Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? – ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? – ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

print
ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.

தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.

நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.

ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”

‘‘அவலும் வெல்லமும் போதுமே!”

‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”

‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”

‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”

‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”

‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.

‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.

தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை. எதிர்பார்ப்பது எல்லாம் – உண்மையான பக்தி ஒன்றைத்தான்!

(‘தீபம்’ இதழில் வெளியான ‘திருப்பதி… திருப்பம்… திருப்தி’ தொடரில் திரு. பி.சுவாமிநாதன்)

பிரார்த்தனையின்போது இறைவனிடம் நேரடியாக பேசுவது போன்று உங்கள் பிரார்த்தனை மனப்பூர்வமாக இருக்கவேண்டும்.

இதைத் தான்….

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!

என்று கூறுகிறார் திருஞானசம்பந்தர்.

நமக்கு வந்த துன்பமே கொடியது என எண்ணிக் கொண்டிருப்பது கூடாது..!

* நமக்கு வந்த துன்பமே கொடியது என எண்ணிக் கொண்டிருப்பது கூடாது. முடிந்த நன்மையைச் செய்யும் முயற்சியில் இறங்குவதே உத்தமகுணம்.

* இயற்கை எப்போதுமே மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறத்தான் போகின்றன.

* உண்மையாக இருப்பவன் உலகில் ஒருவன் தான். அந்த ஒருவனான கடவுளின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் மகிழ்ச்சி வரும்.

* தர்மவழியில் நடப்பவனைக் கண்டால் விலங்குகள் கூட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதர்மவழியில் நடந்தால் உடன்பிறந்தவன் கூட எதிரியாக மாறி விடுவான்.

* பாவிகளைப் புறக்கணிக்கக் கூடாது. அவர்கள் மீது கோபித்தும் பயனில்லை. அவர்களின் மனமும் நல்வழியில் திரும்ப வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்வதே நல்லது.

* “சிவ’ என்ற இரண்டெழுத்தை மறவாமல் இருங்கள். இதுவே பிறவிப்பிணி போக்கி நம்மை நற்கதியில் கொண்டு சேர்க்க வல்லது.

என்று கூறுகிறார் மகா பெரியவர்.

========================================================

ன்று மகா பெரியவா அவர்களின் அவதார தினம். நமக்கு உற்ற துணையாய் இருந்து இன்று போல என்றும் அந்த மகான் வழிகாட்டவேண்டும் என்று அவரது பாதார விந்தங்களை சரணடைந்து பிரார்த்திக்கிறோம். தவறுகளை மன்னித்து, தீயவற்றிலிருந்து  என்றும் நம்மை காக்கவேண்டியது அவர் பொறுப்பு.

என்ன நரசிம்மா நலமா?

ஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே இல்லை. இல்லத்தரசி கர்ப்பிணி ஆனார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாள் இல்லை. இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!

ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்’ என்று உத்தரவிடுகிறார். ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, “எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்” என்று வாதம் புரிகிறாள்.

நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.

காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.

“நரசிம்மர் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?

அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள். மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.

தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள். குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவா குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள். அனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார். பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்? அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார். தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி ? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலிக்கிறார்.

(நன்றி : balhanuman.wordpress.com)

========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

நம் தளத்தின் மிகத் தீவிர வாசகி இவர். நம் தள வாசகி என்றாலே தெரியுமே… ஆழ்ந்த பக்தியும், தர்ம சிந்தனையும் உள்ளவர். நமது நல்ல முயற்சிகளுக்கு என்றும் உறுதுணையாய் இருப்பவர். அவருடைய மகளுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் புத்திர பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை அவர்கள் மட்டும் இழக்கவில்லை. அடுத்தவர்களுக்கு உதவும், பிறரின் துயர் துடைக்கும் முயற்சிகளையும் அக்குடும்பம் விடவில்லை. விரைவில் அந்த வீட்டில் மழலைச் சத்தம் கேட்க பிரார்த்திப்போம்.

குழந்தை வரம் வேண்டும்

என் மகள் பெயர் சுபாஷினி ஸ்ரீனிவாசன். திருமணமாகி கடந்த ஐந்து ஆண்டுகளாக அவளுக்கு புத்திர பாக்கியம் இல்லை.
ஜோதிடர்கள், பெரியோர்கள் மற்றும் குருமார்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும் நம்பிக்கையுடன் செய்து வருகிறோம்.
விரைவில் அவளுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க, ரைட்மந்த்ரா வாசகர்களை பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

என்றென்றும் நன்றியுடன்,
– உங்கள் வாசகி

===================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgசந்தான பாக்கியம் கிட்டாது தவிக்கும் நம் வாசகியின் மகளுக்கு விரைவில் அழகும் ஆரோக்கியமும் கொண்ட குழந்தை பிறக்க இறைவனையும் நம் வழிகாட்டியாக விளங்கும் மகா பெரியவா அவர்களையும் வேண்டுவோம். நம் வினைகளை அவர் ஏற்றுக்கொண்டு நல்வினைகளை தரும் கருணாமூர்த்தி அந்த காஞ்சி மகான். நிச்சயம் இவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இவர்களை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

================================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : மே 26, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=============================================================

6 thoughts on “இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? – ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

  1. இந்த பெருமைக்கு உரிய விசயத்த படிக்கும் போது.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு!!! மற்றும் என்னுடைய இறை நிலையும் மேலும் உயருகிறது!!!

    நன்றி சுந்தர் அண்ணா!!!

    _Uday

  2. எல்லாம் வல்ல இறைவா
    உன் கருணை மற்றும் அருள் மழையில் பக்தர்களை நனைத்திடு
    அவர் தம் மனக்குறைகளை போக்கி
    என்றென்றும் அவர்களுக்கு துணை நின்று காத்திடு !!!

    வாழ்க வளமுடன் !!!

  3. சுந்தர்ஜி உங்களின் பிரார்த்தனை கிளப் செய்தி உலகளாவிய செய்தியாக பரவிக்கொண்டு இருக்கிறது. உங்களது Right Mantra.com பற்றிய செய்தி அடங்கிய ஒரு கடிதம் அமெரிக்காவில் ஒருவரை அடைந்துள்ளது. அவரும் அவரது நண்பர்களும் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொள்வதோடு உங்கள் பதிவினை வரவேற்கிறார்கள்.
    விரைவில் நல்ல செய்திகள் உங்களுக்கு வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

    1. எல்லாம் அவன் செயல். மிக்க நன்றி சார்…!
      – சுந்தர்

  4. நேற்று என் பிரார்த்தனை நேரம் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் அங்கு இருதேன் சுபாஷினி வேண்டும் வரம் விரைவில் கிடைக்க வேண்டினேன். பெரியவா அருளால் அவைகள் வீட்டில் விரைவில் மழலை குரல் கேக்கும்.

  5. குருவாயூரப்பன் கதை படிக்கும் போது கண்கள் கலங்கியது ஆனந்தத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *