னர்களும், வேத ஆகம ஆச்சார்யாள்களும், சிறந்த ஒதுவா மூர்த்திகளும் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம் சார்பாக இலவச தேவார வகுப்பும் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் சேர்ந்து தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் கற்று பயன்பெற்று வருகின்றனர்.
இம்மன்றத்தின் நோக்கம் யாதெனில்
1) வேத, ஆகம, தெய்வத் தமிழிசை இம்மூன்றையும் காப்பது.
2) ஓதுவார்களை ஊக்குவித்து கௌரவப்படுத்துவது
3) மேற்கூறிய மூன்றையும் சொற்பொழிவு மூலம் மக்களிடையே கொண்டு செல்பவர்களை கௌரவிப்பது
ஆகிய தான்.
இந்நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு எட்டாம் ஆண்டு இசை விழா ஏற்பாடாகியுள்ளது. அனைவரும் கலந்துகொண்டு ஈசனருள் பெறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வரும் ஞாயிறு மார்ச் 3 அன்று சென்னை மகாராஜபுரம் சந்தானம் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா காண சபாவில், கடவுள் வணக்கத்துடன் விழா மாலை 6.15 மணிக்கு துவங்கவுள்ளது. தொடர்ந்து ரேவதி & புவனேஸ்வரி ஆகியோர் பாடிய ‘திருமுறை பாடல்கள்’ குறுந்தகடு வெளியிடப்படும். வடலூரி சேர்ந்த திரு.ஊரன் அடிகள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தி இந்த குறுந்தகடை வெளியிட உள்ளார்.
தொடர்ந்து திரு.RBVS மணியன் அவர்கள் எழுதிய ‘விநாயகர் பெருமை’ என்னும் நூலின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. பிள்ளையார்பட்டியை சேர்ந்த கலைமாமணி திரு.பிச்சை குருக்கள் வெளியிட திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
வேதாகம தெய்வத் தமிழிசை மன்றத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திரு.N.சுவாமிநாதன் நன்றியுரை கூறவுள்ளார்.
முன்னதாக மாலை 3 – 4 ராமச்சந்திரன் & குழுவினரின் மங்கள இசை நடைபெறும்.
4.00 – 5.30 மணி வரை செல்வி.சிந்துஜாவின் இசை சொற்பொழிவு நடைபெறும். தொடர்ந்து குழந்தைகள் பங்கேற்று பாடும் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து 7.30 முதல் 9.00 மணிவரை திரு.என்.சுவாமிநாதன் அவர்களின் தேவார இன்னிசை கச்சேரியும் நடைபெறும்.
ஏனைய நாட்களில் நடைபெறும் நிகழ்சிகள் மற்றும் சொற்பொழிவுகளின் விபரங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
உங்கள போலவே எல்லாரும் பயன் அடையணும், அருள் அடையனும்ன்னு ரொம்பவே பாடுபட்றீங்க, முயற்சிக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் சுந்தர்ஜி,
தக்க சமயத்தில் எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடை பெற உள்ளது என்று தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. நல்ல நண்பன், சகோதரன் கிடைத்ததை எண்ணி பெருமை படுகிறேன்
தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி !!!
பங்கு பெறுவோம்
பயனடைவோம்!!!
நன்மை நம்ம்க்குமட்டும் அல்ல எல்லோரும் இந்த வையகத்தில் நலம்பெற நீங்கள் அற்றும் தெய்வீக பணி மென் மேலும் சிறப்பாக எல்லாம் வல்ல ஈசனின் அருள் உங்களுக்கு என்றேண்டும் கிடைக்க வேண்டுகிறேன்