Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > உன்னால் முடியும் தம்பி தம்பி…!

உன்னால் முடியும் தம்பி தம்பி…!

print
சில நாட்களுக்கு முன்பு…. அதாவது 09/12/2014 அன்று நடந்த சம்பவம் இது. அலுவலகத்தில் கடும் பணிச் சுமை. மதியம் சுமார் நான்கு மணிக்கு ஒரு கிரீன் டீ சாப்பிடலாம் என்று அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தோம். சாலையில் ஒரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே… “அட நம்ம மணிமாறன்…”

சிறந்த சமூக சேவைக்காக சென்ற ஆண்டு நமது திருவள்ளுவர் விருதை பெற்றவர்.

Manimaran Rightmantra Awards5

(மணிமாறனைப் பற்றிய பதிவிற்கு : தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்!!)

“ஹலோ… பாஸ்… எப்படி இருக்கீங்க?” கேள்வி வந்த திக்கை நோக்கி திரும்பியவர் நம்மை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

பரஸ்பர நலவிசாரிப்புகள். நமது 14 ஆம் தேதி விழாவைப் பற்றி குறிப்பிட்டு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

Manimaran Rightmantra Awards3

சென்னை வந்திருக்கும் விபரத்தை கேட்டபோது… மணிமாறன் கூறியதாவது… தூய்மை இந்தியா இயக்கத்திற்காக இந்தியா முழுதும் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், நாளை காலை தி.நகர் பஸ் நிலையம் அருகே பல மாதங்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பையை தனியொருவனாக அகற்றப்போவதாகவும் கூறினார்.

Manimaran Rightmantra Awards1

குப்பை குப்பை என்று சொல்லிக்கொண்டு மூக்கைப் பொத்திக்கொண்டு போகிறவர்கள் மத்தியில் மணிமாறன் போன்றவர்கள் களம் இறங்குவது நல்ல பலனைத் தரும். வாழ்த்துக்கள் சொன்னோம்.

மணிமாறன் போன்ற ரியல் ஹீரோக்களை பார்த்தபிறகு புகைப்படம் எடுக்கவில்லைஎன்றால் எப்படி?

அருகே இருந்த தெருமுனைப் பிள்ளையார் முன்பு அவருடன் நம் மொபைலில் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டோம்.

(மேலே நீங்கள் படித்தது நமது பர்சனல் முகநூல் அப்டேட். ஜஸ்ட் ஒரு ரியல் ஹீரோவுடன் புகைப்படம் எடுத்த திருப்தி.)

அடுத்த நாள், இதை மறந்துவிட்டு வழக்கம்போல பணிகளில் மூழ்கிவிட்டோம்.

================================================================

அதற்கு அடுத்த நாள் செய்தி…!

FLASH NEWS : உன்னால் முடியும் தம்பி தம்பி…!

150 பேரை களமிறங்க வைத்த ஒற்றை மனிதன் மணிமாறன் !

சிறந்த சமூக சேவைக்காக சென்ற ஆண்டு நமது தளத்தின் திருவள்ளுவர் விருதை பெற்ற திரு.மணிமாறனை என் அலுவலகம் அருகே நேற்று மதியம் தற்செயலாக  சந்தித்தோம். அது பற்றி நேற்று முகநூலில் பதிவும் அளித்திருந்தோம்.

பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்துக்காக தனி மனிதனாக களமிறங்கி தி.நகர் பஸ் நிலையம்  அருகே பலமாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த குப்பையை இன்று காலை அகற்றப்போவதாக கூறியிருந்தார். அவரை உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்தோம்.

Manimaran Rightmantra Awards6

(மணிமாறன் நமது ரைட்மந்த்ரா விருது பெறும் அந்த பதிவை காண : A quick update on Righmantra Awards 2013 & Annual Day! )

இன்று காலை அவர் களமிறங்கி சுத்தம் செய்ய, ஓரிரு பத்திரிக்கைகாரர்கள் அதை புகைப்படம் எடுக்க, விளைவு, தற்போது 150 மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியை சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தை கிண்டலடித்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

untitled

இதோ அன்று மாலை NEWSTODAY இதழில் வந்திருக்கும் செய்தியை பாருங்கள்.

mANIMARAN 2
நாம் எடுத்த செல்ஃபி

பொழுதொரு கேலி, நொடிக்கொரு கிண்டல், வெட்டிப் பேச்சு, தற்பெருமை, சினிமா நடிகர்களின் துதி பாடல் என முகநூலில் குப்பைகொட்டிக்கொண்டு ஒரு சிறு கல்லை கூட இந்த நாட்டுக்காக நகர்த்தி வைக்க துப்பில்லாமல் எல்லோரையும் குறைகூறிக் கொண்டு பொழுதை போக்கிகொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு செ….டி!!!!!

வெட்டிப்பேச்சு என்றுமே பலன் தராது! ஆனால் இங்கே ஒரு  தனி மனிதன் களமிறங்கி சாதித்திருக்கிறான்.

மணிமாறன் நம்மை தொடர்பு கொண்டு இவ்விஷயத்தை சொன்னபோது, அவசியம் வரும் ஞாயிறு பாரதி விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. (குறள் 211)

பொருள் : கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

தனி மனிதனால் இந்த நாட்டில் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரமுடியுமா என்று கேட்டால் இதோ இந்த பதிவை அவர்களுக்கு விடையாக அளியுங்கள்.

உன்னால் முடியும் தம்பி தம்பி – அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
உன் தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு

==========================================================

இந்த வார பிரார்த்தனை யாருக்கு ?

இந்த ஞாயிறு நமது தளத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி இன்று பிரார்த்தனை பதிவு அளிக்கப்படவில்லை.

சமுதாயத் தொண்டும் ஆன்மீகத் தொண்டும் ஆற்றும் பல நல்லோர்கள் நமது  தளத்தின் விழாவில் கலந்துகொண்டு விருதுகள் பெறவிருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் நலனுக்காகவும் இந்த வார பிரார்த்தனை நடைபெறும். குறிப்பாக கிளிகளை காப்பாற்ற அவற்றுக்கு உணவளிக்க மிகப் பெரியதொரு போராட்டத்தில் இருக்கும் சேகர் அவர்களுக்காக இந்த வாரம் பிரார்த்தனையை நாம் செய்யவேண்டும். அவர் இருப்பது வாடகை வீடு என்பது குறிப்பிடத்தக்கது. நாளையே அவர் அந்த வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை வந்தால் கிளிகள் உணவின்றி தவிக்கும் நிலை வரலாம். நிச்சயம் திருவருள் துணைபுரிந்து அவர் தொண்டு தொடரவேண்டும்.

இந்த வார பிரார்த்தனை மட்டும் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்திற்கு இடையே 6.00 pm- 6.10 pm க்குள் நடைபெறும். நிகழ்ச்சிக்கு வர இயலாத வாசகர்கள் அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி… விழாவில் சந்திப்போம்!!!

==========================================================

[END]

7 thoughts on “உன்னால் முடியும் தம்பி தம்பி…!

  1. மணிமாறன் செய்த இந்த மாபெரும் செயல் நம்மை வியக்க வைக்கிறது.

    தனி மனிதனாக இந்த நாட்டில் மாபெரும் மாபெரும் மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும். அவரை விழாவில் காண ஆவலாக உள்ளோம்.

    //இன்று காலை அவர் களமிறங்கி சுத்தம் செய்ய, ஓரிரு பத்திரிக்கைகாரர்கள் அதை புகைப்படம் எடுக்க, விளைவு, தற்போது 150 மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியை சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.// Hats off to மணிமாறன்

    இந்த வார பிராத்தனையை முப்பெரும் விழாவில் செய்வோம்.

    லோக சமஸ்த சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்
    நன்றி
    உமா

  2. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்!’ தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும், மீண்டும் முயற்சிப்பவர்கள் விதியைக்கூட வெற்றி கொள்ள முடியும்….

  3. திரு.மணிமாறன் போன்றோர் இருப்பதால் தான் மழை பெய்கிறது போலும்…………அவரது ஊக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று………இந்தியா முழுதும் தூய்மை இந்தியா இயக்கத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவருக்கு நம் வாழ்த்துக்கள்………..

  4. hats off to Mr . மணிமாறன்
    அவர் ஒருவரின் முயற்சியால் இன்று 150 மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியை சுத்தம் செய்து கொண்டுள்ளது தூய்மை இந்தியாவின் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
    வீண் அரட்டை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த மாற்றம் ஒரு செ…டி!!!! யா அல்லது வெடியா என்பது போக போக தெரியும்.
    திரு மணிமாறன் அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்,

  5. ஏன் ரைட் மந்த்ரா சென்னையில் இது போல அணைத்து இடங்களிலும் “கிளீனிங்” செய்யக் கூடாது? கோவிலி மட்டும்தான் செய்ய வேண்டும் என்பது என்ன விதியா? தினம் தோறும் இதுபோல செய்யப் பழகினால் நம் நாடு நன்றாக இருக்கும்.

    ஒன்றிரண்டு பேர்கள் செய்யட்டும் நாம் அவர்களை பாராட்டி ஒதுங்கிக் கொள்வோம் என்ற நிலையை “ரைட் மந்த்ரா” மாற்றிக் காட்ட வேண்டும். நம் பங்களிப்பு பாராட்டு விழா, எழுதுதல் என்ற கட்டத்தை தாண்டி, உடனடி செயல்பாட்டுக்கு வந்தால் நல்லது. இன்றைய தேவையும் அதுதான். சிறுதுளி பெருவெள்ளம், ஒவ்வொருவரும் சேர்ந்து செய்யும்போது தூய்மை நிரந்தரமாகிறது. நீங்கள் செய்வீர்களா? நாம் ஒவ்வொருவரும் இணைந்து செய்யலாமா? வாருங்கள், தொடங்குங்கள்.

  6. Dear Editor
    I was one of the visitor to your function at KKNagar and I was thrilled to see your initiatives. I was really proud when Shri Ramakrishnan asked me to honour Mr.Murugaraj of Dinamalar with Ponnadai.
    It was a memorable evening and thanks to all
    H Ramalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *