Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > மலையென வந்ததை பனியென நீக்கிய அஸ்திவாரம் – 2015 புத்தாண்டு ஆலய தரிசன அனுபவம்!

மலையென வந்ததை பனியென நீக்கிய அஸ்திவாரம் – 2015 புத்தாண்டு ஆலய தரிசன அனுபவம்!

print
“நாம் ஏன் ஆலயம் செல்லவேண்டும்? இறைவன் தான் எல்லா இடங்களிலும் இருக்கிறானே?” என்ற புளித்துப் போன கேள்வியை சிலர் அடிக்கடி கேட்டு வருகிறார்கள் அல்லது கேட்க நினைக்கிறார்கள். இதற்கு ஒரே பதில் : “ஆலயம் தொழுவது சாலவும் நன்று!” என்பது தான்.

(* கிட்டத்தட்ட 60 புகைப்படங்கள் இந்த பதிவில் உள்ளன. எனவே உங்கள் கணினியிலோ அல்லது மொபைலிலோ இந்த பதிவு LOAD ஆவதற்கு சற்று அவகாசம் பிடிக்கும். சற்று பொறுமையாக இருந்து பதிவை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.)

பூமி முழுக்க தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அதை எதற்கு மோட்டர் போட்டு ஓவர் ஹெட் டாங்கில் ஏற்றி சேமித்து வைக்கிறோம்? ஒரு அவசரத்துக்கு எடுத்து பயன்படுத்த தானே? அதுப் போலத் தான் ஆலயங்களும். இறையருள் என்பது எங்கும் பரவி விரவியிருந்தாலும், திருக்கோவில்களில் அது சுலபமாக கிடைக்கிறது. ஆலய தரிசனம் செய்து அந்த அருளை அள்ளிக்கொண்டு வரலாமே… இதில் என்ன கஷ்டம்?

ஆலய தரிசனத்தின் பலன் அளப்பரியது. சேமிப்பு கணக்கில் சேமிக்கப்பட்டு வரும் பணமானது எப்படி நமக்கு தக்க சமயத்தில் உதவுகிறதோ அதே போன்று ஆலய தரிசனத்தின் பலனானது தக்க சமயத்தில் திரும்ப கிடைக்கும். எனவே உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும்போதே ஆலயங்களுக்கு சென்று புண்ணியத்தை சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். நாளை நடப்பது நல்லதாகவே இருக்கும்.

புத்தாண்டு தினத்தன்று தேவையற்ற ஆரவாரங்களை தவிர்த்து, அன்று ஆலய தரிசனத்துடன் துவங்கவேண்டும் என்பதை நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளோம். கடந்து நான்கு ஆண்டுகளாக நண்பர்களுடன் குன்றத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு ஆகிய இடங்களுக்கு டூ-வீலரில் சென்று ஆலய தரிசனம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. (இந்த முறை வேன் பயணம். நம்முடன் இணைந்துகொள்ள விரும்புகிறவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள விபரங்களை பார்க்கவும்!)

புத்தாண்டு தரிசனத்தை பொருத்தவரை அறநிலையத்துறை வருவாயை மனதில் கொண்டு புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு முழுக்க ஆலயங்களை திறக்கச் செய்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறது. இது தவறு. ஆகம விதிகளுக்கு முற்றிலும் முரணானது! இரவு நடை சாத்திய பிறகு அதிகாலை 4.00 மணிக்கு மேல் – பிரம்ம முகூர்த்ததில் தான் – கோவிலை திறக்க வேண்டும். நள்ளிரவு ஆலய தரிசனம் என்பது சிவராத்திரியை தவிர வேறு சமயங்களில் கூடவே கூடாது.

Rightmantra New Year temple visit 1

Rightmantra New Year temple visit 2Rightmantra New Year temple visit 3சென்ற ஆண்டு, வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு இரண்டும் சேர்ந்து வந்தமையால், மதனந்தபுரத்தில் நண்பர்கள் வீட்டில் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு பஜனையில் கலந்துகொண்டுவிட்டு (அங்கு தான் இரவு கண் விழித்தோம்) அதிகாலை பரமபத வாசல் தரிசனம் செய்ய குன்றத்தூர் புறப்பட்டோம். நம்முடன் நண்பர் செந்தில், சிட்டி ஆகியோர் இருந்தனர்.

முதலில் குன்றத்தூர் அடிவாரத்தில் இருக்கும் கந்தழீஸ்வரர் தரிசனம். அம்பாள் பெயர் இங்கே நகைமுகைவல்லி. சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்க திருமேனியராக சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. சோழர் கால கோவில் இது. இந்தக் கோவிலுக்கு சற்று அருகில் தான் சேக்கிழாரின் அவதாரத் தலம் உள்ளது. சேக்கிழாரை ஆட்கொண்ட ஈஸ்வரன் இவர். (கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம்.) எனவே கந்தழீஸ்வரர் என இந்த இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது.

இங்கு சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு அடுத்து அருகே உள்ள திருஊரகப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்.

Rightmantra New Year temple visit 4

Rightmantra New Year temple visit 5Rightmantra New Year temple visit 6Rightmantra New Year temple visit 7வைகுண்ட ஏகாதேசி என்பதால் கோவில் களை கட்டியிருந்தது. நல்ல கூட்டம். நேரம் அப்போது 5.30 AM. வரிசையில் காத்திருந்து அரங்கனின் திவ்ய தரிசனம் கண்டோம். நம்முடன் நண்பர் சிட்டி, செந்தில் ஆகியோர் இருந்தனர். கண்ணன் வந்து சேர்ந்துகொண்டார். சரியாக இந்த ஆலயத்தில் தரிசனம் செய்யும்போது ஏன் வந்து சேர்ந்தார் என்பது பின்னர் தான் புரிந்தது. கண்ணா லட்டு தின்ன ஆசையா?

(இந்த ஆலயத்தில் தான இந்த வருட வைகுண்ட ஏகாதேசி சிறப்பு உழவாரப்பணியும், ஏகாதேசி தரிசனமும் நடைபெற்றது! அது பற்றிய பதிவு பின்னர் வரும்!)

Rightmantra New Year temple visit 8

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

Rightmantra New Year temple visit 10

Rightmantra New Year temple visit 9

Rightmantra New Year temple visit 11

 

Rightmantra New Year temple visit 12

 

Rightmantra New Year temple visit 14
கண்ணா லட்டு தின்ன ஆசையா?

தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும்போது, ஒருவர் அனைவருக்கும் லட்டு கொடுத்துக்கொண்டிருந்தார். நமக்கும் ஒன்று கிடைத்தது. என்ன சுவை… தேன்சுவை…!நண்பர்களுக்கும் தலா ஒன்று கிடைக்க, சுவையால் சுண்டியிழுக்கப்பட்டவர்கள் மீண்டும் எக்ஸ்ட்ரா லட்டு ஒன்று வாங்கிச் சாப்பிட்டார்கள். வழக்கம் போல நாம் ஒரே ஒரு லட்டு – நம்பினால் நம்புங்கள் – ஒரே ஒரு லட்டு தான் வாங்கி சாப்பிட்டோம். (நம் நண்பர் கண்ணனுக்கு லட்டு தின்ன ஆசை வந்து எக்ஸ்ட்ரா லட்டு வாங்கி சாப்பிட்டார்! புகைப்பட ஆதாரம் மேலே!)

லட்டு கொடுத்துக்கொண்டிருந்த நபருக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்தோம்.

பெருமாளை மீண்டும் ஒரு முறை வெளியே நின்றபடி சேவித்துவிட்டு துவஜஸ்தம்பம் அருகே வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு அடுத்து நேரே குன்றத்தூர் மலைக்கோவில். மார்கழி காலை என்பதால் குளுகுளுவென கிளைமேட் இதமாக இருந்தது.

Rightmantra New Year temple visit 16

Rightmantra New Year temple visit 17Rightmantra New Year temple visit 18Rightmantra New Year temple visit 19மக்கள் கூட்டம் கூட்டமாக முருகனை காண வந்துகொண்டிருந்தனர். மலைப் பாதையில் உள்ள வலம் சுழி விநாயகரை தரிசித்துவிட்டு மலைக்கோவில் சென்று சுப்ரமணிய சுவாமியை கண்குளிர தரிசித்து விட்டு நண்பர்கள் பெயர்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு புறப்பட்டோம்.

இது போன்ற புத்தாண்டு தருணங்களில் ஆலய தரிசனம் செய்வது அதுவும் முருகனை தரிசனம் செய்வது மிகவும் அவசியம். ஆங்கிலப் புத்தாண்டு தரிசனம் நமது பாரம்பரியத்தில் இல்லை. ஆனால், முருகனைப் பொறுத்தவரை ஆங்கிலப் புத்தாண்டு தரிசனம் அவனுக்கு ஏற்புடைய ஒன்று. (வள்ளிமலை தொடரில் இது பற்றி விரிவாக பார்ப்போம்!)

குன்றத்தூர் தரிசனம் ஒரு இனிமையான அனுபவம். எங்கும் ஒருவித பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருப்பதை உணர்ந்தோம். புகைப்படங்களை பார்த்தால் உங்களாலும் உணரமுடியும். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் ஒரு நிமிடம் மறந்து மனம் லேசாவதை உணர்வீர்கள். புகைப்படங்களில் பார்க்கும்போதே இப்படி ஒரு சக்தி என்றால் நேரில் சென்றால் எப்படி இருக்கும்?

Rightmantra New Year temple visit 20

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா

Rightmantra New Year temple visit 21

Rightmantra New Year temple visit 22Rightmantra New Year temple visit 23
இந்த ஒரு ஆத்மானுபவத்தால் உந்தப்பட்டு தான் அனைவரும் வருடா வருடம் தவறாமல் இங்கே முருகனை தரிசிக்க வருகிறார்கள். நாமும் கடந்த நான்கு ஆண்டுகளாக தவறாமல் வருகிறோம். ஒரு முறை முருகனை காண புத்தாண்டு தினத்தன்று (ஆங்கிலப் புத்தாண்டும் சரி, தமிழ் புத்தாண்டும் சரி) வருபவர்கள் நிச்சயம் அடுத்த வருடமும் வருவார்கள். நிச்சயம் அந்த வருடம் அவர்களுக்கு ஏற்றமான ஒன்றாக அமையும்.

கந்தன் கருணையை அள்ளிக்கொள்ள காசா பணமா? செய்து பாருங்களேன்…!

அனைவரும் ஒரு க்ரூப் போட்டோ எடுத்தபிறகு அடுத்து நாங்கள் புறப்பட்டது நரசிங்கபுரம். (பேரம்பாக்கம்).

Rightmantra New Year temple visit 24

Rightmantra New Year temple visit 26Rightmantra New Year temple visit 27

நண்பர் சிட்டி - UPGRADED VERSION II
நண்பர் சிட்டி – UPGRADED VERSION II

புறப்படும் போது உமா வெங்கட் அவர்கள், அவரது மகன் ஹரீஷ் ராம் மற்றும் உள்ளிட்ட மேலும் சில வாசகர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

குன்றத்தூர் – மாங்காடு சாலை வழியாக பூவிருந்தவல்லி வந்து அங்கிருந்து சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், சவீதா மருத்துவக்கல்லூரி கடந்தவுடன் வலப்பக்கம் வரும் அரக்கோணம் சாலையில் திரும்பினால் அங்கிருந்து சரியாக 28 கி.மீ. தூரத்தில் பேரம்பாக்கம்.

Rightmantra New Year temple visit 28
Rightmantra New Year temple visit 30

Rightmantra New Year temple visit 31Rightmantra New Year temple visit 32பேரம்பாக்கம் செல்லும் வழியில் அரக்கோணம் சாலையில் வேறு பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உண்டு. அவற்றுள் மூல நட்சத்திர பரிகாரத் தலமான மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நடைபெறுவதுண்டு.

சரியாக மப்பேடை நாங்கள் கடக்கும் முன்னர் உளுந்தை என்னும் ஊரில், சாலையோரத்தில் ஒரு விஸ்வரூப ஆஞ்சநேயரை பார்த்தோம்.

நரசிம்மரை தரிசித்தபின்னர் ரிட்டர்ன் வரும்போது சிங்கீஸ்வரரை தரிசிப்பதாக பிளான். எனவே சிங்கீஸ்வரர் கோபுரத்தை தரிசித்தபடி எங்கள் பயணம் நரசிங்கபுரத்தை நோக்கி தொடர்ந்தது.

Rightmantra New Year temple visit 33

Rightmantra New Year temple visit 34

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம் கையும் காலும் தானே மிச்சம்

இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே –
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்

அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி

பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்

தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ

இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி

நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்

நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி

எப்போதும் பசுமையாக இருக்கும் பகுதி பேரம்பாக்கமும் அதன் சுற்றுவட்டாரங்களும். அதுவும் மார்கழி மாதம் கேட்கவே வேண்டாம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று ஒரே பசுமை தான். சென்னை நகரில் காற்றில பறக்கும் தூசியையும் பழுதடைந்த சாலைகளையும் பார்த்து பார்த்து பழகிய கண்களுக்கு இது ஒரு விருந்து என்றால் மிகையல்ல. செழிப்புக்கு பெயர் பெற்ற அந்த ஊரின் முக்கிய தொழில் விவசாயம். எப்போது நாம் அந்த பகுதிக்கு சென்றாலும் வயலில் விவசாயிகள் வேலை செய்யும் அந்த காட்சியை காணலாம்.

Rightmantra New Year temple visit 36

Rightmantra New Year temple visit 37
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது ஏற்படும் ஒருவித இனிமையான உணர்வுக்கு பெயர் என்ன???

ஊரின் ஒதுக்குபுறத்திலிருந்து காட்சி தரும் நரசிம்மர் கோவிலின் கோபுரம் அத்தனை அழகு. பார்க்கும்போதே மனதில் ஒரு வித பரவசத்தையும் நம்பிக்கையையும் தருவது கோவில் கோபுரங்களே. அதுவும் நரசிம்மர் கோவிலின் கோபுரத்தை நீங்கள் தரிசிக்கும் அடுத்த நொடியே உங்கள் பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை தோன்றும் என்பது உறுதி.

Rightmantra New Year temple visit 35

Rightmantra New Year temple visit 38Rightmantra New Year temple visit 39Rightmantra New Year temple visit 40நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல, ஆண்டு முழுதும் பேரம்பாக்கம் அழகு என்றாலும் இந்த மார்கழி மாதம் கொள்ளை அழகு. கதிரவன் இருக்கும் பகல் பொழுதில் கூட அங்கு குளு குளு குற்றாலத்தில் இருப்பது போலத் தான் இருக்கும்.

பேரம்பாக்கம் சென்றபோது, திருவள்ளூரில் இருந்து வந்த நண்பர் மனோகரன் குடும்பத்தினர் நமக்காக தயாராக இருந்தனர். தாமரை வெங்கட் அவர்கள் கணவர் திரு.வெங்கட்டுடன் நேரே பேரம்பாக்கம் வந்திருந்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து க்யூவில் நின்றோம். நாம் செல்லும்போது கிட்டத்தட்ட மதிய வேளை என்பதால் கூட்டம் மிதமாக இருந்தது. எந்த வித SPECIAL PRIVILEGE ம் எடுத்துக்கொள்ளாமல் க்யூ வரிசையில் நின்றபடி சென்றே நரசிம்மரை தரிசித்தோம்.

Rightmantra New Year temple visit 41

Rightmantra New Year temple visit 43
நம் தளம் சார்பாக வாசகர் மௌலி என்பவர் வாங்கித் தந்த தீப மேடை!

Rightmantra New Year temple visit 42Rightmantra New Year temple visit 44Rightmantra New Year temple visit 45Rightmantra New Year temple visit 46வழக்கம் போல நண்பர்கள் மற்றும் பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்களின் பெயர்களுக்கு நரசிம்மரிடமும் தாயாரிடமும் அர்ச்சனை செய்தோம்.

தரிசனம் முடித்தவுடன் புளியோதரை (சென்ற ஆண்டு தயிர்சாதம்) பிரசாதமாக கிடைத்தது. பொதுவாக இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களுக்கு ஒரு தனிச் சுவை வந்துவிடும். ஆனால் இந்த கோவில் பிரசாதத்திற்கு இருக்கும் சுவையே தனி!!

Rightmantra New Year temple visit 47

Rightmantra New Year temple visit 48Rightmantra New Year temple visit 49Rightmantra New Year temple visit 51Rightmantra New Year temple visit 52Rightmantra New Year temple visit 53நரசிம்மரை தரிசித்துவிட்டு நேரே மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் பயணம். மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் கொள்ளை அழகு. மிகப் பெரிய கோவில் இது. சுவாமி பெயர் சிங்கீஸ்வரர். தாயார் புஷ்பகுஜாம்பாள். இங்கு ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று லக்ஷார்ச்சனை நடைபெறும். நாம் லக்ஷார்ச்சனையில் பங்கேற்று அர்ச்சனை செய்து பிரசாதமும் காலண்டரும் பெற்றுக்கொண்டு வருவது வழக்கம்.

இந்த முறையும் நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து சிங்கீஸ்வரரை தரிசித்துவிட்டு லக்ஷார்ச்சனை நடைபெறும் அம்பாள் சன்னதி முன்பாக உள்ள மண்டபத்துக்கு சென்று அனைவரது பெயர்களுக்கும் அர்ச்சனை செய்தோம்.

புஷ்பகுஜாம்பாள் சமேத அருள்மிகு சிங்கீஸ்வரர், மப்பேடு (மூல நட்சத்திர பரிகாரத் தலம்!)
புஷ்பகுஜாம்பாள் சமேத அருள்மிகு சிங்கீஸ்வரர், மப்பேடு (மூல நட்சத்திர பரிகாரத் தலம்!)

Rightmantra New Year temple visit 54

Rightmantra New Year temple visit 56

Rightmantra New Year temple visit 57Rightmantra New Year temple visit 58Rightmantra New Year temple visit 59அங்கு சிங்கீஸ்வரரும் புஷ்பகுஜாம்பாளும் பிரமாதமான அலங்காரத்தில் உற்சவர்களாக எழுந்தருளியிருந்தார்கள். இங்கும் அனைவரின் பெயர்களிலும் வாசகர்களின் பெயர்களிலும் சிங்கீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

Rightmantra New Year temple visit 60

Rightmantra New Year temple visit 61
இங்கும் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் கிடைத்தது. அவற்றை சாப்பிட்டுவிட்டு பின்னர் அனுமன் சன்னதியில் தரிசனம். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், புறப்பட்டோம்.

அடுத்து உளுந்தை அனுமன் தரிசனம்.

Rightmantra New Year temple visit 62

Rightmantra New Year temple visit 63தொடர்ந்து அருகிலேயே உள்ள அறுபடையப்பன் கோவிலில் கார்த்திகேயனின் தரிசனம். இந்த கோவிலில் உள்ள விசேஷம் என்னவென்றால் இங்குள்ள நவக்கிரக லிங்கம் தான். தெப்பக் குளத்துக்கு நடுவே லிங்கம் காணப்பட, சுற்றிலும் நவக்கிரகங்கள் திசைக்கு ஒருவராக எழுந்தருளியிருப்பார்கள்.

இங்கும் திகட்ட திகட்ட பிரசாதம் – சூடான தயிர்சாதம் – கிடைத்தது. மப்பேடு கோவிலில் சாப்பிட்டதிலேயே வயிறு நிறைந்திருந்தபடியால் இங்கு சாப்பிட முடியாது என்று நினைத்தோம். ஆனால் தயிர் சாதத்தின் சுவை அனைவரையும் ஒரு கட்டு கட்டவைத்தது.

Rightmantra New Year temple visit 64

Arupadaiyappan 1Arupadaiyappan 2அனைத்தும் முடிந்தது கிளம்பும்போது நேரம் 2.30. அதற்கு பிறகு அவரவர் இல்லத்துக்கு புறப்பட்டோம்.

நம்மைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டு நமக்கு சற்று சோதனையாகவே இருந்தது. ஆனால் அந்த சோதனையை சாதனையாக மாற்றியது ஜனவரி 1 அன்று நாம் போட்ட அடித்தளம் தான். சோதனையில்லையேல் சாதனை இல்லையே!

2016 இன்னும் சிறப்பாக சகல சௌபாக்கியங்களையும் அனைவரது கிரகங்களில் கொண்டு வந்து சேர்க்கும் விதமாக அமையும் என்பது உறுதி.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

-திருவிளையாடற் புராணம்

==========================================================

2016 – ஜனவரி 1 புத்தாண்டு ஆலய தரிசன விபரம்

இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று நமது நண்பர்களுடன் குன்றத்தூர் மற்றும் பேரம்பாக்கம் பயணத்தை திட்டமிட்டுள்ளோம். வேன் பயணம். நேரே குன்றத்தூர் வந்துவிடவேண்டும். அங்கிருந்து வேன் புறப்படும்.

** வரவிரும்பும் அன்பர்கள் அவசியம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். (கட்டணம் ரூ.250/-) **

காலை 7.00 மணி  – குன்றத்தூர் மடத்து மந்தார விநாயகர் ஆலயம் + சிறப்பு அபிஷேகம் (நாகேஸ்வரர் கோவில் குளம் அருகே!)

காலை 8.30 மணி – குன்றத்தூர் கந்தழீஸ்வரர், திருஊரகப் பெருமாள் கோவில், சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில் தரிசனம்

அடுத்து பூவிருந்தவல்லி, மப்பேடு வழியாக பேரம்பாக்கம் பயணம்.

காலை 10.30 மணி – பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர்

பிற்பகல் 12.30 மணி – மப்பேடு சிங்கீஸ்வரர் (லக்ஷார்ச்சனை) + ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு + மதிய உணவு

பிற்பகல் 2.00 மணி – சென்னை திரும்புதல்

* பிள்ளையார் அபிஷேகத்திற்குரிய  பொருட்களை (வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பூ, பலவகைப் பழங்கள், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே கொண்டு வரலாம்.

** நேரத்தை சற்று BUFFER வைத்து தான் சொல்லியிருக்கிறோம். எனவே அனைத்தும் இறையருளால் உரிய நேரத்தில் முடிந்துவிடும் என்று நம்பலாம்.

(* மூல நட்சத்திர பரிகாரத் தலமான மப்பேடு சிங்கீஸ்வரர் ஆலயத்தில் எவருக்கேனும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் நம்மை தொடர்புகொள்ளவும்!)

தொடர்புக்கு : ரைமந்த்ரா சுந்தர்  |  M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

Similar articles….

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions |  A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Similar articles….

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

==========================================================

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி  – நம் இராமநவமி அனுபவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)

நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

==========================================================

[END]

3 thoughts on “மலையென வந்ததை பனியென நீக்கிய அஸ்திவாரம் – 2015 புத்தாண்டு ஆலய தரிசன அனுபவம்!

  1. “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து”
    “வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்”

    இந்த இரண்டு வரிகளும் போதும் நம் நாட்டின் வளம் மற்றும் ஆண்டாள் சொல்வளமுறைக்க!!

    வரும் புத்தாண்டில் அனைவரும் இறைஅருள் பெற பிரார்த்திக்கும்!!!!

    நெ வீ வாசுதேவன்

  2. 2016 இன்னும் சிறப்பாக சகல சௌபாக்கியங்களையும் அனைவரது கிரகங்களில் கொண்டு வந்து சேர்க்கும் விதமாக அமையும் என்பது உறுதி.

    மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
    பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
    நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
    புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

    இதுக்குமேல் ஒருத்தருக்கு என்னதான் வேண்டும்?
    மிக சிறப்பாய் அமைந்த 2015 ஆம் ஆண்டு போல இந்த ஆண்டும் மிக மிக நன்றாகவே நடக்கும் சார்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள் //

    தங்களின்
    சோ. ரவிச்சந்திரன்.

  3. ஆலய தரிசன பதிவு அருமை. 2015ம் வருட ஆலய தரிசனம் சில பல காரணங்களால் மறக்க முடியாத ஒன்று. இறை அருளால் அடுத்த புத்தாண்டு நல்ல படியாக அமைய இறைவனை வணங்குவோம்.. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *