Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்!

அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்!

print
ரு முறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில் உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான். “ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது. மன இறுக்கத்தால் சரியாக உறங்கக் கூட முடியாது தவிக்கிறேன். நீங்கள் தான் தகுந்த ட்ரீட்மென்ட் தரவேண்டும்!” என்றான்.

அவனை பரிசோதித்த மருத்துவர்…. “உங்கள் உடலில் எந்த கோளாறும் இல்லை. மனம் தான் சோகத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன இறுக்கம் அகன்றுவிடும். நம் நகரத்தின் மையத்தில் உள்ள மைதானத்தில் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றின் சர்க்கஸ் நடந்துவருகிறது. அதற்கு செல்லுங்கள். அந்த சர்கஸ்ஸில் கோமாளி ஒருவனின் வேடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவன் செயல்கள் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருக்கும். அதை பாருங்கள். வாய்விட்டு சிரிப்பீர்கள். உங்கள் மனம் லேசாகிவிடும். உங்கள் மன இறுக்கம் போயே போய்விடும்” என்றார் மருத்துவர்.

அதற்கு பதிலளித்த அந்த இளைஞன் : “சார்… அது முடியாத ஒன்று. காரணம் அந்த கோமாளி வேறு யாருமல்ல நான் தான்!” என்றானாம்.

சார்லி சாப்ளின் வாழ்வில் நடைபெற்ற உண்மையான நிகழ்ச்சி இது.

நம்மை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்க்கை நிஜத்தில் துன்பமயமானது. 1945 ல் அவர் ஒரு தீவிரவாதி என்று அவர் மீது குற்றச்சாட்டுக்களை (அடப்பாவிகளா) கூறி வழக்குகளை பதிவு செய்தது அமெரிக்க அரசு. பல ஆண்டு போராட்டங்களுக்கிடையே தன் தரப்பு நியாயங்களை விளக்க வழி தெரியாமல் இறுதியில் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்தார் சார்லி சாப்ளின்.

காலச்சக்கரம் சுழன்றது. 1972 ல் அதே அமெரிக்கா “உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்” விருதை பெற அவரை தன் நாட்டுக்கு அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டால்லும் அமெரிக்காவில் தங்க விருப்பம் இன்றி மீண்டும் சுவிட்சர்லாந்துக்கே திரும்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சூழ்ந்து நின்று, ‘‘வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள்.

சாப்ளின் சிரித்தார்… ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்தக் கணம் கூட!’’ என்றார்.

சாப்ளின் சிரித்தார்… ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்தக் கணம் கூட!’’ என்றார்.

தனிப்பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள், ஏற்றத் தாழ்வுகள், குடும்பப் பிரச்னை – இவை எல்லாருக்கும் பொதுவான ஒன்று. மிகப் பெரும் சாதனையாளர்கள் கூட இவற்றில் சிக்காமல் தப்பியதில்லை. அப்படி எவரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை.

என்ன மேற்படி கஷ்டங்களை அவர்கள் அணுகும் விதத்தில் தான் அவர்கள் நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். (குறள் 621)

என்ற திருக்குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில் பிறந்தாலும் சோகமயமான வாழ்க்கையை வாழ்க்கையுடன் வளர்ந்து வந்தாலும் ‘நகைச்சுவை’ எனும் ஆயுதத்தை கொண்டு லட்சக்கணக்கானோரின்  சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக அமையாவிட்டாலும் கூட வானத்தை வசப்படுத்தலாம் என்பதை உலகிற்கு உணர்த்தி வாழ்ந்து காட்டியவர். அவரை போன்றே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் நாம் சந்திக்கும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் – மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் – எந்த சாதனையும் சாத்தியமே என்பதுதான் சார்லி சாப்ளின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் ரகசியம்.

எனக்கு ஏற்பட்ட அனுபவம்!

மேலே குறிப்பிட்டுள்ள ஊரையே சிரிக்கவைத்த சார்லி சாப்ளின் தன் மன இறுக்கத்தை அகற்ற வழி தெரியாது தவித்ததை போல எனக்கும் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

காரணமே தெரியாது. புரியாது. மனம் ஏதோ வித பாரத்தில் சோகத்தில் இருக்கும். “அட என்னாச்சு நமக்கு? ஏன் இப்படி சோகத்துல இருக்கோம்?” என்று மண்டையை உடைத்து யோசிச்சாலும் காரணத்தை அறிந்து கொள்ள முடியாது.

நமக்கு வேண்டியவர்களோ, நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவுகளோ நம் மனதை காயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நல்லெண்ணத்திற்க்கு ஊறு வரும் வகையில் நடந்துகொண்டாலோ அல்லது அவர்களிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நமக்கு ஏமாற்றம் தரும் வகையில் அவர்கள் நடந்துகொண்டாலோ நம் மனம் வாடிவிடும்.

சம்பவம் நடக்கும்போது என்றில்லை சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் அதன் பாதிப்பு தெரியும். காரணம் நம் SUBCONSCIOUS MIND என்று சொல்லப்படும் ஆழ் மனம். ஒரு உரையாடலின் போது நாம் கவனிக்கத் தவறுகிறவற்றைக் கூட ‘ஆழ் மனம்’ விடாமல் ரெக்கார்ட் செய்துவிடும். அந்த சமயத்தில் அது நமக்கு தெரியாது. ஆனால் பிற்பாடு அது உள்ளேயிருந்து தன வேலையை காட்டும்.

பொதுவாக சில மனிதர்களை ‘அவர்கள் மிகவும் சென்ஸிடிவ்’ என்று சொல்வதுண்டு. அது தவறு. மனிதர்கள் எல்லோருமே சென்ஸிடிவ் தான். சிலர் ரியாக்ட் செய்து அதை காட்டிவிடுவார்கள். சிலர் காட்டிக்கொள்ளமாட்டார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். ‘மனசு’ என்பது எல்லாருக்கும் இருக்கும் ஒன்று தானே. ஆகையால் மனிதர்களின் உணர்வுகளோடு நாம் ஒரு போதும் விளையாடக்கூடாது. நமது விளையாட்டான சொல் கூட அவர்களை மிகவும் புண்படுத்திவிடும். அது நமக்கு தெரியாது.

சில நாட்களுக்கு முன்பு….. இந்த தளம் மற்றும் அதன் எதிர்காலம் வளர்ச்சி தொடர்பான எனது முயற்சிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் மேலே நான் சொன்ன சம்பவம் போன்று ஏதோ ஒன்று அனைத்தும் சேர்ந்து என் மனதை அரித்து வந்தது.

At Hindu Spiritual & Service Fair

இந்த தளத்தின் வளர்ச்சி, நமது இலக்கு, வாசகர்களின் எண்ணிக்கை, பதிவின் தரம், தளம் நடத்த தேவையான வருவாய், அதற்கு செலவிட எனக்கு கிடைக்கும் நேரம், நண்பர்கள் அளிக்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு இது போன்ற விஷயங்களை நினைக்கும்போது சற்று மலைப்பாக இருக்கிறது. நம்மால் முடியுமா? அல்லது பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுவோமா? என்கிற அச்சம் என்னை அவ்வப்போது ஆட்டி வைப்பதுண்டு. நம் தளம் ஒரேயடியாக வளர்ந்து விடவில்லை என்றாலும் – ஹிட் ரேட்ஸ் என்று சொல்லப்படும் பார்வையாளர்கள் (தரமிக்க) எண்ணிக்கை – சிறுகச் சிறுக சீராக வளர்ந்துவருகிறது என்பது மட்டும் எனக்கு ஒரு வகையில் ஆறுதல்.

எதிரிகளின் ஏளனத்தை விட, நண்பர்களின் மௌனமும் புறக்கணிப்பும் சில மிகுந்த வலியை தரக்கூடியது. எனக்கு ‘உதவி செய்வார்கள், பக்க பலமாக இருப்பார்கள், உறுதுணையாக இருந்து உத்வேகம் தருவார்கள், நம்பிக்கை தருவார்கள்’ என்று நான் கருதியவர்கள் எல்லாம் அமைதியாக ஒதுங்கி விட்ட சூழ்நிலையில், என் முயற்சியை பற்றி மலைப்பு என்னை கலவரப்படுத்துவது இயல்பு தானே?

‘பிறந்தேன். வளர்ந்தேன். சம்பாதிச்சேன்.  கல்யாணம் பண்ணினேன். பிள்ளைகள் பெற்றேன். வீடு கட்டினேன்’ – என்ற ரீதியில் பூமிக்கு பாரமாய் இருந்து  சுயநல வாழ்க்கை வாழ்ந்து என் வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்தில் முடிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கிறேன்.

தசரத் மஞ்சி என்ற பெரியவர் பீகாரில் ஒற்றை ஆளாக கையில் சுத்தியலும் உளியும் வைத்து மலையை பிளந்ததை போல, இன்றைக்கு RIGHTMANTRA.COM என்ற உளியின் மூலம் – பல்வேறு ஏளனங்களுக்கு இடையே – இந்த சமுதாயத்தில், இணைய உலகில், என்னளவில் நான் நினைத்த ஒரு சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா என்று சந்தேகம் அவ்வப்போது வந்துவிடுகிறது.

தலைக்கனத்தோடு திரிபவர்கள் திரையுலகைவிட இங்கு அநேகம்

மற்ற துறைகளைவிட இந்த ஆன்மீக உலகில் செய்திகளை திரட்டுவது, உரிய புகைப்படங்களை பெறுவது, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது, மிகவும் கடினமாக இருக்கிறது. தலைக்கனத்தோடு திரிபவர்கள் திரையுலகைவிட இங்கு அநேகம். மலையை கூட உடைத்துவிடலாம். சிலரிடம் நமது முயற்சியின் மேன்மையை எடுத்துரைத்து – பொது நலனுக்காக கூட நம் வேலையை சாதித்துக்கொள்வது – என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. “ஆனால் இது எனக்கு செய்யும் பணியல்ல. தனி மனிதனுக்கு செய்யும் பணியுமல்ல. இறைவனுக்கு செய்யும் பணி. பொது நன்மைக்கு செய்யும் பணி. இதில் என் ஈகோவுக்கு துளியும் இடம் தரக்கூடாது” என்று கருதி செயல்பட்டு வருகிறேன். நோக்கம் உயரியது என்பதால் அதை அடையக்கூடிய வழியில் ஏற்படும் இன்னல்கள் அவமதிப்புகள் ஒரு பொருட்டாக தெரியவில்லை.

மனம் வாடி துன்பம் மிக உழன்று…

இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா…. காரணம் புரியாத சோகத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னே மூழ்கியிருந்தேன். பொதுவா இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டா அது என்னை ஒரு அரை மணிநேரத்துக்கு மேல என்னை பாதிக்காதபடி பார்த்துக் கொள்வேன். அப்புறம் அதில் இருந்து வெளியே வந்துவிடுவேன். இல்லையென்றால் அடுத்த நாள் வேலையையும் அது பாதித்துவிடும். இது போன்ற நேரங்களில் பிடித்த இசையை கேட்பது, (பெரும்பாலும் இளையராஜா, கண்ணதாசன் பாடல்கள்), பக்தி படங்கள் பார்ப்பது, பக்த விஜயம் உள்ளிட்ட பக்தி நூல்கள் படிப்பது, என்று என்னை ஈடுப்படுத்திக்கொள்வேன். அல்லது நம் பாரத்தை இறக்கி வைக்கும் வகையில் நெருங்கிய நண்பர்கள் யாரிடமாவது பேசுவேன்.

ஆண்டவன் சொன்ன ஆறுதல்

ரெண்டு நாள் முன்னே இது போன்ற சூழ்நிலையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “Don’t worry Sundar. நாம நிச்சயம் ஜெயிப்போம்” என்றார். மனம் சற்று ஆறுதலடைந்தது.

அவர் கிட்டே பேசி முடிச்சவுடனே அடுத்து சரி… ஓ.கே. நேரமாயிடிச்சு. அடுத்த நாள் பதிவுக்கான வேலையை பார்ப்போமே என்று கருதி அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, நான் முதலில் இணையத்தில் நான் கண்ட வரி என்ன தெரியுமா?

“Do not worry about tomorrow; Your Father in Heaven knows what you need”

இந்த வரியை படிச்சதும் ஏதோ ஆண்டவனே என்னுடைய மனவாட்டத்தை போக்க எனக்கு ஆறுதல் சொன்னது போல இருந்திச்சு. காரணம் அந்த நொடி அது ஏன் என் கண்ணில் படனும்? தினமும் தான் இணையம் வர்றேன். முன்னேயோ அப்புறமோ கண்ணில் பட்டிருக்கலாமே?

இந்த மனப் போராட்டத்தின் போது ஆண்டவன் கிட்டே நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். “நான் எந்த மாதிரி இடத்துல எந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து வந்து இதை செஞ்சிக்கிட்டுருக்கேன்…. இப்படி என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறாயே? உனக்கே இது நியாயமா?”ன்னு தான் கேட்டேன். என்னோட கேள்வி அவனை கொஞ்சம் யோசிக்க வெச்சிருக்கும் போல. அதான் உடனே பதில் சொல்லிட்டான்.

மேற்படி வார்த்தைகளை படித்த பின்பு என் பர்சனல் கவலை, தளத்தின் எதிர்காலம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த என் கவலை போயே போய்விட்டது. நிச்சயம் சாதிப்பேன் என்ற நம்பிக்கை மீண்டும் வலு பெற்றுவிட்டது.

ஆண்டவனே கூட இருக்கான் எனும்போது இனி முடியாது என்று எதுவும் உண்டா என்ன? அதை மெய்ப்பிப்பது போல, சமீபத்தில் நடந்து முடிந்த இந்து ஆன்மீக கண்காட்சிக்கு நான் போயிருந்தபோது அங்கே ஒரு சம்பவம் நடந்தது.

என்ன அது? ஜஸ்ட் ரெண்டே நாள் வெயிட் பண்ணுங்களேன். சொல்றேன்.

34 thoughts on “அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்!

 1. என்ன சுந்தர் ஜி என்ன ஆச்சு ?

  வாழ்கையில் ஆயிரம் தடை கல்லப்பா. ஒவ்வொரு தடைகல்லும் படிக்கல்லப்பா பாட்டு உங்களுக்குத்தான் . நிச்சயம் வெற்றி உங்களுக்கேதான். இந்த தளத்தை எந்த குறையும் இல்லாமல் வழி நடத்த ஆண்டவன் துணை புரிவார்

 2. //”நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “Don’t worry Sundar. நாம நிச்சயம் ஜெயிப்போம்” என்றார். மனம் சற்று ஆறுதலடைந்தது”//

  100% agreed by looking your efforts in this site.
  ***
  //“Do not worry about tomorrow; Your Father in Heaven knows what you need”//

  “What ye shall seek and believe, ye shall receive”. Quote from Bible (I think. read once). Good and keep on thinking positive thoughts and your aim alone, those negative thoughts will get vanish. The quote you have kept in your gmail stated by Vivekananda – will convey you that focusing on what we want will eliminate thinking these dangerous negative thoughts.

  **Chitti**.
  Thoughts becomes things.

 3. மிகப் பெரிய சாதனையாளர்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை எனும்போது உங்கள் நிலை புரிகிறது. ஆனாலும் நீங்கள் இந்த தற்காலிக தொய்விலிருந்து மீண்டு வந்து சரித்திரம் படைக்கப்போவது உறுதி. உங்கள் WILL POWER பற்றி உங்களைவிட உங்களுடன் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

 4. இந்த தளத்தை எந்த குறையும் இல்லாமல் வழி நடத்த ஆண்டவன் துணை புரிவார்

 5. நான் இப்போதிருக்கும் மனநிலையில் எனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்த அருமையான ஒரு பதிவு. உங்கள் மூலம் கடவுள் எனக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறார். நன்றி சுந்தர்.

 6. I think Sunder, you should stop worrying. Because I beleive that when u worry, GOD stops worrying for u and when u stop worrying, GOD starts worrying for u.
  This is much much easier. Thatz what I do……and I get my work done faster.

  shashi

  1. இயல்பாகவே நான் எதுக்குமே ரொம்ப அலட்டிக்காத பாஸிட்டிவ்வான ஆளு. என் கூட இருக்குறவங்களுக்கு அது தெரியும். என் மனசை உறுத்கிட்டிருந்த சில விஷயங்களை இறக்கிவெச்சிட்டேன். அவ்ளோதான்.

   மத்தபடி நீங்க சொன்ன விஷயம் சூப்பர். ரொம்ப நன்றி!!

   – சுந்தர்

 7. சுந்தர்…..
  .
  தலைவரை பற்றியும் அவர் பட பாடல்கள்பற்றியும் நீங்கள் அதிகம் எழுதயுலீர்கள்…இருந்தாலும் உங்களின் இந்த பதிவை படித்ததும் என்னக்கு நினைவுக்கு வந்த வரிகள்…
  .
  “””””இன்று கண்ட அவமானம் வென்றுதரும் வெகுமானம்
  வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
  மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
  பாறைகள் நீங்க்ஹினால் ஓடைகில்லை சங்கீதம்
  பொய்மையும் வஞ்சமும் உனது பூர்விகமே
  ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
  எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே””””
  .
  உங்களுடைய முந்தைய பதிவு ஒன்றில் நீங்களே என்னக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று எழுதிருகிரீர்கள்….
  .
  எதையும் “Positive ” – ஆகா நினைப்பவர் நீங்கள் என்பதற்கு இந்த பதிவின் முன்னுரயில் குறிப்பிட்டுள்ள சார்லி சாப்ளினின் வாழ்கையே ஒரு சான்று…
  .

  நாங்கள் இருக்கிறோம் சுந்தர்….நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்……”YES WE CAN ”
  .
  மாரீஸ் கண்ணன்

 8. என்ன சுந்தர், நீங்களே இப்படி கவலைப்படலாமா? நமக்கு மேல கடவுள் என்ற ஒரு சக்தி இருக்காருன்னு நம்புற நீங்க எதுக்கும் கவலையே படக்கூடாது. நல்லவங்களை ஆண்டவன் ரொம்பவே சோதிப்பான். ஆனா கண்டிப்பா கை விட மாட்டான். நம்ம கடமைய நாம செய்வோம். பலனை அவனிடம் விட்டு விடுவோம். நமக்கு எப்ப என்ன கிடைக்கணுமோ, அதை கண்டிப்பா ஆண்டவன் நமக்கு கொடுப்பார். கடவுள் அருளாள் நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க. “dont worry , be happy “.

 9. Thanks Ji…
  Actually I am reading the article when I am in such situation…Its good readn boost for me. As you mentioned ‘Indha nilayum marum’…Lets always hope for the best!
  Also I read the below lines..which I feel is a very good one and always I read it myself when i get sad feeling “Dont think too much and dont try to find reason for everything happening around you, you will come to know the reasons one day when you least bothered about it”

  -Venky

  1. //“Dont think too much and dont try to find reason for everything happening around you, you will come to know the reasons one day when you least bothered about it”//

   What a catch Venky… amazing sentence!! thanks for sharing.

   – Sundar

  2. Very important lines Venky. Thanks!!!

   Knowingly or unknowingly few words of us will either help or hurt others. I don’t know what made you to say these lines, but it is much needed for me at this situation.

   Sundar: You could have simply left after you overcame from your trouble. But your post (as I can see from the comments) has helped your readers. Thanks.

   1. Somesh, i know that it will help others for their introspection. For that reason only i posted.

    Moreover, i don’t want to create any special illusion about me. I want everybody to keep in mind that i am just one among you all – with all the feelings like happiness, sad, problems, ups and downs in day to day life.

    This website is a tool for me to share good things that i experience and knowledge i gain. that’s all.

    – Sundar

 10. நாங்கள் இருக்கிறோம் சுந்தர் அண்ணா ….நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்…

  -ஜி.உதய்..

 11. Dear Sundar,

  Why so much of confusions & sadness in your mind?? Don’t worry about the past and move forward to achieve your goals..

  Never let life’s hardships disturb you … no one can avoid problems, not even saints or sages.

  We are all with you and always god will be with you..

  PVIJAYSJEC

 12. Vanakkam Sundar,
  Andavan Yeerukiran naaa athuu namma Amma and appaaaa………….
  Renduuu perummmm ungkudaaa yerukum pothuuu…….u should not worry……..

  Things will change sundar……..don’t find reason for all things…………

  Enthaaa article padikkumm pothuuuu………..i got cried………this is ur achievement and gain in this society…………..the money and fame is not the one only thing in the world to prove that they are gr8…………………………no wear andavan said………

  Yella Periyaaa manitharkallum pukallukkagaaa padupadavillai…………antha pukall avarkal thedi varum…….

  one thing i acheived because of others thinking me as loww………everyone will tell…………….then they will go in wrong direction after that………….

  Don’t do for others…………be strong in what u want to do(good things) not for bad one………kindly think the person who below u(i mean there are so many people sleeping in the beach without any income)…………….

  Selfish guyyeeee jeeikummm pothuuuuu……………….ungalll mathiri thanalmatraaa manitharkal jeeikkaaa mattommaaa…………………………..

  Good and well behavioured souls around u will make wonders and happy……….

  Don’t post this…………

  Smile always
  Sakthivel.D

 13. சுந்தர், உங்கள் தளம் வெற்றி மேல் வெற்றி பேற வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு தான் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. அந்த எதிர்பார்ப்பு என்ற மாயையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்தோடு செயல் படுங்கள். நடப்பவை யாவும் நல்லவிதமாக செயல் பட எல்லாம் வல்ல சிவபெருமான் உங்களுக்கு துணையிருக்க (அருள் புரிய) வேண்டுகிறேன். உங்களை வழிநடத்த இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்.

  நாராயணசாமி
  http://www.shivatemples.com

  1. சரியான நேரத்தில் சரியான வார்த்தைகளை கேட்டேன்.

   என் கடன் இனி பணி செய்து இருப்பதே.

   மற்றவை அந்த சிவனின் சித்தம்.

   மிக்க நன்றி மிக்க நன்றி சார்.

   – சுந்தர்

 14. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாம் செய்யும் செயல்பாடுகள் குறித்து,இது போன்று நம்மை நாமே கேள்விகள் கேட்டு நாமே விளக்கங்களும் பெறுவதும் ,நாம் சரியான படி செயல்படுகிறோம் என்று உறதிசெய்கிறது நமது மனம் .

  சரியான நேரத்தில் சரியான குழப்பம் வரவேற்கதக்கது ….

  மலையடிவாரத்தில்தான் அதிகம் குவிந்திருக்கிறார்கள். உச்சி எப்போதும் காலியாகத்தான் இருக்கிறது.

  தடைகள் வெளியே மாத்திரமல்ல, உள்ளேயும் இருக்கின்றன. என்னால் முடியுமா என்னும் சந்தேகம். விழந்துவிட்டால் என்ன செய்வது என்னும் பயம் வந்து விடும் .
  மிக விரைவில் உங்களை மலைமீது வந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது .

  நட்புடன் என்றும் தங்களுடன்..
  மனோகரன்

 15. அருமையான பதிவு. உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அற்புதம். நிச்சயம் நீங்கள் சாதனை படைப்பீர்கள் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ஒரு நாள் என்னை சுற்றி உள்ள உலகிற்கு சுந்தர் ஏன் நண்பர் சாதனையாளர் என்று உங்கள் பெயரை உச்சரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. உங்களை போலவே என் துறையில் நானும் சாதனை படைபதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

 16. நேற்று கவலையுடன் இருந்த எனக்கு இந்த பதிவை படித்துவிட்டு சற்றே தெளிவு பிறந்தது. நீங்கள் இன்று காலை மகாபெரியவாளின் அருளைப்பற்றி என்னிடம் சொல்லி என் கவலையை இன்னும் கொஞ்சம் குறைத்தீர்கள். மீதமிருந்த மனக்கவலையை காஞ்சி மகான் இன்று தீர்த்து வைத்தார். மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும் – எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். நன்றி சுந்தர்!

 17. டியர் சுந்தர்
  ஒரு கேள்வியை கேட்டு விட்டு நீங்களே பதிலும் சொல்லி இருக்கிறிர்கள். இதுவே இறைவன் உங்கள் பக்கம் இருக்கிறான் என்பதற்கு உதாரணம். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
  ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு புரட்சிக்கும் போராட்டத்துக்கும் பின்தான் பொலிவு பெறுகிறான் சுந்தர்.
  உங்கள் இலக்கை குறி வைத்து நகருங்கள். தடைகள் விலகி, வழி கிடைக்கும்.
  பி. சுவாமிநாதன்

 18. We know that you know the following powerful words by Swami Vivekananda
  “All power is within you: you can do anything and everything.Believe in that, do not believe that you are weak.Stand up and express the divinity within you.
  Arise, awake, and stop till the goal is reached. “

 19. சுந்தர்ஜி உங்கள் அனுபவங்களும் மேற்கோள் காட்டும் பல்வேறு செய்தி தொகுப்புகளும் குழப்பம் என்னும் சுழலில் சிக்கி தவிக்கும் எண்ணற்றோருக்கு நிச்சியம் ஒரு தெளிவை தரும் என்பதில் ஐயமில்லை !!!

  இருட்டில் உள்ளோருக்கு விளக்காய் விளங்கும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துவதோடு மென்மேலும் பலரது வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டுகிறோம் !!!

  வாழ்க உங்கள் முயற்சி !!!
  வளர்க உங்கள் திருத்தொண்டு !!!

 20. எவளோ பல போரட்டங்கள் துன்பங்கள் சந்தித்து இன்று இந்த நிலையை அடைந்திருகீர்கள் …இது எல்லை இல்லையே
  யாரு வந்தா என்ன போனா என்ன
  எல்லாவற்றிக்கும் காரணம் இல்லா மல் இல்லை அதை எல்லாம் தெரிஞ்சிர்கனும் அவசியம் இல்லை
  உங்களுக்கு இருக்கும் தெளிவு புரிதல் என்னை போல் பல பேருக்கு இருபதில்லை …அது இன்று இல்லாமல் போகலாம் நாளை வராமல் போகாது..
  காலம் மாறும்

 21. அன்புள்ள சுந்தர், இந்தக் கட்டுரையைப் படித்தபின் உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னலம் கருதா இந்த முயற்சி, நீங்கள் எதிர் பார்த்ததையும் தாண்டி பெரு வெற்றியடைய இறையருள் துணை நிற்கும். ஐயா நாராயணசாமி அவர்கள் கூறியது போல, உங்களால் முடிந்தவரை முயற்சிகள் மட்டும் மேற்கொண்டால் போதும். பலன் கிடைப்பது அவன் கையில் உள்ளது.

  நட்பின் வாஞ்சையில் நான் சொல்லிக் கொள்ள பிரியப்படுவது ஒன்றே ஒன்று தான். உங்கள் ஓய்வு நேரத்தை மட்டும் பொதுக் காரியங்களில் செலவழித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம். நீங்கள் எடுக்கும் முயற்சியில் தான், உங்கள் சந்ததியின் வளர்ச்சியே ஆரம்பிக்கிறது. பரம்பரையாக சொத்துக்கள் குவிந்த குடும்பத்தில் நீங்கள் பிறக்கவில்லை. எவ்வளவு சிரமத்தில் , நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்கள் என்பதை அறிவேன். ஒரே ஒரு விஷயத்தில் அதிக பிரயாசை எடுத்துவிட்டு, பின்னால் எந்த வித ஏமாற்றமும் அடையக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் சொல்லுகிறேன்.

  நீங்கள் ரசித்து செய்யும் இந்த காரியம், எந்த நாளிலும் தொடர்ந்து இருக்க, என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.

  எந்த ஒரு காரியமும் காரணமின்றி இல்லை. விரைவில் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற, இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

  Needless to mention that my best wishes are there for you for all your efforts & I am at your disposal for any kind of support.

  With kind regards,

  Rishi

  1. ——————————–
   நன்றி ரிஷி அவர்களே….

   நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
   தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
   தன் கடன் அடியேனையும் தாங்குதல்
   என் கடன் பணி செய்து கிடப்பதே

   பொருள் : நம் முருகனைப் பெற்றவளைப் பாகமாக உடையவனும் அழகிய திருக்கடம்பூரிலுள்ள கோயிலில் எழுந்தருளி இருப்பவனுமான இறைவனின் கடமை என்னையும் காத்தல் ஆகும்; என் கடமை தொண்டுசெய்து கிடத்தலே ஆகும்.

   – சுந்தர்

 22. Sundar anna,

  Article reflects what most of the people experience, so its GREAT that ur artcles are related to d common perception.

  And…
  Basically great people(Those who live for a Dream, who wanna be Unique from the birth-growth-education-marriage-children-old age cycle)will obviously feel like what u said quite often.If they don feel then there is something wrong in their path!!because this “so called anxiety” will enable us to self introspect..i.e

  WHAT WE WERE?
  WHAT WE ARE?
  WHAT WE WILL BE?
  ARE WE GOING ON THE PROPER PATH?
  ARE WE GOING AS PER OUR SCHEDULED PLAN?etc..

  And the only answer to all the questions is just one thing..
  “HE KNOWS WHAT TO DO”
  We are all just mere puppets executing the plans of the Great Master above US!!

  Let us consider this “small piece of sadness ” as a BOON and not as a bane–that is how it should be treated!!and NOT all people are GIFTED with the Skill of self introspection..So we are blessed:)..
  Most people don know ..
  WHO THEY ARE?
  WHY THEY ARE HERE?etc..
  So we are the Unique few selected By the ALMIGHTY (based on our Karma) to execute his plans..WE ARE HIS SOLDIERS:):)

  Another thing..

  “Our journey towards the ETERNAL begins with SELF-INTROSPECTION..and ends with the REALISATION OF THE SELF”..

  As always lets Look at the Positive side of anything that we face..(THAT IS ONE THING WE CAN DO NO ONE CAN CHANGE IT EXCEPT US) and strive towards our Goals..
  Munshi Ji is our mentor/Guide..Lets follow him:)HIS SOUL will guide us..

  Regards
  R.HariHaraSudan.
  “HE WHO KNOWS THE SELF KNOWS ALL.”

 23. இன்று உங்கள் தளத்தில் பிரவேசித்து பதிவுகளைப் படித்தேன். நன்றி கூறுகிறேன். தொடர்ந்து பதிவுகளைப் பதிவு செய்ய உங்களுக்கும், படித்துப் பயன் பெற என்னைப் போன்றவர்களுக்கும் இறைவன் அருள் புரிவான்.வணக்கம்.

  1. மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து வருகை தாருங்கள்.
   – சுந்தர்

 24. சென்ற வாரம் தான் முதன் முதலில் நான் உங்கள் தளத்திற்கு அறிமுகமானேன் மஹா பெரியவரின் மந்திரப்புன்னகை என்னை ஈர்த்து அசைக்கமுடியாத மன நம்பிக்கையும் மனவலிமையும் தந்தது.
  ஓவ்வொரு நாளும் பெரியவரின் திருமுக தரிசனம் கண்ட பின் தான் வெளியில் செல்வது என்றாகிவிட்டது. நீண்ட நாட்களாக தாமதப் பட்டுக்கொண்டிருந்த சில முயற்சிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது போல் நடந்து முடிந்தது. தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

  அமெரிக்காவில் ஓஹயோ கொலம்பஸ் ஸ்டேட் பலகலை கழகத்தில் தற்போது படித்துகொண்டிருக்கும் எனது ஒரே மகளிடம் நடந்தவற்றைக் கூறி அவளையும் பெரியவர் பற்றி படிக்கவும் அவரது திரு உருவப்படத்தை அனுப்பி தினமும் நமஸ்காரம் செய்து மனமுருக வேண்டிக்கொள்ள சொன்னேன். கண்ணதாசன் போல நானும் சில பல கருத்துக்களுடன் இருந்தேன். என்னுடைய ஐம்பது எட்டாவது வயதில் நடந்த இந்த திருப்பம் எனது மீதமுள்ள வாழ்க்கையில் மிஹப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் மிஹ நம்பிக்கையுடன் இருக்கிறேன். ரெட்டியார் சமுகத்தில் பிறந்த எனக்கும் பெரியவரது அனுகிரகம் கிட்டும் பாத்தியமாவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

  இந்த நிகழ்வுக்கு தங்களது தளமே மூலகாரணம். மஹா பெரியவர் ஆசி என்றென்றும் உங்களோடு. பயிரை வாட விடுவது நன்றாக வளரச்செய்யத்தான்.

  உங்களுக்காகவும் பிரார்த்திப்பேன்

  இனி என்றும் மஹா பெரியவரின் அருளாசி வேண்டும் அன்பன்
  ராஜாசிதம்பரம்

  1. மிக்க நன்றி சார்!

   என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களை போன்றவர்களின் வார்த்தைகளை படிக்கும்போது எனக்கு ஏற்படும் சோர்வெல்லாம் பறந்து புத்துணர்ச்சி பிறக்கிறது என்றால் மிகையல்ல.

   இறைவனை நோக்கி நாம் ஓரடி எடுத்த்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்துவைப்பான். ஆனால் குருவை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி நூறடி எடுத்து வைப்பார். அது தான் உங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.

   எனக்காக தாங்கள் பிரார்த்தனை செய்துவருவதற்கு மனமார்ந்த நன்றி.

   உங்களை போன்றவர்களின் ஆசிகள் நிச்சயம் எம் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐய்மில்லை.

   குருவருளும் திருவருளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்த்தாருக்கும் குறைவின்றி கிடைக்க பிரார்த்த்திக்கிறேன்.

   – சுந்தர்

 25. இந்த பதிவை படிக்கும் பொழுது தாங்கள் எவ்வளவு மனபாரத்துடன் பதிவு செய்து இருப்பீர்கள் என்று புரிகிறது. இந்த பதிவுக்கு பின் ஓராண்டில் நம் தளம் தங்கள் உழைப்பால் எவ்வளவு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. வாடிய பயிரை கண்டபோது வாடினேன் என்றார் வள்ளலார். தாங்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி இல்லாதவர்களுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்து வருகிறீர்கள் . எல்லாம் அந்த மகா பெரியவா அவர்களின் ஆசி யினால் தான். நம் தளம் மேலும் பல அறிய பணிகளை செய்ய இறைவன் அருள் புரிவார். தங்கள் அயரா உழைப்பிற்கு வெற்றி நிச்சயம்.

  நன்றி
  உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *