நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிய்த்துக்கொண்டு பறந்து போகும் பிரமுகர்கள் மத்தியில் நிகழ்ச்சி தாமதமாக முடிந்த பின்னரும் விருந்தினர்கள் அரை மணி நேரம் கூடுதலாக செலவிட்டு மகிழ்ந்ததே நிகழ்ச்சியின் வெற்றிக்கு சாட்சி.
துணை நின்ற வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. நாம் செய்ய நினைத்த அனைத்தையும் ஒன்று விடாமல் செய்து முடித்ததில் நண்பர்களின் பங்கு மகத்தானது. அனைவரையும் மேடையில் ஏற்றி கௌரவித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.
ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு QUICK UPDATE. காலை ஒரு விரிவான பதிவில் சந்திக்கிறேன்.
இந்த வெற்றியை ரைட்மந்த்ராவின் வாசகர்கள் அனைவருக்கும் காணிக்கையாக்குகிறேன்!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
டியர் சுந்தர்,
Very happy to hear and see the photos…
மிகப் பெரும் வெற்றிக்கான விதை !!!
தங்களின் மற்றுஒரு பதிவின் தலைப்பான ” விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை” மிகப் பொருந்தும் இனி.
மிகுந்த மகிழ்சியுடன் இனிதே அடுத்த இலக்கை நோக்கி பயணம் தொடர வாழ்த்துக்கள் …
கடவுள் வாழ்த்து – திருமதி.கற்பகம் & குழுவினர்
நல்லதொரு தொடக்கத்தை தந்தார்கள் .
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வந்திருந்து நமது தல வாசகர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அருமையாக உரையாற்றி விருந்து படைத்தனர். நேரம் மிக குறைவாக இருந்தாலும்,சிறப்பான கருத்துக்களையும்,அனுபவங்களையும் கேட்க கேட்க இனிமையாக இருந்தது .
விழா நாயகன் சபரி வெங்கட்டின் உரை மிக மிக அருமை.
விழாவிற்கு வந்திருந்த அனைவரும் விழி அசைக்காமல் விழிக்க வைத்துவிட்டார் .
விருது பெற்றவர்கள் அனைவரும்,தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர் . “”நல்ல அற்புதமான ஆழமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் “”.சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் தொகுத்து வழங்கிய சுந்தர் ஜி உரை அருமை .
ஒலி ஒளி அமைப்பு சிறப்பாக நிறைவாக இருந்தது .
அடுத்த ஆண்டு விழவிர்க்கு மிகப்பெரிய மண்டபம் தேவை என்பதினை நமது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் சிறப்புவிருந்தினர்கள் நிருபித்து விட்டார்கள் .
வீட்டில் சுப நிகழ்சிக்காக காத்திருந்து,நல்லபடியாக முடிந்ததும் ஒரு சந்தோசம் கிடைக்கும் ….
அந்த சந்தோசம் எனது rightmanthra குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைத்துள்ளது .
-மகிழ்ச்சியுடன்
மனோகர் .
விழாவை வெற்றிகரமாக முடித்த உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள். விரிவான பதிவை காண ஆவலுடன் உள்ளோம். உங்கள் வெற்றியை காணும் உங்கள் பெற்றோருக்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.
சுந்தர் சார்,
இந்த வெற்றிக்கு உங்களின் விடா முயற்சி தான் இதற்கு காரணம். இந்த ஆண்டு விழாவை போல் பல வெற்றி ஆண்டு விழாவை நீங்கள் நடத்த வேண்டும். இதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றியுடன் அருண்.
Thank Sundar sir! for arranging such a wonderful occasion!. It is really a treasured one, meeting such a great personalities in our life.
பல தடைகளை தாண்டி, குருவருளாலும் திருவருளாலும் ரைட்மந்த்ரா ஆண்டுவிழா மிக மிக சிறப்பாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வந்திருந்து நம்மை சிறப்பித்தனர். . இந்த ஆண்டு விழாவை போல் பல வெற்றி ஆண்டு விழாவை நீங்கள் நடத்த வேண்டும். விழா நாயகன் சபரி வெங்கட்டின் உரை மிக மிக அருமை மிகப் பெரும் வெற்றி சுந்தர்,என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுந்தர் சார்
ஆண்டுவிழா இனிதே நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள்.இந்த நிகழ்ச்சியில் எங்களை பங்குகொள்ள வைத்த உங்களை மனமார பாராட்டுகிறோம்.
கடவுள் வாழ்த்து பாடலுடன் விழா இனிதே களைகட்டியது. அந்த இருவரும் நன்றாக பாடினார்கள்.
என் இஷ்ட தெய்வம் நம் அப்பா சிவன். அவரின் பஞ்சட்சர மந்திரம் நமசிவய. அந்த மந்திரத்தின் உருவமாய் நம் ஐந்து சிறப்பு விருந்தினர்களும் ஒருசேர அமர்திருந்தது போல் எனக்கு தோன்றியது.
சிறப்பு விருந்தினர் அனைவரும் இந்த விழாவில் சிரித்த முகத்துடன் இறுதி வரை பங்குகொண்டது கண்கொள்ள காட்சி.
சபரி வெங்கட் அவர்களின் உரை அந்த விவேகனந்தர் அவர்களே பேசியது போல் இருந்தது.
நம் தோழர்கள் அனைவரும் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தார்கள்.
உலவரபணி செய்யும் போது ஒரு பத்து நாட்களாவது அந்த energy எங்களுக்கு இருக்கும். ஆனால் இந்த விழாமூலம் கிடைத்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.
இப்படி சந்தோஷ கடலில் ஆழ்த்திய எல்லோருக்கும் எங்கள் நன்றி.
சார்,
மென் மேலும் வளர வாழ்த்துகள்
திரு சுந்தர் அவர்களுக்கு
விழா இனிதே NIRAIVERYAMIKU கன்க்ராட்ஸ்
வைதீஸ்வரன்
சுந்தர்ஜி.
விழாவின் தொடக்கம் கடவுள் வாழ்த்து கற்பகம் குழுவினரின் கணீரென்ற பாடல்கள் மிகவும் அருமை. அடுத்து நமது சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் இன்னும் கொஞ்சம்
பேச மாட்டர்களா ? என்கின்ற அளவுக்கு ஒருவரை ஒருவர் மிஞ்சி பேசியது என்றென்றும் நினைவை விட்டு அகலாது.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியை போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.
மகாகவி பாரதியின் பாடல்களில் முக்கியமான பாடல். இந்த பாடல் தங்களுக்குதான் பொருந்தும் அப்பா கவனமாகத் தொடுக்கப்பட்ட பூச்சரம் இது. ஒரு பூ இல்லாமல் அடுத்த பூ இல்லை.
ரைட் மந்த்ரா வாசகர்களாகிய எங்களையும் மேடையில் ஏற்றி கௌரவம் செய்ததை நினைக்கும் போது சொல்ல வார்த்தைகளே இல்லை . சந்தோழ கடலில் ஆழ்த்தி விட்டர்கள்.
என்றென்றும் நன்றியுடன் தங்கள் வழி நடக்க கடமை பட்டு உள்ளோம்.
திரு சுந்தர் அவர்களுக்கு,
திரு . manoharan September 30, 2013 – தெரிவித்த கருத்துக்கள நான் வழி மொழிகிறேன் ,
மென் மேலும் வளர வாழ்த்துகள்
நமது ஆண்டுவிழ மிக அற்புதமாக நடைபெற்றது என்பதை சொல்லவும் வேண்டுமா? அருமை ..அருமை…விழாவை மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தார்கள் நமது குழுவினற் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் ….சகிப்புத்தன்மை நிறைந்த சேவகர் திரு .மணிமாறன்..மற்றும் கிராமத்தில் மதுவை ஒழித்து கல்விக்கண் திறந்த ஆசிரியர்,…..தனது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்த சபரி வெங்கட்…..மற்றும் விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒளிவு மறைவு இல்லாமல் ஆற்றிய உரை உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைத்தது ….இதன் அத்துணை பாராட்டுக்களும் திரு சுந்தர் சார் அவர்களைவே சாரும் …
மென்மேலும் பல ஆண்டு விழாவினை நம் தளம் கொண்டாட வேண்டும் என இத்தருணத்தில் நான் வாழ்த்துகிறேன்…
நன்றி…
நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
சென்ற வருடம் பிறந்த குழந்தையாக ரைட் மந்த்ரா ,பாரதி விழா நடத்திய போது கூட்டம் வருமா வராதா என்று பயந்து ,கூட்டம் வந்தது ,ஆனால் இந்த வருடம் நம் தளத்திற்கு என்று ஒரு கூட்டம் உருவாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , நம் தளம் சரியான பாதையில் பயனுள்ளதாக இருப்பதையே காட்டுகிறது ,இப்பொழுது எனக்கு இருக்கும் பயம் அடுத்த வருடம் இந்த இடம் பத்துமா என்று
நம் தளம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
சுந்தர் சார்,
வாழ்த்துக்கள். இதைப் போன்று மேலும் பல விழாக்களை தாங்கள் நடத்த இறைவனை வேண்டுகிறேன்.
அன்புள்ள ஜி
எனக்காக KOOTTU பிரார்த்தனை செய்தமைக்கு மிக்க நன்றிகள். நான் நினைthukuda பார்க்கவில்லை இவ்வளவு பெரியவர்களையும், இன்றைய சுவாமி விவேகனந்தரையும் ஒர் சேர பார்த்ததில் எனக்கு மிக்க சந்தோசம். விழாவிற்கு வந்த பெரியவர்கள் ஆசியுடன் ரைட் மந்த்ரா தினசரி பிரார்த்தனை மடலை கொடுத்தது தெவிட்டாத இன்பம். ஆனாலும் குழந்தை விவேகனந்தர்(சபரி வெங்கட்) நிச்சயம் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் குருவிடம் அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டேன் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு நடந்து வர வேண்டும் என்று ரைட் மந்த்ரா கூட்டு பிரார்த்தனை தொடர்ந்து செய்யும் படி கேட்டுகொள்கிறேன் மேடையில் பேச நினைத்ததை இன்னைய தளத்தின் மூலம் அனுப்பியுள்ளேன்
அன்புடன்
மதுசூதனன்
இந்த வருடமும் இறைவன்,தாங்கள் படைத்தளித்த செவியுணவை எனக்கு தரவில்லை. / எனினும் என் ஆத்மார்த்தம் தங்களை, தங்களின் உழைப்பு சேவையை உணர்ந்து போற்றுகிறது. நல்ல உள்ளங்கள் வாழ்க….
ரைட் மந்திரா ….வெற்றி நடை …வீறு நடை ….சமுக சேவை …உளவாரம் ….குருஅருள் …..தெய்வ பக்தி…. தேசத்தின் நாளை நமதே நம் சுந்தர் சார் ….
வாழ்த்தட்டும் நம் மனம் ….
திருச்சிற்றம்பலம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. திருச்சிற்றம்பலம்
தொடரட்டும் நற்சேவை ……நாளை நமதே ……
சுந்தர் சார் பல்லாண்டு வாழ பரமனை பணிந்து எல்லோரும் வாழ்த்த எந்நாளும் வாழியவே ……….
தங்கள் தாயின் முகத்தில் தெரியும் பூரிப்பு தான் உங்களை பெற்றதற்கு அவர்கள் அடையும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
மிகுந்த மகிழ்சியுடன் இனிதே அடுத்த இலக்கை நோக்கி பயணம் தொடர வாழ்த்துக்கள்
ஆன்றோர்களும் சான்றோர்களும் கலாந்துகொண்ட ஒரு அற்புத விழாவில் எங்களை கலந்துகொள்ள செய்தது மட்டும் இல்லாமல் மேடையேற்றி அந்த சான்றோர்களின் ஆசிர்வததையும் வாழ்த்தையும் பெற்றுத்தந்த இந்த தளத்துக்கும் உங்களுக்கும் எங்களினின் மனமார்ந்த நன்றிகள் சுந்தர்….விழவைபற்றி குறிப்பிட்டு சொள்ளவவேண்டும் என்றால்…..முத்துமாலையில் எந்த முத்து சிறந்தது என்பதை எப்படி சொல்லமுடியும்….
,
இதுபோன்ற விழாக்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் அதில் எங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.
.
மாரீஸ் கண்ணன்
சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு.. என்னால் வர முடியவில்லை நினைக்கும் போது வருத்துமாக உள்ளது சார்
நன்றி
வாழ்த்துக்கள் சுந்தர்
உங்களின் இந்த சமூக பணி தொடரட்டும்