Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, November 5, 2024
Please specify the group
Home > Featured > சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு!

சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு!

print
துவை எதிர்த்து தமிழகமே போராடிவரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக களம் இறங்கிவரும் நிலையில், மக்களின் அபிமான திரை உலக நடிகர்கள் வழக்கம்போல் இந்த மக்கள் பிரச்னையிலும் இதுவரை எதுவும் பேசவில்லை.

Drinking scenes in tamil movieஇன்றைய குடி கலாசாரத்துக்கு முக்கியமான பங்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டு. அரைமணி நேரத்துக்கு குடியுடன் ஒரு குத்துப்பாட்டும், டாஸ்மாக் விளம்பரம்போல குடிபோதை காட்சிகளும், நடிகைகளும் குடித்து சம உரிமை கேட்பதுபோலவும் உள்ள காட்சிகள் தமிழ்ப் படங்களில் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். தந்தைக்கு மது கொடுத்து பாசமூட்டும் மகளும், காதலனுக்கு மது கொடுத்து காதலை வளர்க்கும் காதலியும் உள்ள போதைத் திரைப்படங்கள் நிறைந்த நாடு இது.

நட்பு என்றாலே மொட்டை மாடியில் போதையுடன் பேசுவது போலவும், மன அமைதிக்கு, நண்பர்கள் சந்திக்கும் முக்கியமான இடமாக டாஸ்மாக் பார் செல்லும் காட்சிகளும் இல்லாத படங்கள் மிகக் குறைவு.

"

கதாநாயகர்கள் மது அருந்தாவிட்டால் இவரெல்லாம் ஒரு கதாநாயகனா எனக் கேட்கும் அளவுக்கு மதுக்காட்சிகள் மக்களைச் சென்றடைய வைத்த ‘பெருமை’ நம் நடிகர்களைச் சேரும். காமெடி நடிகரா இல்லை குடும்பம் அழிக்க வந்த டாஸ்மாக் விற்பனை பிரதிநிதியா எனக் கேட்கும் அளவுக்கு காமெடியர்கள் சிரிக்க வைப்பதற்குப் பதில் அழ வைக்கின்றனர்.

சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிக்கு தடைசொல்லும் நீதிமன்றமும், தணிக்கைத் துறையும் குடும்ப வன்முறை நிகழக் காரணமாகும் மது போதைக் காட்சிக்கு தடை சொல்லவில்லை. வன்முறைக் காட்சிகளைவிட பல லட்சம் மடங்கு மோசமானது, மது அருந்தும் காட்சியே. (தொலைக்காட்சித் தொடர்களோ சொல்ல முடியாத அவலத்தில் மக்கள் வீட்டுக்குள் வந்து நிற்கிறது.)

மற்ற மாநிலத்து சினிமா ரசிகர்களுக்கும் தமிழக சினிமா ரசிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அங்கு சினிமா திரை அரங்கோடு முடிந்துவிடும். இங்கு சினிமா வாழ்க்கையோடு தொடர்ந்து வரும் உறவாக நினைப்பார்கள். நடிகர்களுக்காக தமிழன் இருக்கிறான். தமிழனுக்காக நடிகர்கள் மதுவுக்கு எதிராக குரலாவது கொடுப்பார்களா? சினிமாவில் வீரவசனம் பேசும் இவர்கள் நிஜவாழ்வில் மக்களுக்காக ஒரு அறிக்கை கொடுத்தால் அதுவே தமிழனுக்குச் செய்யும் பேருதவி.

எத்தனையோ திரைப்படங்களில் மக்களை குடிக்க வைத்து மக்களை அழித்த சினிமா உலகம், இனிமேலாவது குடிபோதைக் காட்சிகளை நிறுத்துமா… இல்லை, இப்போது டாஸ்மாக் கடைகளை நோக்கி ஆவேசத்துடன் படையெடுத்துக்கொண்டிருக்கும் மக்கள், போதைக்காட்சி வரும் படம் வெளியாகும் திரை அரங்குகளை நோக்கி திரும்ப வேண்டுமா என்பதை நடிகர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

சமுதாயத்தை சீரழிப்பது குடி மட்டுமல்ல… சினிமாவும் தான்…!

துவுக்கு எதிரான மக்களின் போராட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அண்மையில் தீவிரத்தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக தன் வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், குமரி மாவட்டத்தில் ஒரு மதுக்கடையை அகற்றும் போராட்டத்தின்போது மரணமடைந்தார்.

சசிபெருமாளின் மரணத்துக்குப் பிறகு மதுவுக்கு எதிரான மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்துள்ளது. மதுவுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் மட்டுமின்றி, மாணவர்களும், மாணவிகளும், பெண்களும் தெருவில் இறங்கி போராடத்தொடங்கிவிட்டனர். மதுக்கடைகள் அடித்து உடைக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஊடகங்களிலும் மதுவிலக்கு பற்றிய விவாதமும்… விழிப்புணர்வு உரையாடல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மக்களுக்கு மதுவை அறிமுகப்படுத்திய தி.மு.க.வே தேர்தல் நெருங்குவதை மனதில் வைத்து மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுக்க, மற்ற அரசியல்கட்சிகளும் மதுவிலக்கை உடனடியாய் அமல்படுத்த வேண்டும் என்ற கோஷத்தை முன் வைக்கத் தொடங்கியுள்ளன. (தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க அரசும் ஒரு கட்டத்தில் மதுவிலக்கை விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது. கட்டுரையாளர் அதை குறிப்பிடவில்லை.)

இப்படியாக, சமூக, அரசியல் தளங்களில் மதுவுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும்நிலையில், அதற்கு நேர்மாறாக, திரைப்படங்களில் மட்டும் மதுவுக்கு ஆதரவான பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக இந்தப்போக்கு முன்னைவிட வலுப்பெற்றும் வருகிறது.

தமிழ்சினிமாவில் கதாநாயகனின் நண்பன் என்ற பெயரில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஒரேயொரு வேலைதான்…! சதா நேரமும் கதாநாயகன் சகிதமாக சரக்கடிப்பதைத் தவிர தமிழ்சினிமா நண்பேன்டாக்கள் வேறு எதையும் செய்வதில்லை. அது மட்டுமல்ல, சரக்கடிப்பதை மிகப்பெரிய கொண்டாட்டமாக சித்தரிக்கும் வசனங்களையும் பேச தவறியதில்லை.

காதல் என்றாலும் சரக்கு… காதலில் தோல்வி என்றாலும் சரக்கு…!

தமிழ்சினிமாவில்…. கதாநாயகன் காதல் வயப்பட்டாலும் சரக்கடிக்கிறார்கள்… காதலில் தோல்வியடைந்தாலும் சரக்கடிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து எல்லாப்படங்களிலும் பார்க்கும் பார்வையாளன் நிஜ வாழ்வில் தனக்கு அப்படியொரு அனுபவம் ஏற்படுகிறபோது, சினிமாவில் பார்த்த அதையே செய்யத் துணிகிறான். குறிப்பாக காதல் தோல்வி ஏற்படுகிறபோது அதற்கான தீர்வாக குடிப்பதை தேர்ந்தெடுக்கிறான். திரைப்படக்காட்சி ஒருவனின் வாழ்வை இப்படியும் சூறையாட முடியும்.

எனவே, கதாநாயகனும், நண்பர்களும் சினிமாவில் குடித்துவிட்டு கூத்தடிக்கும் காட்சிகளை… சினிமாதானே என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.

Drinking scenes in Tamil cinema

ஆபத்தான வசனங்கள்…!

சில தினங்களுக்கு முன் வெளி வந்த ஒரு திரைப்படத்தில் அப்படத்தின் நாயகன், இன்னொரு நடிகரிடம் சொல்கிறார்… போரடிக்குதுன்னு கூப்பிடுறவன் ப்ரண்டு, பீர் அடிக்கலாம்னு கூப்பிடுறவன் பெஸ்ட் ப்ரண்டு என்று…

மேலோட்டமாகப் பார்த்தால் இது நகைச்சுவை வசனம்போல் தோன்றும். உண்மையில் மிக ஆபத்தான வசனம் இது. இந்தப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களிலும் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து கேட்கும் ஒருவனின் மனதில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?

பீர் அடிக்கலாம்னு கூப்பிடுகிறவன்தான் பெஸ்ட் ப்ரண்டு – என்று நட்புக்கு புது இலக்கணம் சொல்லும் அந்த வசனம், அதைக் கேட்பவர்களின் மனதில் அவர்களை அறியாமலே ஆழமாகப் பதியும் என்பது உளவியல் உண்மை.

"

கதாநாயகன், சிரிப்பு நடிகர்களைவிட, தமிழ்சினிமாவின் வில்லன்கள் இன்னும் மோசமான காட்சிகள்…! வில்லனைப் பற்றிய அறிமுகக்காட்சி தொடங்கி க்ளைமாக்ஸில் கதாநாயகனிடம் அடிபட்டு சாகும்வரை வில்லன் என்பவன் குடித்துக்கொண்டேதான் இருப்பான். ஒரு கையில் தம்… இன்னொரு கையில் தண்ணி…!

குடிப்பாட்டாக மாறிய குத்துப்பாட்டு…!

அதுபோலவே, அண்மை வருடங்களாக தமிழ்சினிமாவுக்கான வணிக சூத்திரத்தில்… அதாவது கமர்ஷியல் ஃபார்முலாவில் மிக அபாயகரமான மற்றொரு அம்சமும் சேர்ந்திருக்கிறது.

குத்துப்பாட்டு என்ற பெயரில் இடம்பெற்று வந்த கவர்ச்சி நடனம், கடந்த சில வருடங்களாக குடிப்பாட்டாக மாறிவிட்டது. டாஸ்மாக் பாரில் சரக்கடிக்கும் காட்சியும், அங்கே கவர்ச்சி நடிகை ஒருவர் உடம்பைக் குலுக்கி ஆடும் கவர்ச்சிப்பாடலும் இல்லாத தமிழ்ப்படங்களை பார்ப்பது அரிது. அல்லது விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இதுபோன்ற குடிப்பாட்டுக்கள் நிஜத்தில் எந்தவொரு டாஸ்மாக் பார்களிலும் நடப்பதில்லை. தமிழ்சினிமாவில் மட்டும் இப்படியான சித்தரிப்பு. இதுபோன்ற காட்சிகள் மது மீது மட்டுமல்ல, மாது மீதும் மோகத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளன.

va-quarter-cutting-14

பட தலைப்பிலேயே மது…!

வசனங்கள், காட்சிகள், பாடல்கள் என பல வழிகளில் மதுவை பிரதானப்படுத்திய… பிரச்சாரம் செய்த தமிழ்சினிமா தற்போது அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது படங்களில் தலைப்பிலேயே மதுவை குறிப்பிடுகிறார்கள். வ குவாட்டர், மதுபானக்கடை என்ற பெயரில் எல்லாம் படங்கள் வந்தன.

இப்போது, விரைவில் வெளிவர உள்ள படம் – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பது படத்தின் பெயராக இருந்தாலும், இப்படத்தை VSOP என்றே அப்படத்தில் நடித்தவர்கள் தொடங்கி படக்குழுவினர் குறிப்பிட்டு வருகின்றனர். VSOP என்பது பிரபலமான மதுவின் பிராண்ட்.

VSOP என்ற படத்தின் தலைப்பிலேயே மதுவின் நெடி இருக்கிறபோது, இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை.

சென்சாரும் கண்டு கொள்ளவில்லை!

சரக்கடிக்கும் காட்சிகளும், வசனங்களும் அதிகமாக இடம்பெறும் படங்களை சென்சாரும் கண்டு கொள்வதில்லை. வெறுமென புகைப்பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று வாசகங்கள் மட்டும் இடம்பெற்றால் போதுமா…! படங்களில் அப்படி போடும் வாசகங்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள். அதைவிட முக்கியம், அந்த வாசகம் இடம்பெற்றுள்ளதா…? என தேடும் அளவுக்கு சிறிதாக வௌியிடுகிறார்கள். வன்முறை, ஆபாசம் போன்ற விஷயங்களை பார்க்கும் சென்சார் மதுபானம் போன்ற விஷயங்களையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது.

வரிச்சலுகை கூடாது…!

பொதுவாக குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள எந்தவொரு படத்துக்கும் வரிவிலக்கு சலுகை அளிக்கக் கூடாது என்பதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும்.

"

சமூகத்தில், இன்றைக்கு சினிமாவின் தாக்கம் அதிகம். ஒவ்வொரு ஹீரோவையும் இளைஞர்கள் தங்களது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமல்ல குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களை பாலோ செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு ஹீரோ செய்யும் எந்தவொரு விஷயமும் அவர்களிடம் அப்படியே பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வௌிவந்த மாரி படத்தில் அவர் அடிக்கடி ஒரு வசனம் செஞ்சுருவேன். இந்த வார்த்தைக்கான அர்த்தம் அந்த குழந்தைகளுக்கு தெரியுமோ தெரியாதோ… ஆனால் அந்த வசனத்தை அவர்களும் அடிக்கடி சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அந்தளவுக்கு அவர்கள் சினிமாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

அதனால் படம் எடுப்பவர்களும் சமூகத்தின் மீது கொஞ்சம் அக்கறை வைத்து படம் எடுங்கள்…!

(நன்றி : எஸ்.அசோக் – விகடன்.காம் & தினமலர் – திரைமலர்)

================================================================

நாம் உடனடியாக செய்யவேண்டியது என்னவென்றால் குடிப்பதை பெருமையாக பேசும், சித்தரிக்கும் படங்களை புறக்கணிக்கவேண்டும். அத்தகைய நடிகர்களையும், இயக்குனர்களையும் அவர்கள் வேறு எந்த நல்ல படைப்பை தந்தாலும் புறக்கணிப்போம். இதுவே நாம் உடனடியாக செய்யவேண்டிய பணி.

================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================

Also check :

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…

எங்கே செல்லும் இந்த பாதை?

என்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை?

‘அப்பா… வேணாம்ப்பா!’ – நம் விருதுகள் பட்டியலில் ஒரு திடீர் வரவு!

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

“வணக்கம் அண்ணா!”

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

இந்த வெற்றி உங்கள் வெற்றி! Quick Update on Righmantra Awards 2013 & Annual Day!

================================================================

[END]

9 thoughts on “சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு!

  1. குடியினால் குடும்பமே சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது., குடிப்பவருக்கு அது ஒரு அரை மணி சந்தோசம், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தினமும் அடியும் மிதியும் வாங்கி நரக வேதனை அனுபவித்து தினமும் சாவின் விளிம்பிற்கு சென்று குடும்பம் நடத்துவதை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. நாட்டில் குடி என்னும் அரக்கனை வேரோடு சாய்க்க வேண்டும்.

    வருங்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு மக்களிடமும் உள்ளது

    சினிமாவை பார்த்து இளைய சமுதாயம் சீரழிகிறது.

    விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள்

    வாழ்க .. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. சார்,

    இது புற்று நோய் போன்றது. இது ஆரம்பம் அல்ல, முற்றி விட்ட நிலை. இதை ஒன்றும் செய்ய முடியாது. புற்று நோய் எப்படி கொள்ளுமோ இது நமது சமுதாயத்தை கொள்ள ஆரம்பித்து விட்டது. இன்னும் ரொம்ப மோசமாகத்தான் போகும். ஒன்னும் சொல்றதுக்கு இல்ல…..

    சம்பத்.

  3. டியர் சுந்தர்;

    திரைப்படங்களின் தாக்கம் தற்பொழுது அதிகமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சில வருடங்களாக வெளியிடப்படும் திரைப்படங்களில் முக்கால்வாசி மதுக்கடைகளே இடம் பெறுகின்றன. அதுவும் காமெடி என்ற பெயரில் நடிகர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. நானே நிறைய முறை முகம் சுளித்திருக்கிறேன். திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த காலகட்டங்களில் குடிக்கும் காட்சியில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என கண்டிப்பாக இருந்தார் என கேள்விபட்டிருக்கிறேன். மது குடிப்பவர்களை கூட அவர் திருத்த முயற்சிப்பார் எனவும் தெரிய வந்தது.

    ஆதலால் மதுக்கடைகளை எதிர்க்கும் அனைவரும் கூடிய சீக்கிரம் இது போன்ற படங்கள் திரையிடப்படும் அரங்கங்களையும் முற்றுகையிடும் நாளும் வெகு தூரத்தில் இல்லை. இனிமேலாவது திருந்தட்டும்.

  4. இப்போ உள்ள இளைஞர்களின் மனதில் சோகம் வந்தால் சரக்கு…சோகத்தை எப்படி எதிர் கொள்வது…மாற்றி கொள்வது என பல பேர் சிந்திபதில்லை..ஏன் என்றால் அவர்களுக்கு தெரிந்த ஒரு வழி குடிப்பது மட்டுமே..அவர்களுக்கு அந்த சிந்தனையை மாற்ற நாம் அனைவரும் தான் சிந்திக்க வேண்டும்..மாற்றம் கொண்டு வர வேண்டும்..நலம் விரும்பிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல் பட வேண்டும்.

  5. குடி என்பது பழக்கம் அல்ல. அது “குடி வியாதி”

  6. Excellent article Sundar Sir
    I could not agree more that Cinema plays an important role in ruining the happiness of families. Some where I read a picture is more effective than a thousand words, Keep up the good work.
    Sakuntala

  7. தன் முனைப்பு குன்றி வரும் சமுதாயமாக தமிழ் சமூகம் மாறுகிறதோ என்ற பயம் வருகிறது.

    மது என்பது முற்றிலும் கூடாது என்று கூற முடியாது.
    மனித வாழ்வியலின் வரலாறு மதுவையும் தன்னுள் எப்போதும் கொண்டதாகவே இருந்துள்ளது.
    அனால் மது சமுதாயத்தின் அடையாளமாக இருப்பது ஆபத்து.

    ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தை அழிக்க நினைத்தால் மதுவை ஒரு மெல்ல கொள்ளும் கிருமியாக பயன்படுத்த முடியும். தனியாக ஆயுதம் தங்கிய போர் தேவை இல்லை.
    இப்போது அதுதான் தமிழ் சமூகத்தின் மீது நிகழ்கிறதோ என்ற அச்சம் எழுகிறது.

    மதுவில் தன்னை இழக்காமல் இருக்க வேண்டும் என்ற சிறு எச்சரிக்கை உணர்வு கூட அற்ற கூட்டமாக தமிழ் சமூகம் தன்னை இழந்து கொண்டு உள்ளதோ என அச்சமாக உள்ளது.

  8. குடிப்பது இப்பொழுது ஒரு சமூக அந்தஸ்து போல மாறிவிட்டது
    இதில் கேவலம் என்ன வென்றால் சில பெண்கள் மணமகன் தேடு போது சோசியல் drinker போட்டால் மிகவும் விரும்புகிறார்கள்
    குடிப்பதை பற்றியும் குடிக்கும் கூட்டத்தை எப்படி குடிக்காத நண்பர்கள் தவிர்க்கணும் என்பதை பற்றி உங்களிடம் அடிகடி பதிவு வந்தால் நன்றாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *