Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ? Rightmantra Prayer Club

மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ? Rightmantra Prayer Club

print
ரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அளவில்லா செல்வம் இருந்தாலும் அவனிடத்தே வினயம் (அடக்கம்) சிறிதும் இல்லை. ஞானிகளையும் மகான்களையும் தூஷனை செய்து வந்தான்.

“மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? கடவுளுக்கும் நமக்கும் இடையே தரகர்கள் போல இவர்கள் எதற்கு? என் தெய்வத்திடம் வேண்டியதை நானே பெற்றுக்கொள்வேன்” என்பதே அவனது வாதம்.

Vellore Ragavendra Gurupooja

அந்த ஊருக்கு ஒரு மிகப் பெரிய சாது ஒருவர் வந்தார். அந்த செல்வந்தனிடம் இருந்த அகம்பாவத்தை பற்றி குறிப்பிட்டவர்கள் அவனுக்கு புத்தியை தெளிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சற்று யோசித்த சாது, அந்த செல்வந்தனை அழைத்து, அவன் முன்னிலையில் குளத்தில் ஒரு கல்லை போட்டுவிட்டு, “கல் எங்கே? என்னாயிற்று?” என்று கேட்க, “அது நீரில் மூழ்கிவிட்டது!” என்றான் செல்வந்தன்.

ஒரு பெரிய அம்மிக்கல்லை கொண்டு வரச் செய்த சாது “இந்த அம்மிக்கல்லாவது மிதக்குமா?” என்று கேட்க, அவரை ஒரு மாதிரி பார்த்த செல்வந்தன்…

“சிறிய கல்லே நீரில் மூழ்கிவிட்டது எனும்போது இது மட்டும் மிதக்குமா?”

“ஒரு வேளை நான் மிதக்கச் செய்தால்?”

“நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறேன்!”

சாது சவாலுக்கு தயாரானார்.

ஸ்ரீ ராகவேந்திரரும் மாஞ்சால அம்மனும்
ஸ்ரீ ராகவேந்திரரும் மாஞ்சால அம்மனும்

“ஒரு மணிநேரம் கழித்து வாருங்கள். இந்த கல் நீரில் மிதப்பதை பார்ப்பீர்கள்.”

செல்வந்தன் சென்றுவிட, சாது தனது சீடர்களிடம், “ஒரு பெரிய கனமான மரப்பலகை ஒன்றை எங்கிருந்தாவது கொண்டு எடுத்து வாருங்கள்” என்று பணித்தார்.

சீடர்கள் அலைந்து திரிந்து ஒரு பலகையை கொண்டு வர, அந்த மரப்பலகையை நீரில் போட்டார். அது மிதந்தது.

“தற்போது அந்தப் பலகை மீது அம்மிக்கல்லை வையுங்கள்” என்றார்.

சீடர்கள் பலகை மீது அம்மிக்கல்லை வைக்க, பலகை லேசாக நீரில் அமிழ்ந்தது. ஆனால் அதன் மேலிருந்த அம்மிக்கல் பலகை மீதிருந்தபடியால் ஒன்றும் ஆகவில்லை. மிதந்தது.

சொன்னபடி ஒரு மணிநேரம் கழித்து செல்வந்தன் தனது பரிவாரங்களுடன் வர, பலகை மிதந்து கொண்டிருப்பதையும் அம்மிக்கல் அதன் மீது இருப்பதையும் பார்த்து, “ப்பூ… இது தான் விஷயமா? இதை யார் வேண்டுமானாலும் செய்யமுடியுமே….”

“விஷயம் அதுவல்ல. கல் மிதக்கிறதா இல்லையா?”

“அது வந்து….. மிதக்கிறது….”

“முதலில் ஒரு சிறிய கல்லே மூழ்கிய நிலையில் ஆனால் தற்போது இத்தனை பெரிய அம்மிக்கல் மிதக்கிறதே எப்படி?”

“முதலில் கல்லை நேரடியாக நீரில் போட்டதனால் மிதக்கவில்லை. தற்போது பலகையின் மீது வைக்கப்பட்டிருப்பதால் அம்மிக்கல்லானாலும் மிதக்கிறது”

Vellore Ragavendra Gurupooja 23 copy“அப்படியென்றால்… அம்மிக்கல் பலகையாக மாறிவிட்டதா? அல்லது பலகையை போல அதன் கணம் குறைந்துவிட்டதா?”

“இல்லை…”

“அப்படியென்றால் கல் மிதப்பது எப்படி?”

“பலகை மீது வைக்கப்பட்டிருப்பதால் பலகையின் தன்மையினால் அது நீரில் மிதக்கிறது”

“ஆம்… அதுவே தான். ஞானிகளையும் மகான்களையும் பற்றும்போது நடப்பது இது தான். இந்த வாழ்க்கை என்னும் பெருங்கடலில் நாம் மூழ்கும் தன்மை படைத்திருந்தாலும் ஞானிகளையும் மகான்களையும் பற்றிக்கொள்ளும்போது அவர்கள் சார்பினால் நாம் மூழ்காமல் தப்பிக்க முடியும். கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் தனியே போட்டால் அது நீரில் மூழ்கிவிடும். அதுவே பெரிய கனமான கல்லாக இருந்தாலும் நீரில் மிதக்கும் பலகையோடு சேர்ந்தால் அதுவும் மிதக்கும்.”

அதிஷ்டானத்தில் எழுந்தருளியிருக்கும் மகான்களின் தன்மையும் இப்படித் தான். தங்கள் புண்ணியங்களை நமக்கு கொடுத்து நமது பாவங்களை அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்.

– வேலூரில் சென்ற வாரம் நடைபெற்ற ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் குரு பூஜையில் நாம் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து!

=============================================================

உழவாரப்பணி அறிவிப்பு!

நமது தளத்தின் வைகுண்ட ஏகாதசி சிறப்பு உழவாரப்பணி குன்றத்தூர் அடிவாரத்தில் உள்ள திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் கோவிலில் வரும் ஞாயிறு (டிசம்பர் 20, 2015) அன்று நடைபெறும். (காலை 7.00 – 12.30 வரை).

Thiru Ooragap Perumal

பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் நேரடியாக ஆலயத்திற்கு வந்துவிடவேண்டும். பஸ் வசதி உண்டு. தளம் சார்பாக மதிய உணவு வழங்கப்படும்.

தொடர்புக்கு : M: 9840169215 | E : editor@rightmantra.com

=============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : குன்றத்தூரில் உள்ள திருமுறை விநாயகர் கோவிலில் நித்திய பூஜைகள் செய்யும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.திருச்சிற்றம்பலம் (27).

சைவ நெறியில் தோய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் திருச்சிற்றம்பலம். இவரது தந்தை புலவர் திரு.பிரபாகர மூர்த்தி, மிகச் சிறந்த சைவ சொற்பொழிவாளர். மேடைச் பேச்சாளர். (இவரது குடும்பத்தினருடனான நமது பிரத்யேக சந்திப்பு தளத்தில் பின்னர் வெளியாகும்!)

DSCN7174 copy

“புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” என்ற சொல்லுக்கிணங்க, தந்தையின் வழியில் திரு.திருசிற்றம்பலமும் சைவைத் தொண்டை திறம்பட ஆற்றி வருகிறார். பல்வேறு நிகழ்சிகளில் உபன்யாசம் மற்றும் மேடைப் பேச்சாளாராக பங்கேற்கும் திருச்சிற்றம்பலம், அடிப்படையில் எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படித்தவர்.

திருமுறை மீதிருந்த ஆர்வம் காரணமாக பிரபல ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் அவர்களிடமும் தனது தந்தையிடமும் சைவத் திருமுறைகளை குறைவற கற்றார்.

தற்போது மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு திருமுறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

Thiruchitrambalam

மயிலை கற்பகாம்பாள் நகரில் உள்ள கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்டியூட்டில் உள்ள சண்முக சுந்தரம் அரங்கில் சில மாதங்களுக்கு நடைபெற்ற திருஞானசம்பந்தர் விழாவில் ‘பாலறவாயரின் பைந்தமிழ்’ என்கிற தலைப்பில் மிக அருமையானதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அதை நேரில் காணும் பேறு நமக்கு கிடைத்தது. அது சமயம் தான் இவரது திறமையையும் ஆற்றலையும் நாம் உணர்ந்தோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். திருமுறை விநாயகருக்கு அது சமயம் பூஜை செய்து பிரார்த்தனையை சமர்பிப்பதாக கூறியிருக்கிறார். இந்த கோவில் இவர்களுக்கு சொந்தமானது தான்.

திரு.திருசிற்றம்பலத்துக்கு நம் மனமார்ந்த நன்றி!

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

தனது உறவினர் நலம் பெறவேண்டி பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர் நமக்கு நன்கு தெரிந்த ஒருவர். தவிர்க்க இயலாத காரணங்களினால் அவரது பெயரை வெளியிட முடியவில்லை.

ஒருவரது செல்வம் என்பது தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, கட்டுக் கட்டான கரன்ஸி நோட்டுக்களோ அல்ல. உடல் நலமும் ஆரோக்கியமுமே ஒருவரது உண்மையான செல்வம். ஒரு குடும்பத்தில் தாயாக இருப்பவர் நோய்வாய்ப்பட்டால் அது அந்த குடும்ப உறுப்பினர்கள் எத்தகைய ஒரு மன உளைச்சலையும் சோகத்தையும் ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

விரைவில் அவர் நலம் பெறவேண்டும்.

அடுத்து பிள்ளை வரம் வேண்டி பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகர் மஹா பெரியவாளின் பக்தராக தம்மை குறிப்பிட்டிருக்கிறார். ஒரு தாளில் தனது பிரார்த்தனையை கைப்பட எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பியிருக்கிறார். மிக்க மகிழ்ச்சி. குருவருள் என்றும் உண்டு. அது தான் அவருக்கு இந்த பிரார்த்தனை மன்றத்தை அடையாளம் காட்டியிருக்கும் என்று நம்புகிறோம். குரு கிருபையால் அதி சீக்கிர சந்தான பாக்கியம் பிராப்திரஸ்து.

அடுத்து நமது தளத்தின் தீவிர வாசகிகளில் ஒருவர் திருமதி.உமா வெங்கட். நமது உழவாரப்பணி முதலான அனைத்து பணிகளிலும் துணை நிற்பவர். அவரது அம்மா திருமதி.லலிதா அவர்களுக்காக இங்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். மதுரைக்கு ஆண்டு மத்தியில் நாமும் நண்பர் சிட்டியும் சென்றபோது லலிதா அவர்களை சந்தித்து ஆசிபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் அனைவரும் பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில் திருமுறை விநாயகரை தரிசித்து அவருக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!

=============================================================

Nithyanandha Gurukkal

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனை மன்றத்திற்கு போரூர் பாலமுருகன் கோவிலை சேர்ந்த திரு.நித்யானந்த குருக்கள் தலைமேற்றது குறிப்பிடத்தக்கது. அது சமயம் அவர் முருகனின்ட அர்ச்சனை செய்து நமது பிரார்த்தனையை முருகனிடம் எடுத்துச் சென்றார். பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்த சைதாப்பேட்டையை சேர்ந்த திரு.மணி, அவர்கள் அது சமயம் பாலமுருகன் கோவிலுக்கு வந்திருந்து அர்ச்சனை செய்து, நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வேல்மாறலும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரார்த்தனை சமர்பித்தவர்களின் பெயர்களில் அர்ச்சனையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தகது. நல்லது நடக்கட்டும்! அதுவும் விரைந்து நடக்கட்டும்!!

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

நலம் பெற வேண்டும்! இறைவா உன் அருள் வேண்டும்!!

நமது நட்பு வட்டத்தில் உள்ள ஒருவரின் உறவினர் இவர். ராமாபுரத்தை சேர்ந்தவர். பெயர் திருமதி.கிருஷ்ணவேணி. வயது சுமார் 60.

இவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். இருப்பினும் செக்கப், கன்சல்டேஷன் உள்ளிட்ட விஷயங்களுக்கு அடிக்கடி மருத்துவமனை செல்லவேண்டியிருக்கிறது. அதாவது மருத்துவமனை அலைச்சல்.

இது மிகவும் கொடுமையான ஒன்று. அதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும். தனது உறவினருக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து தனது கவலையை பகிர்ந்துகொண்டவர், நமது பிரார்த்தனை கிளப்பில் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிருஷ்ணவேணி அம்மாளுக்கு 3 மகன்கள் 2 மகள்கள் இருக்கின்றனர். யாருக்கும் திருமணம் இன்னும் ஆகவில்லை. பிள்ளைகள் அனைவரும் தாயாருக்கு நேர்ந்துள்ள இந்த நிலை குறித்து மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். திருமதி.கிருஷ்ணவேணி அவர்கள் பரிபூரண நலம் பெற்று, ஆரோக்கியத்துடன் அன்றாட பணிகளை சுலபமாக செய்யவும், அவர்கள் கிரகத்தில் சௌபாக்கியங்கள் பெருகவும். அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் திருமண நிகழவும் இறைவனை வேண்டுவோம்.

=============================================================

கொஞ்சி மகிழ குழந்தை ஒன்று வேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும் வாசக சகோதர் சகோதரிகளுக்கு என் வணக்கம்.

என் பெயர் அசோக் குமார் (33). என் மனைவி பெயர் ஜெயலக்ஷ்மி (28). எங்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. இன்னும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. எங்கள் இருவரிடமும் எந்த குறைபாடும் இல்லை. இருப்பினும் என் மழலைச் செல்வம் கிட்டவில்லை என்பது புதிராக இருக்கிறது. நாங்கள் மகா பெரியவாவின் பக்தர்கள். அவரைப் பற்றிய தேடலின்போது தான் இந்த தளத்தை அறிந்த்கொண்டோம். அவரே எங்களுக்கு வழிகாட்டியிருப்பதாக உணர்கிறோம்.

எங்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டுவதற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

– எஸ்.அசோக் குமார் – ஜெயலக்ஷ்மி,
சீர்காழி,
நாகை மாவட்டம்.
609102

=============================================================

எண்பது வயது தாயாருக்கு காய்ச்சல் குணமாக வேண்டும்!

நம் வாசகி உமா வெங்கட் அவர்களின் தாயார் திருமதி.லலிதா சுந்தரம் (வயது 80) மதுரையில் தனது மகனுடன் (உமா அவர்களின் சகோதரர்) வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருமதி. லலிதா அவர்கள் மிகவும் துறுதுறுப்பானவர். வீட்டில் சமைப்பது முதல் அனைத்து வேலைகளையும் மற்றவர்களை செய்யவிடாமல் அவர் தான் செய்வார்.

ஞானானந்த சுவாமிகளை பற்றிய தகவல்களுக்கு அவரை பேட்டி காண நண்பர் சிட்டியுடன் ஆண்டு மத்தியில் மதுரைக்கு சென்றபோது, அன்பான உபசரிப்பில் நம்மை திக்குமுக்காட வைத்துவிட்டார்.

அவரது நிலை கண்டு அவரது குடுமப்த்தினர் குறிப்பாக உமா வெங்கட் அவர்களும் அவரது மகன் ஹரீஷும் மிகவும் கவலையில் உள்ளனர்.

அவர் விரைந்து நலம் பெற்று பரிபூரண ஆரோக்கியத்துடன் மீண்டும் தனது பணிகளை செய்யவும், எஞ்சியா காலம் முழுதும் நோயற்ற வாழ்வை பெற்று சுகமோடு வாழவும் இறைவனை வேண்டுகிறோம்.

நன்றி!

=============================================================

பொது பிரார்த்தனை

தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகளின் சோகம்!

நம் விவசாயியின் நிலை யாருக்கும் வரக்கூடாது. ஒன்று மழையே பெய்யாமல் பயிர்கள் வறட்சியில் கருகுகிறது. அல்லது ஓயாமல் பெய்து பயிர்கள் அழுகுகின்றன.

நாமெல்லாம் நிம்மதியாக நமது பிழைப்பை பார்க்க போய்விட அவன் தான் செய்வதறியாது தவிக்கிறான்.

FARMER

தமிழகத்தின் பல மாவட்டங்களில் 120 நாள்களில் அறுவடை செய்யப்படக் கூடிய குறுவை நெல் ரகத்தை கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். டிசம்பர் முதல் வாரத்தில் நெல் அறுவடை தொடங்கியது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து தொடர்ந்து கன மழை பெய்தது. மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், அறுவடைப் பணிகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பல்லாயிரம் ஏக்கர்களில் நெற் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. 1 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நெல், மக்காச்சோளம், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீ ரில் மூழ்கி விட்டன. இதில் 60 ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன.

விவசாயி ஒருவர் இது குறித்து கூறியதாவது :

“அறுவடைப் பணிகள் நடைபெற்ற நிலையில் கன மழை பெய்தது. இதில், பல பகுதிகளில் மடை உடைந்து திடீரென நெல் வயல்களில் வெள்ள நீர் புகுந்தது. வயல்களில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தும் பலனில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெற் பயிர்கள் முற்றிலும் பாதித்துள்ளன. இனி, அறுவடை செய்தாலும் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள். நெல் பயிரிட ஏக்கருக்கு சுமார் ரூ. 15,000 வரை செலவு ஏற்பட்டது. அறுவடைக்குத் தயாரான நிலையில், நெற் பயிர்கள் அழிந்தன. எனவே, அரசு அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

விவசாயம் தழைக்கவேண்டும். அதற்கு விவசாயி நன்றாக இருக்கவேண்டும். விளைநிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டு பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கவேண்டும்.

இதுவே நமது பொது பிரார்த்தனை.

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருமதி.கிருஷ்ணவேணி அவர்கள் நலம்பெறவும், அவர் தேக ஆரோக்கியத்துடன் முன்னைப் போல தனது பணிகளை தொய்வின்றி செய்யவும், அவர் தம் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் இனிதே நடக்கவும், புத்திர பாக்கியம் கோரி பிரார்த்தனை சமர்பித்துள்ள திரு.அசோக் குமார் – ஜெயலக்ஷ்மி தம்பதியினருக்கு விரைவில் சந்தான பாக்கியம் கிட்டவும், திருமதி.லலிதா அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் முற்றிலும் நீங்கி அவர் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம் அதிலிருந்து மீண்டு வந்து சிறந்த மகசூல் காணவும், விவாசாயிகள் தம் வாழ்வு செழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.திருசிற்றமபலம் அனைத்து வித நலன்களையும் செல்வங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : டிசம்பர் 20, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056 | IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. | Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : போரூர் பாலமுருகன் கோவிலின் அர்ச்சகர் திரு.நித்யானந்த குருக்கள் (40) அவர்கள்.

[END]

2 thoughts on “மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ? Rightmantra Prayer Club

  1. தாங்கள் சொற்பொழிவு ஆற்றிய கதை அருமை. இறைவனை நாம் நிழலாக பற்றி இருந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதை அழகாக இந்த கதையில் விளக்கி உள்ளீர்கள்.

    “பிறவிப் பெருங்கடல் நீத்துவார் நீந்தார் இறைவனடி சேராதார்”

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருசிற்றம்பலம் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களின் கோரிக்கை ஈசன் அருளால் ஈடேறும்.

    விவசாயிகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். என்னுடைய பிரார்த்தனை கோரிக்கையை இங்கே பதிவு செய்கிறேன், என் அம்மா வயது 80 கடந்த 15 நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் நடமாடுவதற்கே கஷ்டபடுகிறார்கள்.

    80 வயதிலும் ஓடி ஓடி வேலை செய்யும் என் அம்மா (லலிதா சுந்தரம்) இப்பொழுது உடல் நலம் சரியில்லாமல் பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. அவர்கள் வெகுவிரைவில் சீக்கிரம் குணம் அடைய நம் வாசகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு மிக பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்
    நன்றி
    உமா வெங்கட்

  2. இனிய காலை வணக்கம். நேற்று என் அம்மாவிற்காகபிரார்த்தனை பண்ணிய திருசிற்றம்பலம் அவர்களுக்கும் ரைட் மந்த்ரா ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் நம் வாசகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் அம்மாவும் நேற்று அனைவருக்கும் நன்றி கூறுமாறும், அனைவரும் ஷேமமாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வதித்தார்கள் என் அம்மா பூரண குணமானவுடன் இங்கே பதிவு செய்கிறேன்
    வாழ்க … வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *