போகிற வழியில், திடீரென்று ஏதோ தோன்ற திருமழிசை – பட்டாபிராம் சாலையில் அமைந்துள்ள தாத்திரீஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு உழவாரப்பணி குறித்து பேசி விட்டு செல்லலாம் என்று முடிவு செய்து தாத்திரீஸ்வரர் கோவில் சென்றோம். தாத்திரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி செய்யவேண்டும் என்பது நமது நீண்ட நாள் ஆசை. (பின்னர் அது நிறைவேறியது!)
சித்துக்காடு ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் கோவில் அறங்காவலர் மற்றும் குருக்கள் இருவரையுமே அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் சந்திக்க முடியவில்லை. சரி தாதிரீஸ்வரரையாவது தரிசித்துவிட்டு செல்லலாமே என்று கோவிலுக்கு சென்றோம். நாம் சென்ற நேரம் கோவில் பிரதான வாயில் திறந்திருந்தாலும் சன்னதி மூடியிருந்தது.
பிரதான வாயில் அருகே நான்கைந்து நாய்க்குட்டிகள் இருந்தன. நாம் சென்றதும் நம்மை பார்த்து ஓடிவந்து காலை நக்கியபடி நம்முடனே கூட ஓடிவந்தன.
அவற்றின் தாய் அருகே எங்காவது இருக்கிறாளா என்று பார்த்தோம். தாயை காணோம்.
“ஐயோ பசி போலிருக்கே பாவம்….”
அருகே ஏதாவது கடையிருந்தால் பிஸ்கட் வாங்கி வந்து போடலாம் என்று கருதி, சித்துக்காடு ஊர் முழுக்க கடையை தேடினோம். கடைசியில் ஒரு வீட்டுக்குள் இருந்த பெட்டிக்கடையை தேடிக் கண்டுபிடித்தோம். இரண்டு பாக்கெட்டுகள் பிஸ்கட் வாங்கி வந்து நாய்க்குட்டிகளுக்கு போட்டோம். அவை பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டன.
ஆனால் அதுவே நமக்கு பரமதிருப்தி.
ஈசனை பார்க்க முடியாவிட்டாலும் தீபாவளியன்று மிகப் பெரிய அன்னதானம் ஒன்றை செய்த திருப்தி நமக்கு.
அதற்கு பிறகு திருவள்ளூர் புறப்பட்டு சென்றோம்.
குட்டிகளுக்கு பிஸ்கட் போட்ட சம்பவத்தை இதுவரை தளத்தில் பகிர்ந்ததில்லை. காரணம் பகிரக் கூடிய அளவு பெரிய விஷயம் எதுவும் அதில் இருப்பதாக நமக்கு தெரியவில்லை.
அப்படியானால் இன்று மட்டும் ஏன் பகிர்ந்தோம்?
இப்படி ஒரு அழகிய புகைப்படங்கள் உபயோகப்படுத்தபடாமேலே போய்விடக்கூடாது என்பது ஒன்று. ஆனால் இதைத் தவிர வேறு ஒரு காரணமும் உள்ளது…
அது என்ன?
நாளை வரை பொறுத்திருங்களேன்…
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே!
==============================================================
Also check :
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா!
எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!
==============================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
[END]
நாய்குட்டிகள் கூட உங்கள் கண்ணில் மிக பெரிய அளவில் மனிதாபிமானம் மின்னுகிறது சார்
இந்த மாதிரி மனசு எல்லார்க்கும் வரணும்.
நன்றி
சோ. ரவிச்சந்திரன்
கைகா, கர்நாடகா
கோயில் புகைப் படத்தை பார்க்கும் பொழுது எனக்கு கோவிலில் உழவாரப்பணி செய்த ஞாபகம் வருகிறது.
இந்த பதிவிற்கு பின்னால் தங்களுக்கு ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்து இருக்கிறது நாளை அடுத்த பதிவை ஆவலுடன்எதிர் பார்க்கிறோம்.
நன்றி
வாழ்க வளமுடன்
உமா வெங்கட்
வணக்கம் சார்
அடுத்த பதிவை மிகவும் ஆவலுடன் எதிபார்கிறன்
நன்றி
வணக்கம்………. படங்கள் யாவும் அருமை……… கோயில் கோபுரத்தின் பின்புலத்தில் மேக மூட்டத்துடன் கூடிய வானம் ரம்மியமாக உள்ளது………… நாங்கள் இப்பொழுது தாத்ரீஸ்வரர் கோவிலில் உள்ளதாக உணர்கிறோம்……..
அம்மையப்பரின் முன் நாய்க்குட்டிகள் விளையாடும் படம் ஆயிரம் கதைகள் சொல்கிறது………. நம்மைப் பார்த்துக் கொள்ள அந்த அம்மையப்பரே இருக்கும் போது நமக்கென்ன கவலை என்பது போல் அவை விளையாடுகின்றன……….. இந்த மனநிலை நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும்……….. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்………. நன்றி………
Super sir. Expecting lengthy article from you.
Thanks
Harish