Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > தேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

தேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
ரு நண்பர்கள் வெகுதூரம் நடந்து சென்றனர். பசியில் வயிறு கிள்ள ஆரம்பித்தது. ஒரு பெரியவர் இதை கண்டு அவர்களின் அருகில் வந்து வாருங்கள் என்னுடன் நான் உங்களுக்கு வழி செய்கிறேன் என்றார்…

இருவருக்கும் ஒவ்வொரு அறைகளின் வழிகளை காட்டி இரண்டு சாவிகளை கொடுத்தார்… இருவரும் நன்றாக பசியாருங்கள், நான் காலையில் வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார்…

Image 1

விடிந்தது, பெரியவர் வந்தார்… முதலாமவரின் அறைக்கு சென்றார் அவர் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டு இருந்தார்…

பிறகு இரண்டாவது அறைக்கு சென்றார் அவரோ ஈர துணியை வைத்து இடுப்பில் கட்டி கொண்டு உட்கார்ந்து இருந்தார். பெரியவரை பார்த்தும் கோபப்பட்டு கத்த ஆரம்பித்தார்…

பெரியவர் நீங்கள் ஏன் சாப்பிடவில்லை. உங்கள் நண்பர் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டு இருந்தாரே.. வாருங்கள் அவரிடம் போய் கேட்போம் என்று இவரை அழைத்து சென்று அவரை எழுப்பி விசாரித்தார்…

அவர் சொன்னார் இங்கு ஏராளமான சமையல் செய்ய தேவையான பொருட்கள் இருந்தது. அதை வைத்து சமைத்து நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கினேன் என்று…

அடுத்தவர் பெரியவரிடம் சொன்னார் நீங்கள் சாப்பாடே தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்று…. இது போல் தான் பகவான் நம் வாழ்வில் தரும் அனைத்து விஷயங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, வேறு எதை எதையோ அவனிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம்…

நமக்கு தேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை….!

(நன்றி : தாஸானு தாஸன் ரமணா Via முகநூல் நண்பர் : கோபால கிருஷ்ணன்)

===============================================================

Also check : Success Stories where our Rightmantra Prayer Club prayers are answered…. (சந்தான ப்ராப்தி, உத்தியோக ப்ராப்தி, ருண விமோசனம் etc. etc.)

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : குன்றத்தூரில் தெருக்களுக்கு நாயன்மார்கள் பெயரைக் சூட்டி புரட்சி ஏற்படுத்தியிருக்கும் பெரியவர் திரு.போதகுரு அவர்கள்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் குன்றத்தூரில் நாகேஸ்வரர் கோவில் நிர்வாகம் தனக்குட்பட்ட நிலங்களை குடியிருப்பு மனைகளுக்காக விற்க முன்வந்தபோது, அதை வாங்கி லே-அவுட் ப்ரோமொட் செய்தவர் திரு.போதகுரு. சைவத்தின் மீதும் சேக்கிழார் பெருமான் மீதும் கொண்ட பற்று காரணமாக அப்போது தெருக்களுக்கு நாயன்மார்கள் பெயரையே சூட்டினார். இன்றளவு அப்பெயர் கொண்டே அத்தெருக்கள் வழங்கப்ப்படுகிறது.

Kundrathur Bodhaguru

தற்போது ஒரு மிக எளிமையான ஒட்டு வீட்டில் வசித்து வரும் திரு.போதகுரு அவர்களை நேரில் சந்தித்து அவரை கௌரவித்து அளவளாவி அது பற்றிய பதிவை ஏற்கனவே தளத்தில் அளித்திருக்கிறோம்.

இந்நிலையில், அன்னாரை நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்கச் செய்ய கருதி, சில நாட்களுக்கு முன்பு காலை அலுவலகம் செல்லும் முன்னர் அவரது இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்து, நமது பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்தவர்களின் விபரங்களையும் அவரிடம் தனியாக அளிக்கவுள்ளோம். அவர்களுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். நமது கடமை இறைவனிடம் மன்றாடுவோம். நல்லதே நடக்கும். ஞாயிறு பிரார்த்தனை நேரத்தின்போது (5.30 – 5.45) குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவிலிலேயே பிரார்த்தனை செய்வதாக உறுதியளித்திருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

நாளை இந்தப் பதிவின் நகல் அவரிடம் நேரில் ஒப்படைக்கப்படும்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வாரம் முதலில் இடம்பெற்றிருக்கும் கோரிக்கை அனைவருக்கும் ஒரு அலாரம். பல பெண்களுக்கு இத்தகு பிரச்னை உள்ளது. இது பற்றி தனியாக பதிவிடுகிறோம். இருப்பினும் ஒரு தாய் தன் மகள் இந்த காரணங்களினால் படிக்க மறுக்கிறாள் என்று பட்டியலிட்டு அனுப்பிருக்கிறார் என்பதை பார்க்கும்போது மனம் வலிக்கிறது. இது யாரோ ஒருவருடைய பிரச்சனை அல்ல. சமூக பிரச்னை பலர் வீட்டில் நடக்கிறது.

இது தொடர்பாக செய்தித் தாளில் நாம் படித்த சில செய்திகளை நெஞ்சை பதறவைக்கும் ரகம். என்ன செய்வது? மகளை எப்படி திருத்துவது என்று தெரியாத நிலையில் நமது பிரார்த்தனை கிளப்புக்கு மகளின் மனமாற்றம் வேண்டி பிரார்த்தனை அனுப்பியிருக்கிறார். இது தவிர அவர் வேறு சில பிரச்சனைகளிலும் இருக்கிறார். அனைத்தும் தீர்ந்து நல்லபடியாக அவர் சந்தோஷமாக தனது குடும்பத்தினருடன் வாழவேண்டும்.

இரண்டாவதாக நாம் சமர்பித்துள்ள கோரிக்கை நம் விவசாயிகள் பற்றியது. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு.

அனைத்து பொருட்களுக்கும் அதை உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிப்பார்கள். ஆனால் விவசாயத்திற்கு மட்டுமே அரசு விலை நிர்ணயம் செய்யும். அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று விவசாயம். ஆனால் அந்த விவசாயி நன்றாக இருக்கிறானா? அவன் பொருளுக்கு உற்பத்திக்கு உரிய விலை கிடைக்கிறதா என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று.

பொதுப் பிரார்த்தனை உண்மையில் ‘பகீர்’ ரகம். சென்னையில் உள்ள நீர்நிலைகள் ஏற்கனவே பாதிக்கும் மேல் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டன. ஒன்றிரண்டு ஆங்காங்கே நீராதாரத்தை வழங்கி வருகிறது. அதற்கும் இப்போது ஆபத்து வந்துள்ளது. கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.

===============================================================

* திருமண தாமதம் தொடர்பான கோரிக்கைகள் தனியாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாம் கூறிய அந்த முக்கியப் பிரமுகரைப் பற்றி நமது தளத்தில் பதிவு வெளியானவுடன் அந்த பிரார்த்தனைகள் அவரைக் கொண்டே நடத்தப்படும். அதுவரை திருமண தாமதம் தொடர்பான பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அந்த கோரிக்கைகளை மின்னஞ்சல் அனுப்பவும்.

நம் தளத்தில் வெளியிட பிரார்த்தனை கோரிக்கை தனியாகவும், பெயர் ராசி நட்சத்திர விபரங்கள் தனியாகவும் அனுப்பவும். பெயர், ராசி, நட்சத்திரம் எதற்காக என்றால் நாம் திருமண பரிகாரத் தலங்களுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

வேறு சில கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பெயரை போட்டு  வெளியிடலாமா அல்லது பெயர்களின்றி வெளியிடவேண்டுமா என்று குறிப்பிடவில்லை. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அவர்களிடம் பதில் வந்த பிறகு அடுத்தடுத்த வாரங்களில் அந்த கோரிக்கைகள் மன்றத்தில் வைக்கப்படும்.

**  பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

*** நமது வாசகர் மற்றுமொருவரின் வாழ்வில் ‘இடரினும் தளரினு’ம் பதிகம்அற்புதம் புரிந்துள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக பதிவு செய்கிறோம்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Worry about my daughter’s future – please pray…!

Dear Sir,

My daughter who is in 8th standard is not showing interest in studies… she always wants to watch movies  listen to songs and play in mobile… I am just worried and keep on telling her that her only work is to do her studies and try her best to get at least a pass mark…she listens everything but I don’t know why she is not showing any interest at all… she takes an hour and half to memorise one detail answer… I just give her all sort of easy methods to memorise.. like I use to teach in tamil… draw pictures relating to the answer and lots but its very hard to make her memorise… I literally sit with her and memorise the whole lesson… but still she is not worried…I didn’t get a tution teacher and I am at times so afraid when the clock strucks 5:00 pm because that’s when she comes from school and my blood pressure raises…

Regards,
Priya

===============================================================

வெல்லம் விலை வீழ்ச்சி; கண்ணீர் விடும் கரும்பு விவசாயிகள் !

ராஜபாளையம்:வெல்லம் விலை குறைந்ததால் இரவு பகல் வேலை பார்த்தும் போதிய வருமானம் கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ராஜபாளையம் தாலுகா பகுதி கண்மாய் தண்ணீர் மூலம் கரும்பு விவசாயம் பல ஏக்கரில் நடந்து வருகிறது. பத்து முதல் 12 மாதம் வரை வளர்ந்த கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சப்ளை செய்து போதிய வருமானம் பெற்றனர்.

தற்போது சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய் தருவதாகவும், இதில் கூலி, போக்குவரத்து செலவு போக மீதம் உள்ள தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தும் முறை உள்ளது.

ஆண்டுதோறும் விவசாயம் செய்தும் குறைந்த தொகை கிடைத்ததால் மாற்றுமுறையான வெல்லம் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இயற்கை உற்பத்தி பொருள் என்பதால் வெல்லத்திற்கு தனிமவுசு இருந்தது.

ராஜபாளையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லம் காய்ச்சி விற்பனை நடந்தது. தற்போது வெல்லம் விலையும் குறைந்ததால் செய்வதறியாமல் கரும்பு விவசாயிகள் திகைக்கின்றனர். 10 கிலோ வெல்லத்தை 280ரூபாய் முதல் 290 வரை வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனால் “கரும்பு விவசாயத்திலும் பயனில்லை, மாற்றாக வெல்லம் உற்பத்தியும் கைகொடுக்கவில்லை’ என விவசாயிகள் கூறுகின்றனர். வெல்லத்திற்கு உரிய விலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயி சரவணன், “மத்திய, மாநில அரசுகள் கரும்பு விலை டன்னுக்கு இரண்டு ஆயிரத்து 350 ரூபாய் என அறிவித்தது. இந்த விலை சர்க்கரை ஆலைகளில் கிடைக்கவில்லை. மாற்றாக வெல்லம் தயாரித்தாலும் அதற்கும் உரிய விலை கிடைக்கவில்லை.

கிலோ 290ரூபாய் முதல் 300 வரை என்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன்புள்ள விலை. விவசாய கூலி பற்றாக்குறை, கரும்பு வெட்ட ஆள் கிடைப்பதில்லை போன்றவற்றால் அதிக செலவாகிறது.

உரத்தின் விலையும் ஏறுமுகமாக உள்ளது. வெல்லத்திற்கு உரிய விலை கிடைத்தால் தான் விவசாயிகளின் உழைப்புக்கு மரியாதை கிடைக்கும்,” என்றார்.

(செய்தி உதவி : தினமலர்)

===============================================================

பொது பிரார்த்தனை

போரூர் ஏரி காப்பாற்றப்படவேண்டும்!

வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணோம் என்பார் தெரியுமா? அதே போல ஒரு நிலை சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான போரூர் ஏரிக்கு ஏற்படவிருந்தது. திடீரென்று போரூர் ஏரியை மண்ணைப் போட்டு மூடும் வேலை சுறுசுறுப்பாக நடந்து வந்தது. ஏரியின் குறுக்கே அசுர கதியில் சாலை அமைக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் இதை பார்த்து பதைபதைத்துப் போய் பசுமை தீர்ப்பாயத்தில் உடனே முறையிட்டனர். அங்கு நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு பொதுப் பணித்துறை சார்பாக அளித்த பதில் இந்த நூற்றாண்டி மிகப் பெரிய ஜோக்.

Porur Lake IMG_2610
போரூர் ஏரி அன்றும்

“போரூர் ஏரியில் கடந்த ஓராண்டாக ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்த தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏரியை பாதுகாக்கும் விதமாக அதன் ஒரு எல்லையில் மண் கொட்டி கரை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாலை எதுவும் அமைக்கப்படவில்லை” என்றார்கள் சர்வசாதரணமாக.

“செய்தித்தாள்களில் வந்த படங்களை பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லையே” என அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

“இது தொடர்பான வரைபடம் மற்றும் வருவாய்த்துறை ஆவணங் களை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கிறேன்.அதனால் ஏரிக்கு சொந்தமான நிலத்தில் ஒரு அங்குலம் அளவு கூட தனியாருக்கு வழங்கப்படமாட்டாது” என்று பொதுப் பணித்துறை தரப்பு வழக்கறிஞர் ஏதேதோ கூறி வாதிட்டார்.

Claims PWD copy
போரூர் ஏரி இன்றும்

அதனைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள், அடுத்த விசாரணையின்போது பொதுப் பணித்துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஏரியில் மண் கொட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தொடரும் என்று உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உண்மை என்னவெனில் பலர் பல்வேறு மட்டங்களில் பல்வேறு காலகட்டங்களில் லஞ்சம் கொடுத்து கொடுத்து போரூர் ஏரியின் பல பகுதிகள் ரியல் எஸ்டேட் அரக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புக்களாக மாறிவிட்டது. 800 ஏக்கர் பரப்பளவு இருந்த ஏரி தற்போது 300 ஏக்கராக சுருங்கிவிட்டது. அதுவும் தற்போது பறிபோகும் நிலையில் உள்ளது. போரூர் ஏரி காப்பாற்றப்படவேண்டும். ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு எதிர்ப்புக்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு போரூர் ஏரி முன்பு போல பிரமாண்டமாய் காட்சியளிக்கவேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை !

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபல்வேறு புறக்காரணிகளால் கல்வியில் நாட்டமின்றி இருக்கும் நம் வாசகி ப்ரியா அவர்களின் எட்டாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு கல்வியில் நாட்டம் ஏற்பட்டு, பெற்றோர் மகிழும் பிள்ளையாய் அவர் நடந்துகொள்ளவும், கரும்பு விவசாயிகளின் துயர் தீரவும், அவர்களின் பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கவும், சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான போரூர் ஏரி காக்கப்படவும் அது மீண்டும் பழைய பொலிவை பெறவும் இறைவனை  வேண்டுவோம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள திரு.போதகுரு அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை இறைஞ்சுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 26, 2015 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சிதம்பரத்தில் உள்ள பிரபல மருத்துவரும் புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மடத்தின் டிரஸ்ட்டியுமான டாக்டர் திரு.வி.நடராஜ் அவர்கள்.

3 thoughts on “தேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. பிரார்த்தனை பதிவு கதை அருமை. நமக்குத் தேவையானவற்றை இறைவன் அளித்தாலும் தேவை இல்லாதவற்றை தேடிக் கொண்டு இருக்கிறோம்.
    // இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இல்லாத இடம் தேடி எங்கு செல்கிறாய் ஞானத் தங்கமே ..//என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. நம் சிவா பாமிலி போட்டோ அருமை.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு போதகுரு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம்.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்காகவும், மற்றும் விவசாயிகள், கால் நடைகள் மற்றும் நீர் ஆதாரத்திற்காக பிரார்த்தனை செய்வோம்.

    வாழ்க … வளமுடன்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. இவ்வார பிரார்த்தனைக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற மகபெரியவா அவர்களின் பொற்பாதம் பணிவோம்.
    இவ்வார பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் போதகுரு அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

  3. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு – என்னும் மந்திர சொல்லை மெய்ப்பிப்பதை போல அமைந்துள்ள சிறுகதை மிகவும் அருமை

    பிரார்த்தனை பகுதியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கோரிக்கையும் அந்த பரம்பொருளின் செவிகளுக்கு விரைவில் சென்று சேர்ந்து அவர் தம் கடைக்கண் பார்வை நம் மீது பட்டு நம் சொள்ளனாத்துயரங்கள் யாவும் கதிரவனை கண்ட காலை பனித்துளி போல் மறைய மனம் உருக வேண்டிடுவோம்

    மேலும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் குன்றத்தூர் போதகுரு அவர்களுக்கு நமது தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
    இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

    வாழ்க வளமுடன்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *