வெற்றிகரமாக நடைபெற்ற நமது பாரதி விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள். குழந்தைகள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு விழாவும், வழிபாடும் முழுமை பெறுவதில்லை என்பது நமது ஆணித்தரமான கருத்து.
நம்மை சார்ந்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக நமது தளத்தின் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடையளித்து வருகிறோம்.
அந்த வகையில் சமீபத்திய ரைட்மந்த்ரா ஆண்டு விழா + பாரதி விழா 2016 ல் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்திய மழலைகள் பற்றி பார்ப்போம்.
நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||
கடவுள் வாழ்த்து பாடி அசத்திய ஸ்வர்ஷனா
முதலில் கடவுள் வாழ்த்து பாடிய மழலை செல்வி.ஸ்வர்ஷனா நண்பர் முகலிவாக்கம் வெங்கட் – சுபாஷிணி தம்பதியினரின் மூத்த குழந்தை.
நமது முந்தைய ஆண்டுவிழாவில் இவள் கடவுள் வாழ்த்து பாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பாரதி விழாவில் ‘மஹா கணபதிம்’ பாடலையும் திருப்பாவையிலிருந்து மாலே மணிவண்ணா, அன்றி உலகம் அளந்தாய் ஆகிய இரண்டு பாடல்களையும் அற்புதமாக பாடினாள். ஸ்வர்ஷனா நமது விழாவுக்கு நல்லதொரு துவக்கத்தை கொடுத்தாள் என்றால் மிகையாகாது.
ஸ்வர்ஷனா அவள் தங்கை தேஜஸ்வினி இருவரும் தற்போது பரதம் கற்று வருகிறார்கள். ஈசனருளால் இருவருக்கும் இந்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் வாய்ப்பளிக்கப்படும்.
இறுதியில் ஸ்வர்ஷனாவையும் தேஜஸ்வினியையும் அவளது பெற்றோருடன் சிறப்பு விருந்தினர்களிடம் அறிமுகப்படுத்தியபோது திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் ஞாபகமாக அவள் பெயரை குறிப்பிட்டு என்ன படிக்கிறாள் எங்கு படிக்கிறாள் என்று அக்கறையுடன் விசாரித்தார்.
அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு விருந்தினர்கள் கைகளால் PARTICIPATION CERTIFICATE அளிக்கப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு தந்தது சிறப்பு.
திருப்புகழ் பாடிய கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள்
அடுத்து மேடையேறிய திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள் வள்ளி மற்றும் லோச்சனா இருவரும் திருப்புகழ் பாடல்கள் பாடி பிரமாதப்படுத்தினர். மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுத் தரவேண்டுமா என்ன?
நமது நமது முந்தைய விழாவில் இச்சகோதரிகள் இருவரும் திருப்புகழ் மற்றும் திருமுறை பாடியது குறிப்பிடத்தக்கது.
சீதாராமன் – காயத்ரி தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் மழலை பாக்கியம் கிட்டாத நிலையில், சீதாராமன் தந்தை சுவாமிநாதன் (வடபழனி கோவில் ஓதுவார் வேலாயுத முதலியாரின் பேரன்) அவர்கள் தினமும் மகனுக்கு மழலைச் செல்வம் வேண்டி தேவாரம் பாடி வந்தார். சீதாராமன் – காயத்ரி தம்பதியினரும் தங்கள் பங்கிற்கு பல ஆலயங்கள் சுற்றினர். இறுதியில் வள்ளிமலை சென்று வந்த பின்னர் வள்ளி பிறந்தாள். பின்னர் லோச்சனா பிறந்தாள். இருவரும் தாத்தாவிடம் திருமுறை, திருப்புகழ் கற்றனர். தற்போது பல கோவில்களில் நிகழ்ச்சிகளில் திருமுறை திருப்புகழ் பாடி வருகின்றனர்.
சுந்தரர் தேவாரம் பாடிய திருவலிதாயச் செல்வன் கமல கோபாலா….
2015 ஆம் ஆண்டு திருவலிதாயத்தில் திருவலிதாய சகோதரிகளை சந்தித்து பேட்டி காணச் சென்றபோது, அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த ‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதலில் நாம் கலந்துகொண்டோம். அந்த முற்றோதலில் அக்குடும்பத்தில் ஒருவரது (திருமதி.புவனேஸ்வரி) குழந்தை திருமுறை பாடினான்.
மொத்த குடும்பமும் திருமுறை பற்று மிக்க குடும்பம். அதன் பிறகு நமது தளம் சார்பாக குன்றத்தூரில் அகத்தியர் தேவார திரட்டு முற்றோதல் நடைபெற்றபோது திருவலிதாய சகோதரிகள் (மஹேஸ்வரி, மஹாலக்ஷ்மி) இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு வந்து கலந்துகொண்டனர். அவர்களுடன் *வ.சொ.சேது ஐயாவும் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியிலும் திருமதி.புவனேஸ்வரி தனது மகன் மழலை கமல கோபாலாவை அழைத்து வந்து பாடவைத்தார். (*வ.சொ.சேது – இவர் 276 பாடல் பெற்ற தலங்களையும் பாதயாத்திரையாக சென்று தரிசித்திருக்கிறார்!)
மழலைச் செல்வன். கமல கோபாலா பாரதி வேடம் பூண்டு வந்து பாரதியைப் பற்றி அற்புதமாக அவனது மழலை மொழியில் பேசியதோடு சுந்தரரின் முதல் திருமுறையாக ‘பித்தா பிறைசூடி’ பதிகத்தை மிக அற்புதமாக பாடினான்.
திருவலிதாயத்திலும் சரி, குன்றத்தூரில் சரி இரண்டு முறை அவனது குடும்பத்தினர் அறிமுகமாகிவிட்டபடியால், பாரதி விழா குறித்து திட்டமிடும்போதே கமல கோபாலாவின் பங்கேற்பு விழாவில் இருக்கவேண்டும் என்று அவனது தாயார் திருமதி.புவனேஸ்வரி அவர்களிடம் குறிப்பிட்டோம்.
விழாவுக்கு சரியாக ஒரு வாரம் இருக்கும்போது புவனேஸ்வரி அவர்களை தொடர்புகொண்டு, “குழந்தையை பாரதி வேடம் போட்டு அழைத்து வாருங்கள்.. பாரதி வேடம் போட்டபடி அவன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் பார்க்க நன்றாக இருக்கும்” என்று நாம் கூறியபோது, நீங்கள் பாரதி விழா என்று சொன்னவுடனேயே பாரதி வேடம் போட்டு குழந்தையை பங்கேற்க செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினார். சொன்னபடி மகனை அழைத்து வந்து விழாவில் அவனை பங்கேற்க செய்து சிறப்பித்தார்.
தீப்பொறியாய் அனல் கக்கிய அக்கினி குஞ்சு!
சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் கலிகி ரங்கநாதன் மாண்ட்போர்டு மெட்ரிக் மேனிலைப் பள்ளி பல வித சிறப்புக்களுடன் இயங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி தவிர்த்து வேறு பல விஷயங்களில் அவர்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்து அவர்கள் மாநில அளவில் அங்கீகாரம் பெற உதவுகிறது.
இந்த பள்ளியின் நிறுவனர் ஆர்.ஜே. மாஸ்டர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு.புவனேஷ் இருவரையும் நாம் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவோம். இந்த பள்ளியின் மாணவன் ஒருவருக்கும் நமது பாரதி விழாவில் மேடையளிக்க விரும்பி திரு.புவனேஷ் அவர்களை தொடர்புகொண்டு விஷயத்தை கூறியபோது, அவர் ஆசிரியை திருமதி.லலிதா அவர்களிடம் பரிந்துரை செய்து நமது பாரதி விழாவில் பாரதியை பற்றி பேச ஒரு மாணவனை தேர்வு செய்து அனுப்பினார்.
மாதவா என்கிற பெயர் கொண்ட அந்த அக்கினிக்குஞ்சு மேடையில் கனல் தகிக்க உரையாற்றியது மறக்க முடியாதது.
அந்தத் சின்னஞ்சிறு உள்ளத்துக்குள் தான் எத்தனை பெரிய மாடுலேஷன்… பாடி லாங்குவேஜ்… பிரமாதம்.
இந்த மாணவனின் பாரதி பற்றிய உரையை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
இவனுக்கு சான்றிதழும் கலிகி ரங்கநாதன் மாண்ட்போர்டு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அவனை சிறந்த முறையில் தயார் செயது அனுப்பிய பள்ளி நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் உடன் வந்திருந்த பெற்றோர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.
பால பாரதி மோனிஷ் ராஜ்!
அடுத்து, நமது ஒவ்வொரு விழாவின் போதும் தவறாமல் கலந்துகொள்ளும் நண்பர் மனோகரன் குடும்பத்தினர். அவரது மகன் செல்வன். மோனிஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாக நமது பாரதி விழாவில் பாரதியார் வேடம் அணிந்து விருந்தினர்களை வரவேற்று வருகிறான். (இவன் நமது உழவாரப்பணி குழு இளைய உறுப்பினரும் கூட!)
தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மோனிஷ் ராஜுக்கு சிறப்பு வகுப்புக்கள் அன்று இருந்த போதும், நமது வேண்டுகோளுக்கு இணங்க மகனை அழைத்து வந்தனர் திரு.மனோகரன் – விஜி மனோகரன் தம்பதியினர். இதன்பொருட்டு திருவள்ளூரிலிருந்து அவர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை இருந்து சிறப்பித்தனர். அவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் கைகளால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நல்ல உதாரணம்…!
குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பதற்கு மேற்கூறியவர்கள் சிறந்த உதாரணம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் வாழ்க்கையில் ஜெயிக்க உதவாது. இது போன்ற (இசை, பாட்டு, நடனம்) போன்றவைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கவேண்டும். சிறு வயதில் இதை செய்வது எளிது. கல்வி தவிர்த்து இந்த தகுதியும் குழந்தைகள் வளர்த்துக்கொண்டால் எதிர்கால போட்டி நிறைந்த உலகில் வெற்றிக்கொடி நாட்டுவது சுலபம். அதுமட்டுமா? நல்ல குணங்களுடன் அவர்கள் வளர்வார்கள்.
திருமுறை, திருப்புகழ், திவ்யபிரபந்தம், பரதம் போன்ற நம் பாரம்பரிய கலைகளை இசைகளை பாடல்களை கற்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவர் என்பது உறுதி.
நம் வாசகர்கள் வேறு யார் வீட்டிலேனும் இப்படி அவர்கள் குழந்தைகளுக்கு இசை, பாட்டு, நடனம் (பரதம்) போன்றவற்றில் தனித்திறமை இருப்பின், ஈசனருளால் இந்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ள நமது முப்பெரும் விழாவில் அவர்களை பங்கேற்க செய்யலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் மழலையின் பெயர் வயது, படிப்பு உள்ளிட்ட விபரங்களுடன் அவர்களின் சிறந்து விளங்கும் துறை ஆகியவற்றை குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மேலே நாம் பார்த்த குழந்தைகளோடு உங்கள் குழந்தைக்கும் நமது விழாவில் வாய்ப்பு தரப்படும். (வயது அதிக பட்சம் 18)
வாழ்க கலை… வளர்க பக்தி இசை!
=========================================================
ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்
ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி
=========================================================
நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||
========================================================
Updates on our Bharathi Vizha 2016
‘நீங்களும் சாதிக்கலாம்’ – மனங்களை புரட்டிவிட்டுச் சென்ற ஒரு புயல்!
இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!
========================================================
இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
========================================================
Similar articles…
பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி!
விதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க!
விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!
தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?
எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!
Where there’s a will, there’s a way!
==========================================================
Also check கர்மா Vs கடவுள் earlier episodes…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
==========================================================
[END]
All Childrens Have done There Job Well. The Boy Madhava Speech was amazing.
Great Salute to all the childrens Parents, Who have performed in the stage.
S.Narayanan.
கடவுள் வாழ்த்து பாடி அசத்திய ஸ்வர்ஷனா
திருப்புகழ் பாடிய கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள்
சுந்தரர் தேவாரம் பாடிய திருவலிதாயச் செல்வன் கமல கோபாலா….
தீப்பொறியாய் அனல் கக்கிய அக்கினி குஞ்சு!
பால பாரதி மோனிஷ் ராஜ்!
மழலைகளிடம் நாம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது.இவர்களின் பெற்றோர் போற்றுதலுக்கு உரியோர்.
ரைட்மந்த்ரா விழாவில் இவர்களை காணும் போது ,சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
ரைட்மந்த்ரா மேடை இவர்களுக்கு உச்சம் தொட உதவும் என்பதில் ஐயமில்லை.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
என்ற இரு குறளும் ஒரு சேர இங்கே மெய்ப்பிக்க பட்டது நம் பாரதி விழாவின் வெற்றியே.
நன்றி அண்ணா
பாரதி விழா மிகப்பெரிய வெற்றியினை பெற்றிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இவ்விழா மழலைகளின் திறமைகளை மட்டும் வெளிக்கொணரவில்லை, அவர்களின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய அஸ்திவாரத்தை அமைத்துள்ளது. நண்பர் சுந்தர் அவர்கள், மேன்மேலும் பல வெற்றிகள் பெற ஆண்டவனை வேண்டுகிறோம்.
நன்றி,
வெங்கட் மற்றும் குடும்பத்தினர்.
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தமிழ் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
பாப்பா பாட்டு பாடிய பாரதி விழாவை ஒரு பாப்பா ஆரம்பித்தது.
விழா வெற்றி விழாவானது.
கடவுள் வாழ்த்து பாடி அனைவரையும் அசர வைத்த குழந்தை ஸ்வர்ஷனாவிற்கு என் வாழ்த்துக்கள்.
ஆண்டவன் படைப்பில் எதுவும் வீணில்லை. எல்லோரிடமும் ஒரு திறமை உண்டு. அதை தக்க சமயத்தில் தக்க பருவத்தில் வெளி கொணர வேண்டும் . அதற்கு உதவும் ரைட் மந்தரா ஆல் போல் தழைக்க வாழ்த்துக்கள் !!!
– தளபதி நாகராஜ்