Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > All in One > செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

print
‘பர்சனாலிட்டி’ அதாவது ‘ஆளுமை’ என்பது ஏதோ தோற்றத்தையும், நிறத்தையும், டிப் டாப் உடைகளையும், ஆங்கில FLUENCY யையும் வைத்து மட்டும் வருவதில்லை. அது பல விஷயங்களை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் ஒருவரை ஈர்க்க வேண்டுமானால் உங்கள் தோற்றம் பயன்படலாம். ஆனால் அந்த ஈர்ப்பை மரியாதையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் பர்சனாலிட்டி மட்டுமே உதவும்.

தோற்றம் உங்கள் உருவத்தை மட்டுமே வெளிப்படுத்தும். பர்சனாலிட்டி உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்தும். அது தான் விஷயம்.

எனவே பர்சனாலிட்டியில் சிறந்து விளங்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள், தாழ்வு மனப்பான்மையை விடுத்து, தங்களிடம் உள்ள குறைகளை களைந்து ஆளுமையை வளர்த்துக்கொள்ள முனையவேண்டும்.

அதற்கு உதவுவது தான் இந்த தொடர். பர்சனாலிட்டியின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாக விளக்கி பின்பற்ற வைப்பதே நம் நோக்கம். கூடுமானவரை இந்த தொடரில் நாம் கூறுபவற்றை செயல்படுத்தி பாருங்கள். அதன் பலனை நீங்களே உணர்வீர்கள்.

அலைபேசிகள் எனப்படும் செல்போன்கள் இன்று தகவல் தொடர்புக்கு இன்றியமையாதது என்றாகிவிட்டது. அனைவரும் அதை பயன்படுத்தும் நிலையில் பலருக்கு அவற்றை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியவில்லை. படித்தவர்கள் கூட இந்த விஷயத்தை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அவர்களை பற்றிய பிறரின் குறிப்பாக புதியவர்களின் மதிப்பீட்டுக்கு அது மிகவும் உதவுகிறது என்று அவர்கள் அறிவதில்லை.

செல்ஃபோன் பயன்பாட்டில் முதலில் மிக முக்கியமாக அனைவரும் கோட்டை விடும் விஷயத்தை முதலில் தெரிந்துகொள்வோம்.

நீங்கள் யாரையேனும் அழைக்கும்போது செகண்ட் கால் சென்றால் என்ன செய்வது ?

1. நீங்கள் ஒருவருக்கு செல்போனில் அழைப்பு விடுக்கிறீர்கள். ஆனால் அந்த நபரோ வேறொரு நபரிடம் எதிர்முனையில் பேசிக்கொண்டிருக்கிறார்… அந்த சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் ?

அ) அவர் மிகப் பெரிய மனிதர் என்றால் உடனே காலை துண்டித்துவிடவேண்டும். ஒரு அரை மணிநேரம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொள்ளலாம் அல்லது “இது போன்று கால் செய்தேன். நீங்கள் வேறொரு நபரிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள். தற்போது அழைக்கலாமா? என்று எஸ்.எம்.எஸ். செய்து கேளுங்கள். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே திரும்பவும் பேசவேண்டும்.

ஆ) நீங்கள் பேசும் நபர் ஒருவேளை உங்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவோ அல்லது நண்பராகவோ இருப்பின் உங்கள் அழைப்பை ஏற்பதா அல்லது எதிர்முனையில் இருப்பவரிடம் தொடர்வதா என்று அவர்கள் முடிவு செய்ய ஒரு சில வினாடிகள் அவகாசம் கொடுங்கள். ஒரு சிலர் தாங்கள் அழைத்த எண்ணுக்கு செகண்ட் கால் சென்றால் உடனே கட் செய்துவிட்டு, திரும்ப திரும்ப அழைத்து தொல்லைப் படுத்துவார்கள். அது தவறு. ஒருவேளை நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபர் எதிர் முனையில் தான் பேசிக்கொண்டிருக்கும் நபரிடம் முக்கியமாக ஏதாவது தொடர்ந்து பேச வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலையில் நீங்கள் இங்கு அவரை திரும்ப திரும்ப அழைப்பதை விரும்பாது உங்களுக்கும் இங்கே ஒரு ‘ஷார்ட்’  பதிலை சொல்ல விரும்புவார்கள். அந்த சமயத்தில் ஏற்கனவே பேசும் நபரை  சற்று வெயிட்டிங்கில் வைத்துவிட்டு, “உங்க கிட்டே அப்புறம் பேசுறேன்” என்று அவர்கள் சொல்ல விரும்பக்கூடும். அதற்கு சில வினாடிகள் அவகாசம் கொடுங்கள். இது தெரியாமல் செகண்ட் கால் சென்றால் உடனே கட் செய்துவிட்டு அவர் கால் பேசிக்கொண்டிருக்கும்போது திரும்ப திரும்ப அழைத்து எரிச்சல் படுத்தவேண்டாம். மிகவும் படித்தவர்களுக்கு கூட இது தெரிவதில்லை.

ஒருவேளை உங்களை விட மிக முக்கியமான் நபரிடம் அவர் பேசிக்கொண்டிருந்தால், (வேற யார் கேர்ள் -ப்ரெண்ட், வீட்டுக்காரம்மா… அல்லது பாஸ்) உங்கள் அழைப்பை அவர் பொருட்படுத்தமாட்டார். அப்போது நீங்களே புரிந்துகொள்ளவேண்டும். இந்த சூழ்நிலையில் திரும்ப ஒரு 20அல்லது 30 நிமிடங்கள் கழித்து அழைப்பு விடுக்கலாம். ஒரு சிலர் தாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது செகண்ட் கால் வந்தால் பேசி முடித்தவுடன் அதை பார்த்து  திரும்ப அழைப்பு விடுத்து என்ன ஏது என்று கேட்க மறந்துவிடுகின்றனர். ஆகையால் தான் இதை சொல்கிறேன். எனவே கொஞ்ச நேரம் கழித்து அந்த நம்பருக்கு மறுபடியும் முயற்சி செய்யுங்கள். அப்போதும் கால் என்கேஜ்ட் என்றால் “ஐயோ…பாவம்” என்று பரிதாபப்பட்டு விட்டுவிடுங்கள்.

இன்னொரு முக்கிய விஷயம். நீங்கள் கால் செய்யும் நபர் உங்கள் ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை என்றால் திரும்ப திரும்ப அவருக்கு கால் செய்து எரிச்சல் மூட்டவேண்டாம். இந்த உலகில் பிஸியான நபர் நீங்கள் ஒருவர் மட்டுமல்ல.

நீங்கள் அழைக்கும் நபர் ஃபோனை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது ?

2. இன்னொரு முக்கிய விஷயம். நீங்கள் கால் செய்யும் நபர் உங்கள் ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை என்றால் திரும்ப திரும்ப அவருக்கு கால் செய்து எரிச்சல் மூட்டவேண்டாம். இந்த உலகில் பிஸியான நபர் நீங்கள் ஒருவர் மட்டுமல்ல. அவரவர்க்கு ஆயிரம் வேலைகள் உண்டு. ஒன்று அவர்கள் டிரைவிங்கில் இருக்கக்கூடும். அல்லது அலுவலகத்தில். அல்லது மருத்துவ மனையில் அல்லது கோவிலில்… அல்லது சர்ச்சில். ஃபோனை எடுக்க இயலாத நிலையில் அவர் இருக்கக்கூடும். பார்த்துவிட்டு எப்படியும் உங்களை திரும்ப கூப்பிடுவார். அப்படி கூப்பிடவில்லையெனில் ஒரு அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து  மீண்டும் கூப்பிடுங்கள். தவறில்லை. அப்போதும் அவர் அட்டெண்ட் செய்யவில்லை எனில், அன்று அவரை தொந்தரவு செய்யாது இருப்பது நலம். விஷயத்தை சுருக்கமாக எஸ்.எம்.எஸ். மூலம் தெரியப்படுத்துங்கள். அது போதும்.

3. செல்போன்கள் வெறும் தகவல் தொடர்புக்கு என்ற காலம் மலையேறிவிட்டது. தற்போது அது ஒரு மியூசிக் பிளேயராக, கேமிங் பாடாக, வீடியோ பிளேயராக கூட பயன்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும்போது மற்றவர்களின் ப்ரைவசியை பற்றி யோசிக்க கூட பலர் மறந்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு செல்போனுக்கும் ஹெட்செட் உள்ளது. பொது இடங்களில் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் உங்கள் விருப்பமான பாடலை கேட்க, இசையை கேட்க, பேச ஹெட்செட்டை பயன்படுத்தவேண்டும்.

4. பொது இடத்தில் உரக்க பேசுவது – பொது இடத்தில் செல்போனில் உரக்கப்பேசுவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. பலர் இன்னும் அந்த கால எஸ்.டி.டி. மோடிலேயே இருக்கிறார்கள். மிக சன்னமாக பேசினாலே எதிர்முனையில் இருப்பவர்களுக்கு கேட்கும் வகையில் தற்போது மைக்ரோ-ஃபோன்கள்  அனைத்து மொபைல்களிலும் உள்ளன. எனவே பொது இடங்களில் உரக்கப்பேசுவதை தவிர்க்கவும்.

5. சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது

அ: மற்றவர்கள் காசு கொடுத்து வருவது படத்தை பார்க்கவே தவிர நாம் பேசுவதை கேட்க அல்ல. ஆகையால் மிக மிக அவசரம் என்றால் தவிர படம் பார்க்கும்போது நாம் பேசவேண்டியதில்லை. படம் முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாமே. அல்லது வெளியே சென்று பேசிக்கொள்ளலாமே…. (இதைக் கூட அடிக்கடி செய்து மற்றவர்களை எரிச்சல் படுத்தக்கூடாது.)

ஆ : சினிமா பார்க்கும் அந்த நேரமாவது போனை சுவிச் ஆப் செய்யுங்களேன். உங்களுக்கு அந்த 2.5 மணிநேரம் செல்போன் அழைப்புக்களிளிருந்து ஒய்வு கொடுங்களேன். அட குறைந்த பட்சம் சைலன்ட்ல வெச்சிருந்து, அப்புறம் பேசுங்களேன்.

6. யாரிடமாவது நேருக்கு நேர் பேசிக்கொண்டிருக்கும்போது மொபலை பார்த்துக்கொண்டிருப்பது – ஒருவரிடம் நேருக்கு நேர் பேசிக்கொண்டிருப்பதை விட நமக்கு அந்த நேரத்தில் வரும் மெசேஜ் / கால் முக்கியமல்ல. சிலர் அடுத்தவர்களிடம் நேருக்கு நேர் பேசிக்கொண்டிருந்தாலும் அவர்கள் கவனமெல்லாம் செல்போன் மீதே இருக்கும். மெசேஜ் வந்தால் நமக்கு அலர்ட் வரப்போகிறது. அதற்காக எதற்கு மொபைலையே பார்த்துக்கொண்டிருப்பானேன் ? ஒருவேளை அப்படி முக்கிய அழைப்பு வந்து பேச வேண்டியிருந்தால் மற்ற நபரிடம் ஒரு “எக்ஸ்க்யூஸ் மீ” யாவது சொல்லிவிட்டு பேசுங்கள்.

மேலும் இந்த பழக்கம் நமது பெட்ரூமில் நமது லைப்-பார்ட்னருடன் இருக்கும்போது வராமல் பார்த்துக்கொள்வது அவசியம். பல பிரச்னைகள் இங்கிருந்தே ஆரம்பிக்கின்றன. மனநல மருத்தவத்தில் இது நோய். தெரியுமா?

7. அனுமதியின்றி புகைப்படங்கள் எடுப்பது – நமது மொபைலில் அனுமதியின்றி அடுத்தவர்களை புகைப்படமெடுப்பது அநாகரீகம். அது சட்டப்படி தவறும் கூட. உங்களுக்கு பிடிக்காததை மற்றவர்கள் செய்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் அல்லவா? அது போலத் தான் இதுவும். மேலும் சிலர் இது போன்று எடுத்த படங்களை தைரியமாக தங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்கின்றனர். தவறையும் செய்துவிட்டு அதற்க்கு நாமே ஆதாரத்தை கொடுப்பது போன்றது இந்த செயல்.

8. சத்தமான ரிங்-டோன்களை  வைப்பது

சத்தமான ரிங்-டோன்களை  வைப்பது சமயங்களில் உங்களை சங்கடத்தில் தள்ளி விடும். எனக்கு நடந்ததை போல….

[pulledquote][typography font=”Cantarell” size=”13″ size_format=”px”] நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, எனக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. எனது எஸ்.எம்.எஸ். டோன் அப்போது என்ன தெரியுமா? “எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் ரொம்ப பிசி” என்று கவுண்டமணி கூறும் அந்த காமெடி டயலாக் தான். அதை கேட்டவுடன் அந்த பெரிய மனிதருக்கு என்னவோ போலாகிவிட்டது. நான் பதறிப்போய் தவறை உணர்ந்து திரும்ப திரும்ப “ஸாரி” கேட்டேன். ஆனாலும் அவர் உற்சாகம் குறைந்து அதன் பிறகு என்னுடன் சரியாகவே பேசவில்லை. [/typography] [/pulledquote]

பொது இடத்தில் சத்தமான இசையை ஒலிப்பது போன்றது தான் இதுவும். உங்கள் ரிங்-டோன் உங்களுக்கு ரீங்காரமாக இருக்கலாம். மற்றவர்களுக்கும் அப்படி இருக்கும் என்று அர்த்தம் இல்லையே? ரிங்-டோன் என்பது நமக்கு ஏதாவது அழைப்பு வந்தால் உணர்த்தவே. அதை மெலிதாக கேட்பதற்கு தன்மையுடன் இருக்குமாறு வைத்துக்கொள்ளலாமே? சிலர் நாய் குறிப்பது, குழந்தை அழுவது போலெல்லாம் வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறு. அநாகரீகம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு பர்சனாலாக நடந்தது இது…. ஒரு பெரிய மனிதரை நான் பார்க்க சென்றிருந்தேன். மொபைலை சைலண்ட் மோடில் வைக்க மறந்துவிட்டேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, எனக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. எனது எஸ்.எம்.எஸ். டோன் அப்போது என்ன தெரியுமா? “எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் ரொம்ப பிசி” என்று கவுண்டமணி கூறும் அந்த காமெடி டயலாக் தான். அதை கேட்டவுடன் அந்த பெரிய மனிதருக்கு என்னவோ போலாகிவிட்டது. நான் பதறிப்போய் தவறை உணர்ந்து திரும்ப திரும்ப “ஸாரி” கேட்டேன். ஆனாலும் அவர் உற்சாகம் குறைந்து அதன் பிறகு என்னுடன் சரியாகவே பேசவில்லை. எவ்ளோ பெரிய மனிதர். அவரை மறுபடியும் சந்திப்பது எவ்ளோ கஷ்டம்… எவ்ளோ பெரிய இழப்பு தெரியுமா எனக்கு?

அன்றிலிருந்து மொபைலில் ரிங்-டோன் & மெசேஜ் டோன் வைப்பதை நிறுத்திவிட்டேன். ஒருவேளை நாம் சைலன்ட்டில் அல்லது வைப்ரேஷனில் வைக்க மறந்துவிட்டாலும் சங்கடம் இல்லை பாருங்கள்.

9. எங்கெங்கு செல்போனை பயன்படுத்தக்கூடாது ?

முக்கியமாக மருத்தவமனைகள். அங்கிருப்பவர்கள் வந்திருப்பது கொண்டாடட்டத்திற்கு அல்ல. தங்கள் நோய்களை, வலிகளை தீர்த்துக்கொள்ள. எனவே மருத்துவமனைகளில் தவிர்க்க இயலாத நிலையில் செல்போனில் பேச வேண்டியிருந்தால் உங்கள் உரையாதல் மிகவும் ஷார்ட்டாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து பெட்ரோல் பங்குகள்

பெட்ரோல் பங்க்குகளில் நிச்சயம் செல்போனை பயன்படுத்தவே கூடாது. செல்போனின் கதிர்வீச்சு மிகவும் சக்திமிக்கது. நீங்கள் பெட்ரோல் நிரப்பும்போது பேசுவதோ அழைப்பை ஏற்பதோ கூடாது. அப்படி செய்தால் அது மிகப் பெரிய விபத்திற்கு வழி வகுத்துவிடும்.

கோவில்

கோவிலில் மிகவும் முக்கியமான நபர் இறைவன் ஒருவனே. உங்களை அழைப்பவர் அல்ல. மேலும் பலர் இறைவனோடு தங்கள் மனதை கொண்டு பேசுவதால் நீங்கள் அங்கு செல்போனில் பேசுவது அழைப்பது முற்றிலும் தவறு.

வங்கி

வங்கியில் செல்போனில் பேசுவதை விட அபத்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது. பணம் புழங்கும் அந்த இடத்தில் மற்றவர்கள் உங்கள் உரையாடலை கேட்கும்படி பேசுவது உங்களுக்கோ மற்றவர்களுக்கோ பெரும் இழப்பாக முடியும். மேலும் உச்சகட்ட அநாகரீகம் இது.

மேற்கூறிய இடங்களுக்கு செல்வதற்கு முன்னர் உங்கள் செல்போனை சுவிச் ஆப் செய்துவிடவேண்டும் அல்லது சைலன்ட்டில் வைத்துவிடவேண்டும். மேற்கூறிய இடங்களில் செல்போனில் பேசுபவர்களை நிச்சயம் மற்றவர்கள் இழிவாகத் தான் பார்ப்பார்கள் ஏன்..நாமளே.. எத்தனை பேரை அந்த மாதிரி பார்த்திருப்போம்? யோசிச்சு பாருங்க!

10. ஷாப்பிங்கில் பில் போடுமிடத்தில் பேசுவது – சிலருக்கு ஷாபிங்கில் கேஷ் கவுண்டர் முன்பு நின்று கொண்டு பேசுவது என்பது அல்வா சாப்பிடுவது போன்று. கொஞ்சமும் நாகரீகம் இல்லாது தங்களுக்கு பின்னர் நிற்பவர்களை பற்றியோ கவுண்டரில் உள்ளவரை பற்றியோ கவலைப்படாது பேசிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் ஒருக்காலும் அது போன்று செய்யாதீர்கள்

11. எந்த சூழ்நிலையிலும் மொபைலில் கெட்டவார்த்தைகள், அடிதடி குறித்த பேச்சு, ‘வெட்டுவேன்’, ‘குத்துவேன்’ போன்ற சவடால்கள், பணப் பரிமாற்றம், செக்ஸ், அல்லது உடல் ரீதியான இயக்கம் குறித்து பேசாதீர்கள். இப்படி பேசுவது உங்களை மிகப் பெரிய இக்கட்டில் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

12. செல்போன் பேசும்போது சிக்னல் வீக்கானால் கத்தாதீர்கள். சிக்னல் வீக் எனும்போது எவ்வளவு கத்தி என்ன பயன்? விட்டுவிடுங்கள். சிக்னல் கிடைத்தவுடன் எதிர்முனைக்கு ‘குட் பை’ சொல்வதற்காக மறுபடியும் ஃபோன் செய்யாதீர்கள்.

13. பாத்ரூம், டாய்லட் உள்ளிட்ட இடங்களில் இருக்கும்போது ஃபோன் செய்வதோ அல்லது அழைப்பை ஏற்பதோ தவறு மட்டுமல்ல அநாகரீகம். செல்போனை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். அது உங்களை கட்டுப்படுத்த வேண்டாமே.

14. காரில் பயணிப்பவர்கள் ப்ளூ-டூத் ஹெட்செட்டை பயன்படுத்துங்கள். அது பாதுகாப்பானது.

15. ஒருவரை சந்திக்க செல்லும்போது ஒரு முக்கிய அழைப்பை எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு இது போன்று ஒரு கால் வரும் என்று முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள். அப்படி வரும்போது தனியான ஒரு இடத்திற்கு சென்று அங்கு பேசுங்கள். உங்கள் நண்பர் அல்லது நீங்கள் சந்திக்க சென்றவர் முன்பு உங்கள் பர்சனல் விஷயத்தை பேசவேண்டாம்.

16. ஒவ்வொரு நாளும் இரவு படுக்க செல்லும் முன், உங்கள் செல்போனில் கால் செய்த நபர்கள் லிஸ்ட்டை பாருங்கள். மிஸ்டு கால் லிஸ்டையும் பாருங்கள். எவருக்கேனும் திரும்ப அழைப்பு விடுக்கவேண்டும் என்று நினைத்து நீங்கள் மறந்திருக்கலாம். அவர்களுக்கு அவர்கள் உங்களுடன் இருக்கும் நெருக்கத்தை பொறுத்து உடனே கால் செய்யுங்கள் அல்லது “நாளை அழைக்கிறேன்” என்று மெசேஜ் செய்யுங்கள்.

இதெல்லாம் நீங்கள் ஃபாலோ பண்ணினால் ஆளுமையின் மிக முக்கிய கட்டத்தை பாஸ் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அடுத்த அத்தியாயத்தில் ஆளுமை முன்னேற்றத்தில் இன்னும் பல முக்கிய விஷயங்களுடன் சந்திக்கிறேன்….

[END]

For previous episodes, please check….

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள உதவும் ஒரு தொடர் — Episode 1
http://rightmantra.com/?p=1022

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 2
http://rightmantra.com/?p=1338

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

5 thoughts on “செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

  1. அட நீங்க வேற சார் ஒரு சிலர் இருக்காங்க பாருங்க,நாட்டின் ஜனாதிபதி பிரதமர் கூட அவ்வளவு முக்கியமாக பேச மாட்டார்கள் போல ,இவர்கள் நேராக சாமிகும்பிடும் இடத்திற்கு வருவது அங்கு நின்று கொண்டே சத்தமாக பேசுவது ,யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் பேசுவது,

    இன்னும் பல பேர் ஆபத்து தெரியாமல் பேருந்து மற்றும் ரயில்களில் இருந்து கொண்டு தங்களது அலைபேசி எண்ணை சத்தமாக அனைவருக்கும் கேட்கும்படி கூறுவார்கள் ஒரு சிலர் அதற்க்கு மேலே போய் நான் இவரை அனுப்புகிறேன் இவர்டியம் இவ்வளவு பணம் கொடுத்து அனுப்பு என்றெல்லாம் சொல்லுவார்கள் இது எவ்வளவு பெரிய ஆபத்து யாரவது கேட்டு இவர் பெயரை சொல்லி பணம் வாங்கி சென்றால்

    இன்றைய நாகரீக உலகத்தில் பயன்பாட்டிற்கு என்பதை விட பெருமைக்காக அலைபேசி வைத்திருப்போர் தான் அதிகம்

  2. செல் இல்லாதவன் செல்லாதவன் என்பர்.
    செல் இல்லாதவன் சொல் இல்லாதவன்.
    இது புதுமொழி.
    அறிவியல் கண்டுபிடிப்புகளில் உச்சமானது செல் போன் . அதை பயன்படுத்தும் போது அதன் நாகரிகம் எப்படி இருக்கவேண்டும்
    என்பதை அருமையாக கூறினீர்கள். அற்புதம். இது போன்ற பயனுள்ள கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டும். இதை படிக்க கூடியவர்கள் அதன் நாகரிகத்தை மற்றவர்களுக்கு எடுத்து கூறவேண்டும். உங்கள் உழைப்பு சமுதயத்தில் புதிய மாற்றம் ஏற்படுத்தட்டும்.

  3. //ஆரம்பத்தில் ஒருவரை ஈர்க்க வேண்டுமானால் உங்கள் தோற்றம் பயன்படலாம். ஆனால் அந்த ஈர்ப்பை மரியாதையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் பர்சனாலிட்டி மட்டுமே உதவும்.//

    நிஜம் சார் …

    அட அட அடுத்தது //”கோவிலில் மிகவும் முக்கியமான நபர் இறைவன் ஒருவனே. உங்களை அழைப்பவர் அல்ல. மேலும் பலர் இறைவனோடு தங்கள் மனதை கொண்டு பேசுவதால் நீங்கள் அங்கு செல்போனில் பேசுவது அழைப்பது முற்றிலும் தவறு.”//

    இதை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சொல்லி வீணா வம்பை கொண்டாந்தது போல ஆச்சு .. ஒரு கும்பலுக்கே பதில் சொல்ல வேண்டிதா போச்சு .. முடிந்த மட்டும் நான் எனது இதுதான் நிறைய இடத்துல நடக்கறது .. நாகராணி மட்டுமாவது கடை பிடிக்கிறேன்.

  4. வெரி குட் சுந்தர் சார்.

    வாழ்த்க்கள்.

    அன்புடன்.

    மனோகரன்.

    (ஓம் சிவ சிவ ஓம்)
    (ஓம் ஹரி ஹரி ஓம்)

  5. Very informative article and very useful too!!
    Definitely it will help us in future situations!!
    Cell phone illama irunda evlo nalla irukum??!!hmmm!!
    think now cell phone has become an integral part of evryone’s life!!
    how many can live without it?We must ensure that we are not dependant on it fully!!
    Thanks for this wonderful article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *