பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்பவர்களை பொருத்தவரை அந்தந்த வாரம் தான் முடிவு செய்யப்படும். அது குறித்து பெரிதாக நாம் அலட்டிக்கொள்வதில்லை. ஏனெனில் அது பகவத் சங்கல்பத்தால் தானாக அமைந்துவிடும்.
இதனிடையே சென்ற ஆண்டு கோவிந்தபுரம் சென்று வந்தது தொடர்பான புகைப்படங்களை நமது கணினியில் வேறு எதையோ தேடும்போது தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அப்போது தான் வேங்கட நரசிம்மன் நினைவுக்கு வந்தார். அவரை விட பொருத்தமான ஆள் கிடைப்பார்களா என்று மகிழ்ந்து அவரை இறுதி செய்தோம்.
யார் இந்த வேங்கட நரசிம்மன்? அப்படி என்ன செய்துவருகிறார்??
மேலே படியுங்கள்!
சென்ற ஆண்டு பிற்பகுதியில் கும்பகோணம் அருகே உள்ள திருவாலங்காட்டில் அப்பைய தீட்சிதரின் அதிஷ்டானத்தை தேடிக் கண்டுபிடித்து தரிசிக்க நாமும் நண்பர் சிட்டியும் கும்பகோணம் சென்றிருந்தோம். (Check : பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!)
அருகே தான் கோவிந்தபுரம். கோவிந்தபுரத்தில் போதேந்திராள் அதிஷ்டானம் செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் அவா. ‘கலைமாமணி’ பாம்பே ஞானம் அவர்களின் ‘பகவன் நாம போதேந்திராள்’ நாடகத்தை பார்த்ததலிருந்து கோவிந்தபுரம் செல்லவேண்டும் என்கிற துடிப்பு மேலும் அதிகரித்ததது. எனவே அப்பைய தீட்சிதரின் அதிஷ்டானத்தை தரிசித்துவிட்டு அங்கிருந்து போதேந்திராள் அதிஷ்டானம் செல்வதென முடிவு செய்தோம்.
நாங்கள் சென்ற நாளன்று, அந்த பகுதியில் ஏதோ காரணத்தால் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் கடைகளை அடைத்திருந்தார்கள். பேருந்து போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
எனவே ஆடுதுறையில் டாக்சி பேசினோம். வண்டியை எடுக்க டாக்சி டிரைவர் சற்று தயங்கினார். “திருவாலங்காட்டுக்கு மேல போக வேண்டாம்… திரும்ப கோவிந்தபுரம் வந்துவிடலாம். இரவு மயிலாடுதுறைக்கு பதில் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் எங்களை டிராப் செய்தால் போதுமானது!” என்று கேட்டுக்கொண்ட பின்னர் வண்டியை எடுக்க சம்மதித்தார். திருவாலங்காடு அருகே உள்ள அக்ரஹாரத்தில் காவிரிக் கரையோரம் உள்ள அப்பைய தீட்சிதரின் அதிஷ்டானதை தேடிக் கண்டுபிடித்துவிட்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு அடுத்து கோவிந்தபுரம் புறப்பட்டோம்.
கோவிந்தபுரம் – என்ன சொல்வது…? ஒரு சைவ, வைணவ சங்கமம். புண்ணிய பூமி. ராம நாமம் அந்த பூமியின் ஒவ்வொரு அணுவிலும் ஒலிக்கிறது.
அப்போது போதேந்திராள் மடத்து வேத பாடசாலையில் வேதம் பயிலும் வேத வித்துக்கள் சிலர் நமக்கு அறிமுகமாயினர். நாம் வந்த நோக்கம் பற்றி அறிந்தவுடன் அவர்களில் வேங்கட நரசிம்மன் என்னும் மாணவன், நம்மை அழைத்துச் சென்று அதிஷ்டானத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக் காண்பித்தார்.
வேங்கட நரசிம்மனுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சங்கரன் கோவில். இவர் தந்தை திரு.என்.நவநீதகிருஷ்ணன் அவர்கள் நெல்லை கோமதியம்மன் கோவிலில் அத்யான பட்டராக தொண்டாற்றி வருகிறார். பலருக்கு வேதமுறைப்படியான வழிபாடு மற்றும் பூஜை புனஸ்காரங்களை கற்றுத் தரவேண்டிய முக்கிய பொறுப்பு இவருடையது.
வேங்கட நரசிம்மன் தற்போது ‘கிரமம்’ படித்து வருகிறார். (இதில் உச்சம் கணம் என்று சொல்லக்கூடிய 11 வது வருடத்து படிப்பு!)
வேதத்தை ஆர்வமாக படித்து வரும் வேங்கட நரசிம்மன் தற்போது அதிருத்ரம், மூல பாராயணம், கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம் இவற்றுக்கெல்லாம் சென்று வருகிறார்.
“உன் வீட்டில் உன்னை எப்படியப்பா வேதம் படிக்க அனுப்பினார்கள்?” – யதார்த்தமான சந்தேகத்தை கேட்டோம்.
“மஹா பெரியவா சொல்லித் தான்!”
“எ….ன்…..ன….து மஹா பெரியவாவா? என்னப்பா சொல்றே???”
“ஆமாம்… அப்பாவுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னே அதாவது 1988 ல காஞ்சி ஸ்ரீமடத்துல மகா பெரியவாளை தரிசனம் பண்ணப் போயிருந்தார். அப்போ பெரியவாளுக்கு அபிவாதயே சொன்னார். யதிகளுக்கு அபிவாதயே சொல்லக்கூடாது. உடனே பெரியவா, “உனக்கு கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்தவுடனே அவனை வேதம் படிக்க வைக்கிறாயா?” ன்னு கேட்டார்.
==========================================================
Also check…
வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!
உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?
ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!
==========================================================
“அப்பா பெரியவாள் கிட்டே அதுக்கு உறுதிமொழி கொடுத்தார். அடுத்த சில வருஷத்துல அப்பாவுக்கு கல்யாணம் ஆயிடுத்து. நான் 1993 ல பொறந்தேன்.”
கேட்க கேட்க சிலிர்ப்பாக இருந்தது.
“ரொம்ப நல்ல விஷயம்… வேதம் படிக்க உனக்கு ஆர்வம் இருந்துச்சா இல்லே உன் ஆத்துல சொல்றாளேன்னு சேர்ந்தியா?”
“ஆரம்பத்துல எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லே. எட்டாங் கிளாஸ் வர்றப்போவே வீட்டுல வேதம் படிக்க போகணும்னு சொன்னாங்க. ஆனா, நான் ‘இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்’ அப்படி இப்படின்னு ஏதாவது சாக்கு சொல்லி அதை ஒத்தி போட்டுண்டுருந்தேன்.
ஒரு நாள் சங்கரன்கோவிலுக்கு அப்பாவுக்கு பூஜையில ஒத்தாசையா இருக்கலாம்னு போயிருந்தேன். என்னவோ தெரியலே… என் மனசு அப்போ தான் மாறிச்சு. அடுத்த நாளே நான் வேதம் படிக்கப் போறேன்னு சொன்னேன். உடனே சேர்த்துவிட்டாங்க.
“கூடப் பொறந்தவங்க எத்தனை பேர்? அவங்க என்ன பண்றாங்க??”
“எனக்கு ஒரே ஒரு தம்பி தான். அவனும் இங்கே என் கூட வேதம் படிக்கிறான்…..”
“என்னது தம்பியும் வேதம் படிக்கிறானா?”
“ஆமா… அவனும் நானும் ஒன்னா தான் வேதம் படிக்கிறோம்….”
“எவ்ளோ பெரிய விஷயம்… உன் கால்ல விழுறதா இல்லே உன் அப்பா அம்மா கால்ல விழுறதான்னு தெரியலே…”
“எங்களுக்குள்ளே நாளைக்கு இந்த காரணத்துக்காக உயர்வு தாழ்வோ இல்லே ஒப்பீடுகளோ வரக்கூடாதுன்னு தம்பியையும் வேதம் படிக்க அனுப்பி வெச்சிட்டாங்க…”
“எத்தனை ஒரு சாதுரியமான முடிவு… பெரியவாவின் தரிசனம் பெற்றவரல்லவா…” நமது வியப்பை வெளிபடுத்தினோம்.
“தம்பி பேர் என்ன?”
“நாக குருநாதன்”
“அருமை அருமை…”
அதற்கு பிறகு வேங்கட நரசிம்மனிடம் அவ்வப்போது பேசி நலம் விசாரிப்போம். தற்போது மீண்டும் இன்று காலை (30/12/2105) வேங்கட நரசிம்மனிடம் நாம் பேசியதே நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி நமது வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகத் தான். கோவிந்தபுரத்தில் அதுவும் போதேந்திராள் அதிஷ்டானத்தின் பாடசாலையில் வேதம் படிக்கும் மாணவர் நமக்காக பிரார்த்தனை செய்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? எத்தனை பெரிய அனுக்கிரகம்…!
வேங்கட நரசிம்மன் நமது முகநூலிலும் நண்பர் என்பதால் நம்மையும் நமது தளத்தின் பணிகள் பற்றியும் நன்கறிந்தவர். எனவே நம்மைப் பற்றிய அறிமுகம் இவரிடத்து அதிகம் தேவைப்படவில்லை. பணி சுலபமாக முடிந்தது.
“ஆனால் நான் ஞாயிறு கோவிந்தபுரத்தில் இருக்கமாட்டேனே… வெளியே செல்கிறேன் அண்ணா” என்றார்.
நமக்கு சற்று ஏமாற்றம் தான்…. “இருந்தால் என்ன? அந்த நேரத்தில் (ஞாயிறு மாலை 5.30 – 5.45 பிரார்த்தனை செய்வது தான் முக்கியம்) எங்கே இருந்தாலும் பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும். அடுத்த வாரமும் இதே பிரார்த்தனை தொடரும் என்பதால் அப்போது போதேந்திராள் அதிஷ்டானத்தில் அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றோம்.
“ஜனவரி 1 முதல் 6 வரை திருவையாறு கிட்டே திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்ல அதிருத்ர பாராயணம் நடக்குது. அதுல கலந்துக்க போறேன்…”
“அருமை அருமை… வாழ்த்துக்கள்….”
கூறிய சற்று நேரம் கழித்து தான் தோன்றியது… “அட அதிருத்ர பாராயணமா? அதுவும் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்லயா? அற்புதம். பெரியவா கடாக்ஷம். ருத்ர பாராயணம் நடக்குற பிரார்த்தனை பண்ணினா இன்னும் விசேஷமாச்சே… ரொம்ப நல்லதா போச்சு தம்பி… ருத்ர பாராயணம் நடக்குற இடமே கைலாயம் மாதிரின்னு சொல்வாங். அங்கே எங்களுக்காக பிரார்த்தனை பண்ணிடு. ரைட்மந்த்ராவுல பதிவு போட்டுட்டு உனக்கு லிங்க்கை வாட்ஸ் ஆப்ல அனுப்புறேன்….” என்றோம்.
“நிச்சயம் அண்ணா” என்றார்.
“எதிர்காலத்தில் வேதம் தழைக்க உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கும்?”
“நான் கற்றுக்கொண்ட வேதத்தை பணம் வாங்காமல் நான்கு பேருக்காவது கற்றுக்கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”
“ரொம்ப நல்ல விஷயம்…. ரொம்ப நல்ல விஷயம்… தேங்க்ஸ் தம்பி”
ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
வேதம் தழைக்க அவரவர் தங்களால் ஆன முயற்சிகளை செய்யவேண்டும். அடுத்து கலியில் ராமநாமம் தான் பரம ஔஷதம். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ராம நாமே. எனவே ராம நாமத்தை பற்றிக்கொண்டால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
பின்னர் நமக்கு இருந்த ஒரு சந்தேகத்தை இவரிடம் கேட்டோம்.
“ஏன் தம்பி… வேதம் மட்டும் ஏன் படிக்க எட்டு இல்லே பத்து வருஷம் அப்படி ஆகுது? நார்மலா +2 முடிச்சிட்டு B.A., சேர்ந்து அதுக்கு பிறகு M.A. படிக்கனும்னா கூட அஞ்சு வருஷம் போதும். இருக்குறதுலேயே ரொம்ப TOUGH சி.ஏ. தான். அதைக் கூட நிறைய பேர் ஆறு வருசத்துல முடிக்கிறாங்க.. வேதம் படிக்க மட்டும் ஏன் அவ்ளோ வருஷம்?”
“நீங்க முதலாம் வகுப்புல படிச்ச முதல் பாடம் என்னன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“இல்லே…” உதட்டை பிதுக்கினோம்.
“சரி விடுங்க… 10 ஆம் வகுப்புல அறிவியல்ல படிச்ச முதல் பாடம் எது தெரியுமா?”
“அதெல்லாம் மறந்து பல வருஷங்கள் ஆச்சேப்பா…” (படிக்கிற காலத்துலேயே நமக்கு அது தெரியாது என்பது வேறு விஷயம் ?!)
“ஆனா… நாங்க வேதத்துல படிச்ச முதல் பாடம் என்னன்னு இப்போ கேட்டாக் கூட சொல்வோம். சொல்லணும். அது தான் அதுல இருக்குற விஷயம். வேதம் படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா, படிச்சி முடிச்சதும் மனசுக்கு ரொம்ப அமைதியா இதமா இருக்கும். வேத படிப்புல இருக்குற அமைதி வேற எதுலயும் இல்லை….!”
என்ன அருமையான விளக்கம்!!!!!!!!!
இப்போது புரிகிறதா பதிவுக்கு ஏன் இந்த தலைப்பை வைத்தோம் என்று!
“எப்போது எந்த வேலைக்காக சென்னை வந்தாலும் எங்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளலாம்… உங்க குடும்பத்துல ஒருத்தரா என்னை நினைச்சுக்கோ… ” என்று கூறியிருக்கிறோம். அந்நாளுக்காக காத்திருக்கிறோம்.
* சென்ற டிசம்பர் 2 அன்று சென்னை அம்பத்தூரில் அதிருத்ர பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வேங்கட நரசிம்மன் கலந்துகொள்வதாக இருந்தது. மழை வெள்ளம் காரணமாக அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
பிரார்த்தனை கிளப் பதிவு நாளை (31/12/2015) இடம் பெறும்
==========================================================
வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு!
* வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு விஷேச பிரார்த்தனை கிளப் பதிவு (January 2nd week) விரைவில் அளிக்கப்படவிருக்கிறது. அந்த பிரார்த்தனைக்கு வழக்கறுத்தீஸ்வரர் கோவில் குருக்கள் திரு.நாகராஜ் குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். எனவே வழக்குகளால் இன்னல்படுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது! சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும்! பெயரோ ஊரோ வெளியிட விரும்பவில்லை என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்பவும். அவர்கள் பெயர்கள் இல்லாமல் பிரார்த்தனை வெளியிடப்படும்.
==========================================================
சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…
Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056 | IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. | Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
=========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குன்றத்தூரில் உள்ள திருமுறை விநாயகர் கோவிலில் நித்திய பூஜைகள் செய்யும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.திருச்சிற்றம்பலம்
[END]
வயதோ குறைவு/ ஆனால் அறிவோ நிறைவு/ வேதம் படித்தவர் அல்லவா/
நெகிழ்வான விளக்கம் . பொதுவில் ஒரு காரியம் செய்யும் போது எல்லோருக்குமே ஒரு நல்ல மனம் இருக்கும் / இல்லையென்றால் அவர்கள் அதுக்கு சரிபடமாட்டர்கள்.
தங்களின் போது பிரார்த்தனை கிளப் மிக மிக சிறந்த மருந்து .. சம்பந்த பட்டவர்களுக்கு நம் பொதுவான ஆறுதல் அவர்களுக்கு விரைவில் விடிவுகாலம் வரும் சார்.
கட்டாயம் என் இடத்தில சண்டே பிரார்த்தனை செய்வோம் … புத்தாண்டு நல்ல விதமாக பிறக்கும் நம் எல்லோருக்குமே //
தங்களின்
சோ ரவிச்சந்திரன்
கர்நாடகா