Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்! MUST READ

சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்! MUST READ

print
மொத்த குடும்பமும் ஏன் இந்த பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் மட்டும் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருந்துவிட்டால் போதும் அவள் எதையும் எதிர்கொண்டு வென்றுவிடுவாள். அதனால் தான் BETTER HALF அதாவது ‘வாழ்க்கைத் துணை’ என்று குறிப்பிடுகிறார்கள்.

பணமும் புகழும் இருந்தால் போதும் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இருக்காது, இல்லறம் நன்றாக நடக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு.

Jolie brad pitt

Img 1பிரபல ஹாலிவுட் நட்சத்திர தம்பதிகள் பிராட் பிட் – ஏஞ்சிலினா. ஏஞ்சலினா உண்மையில் பெயருக்கேற்றார் போல ஒரு தேவதை. அழகில் மட்டுமல்ல குணத்திலும். இவரின் சமூகத் தொண்டு தன்னிகரற்றது. இதுவரை எந்த திரைப்பட நட்சத்திரமும் செய்யாதது. பல ஆப்பிரிக்க, தென் கிழக்கு நாடுகளில் இவரை தெய்வமாகவே கொண்டாடுகிறார்கள்.

இவருக்கு திருக்குறள் தெரியுமா தெரியாதா என்று நமக்கு தெரியாது. ஆனால் திருக்குறள் படி வாழ்ந்து வருபவர்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் 39) என்ற குறள் படி வாழும் நட்சத்திரம் இவர்.

இவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை ஆராய்ந்தால் இந்த குறளை அடியொற்றிய கருத்துக்களை அதிகம் நீங்கள் பார்க்கலாம். இவரது மற்றொரு பக்கத்தை பற்றி விரிவான பதிவை ஏற்கனவே அளித்திருக்கிறோம். (இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? வியக்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!)

மற்ற நட்சத்திர தம்பதிகள் போலவே இவர்களுக்குள்ளும் அவ்வப்போது சிறு சிறு MISUNDERSTANDINGS எழுவது வாடிக்கை. ஒரு முறை அது முற்றிப்போய் எங்கே இவர்கள் பிரிந்துவிடுவார்களோ என்று இவர்களின் ரசிகர்கள் கவலைப்பட்டனர். அதை எப்படி பிராட் பிட் எதிர்கொண்டார் என்று அவரே கூறியிருப்பதை கவனியுங்கள். சில வருடங்களுக்கு முன்னர் அவர் கூறியது இது. ஆனாலும் எந்தக் காலத்துக்கும் பொருந்தும். (நல்லவேளை அவங்க இங்கே இருந்திருந்தா நம்ம பத்திரிக்கைகாரங்களே பிரிச்சி விட்டிருப்பாங்க!)

Img 2

சம்சாரம் என்பது வீணை…!

“எங்களிடம் பணமும் புகழும் இருப்பதால் எங்களுக்கு பிரச்சனைகளே இல்லை நாங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. அது உண்மையல்ல. நாங்களும் சராசரி மனிதர்கள் தான். எங்களுக்கும் மற்றவர்களைப் போன்றே எல்லாப் பிரச்னைகளும் உண்டு. என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. பணியிடத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவளுக்கு ஏற்படும் சோதனைகள் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் தோன்றும் சவால்கள், பிரச்னைகள் இவற்றின் காரணமாக அவள் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

Img 4அவள் 35 வயதில், அவள் சுமார் 30 பவுண்டுகள் எடை இழந்து (ஒரு பவுண்டு = 0.45 KG) தற்போது மொத்தமே 90 பவுண்டுகள் தான் இருக்கிறாள். அவள் உடல் மிகவும் பலவீனமாக உள்ளது. அவள் நிச்சயம் மகிழ்ச்சியாக இல்லை. தொடர் தலைவலி, நெஞ்சு வலி இவற்றால் அவள் அடிக்கடி பாதிக்கப்படுகிறாள். அவள் முதுகில் ஏற்படும் தசைப்பிடிப்பு வேறு அவளை படுத்தி வருகிறது.

அவளுக்கு தூக்கம் சரியாக வருவதில்லை. இரவு முழுதும் தூங்க முடியாமல் தவிப்பவள் காலை தான் தூங்கவே செய்கிறாள். அன்றைய நாளில் வெகு சீக்கிரமே சோர்வடைந்துவிடுகிறாள். எங்கே எங்கள் உறவு முறிந்துவிடுமோ என்று நான் ஒரு கட்டத்தில் கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். அவள் அழகு அவளை விட்டு செல்ல ஆரம்பித்தது. கண்களுக்கு கீழே கருவளையம் தோன்ற ஆரம்பித்தது. முன் தலையில் முடி கொட்ட ஆரம்பித்தது. அவளை அவள் கவனித்துக்கொள்ள தவறிவிட்டாள்.

ஷூட்டிங்கிற்கு செல்லவும், புதிய படங்களை ஒப்புக்கொள்ளவும் தயங்கினாள். எனக்கு ஒரு கட்டத்தில் எங்கள் உறவின் மீதே நம்பிக்கை போய்விட்டது. நிச்சயம் கூடிய சீக்கிரம் இருவரும் பிரிந்துவிடுவோம் என்றே நினைத்தேன்.

ஆனால் ஒரு கணம் யோசித்தேன். ஏன் பிரியவேண்டும்? அவள் என்ன தப்பு செய்தாள் ?

உலகிலேயே அழகான பெண் எனக்கு மனைவியாக கிடைத்திருக்கிறாள். இந்த உலகின் பலகோடி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவள் தான் கனவுக்கன்னி, ரோல்மாடல் எல்லாமே. அவளை அணைக்கவும் அவளுடன் தோள் சாய்ந்து உறங்கவும் எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதை எண்ணி திருப்திபட்டுக்கொண்டேன். அவளுக்கு சிறு

==========================================================

Don’t miss these articles…

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?

காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

==========================================================

சிறு சந்தோஷங்களை தருவது என்று முடிவு செய்தேன். அவளுக்கு பூங்கொத்துக்கள், அன்பளிப்புக்கள், எதிர்பாராத திடீர் முத்தங்கள் கொடுத்து அவளை பரவசப்படுத்தினேன்.

“நான் இருக்கிறேன் உன்னோடு…!” என்று தைரியமூட்டினேன்.

அவளுக்கு நிறைய நேரம் ஒதுக்கினேன். வீட்டு வேலைகளை குழந்தைகளை பராமரிப்பதை பகிர்ந்துகொண்டேன். முக்கியமாக அவள் தனிமையை உணராதவாறு பார்த்துக்கொண்டேன்.

Image74

image 8
தத்துப் பிள்ளைகளை சுமக்கும் தம்பதிகள்…

எனக்கு மேடைகளில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் அவளைப் பற்றியும் அவள் எந்தளவு ஒரு சிறந்த பெண்மணி என்பதைப் பற்றியும் குறிப்பிட்டேன். அவளை அவளுக்கு முன்னர் பாசாங்கு இல்லாமல் மனம்விட்டு புகழ்ந்தேன். நண்பர்கள் மத்தியில் அவளை உயர்த்தி பேசினேன்.

மொத்தத்தில் அவளுக்காக வாழத் துவங்கினேன்.

நம்பினால் நம்புங்கள்… அவளிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அவள் மெல்ல மெல்ல மலர்ந்தாள். முன்பைவிட பொலிவு பெற்றாள்.

அவளிடம் பதட்டம் குறைந்தது. அவள் எடை கூடியது. முன்பைவிட என்னை அதிகம் நேசிக்க ஆரம்பித்தாள். அவள் இந்தளவு என்னை விரும்புவாள் என்று எனக்கு சத்தியமாக தெரியாது. அந்தளவு என்னை இப்போது நேசிக்கிறாள்.

அப்புறம் தான் எனக்கு ஒன்று புரிந்தது. The woman is the reflection of her man. If you love her to the point of madness, she will become it!”

– பிராட் பிட், ஹாலிவுட் நடிகர் (ஏஞ்சலினா ஜோலியின் கணவர்)

Original English transcript 

Brad Pitt – “People think because we are rich and famous that we don’t go through things. We are real like everyone else. We are human. My wife had got sick. She was constantly nervous because of problems at work, personal life, her failures and problems with children. She had lost 30 pounds and weighed about 90 pounds in her 35 years. She got very skinny, and was constantly crying. She was not a happy woman. She had suffered from continuing headaches, heart pain and jammed nerves in her back and ribs.

She did not sleep well, falling asleep only in the morning and got tired very quickly during the day. Our relationship was on the verge of break up. Her beauty was leaving her somewhere, she had bags under her eyes, she was poking her head, and stopped taking care of herself. She refused to shoot the films and rejected any role. I lost hope and thought that we’ll get divorced soon…But then I decided to act on it. After all, I’ve got the most beautiful woman on the earth. She is the idol of more than half of men and women on earth, and I was the one allowed to fall asleep next to her and to hug her shoulders. I began to pamper her with flowers, kisses and compliments. I surprised her and pleased her every minute. I gave her lots of gifts and lived just for her. I spoke in public only about her. I incorporated all themes in her direction. I praised her in front of her own and our mutual friends. You won’t believe it, but she blossomed. She became even better than before. She gained weight, was no longer nervous and she loved me even more than ever. I had no clue that she CAN love that much. And then I realized one thing: The woman is the reflection of her man. If you love her to the point of madness, she will become it. ¶¶

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்… உங்கள் உதவியை எதிர்நோக்கி…!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check : 

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? வியக்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

==========================================================

[END]

4 thoughts on “சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்! MUST READ

  1. மனைவியை புரிந்துகொண்ட நல்லதொரு துணையை பற்றிய பதிவு.
    படிக்கும் அனைவரும் புரிந்து கொண்டு துணைக்கு தோள் கொடுக்கட்டும்

  2. சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய வணக்கம் .
    மிக சிறப்பான பதிவு .
    இந்த பதிவை கணவன் , மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து படித்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் .
    ஆண்களில் பெரும்பாலோர் உணர்சிகளை மனதிற்க்குள் மறைத்து வைத்து வெளிபடுத்த தெய்ரியாதவர்களாக இருக்கிறார்கள் . . ஆனால் பெண்களோ உணர்சிகளை வெளிபடுத்துவதில் சமர்த்தர்கள் .
    உங்களில் பாதி மனைவி என்பதை நினைவு கூர்ந்தால் நீங்களும் வெற்றி யாளரே…

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
    கண்ணில் நல்ல துருங் கழுமல வளநகர்ப்
    பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *