Saturday, October 20, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவதா? – MONDAY MORNING SPL 24

உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவதா? – MONDAY MORNING SPL 24

print
ரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

Pearl_Shellஆர்வமுடன் அதை கேட்ட மன்னன், அவனுக்கு நன்றி கூறி அதை வாங்கி குடித்தான். ஒரு வாய் குடித்தவன் சற்று நிறுத்த அந்த இளைஞன் ஆர்வமுடன் அவரது ரீயாக்ஷனை கவனித்துக்கொண்டிருந்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தியதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு, ராணி அரசனை கோபித்துக்கொள்கிறாள்.

“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நான் கேட்க கேட்க காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்தம் நீரையும் குடித்துவிட்டீர்களே…”

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல, அந்த தோல் பையை எடுத்து பார்க்கிறாள். ஆம்… அதில் இன்னும் கொஞ்சம் நீர் இருக்கிறது.

ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“இந்த தண்ணீரையா நீங்கள் உலகிலேயே சிறந்த நீர் என்று மெச்சிக்கொண்டீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு??”

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது. அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப்பட்டிருக்கும். அன்பைவிட சுவையானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நானே முழு நீரையும் குடித்தேன்” என்று விளக்கமளிக்கிறான்.

ராணி வெட்கி தலை குனிகிறாள்.

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல.  அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள். யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

[END]

=============================================================

மார்கழி முதல் நாள் தரிசனம்

போரூர் இராமநாதீஸ்வரர்
எமது மார்கழி முதல் நாள் தரிசனம், போரூர் அருகே அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இராமநாதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. இராமர் பூஜித்த இந்த சைவத் தலம் ‘உத்தர ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. சிறந்த  குரு பரிகாரத்தலமான இங்கு தான் மார்கழி முழுதும் செல்லவிருக்கிறோம். நம்முடன் நண்பர் மாரீஸ் கண்ணனும் வந்திருந்தார்.

அதிகாலை 5.00 மணிக்கு இறைவனுக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை கண்டு ரசித்தபடி எங்கள் முதல் நாள் மார்கழி தரிசனம் அமைந்தது. தரிசனம் செய்ததோடு உங்களுக்கு புண்ணியம் சேர்த்துவிட்டு வந்திருக்கிறோம். விரிவான பதிவு இன்று இரவு !
=============================================================

=============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

 

12 thoughts on “உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவதா? – MONDAY MORNING SPL 24

 1. Dear sundarji,

  Very nice story .

  Today myself and my mother went to vadapalani murugan temple
  at 05:15.We went to see viswaroopa darshan and finally battar
  said darshan timings were changed.From 16th Dec 2013 till final day of
  markazhi viswaroopa darshan starts at 04:00 am to 04:30 am.

  Finally we had a great darshan today.

  Om Saravana Bhava

 2. monday ஸ்பெஷல் சூப்பர்.

  அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்? ஆர்வலர்
  புன் கணீர் பூசல் தரும்.

  அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

  நான் எனக்கே தெரியாமல் அடுத்தவர்கள் மனதை புண்படுத்தி தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறேன். ரைட் mantra reader ஆக இருப்பதால் என் மனம் ஒரு பக்குவ நிலையை அடைகிறது என்பதில் எள்ளளவும் மிகை இல்லை.

  உங்களின் மார்கழி மாத விஸ்வரூப தரிசனம் இந்த மாதம் முழுவதும் தொடர வாழ்த்துக்கள்.

  நன்றி
  உமா

 3. சுந்தர் சார் ,
  நல்ல நல்ல கருந்துக்கள், அன்பை முத்துசிப்பிக்கு இணையாக சொன்னது புதுமை.
  நிறைய பேர் அன்பை விட பொருள் ஈட்டுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சுயநலம் அதிகம்.
  சுயநலம் குறையும் போது தானாகவே எல்லோரிடத்திலும் அன்பும் பரிவும் ஏற்படும்.
  இந்த கதையை படிக்கும் எல்லோரும் சிப்பிக்குள் இருக்கும் முத்து மாதிரி தான்.உங்களை மாதிரி நல்லோர் சொல் கேட்டு எங்களை பண்
  படித்தி கொள்கிறோம்.

 4. ///அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். ////திங்கள் பதிவு சூப்பர்..

 5. சுந்தர்ஜி
  உங்கள் பதிவுகள் எப்படியும் ஒரு படிப்பினை அல்லது ஒரு விழிப்புணர்வினை தந்து விட்டுதான் செல்லும். அந்த வகையில் இன்றைய பதிவு மிக அருமை. எங்கிருந்தோ நம்மையெல்லாம் இணைத்து வைத்தது இந்த அன்பு தான். மற்றதெல்லாம் அப்புறம். உண்மையான அன்பை பொருள்களால் தெரிந்து கொள்ள முடியாது.
  உங்கள் மார்கழி தரிசனமும் சேவையும் மென்மேலும் தொடரட்டும்.
  எமக்காக பிரார்த்தனை செய்துள்ள அனைத்து வாசகர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினை மீண்டும் தெரிவிக்கறென். வாழ்க வளமுடன்! நன்றி!

 6. கடந்த முறை…கோதண்டராமர் ஆலயத்தில் உங்களுடன் மார்கழி முதல்நாளை தரிசத்த என்னக்கு இந்தமுறை இந்த புன்னியதலத்தில் தங்களுடன் தரிசிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அந்த இறவைனின் கருணையை என்னவென்று சொல்ல….
  .
  இவ்டத்தில் இப்படி ஒரு தொன்மை வாய்ந்த திருத்தலம் இருபது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருப்பது மிகவும் வருந்தகூடிய ஒன்று…
  .
  மாரீஸ் கண்ணன்

 7. அன்பின் அருமையை உணர்த்தும் கதை அருமை.

  எப்படிப்பட்ட ஒரு நல்லாட்சியை கொடுத்திருந்தால் ஒரு சாதாரண பிரஜை மன்னனுக்கு நல்ல குடிநீரை கொடுக்கவேண்டும் என்று நினைத்திருப்பான். அதே சமயம் குடிமகனின் உண்மையான அன்பை புரிந்துகொண்ட மன்னன் துர்நாற்றம் அடிக்கும் தண்ணீரை தன் மனைவியின் இயல்பையும் புரிந்துகொண்டு தான் மட்டும் பருகினான். கதையாக இருந்தாலும், இப்படிப்பட்ட மன்னர்களும் அன்புள்ளம் கொண்ட குடிமக்களும் நம் நாட்டில் இல்லையே என்று ஏங்கவைத்துவிட்டீர்கள் சுந்தர். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.

 8. சுந்தர்ஜி

  அன்பு ஒன்று தான் உயர்வானது . அன்பை வெல்ல முடியாது .

  “அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.”.

  ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
  கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
  மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
  தரியாது காணுந் தனம்

  விளக்கம்

  உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.

  ஒவ்வொரு திங்களும் ஒரு சிறப்பு பதிவை அளிக்கும் சுந்தர்ஜிக்கு நன்றி.

  1. நமது பதிவுக்கு மிக மிக பொருத்தமான நல்வழி செய்யுளை பகிர்ந்தமைக்கு நன்றி.

   – சுந்தர்

 9. வணக்கம் சுந்தர் அவர்களே,
  வெகு நாட்கள் ஆகிவிட்டது நாம் பேசி.இதோ இன்றுதான் இந்தியா வந்தேன்.உடனே உங்கள் சைட்டுக்கு வந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று…… இதோ அனுப்பி விட்டேன்.உங்களிடம் நாளை போன் மூலம் பேசுகிறேன்.துபாய் லிருந்து என்னால் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை, நிலைமை அப்படி இருந்தது.விவரம் போன் மூலம் தெரிவிக்கிறேன்.

 10. “அன்பின் வழியது உயிர்நிலை'” என்பது வள்ளுவம் …அன்பே அனைத்துக்கும் ஆதாரம் .அன்பே இறை ;அன்பே சிவம்..”அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்பர் வள்ளலார் “… சமூகத்தின் மீது அன்புடையவர் சுந்தர் …
  தொடரட்டும் உங்கள் பணி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *