கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடம் அது. ஏழாவது மாடியிலிருந்த சூப்பர்வைசருக்கு கீழே தரைத் தளத்தில் நின்றுகொண்டிருந்த தொழிலாளியிடம் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். கட்டுமானப் பணிகளின் இரைச்சலில் அதிகாரி மேலேயிருந்து கூப்பிடுவது தொழிலாளியின் காதில் விழவில்லை. அதிகாரிக்கோ அவனிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்லவேண்டும்.
என்ன செய்வது என்று யோசிக்கிறார்…. சட்டென்று தனது பர்ஸிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதை சுருட்டி கீழே போடுகிறார். தன் முன்னே திடீரென ரூபாய் நோட்டுக்கள் சுருட்டப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த தொழிலாளி சுற்று முற்றும் பார்த்து, எவரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சட்டென்று அதை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார்.
அதிகாரி அடுத்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அதே போல சுருட்டிப் போடுகிறார். அதுவும் தொழிலாளி முன்னே வந்து விழ, இந்த முறையும் தொழிலாளி சுற்று முற்றும் பார்த்துவிட்டு பிறகு அதை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார்.
பொறுமையிழந்த அதிகாரி வேறு வழியின்றி ஒரு சிறு கல்லை எடுத்து போட, அது சரியாக தொழிலாளியின் தலை மீது விழுகிறது.
“எவன்டா அவன்ன்ன்ன்?” என்று உறுமியபடியே தொழிலாளி மேலே பார்க்க, அதிகாரி உடனே மேலே வருமாறு கூறுகிறார். மேலே சென்ற தொழிலாளியிடம், அவனது கவனத்தை ஈர்க்க தாம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி கூறி, கடைசியில் கல்லடி மட்டுமே தனக்கு பயன் தந்தது என்று கூற, தொழிலாளி வெட்கி தலை குனிகிறார்.
மேலே கதையில் காணப்படும் தொழிலாளிக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. நம்மில் பலர் வாழ்க்கையிலும் நடப்பது இது தான்.
இறைவன் நம்முடன் தொடர்புகொள்ள விரும்பி பல முறை முயற்சிக்கிறான். ஆனால் நாம் லௌகீக சுகங்களில் லயித்து அவனை கண்டுகொள்ள மறுக்கிறோம். அடுத்து சில சிறிய பரிசுகளை, ஆசிகளை நமக்கு தருகிறான். ஆனால், நாம் அவையெல்லாம் எங்கேயிருந்து வந்தது ? எப்படி வந்தது ? யார் கொடுத்தது ? என்று கூட யோசிக்காமல் பெற்றுக்கொண்டுஅனுபவிக்கிறோம்.
அடுத்து ஆண்டவன் நாம் திக்குமுக்காடும் அளவிற்கு பெரிய பரிசுகளை தருகிறான். அவைகளையும் பெற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம். பரிசு மீது தான் நம் முழு கவனமும் செல்கின்றதே தவிர பரிசை தந்தவனை பற்றி யோசிப்பதில்லை. நன்றி கூறுவதுமில்லை. அதற்கு நேரமுமில்லை.
கடைசியில் தான் ‘பிரச்னை’, ‘துன்பம்’ போன்ற கற்களை தூக்கி நம் மீது போடுகிறான். அதற்கு பிறகு தான் மேலே பார்க்கிறோம். ஆண்டவனை பற்றி சிந்திக்கிறோம். அவனிடம் ஓடுகிறோம்.
சிறிய எளிய பரிசுகளை தரும்போதே அவனை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி சொல்வோம். பிறகு கற்களை நம் மீது வீசி நம்மை கூப்பிடவேண்டிய அவசியம் இருக்காது!
=======================================================
இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது யார் தெரியுமா?
மத்திய அரசு பணியிலிருந்து இருந்து ஒய்வு பெறும் ஒருவர் பொதுவாக செய்வது என்ன?
மகன் / மகள் திருமணம் உள்ளிட்ட பிரதான கடமைகளை முடிப்பது, வீடு வாங்குவது, பணத்தை வங்கியில் போடுவது, இத்யாதி இத்யாதி. இது தான் இங்கு ஒய்வு பெறுபவர்களின் பொதுவான வாழ்க்கை முறை. இந்த வட்டத்திலிருந்து பலர் வெளியே வர விரும்புவதில்லை. வரவும் தெரிவதில்லை.
ஆனால் திரு.நாராயணசாமி ஓய்வுபெற்றதும் என்ன செய்தார் தெரியுமா? பாடல் பெற்ற ஆலயங்களை பற்றிய விபரங்களை தொகுத்து “SHIVATEMPLES.COM” என்கிற தளத்தை ஆரம்பித்தார். தானே உருவாக்கி, ப்ரோக்ராமிங் செய்து வடிவமைத்த அந்த தளம் தற்போது, 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
உங்களில் பலருக்கு கணிப்பொறி பற்றிய ஒரு அடிப்படை KNOWLEDGE உண்டு. ஆகையால் தான் இந்த தளத்தை பார்க்கிறீர்கள். ஆனால் திரு.நாராயணசாமி அவ ர்களுக்கு மேற்படி தளம் துவக்கும்போது அவருக்கு கணிப்பொறியை பற்றிய அடிப்படை அறிவு கூட கிடையாது. (வங்கிப் பணிகள் இவர் ஒய்வு பெற்ற அந்த காலகட்டங்களில் தான் முழுமையாக கணினிமயமாயின.) ஆகையால் நாராயணசாமி அவர்களுக்கு கணினி இயக்குவது பற்றியோ இணையத்தை பற்றியோ தெரிந்திருக்கவில்லை.
அப்படியிருக்கும் சூழ்நிலையில் எப்படி இது சாத்தியமாயிற்று ?
“எல்லாம் அந்த சிவனருள் தான்!” என்று கூறுகிறார் திரு.நாராயணசாமி.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “நான் வங்கிப் பணியில் ஈடுபட்டிருந்த போது பல பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் அமைந்திருக்கும் ஊர்களில் / கிராமங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த கோவில்களுக்கு செல்வது பற்றி நினைத்து கூட பார்த்தது இல்லை. ஒரு கட்டத்தில் ஒய்வு பெற்றபோது, எனக்கு தெரிந்த ட்ராவல்ஸ் நண்பர் ஒருவர் அடிக்கடி ‘வைணவ திவ்ய தேச’ டூர்கள் ஏற்பாடு செய்வார். அவர் தனக்கு ஒரு வெப்சைட் வடிவமைக்கவேண்டும் என்றும் அது தொடர்பாக ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள் என்றும் சொன்னார். அப்போது தான் இணையதளங்கள் பற்றியே நான் தெரிந்துகொண்டேன்!” என்று கூறுகிறார் திரு.நாராயணசாமி.
“மேலும் சைவ ஆலயங்களுக்கும் இதே போன்று டூர் நடத்தலாமே ஏன் நடத்துவதில்லை?” என்று இவருக்கு கேள்வி தோன்றி தொடர்ந்து நடைபெற்ற இவரது தேடல் மற்றும் ஆராய்ச்சியின் விளைவாக பாடல் பெற்ற தலங்களை பற்றிய விபரங்களை அறிந்துகொண்டார். பல தலங்களுக்கு இவர் நேரடியாக செல்ல ஆரம்பித்தார். அப்போது பெரும்பாலான கோவில்களில் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பதும், தங்களுக்கு பக்கத்திலேயே அமைந்திருக்கும் அந்த ஆலயங்களின் சிறப்பு கூட பலருக்கு தெரியாமலிருப்பதையும் கண்டுகொண்டார்.
“இப்போது பாடல் பெற்ற தலங்களுக்கு பல இணையதளங்கள் வந்துவிட்டாலும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இல்லை. அப்போதெல்லாம் இணையம் அத்தனை சுலபம் இல்லை. எனவே பெரும்பாலானோருக்கு தெரியவில்லை அது பற்றிய அடிப்படை KNOWLEDGE கூட பலருக்கு இல்லை என்பதை அறிந்துகொண்டேன். என்னால் முடிந்த வரை இந்த நிலையை என் சக்திக்குட்பட்டு மாற்றவேண்டும் என்ற உறுதியை மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ப்ரோக்ராமிங் மற்றும் இணைய வடிவமைப்பை கற்றுக்கொண்டேன். பிறகு நானே “SHIVATEMPLES.COM” என்கிற டொமைனை ரிஜிஸ்டர் செய்து தளத்தை உருவாக்கினேன். சிறுகச் சிறுக அதில் தகவல்களை சேர்த்து… இன்று அனைத்து பாடல் பெற்ற தலங்களை பற்றிய விபரமும் (274 தலங்கள்) புகைப்படத்துடன் இந்த தளத்தில் உண்டு!” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் திரு.நாராயணசாமி.
(சென்ற மாதம் ‘அரனருள்’ என்கிற ஆன்மீக அமைப்பு ராஜாஅண்ணாமலை மன்றத்தில் ‘பன்னிரு திருமுறை விழா’ நடத்தியபோது இவரை திடீரென்று மேடைக்கு அழைத்து இவரது பணிகளுக்காக இவரை கௌரவித்தார்களாம். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் நீங்கள் இங்கே காண்பது. இறைவனுக்கு தன்னலமற்ற தொண்டு செய்பவர்களை கௌரவம் தேடி வருவதில் வியப்பில்லையே…?)
இன்று இவரது தளத்தை குறைந்தது ஒவ்வொரு மாதமும் 5000 புதிய வாசகர்கள் இறை அன்பர்கள் பார்க்கிறார்கள். (ஒரு தளத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை விட எப்படிப்பட்டவர்கள் பார்க்கிறார்கள் என்பதே பெருமை. அந்த வகையில் சிவனை பற்றியும் சைவ ஆலயங்களை பற்றியும் தேடலில் உள்ள 5000 அன்பர்கள் இவர் தளத்தை ஒவ்வொரு மாதமும் புதிதாக பார்க்கிறார்கள் என்பது மிகப் பெரிய விஷயம்!)
இந்த தளத்தை நாம் துவக்க ஒரு மிகப் பெரும் உந்துதலாக இருந்தவர்களுள் திரு.நாராயணசாமியும் ஒருவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
2011 ஆம் ஆண்டு ஒரு மிகப் பெரிய சோதனையில் சிக்கியிருந்த நான் அதிலிருந்து விடுபட சிவராத்திரி விரதம் இருப்பது தொடர்பாக தேடலில் ஈடுபட்டபோது தான் இவரது தளத்தை பார்க்க நேர்ந்தது. அப்போது இவரிடம் பேசுகையில் தளத்தின் ‘வெப் ஹோஸ்டிங் சர்வர்’ கட்டணத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு RENEW செய்ய வேண்டிய அவசியத்தில் அவர் இருப்பதை தெரிந்துகொண்டேன். ஒரு மிகப் பெரிய தொண்டில் என்னை இணைத்துக்கொள்ள விரும்பி, அந்த கட்டணத்தை என் தனிப்பட்ட செலவாக ஏற்றுக்கொண்டு RENEW செய்ய உதவினேன். உதவினேன் என்று சொல்வதைவிட அவர் எனக்களித்த ஒரு அரிய வாய்ப்பின் மூலம் எனக்கு நானே உதவிக்கொண்டேன் என்பது தான் சரி.
அப்போது கூட திரு.நாராயணசாமி அவர்கள் எந்த சூழ்நிலையில் இந்த தளத்தை தொடங்கி நடத்துகிறார் என்கிற விபரம் எனக்கு தெரியாது. ஆனால் சென்ற ஆண்டு துவக்கத்தில் பரிகாரத்திற்காக நாம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள சில ஆலயங்களுக்கு செல்லவேண்டியிருந்தபோது இவரிடம் அடிக்கடி பேசினேன். அப்போது தான் இவர் கணினியிலோ இணையத்திலோ எந்த அடிப்படை அறிவும் இன்றி தானே அனைத்தையும் கற்றுக்கொண்டு இந்த “SHIVATEMPLES.COM” தளத்தை உருவாக்கியிருப்பதை தெரிந்துகொண்டேன்.
இணைய அறிவையும் நேரத்தையும் வைத்து நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். வேண்டி விரும்பி ஆத்மார்த்தமாக பல ஆண்டுகள் – அல்லும்பகலும் தூக்கம் தொலைத்து – நான் ஈடுபட்ட ஒன்று இறுதியில் எனக்கு வெகுமதியை தராவிட்டாலும் பரவாயில்லை…. வேதனையும் சோதனையும் அவமானமும் தந்த நிலையில் மேற்கொண்டு செய்வதறியாது தவித்தேன். அழுது புலம்பினேன். மிகப் பெரிய மனப்போராட்டத்தின் இறுதியில் இறைவனை சரணடைந்தேன்.
இறுதியில் ‘ரைட்மந்த்ரா’ பிறந்தது!
ஒருவேளை நான் முன்பு சென்ற பாதையில் முட்கள் வீசப்படவில்லை என்றால் நான் இந்த பக்கம் திரும்பியிருக்கமாட்டேன். அவன் போடும் கணக்கு, புரியுமா நமக்கு?
என் இணைய அறிவும், எழுத்தாற்றலும், ‘ஃப்ரீ டயம்’ எனப்படும் பணி தவிர்த்த நேரமும், இனி இந்த சமுதாயத்திற்கும், ஆன்மீகத்திற்கும், பிறர் முன்னேற்றத்திற்கும் மட்டுமே பயன்படவேண்டும் என்பது அவன் எனக்கிட்டுள்ள கட்டளை. அதை சிரமேற்கொண்டு என்னால் இயன்ற வரை நிறைவேற்றி வருகிறேன். இதில் அடையக்கூடிய வெற்றி தோல்வி பற்றி நான் கவலைப்படவில்லை.
எஞ்சியிருந்த நம் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் உடன் பயணிக்க இதோ ஒரு ஆண்டை நமது தளம் பூர்த்தி செய்துவிட்டது நம் தளம்.
சோதனையின்றி சாதனையில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன். (நான் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. நான் கூறவருவது என்னவென்றால் சோதனையை சந்திக்காமல் சாதனைக்கான சாலையில் நீங்கள் அடியெடுத்து வைக்க முடியாது என்பதே. மற்றபடி நான் சாதிக்கவேண்டியது நிறைய நிறைய இருக்கிறது. எனக்காக எவரேனும் வேண்டிக்கொள்ள விரும்பினால் என் பயணத்தில் இறைவன் என்றும் துணையிருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். அது போதும்!)
(சென்ற ஆண்டு இறுதியில் நாம் பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதி விழா கொண்டாடியபோது குடும்பத்தினருடன் வந்திருந்து சிறப்பித்தார் திரு.நாராயணசாமி.)
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
==================================================================
A prayer for friend
Dear Sundar,
My family friend father has been diagonised with colon cancer 4th stage. He is suffering with body pain and having tough time daily for survival. Please pray for him in the Sunday prayer for relief from pain and cancer and provide peace for their family members
NAME : Dakshnamoorthy Place. : Chengam
Regards
Venkatesh
==================================================================
அன்னை நலம் பெறவேண்டும்
சுந்தர் அவர்களுக்கு என் வணக்கம்.
தங்கள் தளத்தை தினமும் உருகி உருகி படிப்பவர்களில் நானும் ஒருவன். எனது பிரார்த்தனையை ஏற்று வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் தாயார் திருமதி. மைதிலி அம்மாள் (61) அவர்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வரும் செவ்வாய் கிழமை அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.
அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடக்கவும் அவர் பரிபூரண குணமடையவும் அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
நாராயணன்
==================================================================
அடுத்து எனது கோரிக்கை….
அதல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம் – ரூபாயின் மதிப்பு!
நமது பிரார்த்தனை கிளப்பில் ஏற்கனவே இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் முன்னர் குறிப்பிட்டதைவிட நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. எனவே நிச்சயம் இறைவன் தலையிட்டு நம் நாட்டை காக்கவேண்டும்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு டாலருக்கு = 68 ருபாய் என்று வந்து நிற்கிறது. ஏற்கனவே பெட்ரோல் / டீசல் விலை உயர்வு, அதை தொடர்ந்து விலைவாசி உயர்வு, உற்பத்தி சரிவு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் இதர பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நம் மக்கள் ரூபாயின் இந்த தொடர் வீழ்ச்சியால் செய்வதறியாது திகைக்கின்றனர்.
நிலைமை இப்படியே சில வாரங்கள் நீடித்தால் நாம் தற்போது வாங்கும் பொருட்களுக்கான விலையை இரண்டு மடங்கு கொடுத்து விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். COST OF LIVING எனப்படும் வாழ்வதற்குரிய விலை பன்மடங்கு உயரும்.
சிக்கலை ஆராய்ந்து தீர்க்கவேண்டிய ஆளும் வர்க்கத்தினரும் உடன் நின்று தோள் கொடுக்கவேண்டிய அரசியல் தலைவர்களும் பிரச்னையை சாமர்த்தியமாக திசை திருப்பி அறிக்கை போர் நடத்துவதில் மும்முரமாய் இருக்கின்றனர்.
இது பற்றிய விழிப்புணர்வை பெற்று பன் மடங்கு உழைக்க வேண்டிய இளைய சமுதாயத்தினரோ வீண் அரட்டைகளிலும் வெட்டிப் பேச்சிலும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
புண்ணிய பூமியாம் பாரதத்தை இறைவன் தான் தலையிட்டு காக்கவேண்டும். பொருளாதாரம் மேம்படவேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். ஏற்றுமதி அதிகரிக்கவேண்டும். ரூபாயின் மதிப்பு காக்கப்படவேண்டும்.
இதுவே என் பிரார்த்தனை.
==================================================================
நண்பர் திரு.வெங்கடேஷ் அவர்களின் நண்பர் திரு.தக்ஷிணாமூர்த்தி புற்று நோயிலிருந்து விடுபட்டு பரிபூரண குணமடையவும் எஞ்சியுள்ள காலத்தை ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடனும் கழிக்கவும், நண்பர் திரு.நாராயணன் அவர்களின் தாயார் திருமதி.மைதிலி அம்மாள் அவர்களுக்கு நடைபெறவுள்ள மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து எஞ்சியுள்ள காலகட்டத்தை அவர் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் தன குடும்பத்தினருடன் கழிக்கவும். சரிந்துவரும் இந்த பொருளாதாரம் தலை நிமிர்ந்து எல்லாரும் எல்லாமும் பெறவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
============================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 1, 2013 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :
‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார்.
திரு.வெங்கடேஷ் அவர்களின் நண்பர் திரு.தக்ஷிணாமூர்த்தி புற்று நோயிலிருந்து விடுபட்டு பரிபூரண குணமடையவும், திரு.நாராயணன் அவர்களின் தாயார் திருமதி.மைதிலி அம்மாள் அவர்களுக்கு நடைபெறவுள்ள மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் தன குடும்பத்தினருடன் கழிக்கவும், சரிந்துவரும் இந்த பொருளாதாரம் தலை நிமிர்ந்து எல்லாரும் எல்லாமும் பெறவும் நம் தளம் சார்பாக இறைவனை வேண்டிக்கொள்வோம்.
///இறைவன் நம்முடன் தொடர்புகொள்ள விரும்பி பல முறை முயற்சிக்கிறான். ஆனால் நாம் லௌகீக சுகங்களில் லயித்து அவனை கண்டுகொள்ள மறுக்கிறோம். அடுத்து சில சிறிய பரிசுகளை, ஆசிகளை நமக்கு தருகிறான். ஆனால், நாம் அவையெல்லாம் எங்கேயிருந்து வந்தது ? எப்படி வந்தது ? யார் கொடுத்தது ? என்று கூட யோசிக்காமல் பெற்றுக்கொண்டுஅனுபவிக்கிறோம்.
அடுத்து ஆண்டவன் நாம் திக்குமுக்காடும் அளவிற்கு பெரிய பரிசுகளை தருகிறான். அவைகளையும் பெற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம். பரிசு மீது தான் நம் முழு கவனமும் செல்கின்றதே தவிர பரிசை தந்தவனை பற்றி யோசிப்பதில்லை. நன்றி கூறுவதுமில்லை. அதற்கு நேரமுமில்லை.
கடைசி யில் தான் ‘பிரச்னை’, ‘துன்பம்’ போன்ற கற்களை தூக்கி நம் மீது போடுகிறான். அதற்கு பிறகு தான் மேலே பார்க்கிறோம். ஆண்டவனை பற்றி சிந்திக்கிறோம். அவனிடம் ஓடுகிறோம்.///
துன்பத்தின் காரணம் தெரியாமல் தவிக்கும் அன்பர்களுக்கு அற்புதமான உதாரணங்கள்.
திரு,நாராயணன், அவர்களின் தாயார் மைதிலி அம்மாள் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் சரியாகவும் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடியவும், திரு தட்சனாமூர்த்தி அவர்களுக்கு கோலொன் புற்றுநோய் சரியாகி உடல்வலி குறையவும் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கவும் பொருளாதாரம் உயரவும் எல்லம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திபோம்..
நலம்பெறவேண்டும் இறைவா! இங்கு பிரார்த்தனை வைத்த அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் மனம் குளிர வேண்டும் இறைவா!
என்றும் அன்புடன்…
சந்திரசேகரன்.
சுந்தர் ஜி
பரிசு மீது தான் நம் முழு கவனமும் செல்கின்றதே தவிர பரிசை தந்தவனை பற்றி யோசிப்பதில்லை. நன்றி கூறுவதுமில்லை.
உண்மையான வாசகம் சார்..
சார் உங்களுக்கு என்ன சார் சோதனையின்றி சாதனையில்லை கேள்வியும் நீங்கலை சொல்லி பதிலும் சொலிட்டாங்க சார்..
பல பல சோதனையும் தாண்டி சாதனை படைத்து வரும் நம் RIGHTMANTRA.COM மென் மேலும் வளர இனிய இனிய
என்றுயென்றும் நல் வாழ்த்துகள் சார்..
சோதனையான காலகட்டங்களை தாண்டி தற்போது நம் தளம் சாதனைப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இனியெல்லாம் சுகமே.
இந்த ஒரு ஆண்டு என் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள்… ஏற்றங்கள்… அதற்கு முதலில் நான் ரைத்மந்த்ராவுக்கும் சுந்தருக்கும் தான் நன்றி சொல்லவேண்டும்.
அனைவரின் வேண்டுதல்களும் நிறைவேற ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
திரு.நாராயணசாமி அவர்களை பற்றி படிக்கும்போது வியப்பு மேலிடுகிறது. அவரை போன்றவர்கள் நம் தளத்தின் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு வகையில் சாதனை தான்.
எல்லாம் கடவுளின் அருள்.
இந்திய பொருளாதாரம் உயர அரசியல்வாதிகள் கையில் உள்ளதை போல் நம் கையிலும் உள்ளது முடிந்த வரை நாம் தினம் உபயோகபடுத்தும் பேஸ்ட் ,சோப்பு ,போன்றவற்றை இந்திய தயாரிப்பு பொருட்களை உபயோகித்தாலே நம் மக்கள் தொகையின் தாக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
அருமையான கட்டுரை.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
சுந்தர்ஜி,
நம் என்ன செய்கின்றோம், என்ன செய்ய போகின்றோம் என்று தெரியாமல் வாழ்கின்ற காலத்தை வீணடித்து கொண்டிருப்பவர்களுக்கு அருமையான வழி காட்டுதல் ஆக உள்ளது இந்த அற்புதமான உதாரணங்கள்.
திரு நாராயணசாமி அவர்களின் சேவையை நினைக்கும் போது வியப்பு மேலிடுகின்றது. நமது தளத்தின் பிரார்த்தனைக்காக அவர் பிரார்த்தனை செய்வது நாம் செய்த புண்ணியம் அன்றி வேறு எதுவும் இல்லை.
நண்பர் திரு.வெங்கடேஷ் அவர்களின் நண்பர் திரு.தக்ஷிணாமூர்த்தி புற்று நோயிலிருந்து விடுபட்டு பரிபூரண குணமடையவும் எஞ்சியுள்ள காலத்தை ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடனும் கழிக்கவும், நண்பர் திரு.நாராயணன் அவர்களின் தாயார் திருமதி.மைதிலி அம்மாள் அவர்களுக்கு நடைபெறவுள்ள மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து எஞ்சியுள்ள காலகட்டத்தை அவர் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் தன குடும்பத்தினருடன் கழிக்கவும். சரிந்துவரும் இந்த பொருளாதாரம் தலை நிமிர்ந்து எல்லாரும் எல்லாமும் பெறவும் இறைவனை வேண்டிக்கொள்வோம். மகா பெரியவர் காப்பாற்றுவார்.
///இணைய அறிவையும் நேரத்தையும் வைத்து நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். வேண்டி விரும்பி ஆத்மார்த்தமாக பல ஆண்டுகள் – அல்லும்பகலும் தூக்கம் தொலைத்து – நான் ஈடுபட்ட ஒன்று இறுதியில் எனக்கு வெகுமதியை தராவிட்டாலும் பரவாயில்லை…. வேதனையும் சோதனையும் அவமானமும் தந்த நிலையில் மேற்கொண்டு செய்வதறியாது தவித்தேன். அழுது புலம்பினேன். மிகப் பெரிய மனப்போராட்டத்தின் இறுதியில் இறைவனை சரணடைந்தேன்////
மேலே சொன்ன வாசகத்தை படிக்கும் போது மனம் மிகவும் வருத்தமாக உள்ளது.
‘ரைட்மந்த்ரா’ பிறந்தது நாங்கள் செய்த புண்ணியம் இந்த ஒரு வருடத்தில் நாங்கள் உங்களோடு சேர்ந்து நல்ல பணிகளை செய்வதற்கு காரணமாக இருந்த ரைட்மந்த்ராவுக்கு நாங்கள் மிகவும் கடமை பட்டு உள்ளோம். தங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
///”கடவுள் நாம் பார்க்கும் வரை பார்த்துவிட்டு, நாம் கவனிக்கவில்லை என்ற பிறகு கடைசியில் தான் ‘பிரச்னை’, ‘துன்பம்’ போன்ற கற்களை தூக்கி நம் மீது போடுகிறான். அதற்கு பிறகு தான் மேலே பார்க்கிறோம். ஆண்டவனை பற்றி சிந்திக்கிறோம். அவனிடம் ஓடுகிறோம்.” ///
என் அனுபவத்தில் கண்ட நிதர்சனமான உண்மை. கிடைத்ததற்கு எல்லாம், நன்றி சொல்ல மறந்து கர்வத்தோடு இருந்தேன் . கடவுள் கொடுத்த பல துன்பங்களுக்கு பிறகு தான் இந்த பிரபஞ்சத்தில் யான் ஒரு தூசு என்று உணர்ந்து என் ஆன்மிக தேடுதல் ஆரம்பமானது. இன்று ரைட் மந்திரா மற்றும் திரு.சுந்தர்ஜி அவர்கள் மூலம் மகாபெரியவாவின் அருளுக்கு பாத்திரமாகி நல்ல திருப்பங்கள் என் வாழ்விலும் எற்பட துவங்கியுள்ளது.
இந்த வாரம் நம் தள பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் திரு. நாரயணசாமி அவர்களின் இறைபணிக்கு தலை வணங்கி நம் தளம் சார்பாக நன்றி செலுத்துவோம். இந்த வாரத்தில் பிரார்த்னைக்கு வேண்டிருக்கும் அன்பர்கள் குணமடையவும், நம் நாட்டின் பொருளாதாரம் தலை நிமரவும் பிரார்த்திப்போம். நன்றி சுந்தர்ஜி
நண்பர் திரு.வெங்கடேஷ் அவர்களின் நண்பர் திரு.தட்சனாமூர்த்தி புற்று நோயிலிருந்து விடுபட்டு விரைவில் குணமடையவும், நண்பர் திரு.நாராயணன் அவர்களின் தாயார் திருமதி.மைதிலி அம்மாள் அவர்களுக்கு நடைபெறவுள்ள மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து ஆரோக்கியத்துடனும் விரைவில் இல்லம் திரும்பவும், சரிந்துவரும் இந்த பொருளாதாரம் தலை நிமிர்ந்து, எல்லாரும் எல்லா வளமும், நலமும் பெறவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.
வாழ்க வளமுடன்.
நாம் கடந்துவந்த பாதை கல்லும் முள்ளும் நிறைததாக இருக்கலாம் ஆனால் சென்று சேருமிடம் பசுமையான நீர்நிலைகள் நிறைந்த சோலை என்பதை எண்ணிப்பார்க்கையில் இதுநாள் வரை மனத்திலும் உடலிலும் இருந்த வருத்தம் அதிகாலைப்பனிபோல மறைந்துவிடும்
அதே நேரத்தில் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம் ஆனால் பிரச்சனைகளே வாழ்க்கையாக நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது – அவ்வகையில் நம் தளத்தின் தோற்றம் ஓர் மகத்தான நோக்கத்துக்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளது – அது தனது இலக்கை நிச்சயம் அடையும் என்பது நிதர்சனமான உண்மை
அதேவேளையில் இறைவனுக்கு தொண்டுபுரியும் அனைவரும் அவரது அடியார்களே – அவ்வகையில் திரு நாராயணசுவாமி அவர்களின் இந்த ஆன்மீக தேடல் அதனை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க நினைக்கும் அவரது உள்ள வேட்க்கை பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது – அவர்தம் பணி தொடர்ந்திடவும் சிறந்து விளங்கிடவும் எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவோம்
இதுவரை இடம்பெற்ற பிரார்த்தனைகளோடு இன்று இடம்பெற்றுள்ள பிரார்த்தனைகளும் நிறைவேறி எல்லோரும் இன்புற்றிருக்க அந்த பரம்பொருள் அருள் புரிவாராக !!!