Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > அடியவருக்கு ஒன்று என்றால் அரங்கன் பொறுப்பானா? – Rightmantra Prayer Club

அடியவருக்கு ஒன்று என்றால் அரங்கன் பொறுப்பானா? – Rightmantra Prayer Club

print
ஸ்ரீமத் ராமானுஜர் ஒரு முறை வரதராஜப் பெருமாளை தரிசிப்பதற்காக சிஷ்யர்களுடன் காஞ்சிக்கு யாத்திரை புறப்பட்டார். செல்லும் வழியில் எங்கும் தங்குவது என்ற யோசனை எழுந்தது. யக்ஞேசன் என்ற சீடன் ஒருவன் வசிக்கும் ஊர் வழியில் இருப்பது தெரிந்தது. அவன் வீட்டில் தங்குவோம் என்று முடிவு செய்தவர், தனது சிஷ்யர்களை அழைத்து யக்ஞேசனிடம் தமது வருகையை பற்றி தகவல் தெரிவித்துவிடுமாறு கூறியனுப்பினார்.

Ramanuja 6

தனது குரு தனது இல்லத்திற்கு எழுந்தருளுவது கேள்விப்பட்ட யக்ஞேசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தடபுடலான ஏற்பாடுகளை உடனே செய்யலானான். ஆனால், இந்த செய்தியை கொண்டு வந்த சீடரை கண்டுகொள்ளவேயில்லை. “குடிக்க தண்ணீர் வேண்டுமா?” என்று கூட கேட்க அவனுக்கு மனமில்லை.

மிகவும் வருத்தத்துடன் திரும்பிய அந்த சீடர் நேரே ராமானுஜரிடம் சென்று நடந்த அனைத்தையும் கூறினார்.

அனைத்தையும் கேட்டு மனதில் குறித்துக்கொண்டார் ராமானுஜர்.

குறிப்பிட்ட நாள் வந்தபோது அனைவரும் யாத்திரை புறப்பட்டனர். யக்ஞேசன் வசிக்கும் ஊருக்கு எல்லையில் இவர்கள் வந்தபோது, இரண்டு பாதைகள் பிரிந்தன. எந்தப் பாதையில் செல்வது என்று குழுவினருக்கு புரியவில்லை.

அப்போது அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை கூப்பிட்டு, “எந்த பாதை எங்கே போகிறது?” என்று இரண்டு பாதைகளையும் காண்பித்து கேட்டனர்.

அதற்கு அந்த இடையன், ஒரு பாதை யக்ஞேசன் என்கிற செல்வந்தன் வீட்டுக்கு போகிறது என்றும், மற்றொரு பாதை வரதாழ்வன் என்கிற ஏழையின் குடிசைக்கு செல்கிறது என்றும் கூறினான்.

“நாங்கள் பெரியமனிதர்களும் அல்ல. பணக்காரர்களும் அல்ல. எனவே வரதாழ்வானின் குடிசைக்கே செல்வோம்” என்று வரதாழ்வானின் குடிசை நோக்கி பயணமானார் ராமானுஜர்.

வரதாழ்வான் வீட்டுக்கு இவர்கள் சென்றபோது அங்கே வரதாழ்வான் இல்லை. அவன் இல்லத்தரசி லட்சுமி மட்டுமே இருந்தாள்.

“அடியேன் ராமனுஜன் வந்திருக்கிறேன்” என்று ஸ்ரீ ராமானுஜர் குரல் கொடுத்தும் அவள் வீட்டுக்கு உள்ளேயிருந்து வெளியே வரவில்லை.

அவள் அணிந்திருந்த சேலை மிகவும் நைந்து கிழிந்துபோயிருக்கிறபடியால் கூச்சப்பட்டு மத்தியில் வெளியே வரவில்லை என்பதை புரிந்துகொண்ட ராமானுஜர் தமது பரிவட்டத்தை உள்ளே வீசி எறிந்து, அதை உடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

IMG_20150101_062956

அதை சேலை போல உடுத்திக்கொண்ட லட்சுமி, பின்னர் வெளியே வந்து, தமது நிலையை விளக்கி மன்னிப்பு கோரி அனைவரையும் வரவேற்றாள்.

“சுவாமி… இந்த ஏழையின் குடிசைக்கு தாங்கள் எழுந்தருளியது நாங்கள் செய்த பாக்கியம். என் கணவர் வெளியே போயிருக்கிறார். அவர் விரைவில் வந்துவிடுவார். நீங்கள் சற்று ஓய்வெடுத்துகொள்ளுங்கள். நான் அதற்குள் உங்கள் அனைவருக்கும் உணவு தயார் செய்கிறேன்” என்றாள்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீராமானுஜர் தம் சீடர்களுடன் அந்த குடிசையிலும் வெளியே இருந்த மரத்தடியிலும் ஆளாளுக்கு இளைப்பாறினர்.

இங்கே லட்சமி செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தாள். “நாம் பாட்டுக்கு அனைவருக்கும் உணவு தயாரிக்கிறோம் என்று சொல்லிவிட்டோமே…? வீட்டில் ஒரு குன்றிமணி அரிசி கூட இல்லையே… பெருமாளே என்ன செய்வேன்?” என்று குடிசையின் தளிகை அறையில் நின்றுகொண்டு வருந்தினாள் லட்சுமி.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து (# 220)

என்ற குறளுக்கு ஏற்ப அப்போது அவளுக்கு ஒரு யோசனை உதித்தது. கடைவீதியில் உள்ள ஒரு பெரிய பலசரக்கு வியாபாரி தன் மீது இச்சை வைத்துள்ளது அவளுக்கு தெரியும்.

குருவையும் அடியார்களையும் பட்டினி போடுவதைவிட, தன் உடலை அந்த வியாபாரிக்கு விற்றாவது அடியவர்களுக்கு அமுது படைப்பது சிறந்தது என்று தீர்மானித்தாள் அந்த பதிவிரதை.

Ramanuja 5

உடனே வேகவேகமாக கடைவீதிக்கு சென்று அந்த செல்வந்தனை சந்தித்த லட்சுமி, “பாகவத கோஷ்டியினர் பசி தீர்க்க தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை தந்து உதவினால், இன்றிரவு உங்கள் ஆசையை தீர்த்துக்கொள்ளலாம்” என்றாள்.

‘வலைவிரித்த மான் தானாக வந்து குழியில் விழுகிறதே’ என்று சந்தோஷப்பட்ட அந்த செல்வந்தன் இவளை அடைய இதைவிட அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதி அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டான்.

தொடர்ந்து ஒரு மாட்டுவண்டியில் அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களை வரதாழ்வானின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

லட்சுமி அதைகொண்டு சமைத்து பாகவத கோஷ்டிக்கு அறுசுவை விருந்து படைத்தாள்.

சற்று நேரம் கழித்து வீடு திரும்பிய வரதாழ்வான் தனது வீட்டில் ஸ்ரீமத் ராமானுஜரும் ஏனைய அடியார்களும் எழுந்தருளியிருப்பதை கண்டு பேரானந்தம் அடைந்தான்.

மனைவி லட்சுமியை அழைத்து, “நமது அடுத்த வேளை உணவுக்கு கூட வழியில்லை. அப்படியிருக்க அடியார்களுக்கு உணவு சமைக்க எப்படி பொருட்கள் கிடைத்தது?” என்று வினவினான்.

அவளும் கணவனிடம் நடந்த அனைத்தையும் மறைக்காது கூறினாள்.

“உன்னை மனைவியாக பெற்றது நான் செய்த பாக்கியம்” என்று கண்களில் நீர் ததும்ப அவளை அணைத்துக்கொண்டான்.

வரதாழ்வானின் ஏழ்மை குறித்து ராமானுஜருக்கு தெரியும் என்பதால் லட்சுமியால் எப்படி ஒரு மாட்டுவண்டி நிறைய பொருட்கள் வாங்கி வந்து சமைக்க முடிந்தது என்று இங்கே ராமானுஜர் சிந்தித்தபடி இருந்தார்.

வரதாழ்வானை கூப்பிட்டு கேட்க குருவிடம் பொய் பேசலாகாது என்பதால் வரதாழ்வான் தயங்கித் தயங்கி தனது மனைவிக்கும் வணிகனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்ததை கூறி, அன்றிரவு லட்சுமி அவன் இச்சை தீர்க்க செல்லவிருப்பதையும் கூறினான்.

அடியார்கள் மேலும் தன்மேலும் இப்படியும் ஒரு பக்தியா என்று வியந்த ராமானுஜர், அரங்கனை தியானித்து அவர்களிடம் தீர்த்தமும் பிரசாதமும் அளித்து, அதை அந்த வியாபாரியிடம் இருவரும் சேர்ந்து சென்று கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இங்கே தனது வீட்டில் லட்சுமிக்காக காத்திருந்த அந்த வணிகன், லட்சமி தனது கணவனோடு வருவதைக் கண்டு திடுக்கிட்டான். “துணையாக வருகிறான். நம்மிடம் விட்டுவிட்டு போய்விடுவான் போல” என்று சமாதானப்படுத்திக்கொண்டான்.

இருவரும் வணிகனிடம் குரு கொடுத்த பிரசாதத்தையும் தீர்த்ததையும் அளிக்க, அவள் கணவன் அருகே இருப்பதையும் சட்டை செய்யாமல் “உன் கையால் என்னக் கொடுத்தாலும் உண்பேன் அன்பே” என்று கூறி அந்த பிரசாதத்தை உடனே உண்டான்.

kundrathur perumal

பிரசாதத்தை அவனுள் சென்ற மறுவினாடி அவனிடம் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. அவன் உடலெல்லாம் புல்லரித்தது. அவன் கண்களில் பிரகாசமான ஒளி தோன்றியது.

எதிரே நின்ற வரதாழ்வானும் லட்சுமியும் தற்போது அரங்கனாகவும், பிராட்டியாகவும் அவனுக்கு காட்சியளித்தார்கள். கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்க்க, அரங்கனும் பிராட்டியும் இன்னும் நன்றாக காட்சி தந்தார்கள்.

அடுத்த நொடி அவர்கள் கால்களில் வீழ்ந்த அந்த வணிகன், “என்னை மன்னித்துவிடுங்கள்… என்னை மன்னித்துவிடுங்கள்…” என்று கூறி கதறினான்.

அவன் எழுந்தது தான் தாமதம், வரதாழ்வானும், லட்சுமியும் பழையபடி காட்சியளித்தார்கள்.

“அம்மா… நீங்கள் பதிவிரதை. உங்களால் இன்று அடியேனுக்கு அரங்கனும் அன்னையும் காட்சி தந்தார்கள்” என்று கூறி, அவர்களை பாதுகாப்போடு அனுப்பி வைத்தான்.

அடியவருக்கு ஒன்று என்றால் அரங்கன் சும்மாயிருப்பனா? இல்லை குருபக்தி தான் காப்பாற்றாமல் விட்டுவிடுமா?

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது.)

பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும்.

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணைஅவசியம் குறிப்படவேண்டும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.  

(இந்த வார பிரார்த்தனையாளர்களுக்கு மேற்படி குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடைபெறவிருக்கிறது. அது சமயம், இந்த பிரார்த்தனையின் பிரிண்ட் அவுட்  சுவாமி பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்படவிருக்கிறது. பிரார்த்தனை நடைபெறும் ஞாயிறு மாலை அந்நேரம், கோரிக்கைகள் சுவாமியின் பாதத்தில் தான் இருக்கும்!)

நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : குன்றத்தூர் அடிவாரத்தில் இருக்கும் திருஊரகப் பெருமாள் கோவிலின் பட்டர் திரு. சுரேஷ் பட்டர் அவர்கள் 

கடந்த ஐந்நூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக திருஊரகப் பெருமாளுக்கு இவர்கள் தொண்டு செய்துவருகிறார்கள். சுரேஷ் பட்டர் (50) கடந்த முப்பது ஆண்டுகளாக இங்கு கோவிந்தனுக்கு சேவை சாற்றி வருகிறார்.

திருநீர்மலையில் பாலாஜி பட்டர் என்பவரிடம் முறைப்படி ஆகமம் பயின்றவர் இவர்.

IMG_1424

வைகுண்ட ஏகாதசி போன்ற விஷேட நாட்களில், உற்சவத்துக்கான ஏற்பாடுகளை தானே முன்னின்று செய்து அதை சிறப்பாக நடத்துபவர் இவர். ஊதியத்தையும் தாண்டி இவரதுன் உழைப்பு இருப்பது தான் சிறப்பு. இத்தனைக்கும் அதிகம் வருவாய் வராத கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் பட்டரை நாம் முதன் முதலாக கடந்த நவம்பர் மாதம் திருகார்த்திக்கை தீபத்தின்போது சந்தித்தொம்ல். தொடர்ந்து மார்கழி மாதம் ஒரு நாள் காலை தரிசனத்திற்கு சென்றபோது, இவரிடம் எதேச்சையாக பேசிக்கொண்டிருக்க, “வைகுண்ட ஏகாதேசிக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. அனைத்து ஏற்பாடுகளையும் நானே செய்யவேண்டும்” என்றார்.

அடுத்தநொடி பொறி தட்ட, குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு நமது வைக்குண்ட ஏகாதேசி சிறப்பு உழவாரப்பணி நடைபெற்றது. இந்த உழவாரப்பணி குறித்த பதிவு விரைவில் வரும். அதில் விரிவாக பார்ப்போம்.

Suresh Bhattar 2

தொடர்ந்து புத்தாண்டு அன்று நமது வாசகர்களுடன் நாம் ஆலய தரிசனத்திற்கு சென்றிருந்தபோது சிறப்பு தரிசனம் செய்வித்து நம்மையும் நமது குழுவினரையும் பரவசத்தில் ஆழ்த்தினார் திரு.சுரேஷ் பட்டர். வாழ்க அவர் தொண்டு. வாழ்க அரங்கன் அடியார். ஓங்குக கோவிந்தன் புகழ்.

ஓம் நமோ நாராயணாய!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்: 

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் முதல் நபர் திருமதி.சாந்தா ரோகிணி அவர்கள்.  நமக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் முகநூல் வாயிலாக அறிமுகமானவர். புத்தாண்டு ஆலய தரிசனத்திற்கும் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு உழவாரப்பணிகளிலும் தனது வயதான தாயாருடன் இதுவரை பங்கேற்றிருக்கிறார். சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்ற சென்ற உழவாரப்பணிக்கு வந்தபோது பிரார்த்தனைக்கான் கோரிக்கையை தனது கைப்பட எழுதி தந்தார்.

அடுத்தவர், கோரிக்கை இன்று இடம்பெற்றது தெய்வாதீனம் தான். சரியாக நாம் பிரார்த்தனை பதிவை தட்டச்சு செய்ய அமர்ந்தபோது அவரது மின்னஞ்சல் வந்தது.

அத்தனை விபரங்களையும் ஒன்றுவிடாமல் அனுப்பியிருந்தார். இவர் அனுப்பியிருந்தது ருண விமோசனப் பிரார்த்தனை தொடர்பான பதிவை பார்த்துவிட்டு. உடனே அவரை அலைபேசியில் தொடர்புகொண்டு, ருண விமோசனப் பிரார்த்தனை முடிந்துவிட்டது என்றும் அடுத்து திருச்சேறை செல்லும்போது அங்கு அர்ச்சனை செய்து பிரார்த்திப்பதாகவும் பிரச்சனை மிகவும் தீவிரமாக இருப்பதால் இறைவனின் உடனடி கவனம் வேண்டி இந்த வார பிரார்த்தனைப் பதிவில் அவரின் பிரார்த்தனை சேர்ப்பதாகவும் தெரிவித்தோம். பெயரை மட்டும் வெளியிடுவதாகவும் ஊர் பெயர் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவரது ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலில் பிரார்த்தனை நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு அதன் பிறகு சிவாலயம் சென்றும் பிரார்த்திக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அடுத்த பிரார்த்தனை மனைவிக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் நீங்கவேண்டி ஒரு வாசகர் அனுப்பியிருக்கும் பிரார்த்தனை. இவர் எந்த விபரமும் தெரிவிக்கவில்லை. எனவே இவரது பிரார்த்தனையை வெளியிடுவது மிகவும் கடினமாக இருந்தது. அலைபேசி எண்ணை கேட்டு, மின்னன்சல் செய்து பின்னர் தொடர்பு கொண்டு பேசி வெளியிட்டுள்ளோம். அப்போதும் விபரங்கள் கிடைக்கவில்லை. (பிரார்த்தனை சற்று விரிவாக இருப்பது பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை செய்ய சுலபமாக இருக்கும்!)

பொதுப் பிரார்த்தனை பற்றி என்ன சொல்ல? மனித மிருகங்களின் தவறு… பாவமன்னிப்பு கேட்போம்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) வழக்குகளிலிருந்தும் கடனிலிருந்தும் நிவாரணம் வேண்டும் !

அன்புள்ள சுந்தர்ஜி,

என் மகள் மேற்படிப்புக்காக நான் வங்கியில் வாங்கிய லோன் தொடர்பாக எனக்கும் வங்கிக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது. நான் தவணை காலத்தில் (மூன்று வருடங்கள்) சரியாக வட்டியும் மூன்று தவணைகள் அசலும் கட்டியிருக்கிறேன். ஆனால், வங்கியில் ஏதேதோ கணக்கு போட்டு மிகப் பெரிய தொகை ஒன்றை கட்டக் சொல்கிறார்கள். நான் பணியிலிருந்து தற்போது ரிட்டையர் ஆகிவிட்டேன். என் மகளும் திருமணம் முடிந்து சென்றுவிட்டாலும் அவள் தற்போது உத்தியோகத்தில் இல்லை.

இந்நிலையில் இவ்வளவு பெரிய தொகையை கட்ட என்னால் முடியாது. எனவே என் கடன் பிரச்சனையும் வழக்கு பிரச்சனையும் தீர பிரார்த்திக்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் என் மருமகன் திருமணத்திற்கு முன் அவர் தனிப்பட்ட முறையில் வாங்கிய பர்சனல் லோனுக்காக தற்போது என்னை வந்து கட்டக் சொல்லி வங்கியிலிருந்து ஆட்கள் வருகிறார்கள். இத்தனைக்கு டாக்குமெண்ட் எதிலும் என் பெயரோ, என் முகவரியோ, என் மகள் பெயரோ இல்லை. இதில் வேண்டுமென்றே என்னை அவர் வீட்டில் இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

மேற்படி பிரச்சனைகள் அனைத்திலிருந்து நானும் என் மகள் அனுராதாவும் மருமகனும் விடுதலை பெற பிரார்த்திக்கவேண்டும்.

எங்கள் கடன் மற்றும் வழக்கு பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவேண்டும்.

இப்படிக்கு

சாந்தா ரோகிணி,
கொரட்டூர்

(2) கடன்கள் தீரவேண்டும் & மகளின் எதிர்காலம் நன்கு அமையவேண்டும் !

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும் வாசகர்களுக்கும் என் அன்பான வணக்கம்.

என் பெயர் ஆனந்தி. அதிகபட்ச கடன் தொல்லையால் தற்போது நான் அவதிப்படுகிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என் மகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1100 க்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள். அவள் மேல் படிப்புக்கு அப்ளிகேஷன் வாங்கக் கூட வழியில்லாமல் தவிக்கிறேன்.

கவுன்சிலிங் கூப்பிடுகிறவர்கள் எல்லாரும் ரூ.5000/- அல்லது ரூ.10,000/- டி.டி. எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு எந்தவித சொத்தும் கிடையாது. இருக்கும் நகைகள் அனைத்தும் அடமானத்தில் இருக்கிறது. யாரும் ஆதரவும் இல்லை.

நான் நன்கு படித்திருக்கிறேன். மிக மிக குறைந்த சம்பளத்தில் ஒரு தற்காலிக வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறேன்.

என் மகளின் கல்வி எதிர்காலம் சிறப்பாக அமையவும், எனக்கு நல்லதொரு வேலை கிடைக்கவும், எங்கள் கடன்கள் யாவும் தீரவும், பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ஆனந்தி
ஊர் வெளியிட விரும்பவில்லை

(3) Wife suffering from bone marrow cancer

Dear sir and Rightmantra readers,

My wife Smt.Ananthi (age 55) is suffering from Multiple Myleoma. (Multiple myeloma is a form of bone marrow cancer).

She is suffering very much because of this and we can’t tolerate the trauma she is undergoing. Our family member are deeply worried because of this. We have two daughters and we are responsible for their well-being and future.

I request you all to pray for her speedy recovery.

Thanking you
S.Ramasamy,
Chromepet

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

இனி ஒரு மகாராஜா பலியாகக்கூடாது…!

னிதர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

சென்ற வாரம் கோவை மதுக்கரையில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பல நாட்களாக அட்டகாசம் செய்தது.
யானையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். இறுதியாக கும்கியானைகளின் உதவியுடன் காட்டு யானை பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று அந்த யானை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது.

Maharaja
எங்களை மன்னித்துவிடு மகாராஜா

ஓர் உயிரினத்தைப் பாதுகாக்கத் தெரியாத உயிரினமாக மனித இனம் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம் மகாராஜா யானையின் மரணம்!

maharaja posterகாடுகளை குடியிருப்புகளாக மாற்றிவிட்டு அதன் சொந்தக்காரர்களை துன்புறுத்துவது எவ்வகையில் நியாயம்? விலங்குகளை விட மோசமானது மனித இனம் என்பது நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.

ஒரு விஷயம் தெரியுமா? காட்டில் உள்ள விலங்கினங்கள் எல்லாம் அழிந்துவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த மனித இனமும் அழிந்துவிடும். அதே நேரம், மனித இனம் மொத்தம் அழிந்துவிட்டால் காட்டில் உள்ள அத்தனை இனங்களும் பல்கிப் பெருகி, பசுமை தழைக்கும்.

மகாராஜா பிடிபட்ட 24 மணி நேரத்துக்குள் ரயில் பாதையைக் கடக்க முயன்ற பெண் யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது மக்கள் மத்தியிலும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் செல்லும் ரயில்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் செல்வதே இவ்விபத்துக்குக் காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஜா பிடிக்கப்பட்ட அதே வனச் சரகத்தில் மட்டத்துக்காடு வனப் பிரிவில் 6 யானைகள் ஊடுருவின. இரவு 12 மணியளவில், பொதுமக்கள் வெடிகளை வெடித்து சத்தம் எழுப்பியதால், யானைகள் கூட்டம் காட்டை நோக்கிச் சென்றது. இரவு சுமார் 1.10 மணியளவில் வனத்தை ஒட்டியுள்ள அடுத்தடுத்த 4 ரயில் பாதைகளைக் கடந்து அவை காட்டுக்குள் செல்ல முயற்சித்தன. அப்போது கடைசியாக வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது, கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (பெங்களூரு – திருவனந்தபுரம்) ரயில் வேகமாக மோதியது. நிலைகுலைந்த யானை, ரயில் பெட்டிகள் மீது விழுந்து, அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் சரிந்து உயிரிழந்தது.

பயங்கர பிளிறலுடன் யானை துடிதுடித்து இறந்ததைக் கண்ட மற்ற யானைகள் அங்கேயே முகாமிட்டன. பிளிறியபடியே இறந்த யானையின் உடலைச் சுற்றி வந்தன. பின்னர் கிரேன் மூலம் யானை யின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டது.

elephant
அவர்கள் பாதையில் ரயில் பாதையை போட்டுவிட்டு அவர்களை பலி வாங்குவது எந்தவகையில் நியாயம்?

உடனடி நடவடிக்கை தேவை 

இங்குள்ள இரு ரயில்பாதைகளிலும் சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் என நாட்டின் முக்கிய இடங்களுக்குச் செல்லும் ஏராள மான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேசமயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையாக இந்த ரயில்பாதைகள் இருப்பதால், யானைகள் கடந்து செல்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே வனவிலங்குகளின் நடமாட் டத்துக்கு ஏற்ப ரயில்கள் வேகத்தைக் குறைத்து இயக்க தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென பொதுமக்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

இதே பாதையில் இதற்கு முன்பு மூன்று முறை யானைகள் சிக்கி உயிரிழிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 4-வது சம்பவமாக பெண் யானை உயிரிழந்துள்ளது.

யானைகள் இப்படி மனிதத் தவறுகள் உயிரிழப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

இதுவே இம்மாத பொதுப் பிரார்த்தனை.

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

வாசகி சாந்தா ரோகினி அவர்களுக்கு வங்கி கடன் தொடர்பாக ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் முடிவுக்கு வந்து அவரது கடன் மற்றும் வழக்கு பிரச்சனைகள் தீரவும், அவரது மகளுக்கும் மருமகனுக்கும் நிம்மதி கிடைக்கவும் அவர்கள் இல்லத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் சௌபாக்கியமும் ஏற்படவும், கடன் பிரச்சனையில் சிக்கி, தனது மகளின் மேல்படிப்புக்காக போராடும் ஊர் பெயர் வெளியிட விரும்பாத ஆனந்தி அவர்களின் பிரச்சனைகள் தீர்ந்து அவரது மகளுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும் அவருக்கும் நல்ல வேலை ஒன்று கிடைக்கவும், BONE MARROW CANCER நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் திரு.ராமசாமி அவர்களின் மனைவி ஆனந்தி அவர்களுக்கு அந்நோய் முற்றிலும் நீங்கி அவர் பூரண குணமடையவும் அவர் தம் எஞ்சிய காலத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாக கழிக்கவும் பிரார்த்திப்போம்.

காடுகளை அழித்து அங்கு குடியிருப்புக்ள் பெருகி வருவதால் உணவும் நீரும் தேடி ஊருக்குள் வரும் யானைகள் மனிதத் தவறுகள் தொடர்ந்து பலியாகின்றன. இது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இறைவன் அதற்கு அருள்புரியவேண்டும். மனித மிருகங்களுக்கு நல்ல புத்தி ஏற்படவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சுரேஷ் பட்டர் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூன் 26, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

Our a/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more info : Click here!

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருமக்கோட்டை கோவிலை சேர்ந்த திரு.முருகேச ஓதுவார் அவர்கள்.

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற வார ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திருமக்கோட்டை திருக்கோவில் திரு.முருகேச ஓதுவார் அவர்கள் திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் சன்னதியில் தேவாரம் பாடி பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

thirumakkottai

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *