Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்!

குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்!

print
சுந்தரகாண்ட பாராயணத்தை துவக்கும் முன், இராமாயணம் முழுவதையும் ஒரே நாளில் படித்துவிட்டு பிறகு சுந்தர காண்ட பாராயணத்தை துவக்க வேண்டும் என்று நமது முந்தைய பதிவில் கூறப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரே நாளில் இராமாயணத்தை படிப்பது குறித்து மலைப்படைய வேண்டாம்.. ஒரே நாளில் படிப்பதற்குரிய எளிய வழியை கூறுவதாக தெரிவித்திருந்தோம். சுந்தரகாண்ட பாராயணத்தை உடனடியாக துவக்கிவிட்டபடியால் அதை உடனே அளிக்குமாறு வாசக அன்பர்கள் கேட்டிருந்தார்கள்.

இதோ ஒன்றல்ல மூன்று வழிகள் இராமாயணத்தை எளிய முறையில் பாராயணம் செய்வதற்கு தரப்பட்டுள்ளது. அவரவர்க்கு சௌகரியமான வழியை பின்பற்றவும்.

எங்கெல்லாம் பக்தியுடன் இராமாயண பாராயணம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அனுமன் வந்து விடுவான். எனவே பாராயணத்தை ஆரம்பிக்கும் முன், நீங்களும் சரி உங்கள் இல்லமும் சரி தூய்மையாக இருக்கவேண்டும்.

அனுமனுக்கு கோலமிட்டு தனி ஆசனம் அமைத்து பாராயணத்தை துவக்குவது கூடுதல் சிறப்பு.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம்||
(எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர்ஹனுமான்.   ‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல்-ஆஞ்சநேயர்-கண்ணீர் மல்க நின்று கேட்பார். அரக்கர்களுக்கு எமனாக விளங்கும் ஆஞ்சநேயரை வணங்குகிறேன் என இத்துதி கூறுகிறது.)

ஏகஸ்லோக இராமாயணம்

பழத்தை பிழிந்து சாற்றை அருந்துவது போல, மொத்த இராமாயணமும் ஒரே ஒரு சிறிய ஸ்லோகத்தில் இருப்பது தான்  இந்த ஏகஸ்லோக ராமாயணம்.

இதை மனம் ஒன்றி பக்தியுடன் படித்தால் முழு இராமயணத்தையும் படித்த பலன் கிட்டும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

அனைத்து விதமான காரிய சித்திகளும் பெறவும், சர்வ மங்களம் உண்டாகவும் இந்த இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.

சமஸ்கிருத உச்சரிப்பை பழகிகொள்ள கீழே இதன் YOUTUBE VIDEO தரப்பட்டுள்ளது.

=======================================================

காயத்ரி ராமாயணம்

மந்திரங்களில் முதன்மையானது காயத்ரி மந்திரம். மந்திரங்களுக்கெல்லாம் ‘தாய்’ அன்னை காயத்ரி தேவி தான்.

காயத்ரி வேதஜனனி காயத்ரி பாபநாசினி
காயத்ர்யாஸ்து பரம் நாஸ்தி திவி சேஹ ச பாவனம்

வால்மீகி ராமாயணத்தில் முதல் பாடலின், முதல் எழுத்தில் ஆரம்பித்து, ஒவ்வொரு ஆயிரம் பாடலுக்கும் ஒரு எழுத்தாய் மொத்தம், 24 ஆயிரம் பாடல்களில் இருந்து, 24 எழுத்துக்களை சேர்த்தால் கிடைப்பதே காயத்ரி ராமாயணம்.

இந்த சுலோகம் முழு ராமாயணம் அல்ல. இருப்பினும் வால்மீகியின் ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்ட 24 அக்ஷரத்துல அமைந்துள்ளது.  இதன் தாத்பரியம் என்னவெனில் வேதங்களுக்கு தாயாக இருக்கற காயத்ரி மந்திரமும், ஸ்ரீ மத் ராமாயணமும் ஒன்று தான் என்பதே.

Photograph courtesy : Anudinam.org

பஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்

ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகுநந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீபுரா

விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸ ராம் தனு: பஸ்ய இதி ராகவம்ப்ரவீத்

துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத

னவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தாரமனுகச்சந்த்யை சீதாயை ஸ்வஸுரோ ததௌ

ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம்

நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராமமாசீனம் ஜடாமண்டலதாரிணம்

தி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவகமனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ:

ரதஸ்யார்யபுத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம் மம ச ப்ரபோ
ம்ருகரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி

ச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹாபலம்
வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ:

தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே
ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவவஸகோ பவ:

ந்த்யாஸ்தே து தபஸ்ஸித்தாஸ்தாபஸா வீதகல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர்வினையான் விதை:

நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம்
விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ:

ன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய:
மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவலோசனம்

ங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே
உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்

ஹிதம் மஹார்த்தம் ம்ருதுஹேதுஸமிதம் வ்யதீதகாலாயதி ஸம்ப்ரதிக்ஷமம்ஸம்ய தத்வாக்யமுபஸ்திதஜ்வர ப்ரஸங்கவானுத்தரமேததப்ரவீத்

ர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட: ஸம்ப்ராப்தோsயம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா நயம் ப்ராப்நோத்யகண்டகம்

யோ வஜ்ரபாதாஸனிஸன்னிபாதாத் ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா
ஸ ராமபாணார்பிஹதோ ப்ருஸார்த்த: சசாலசாபம் ச முமோச வீர:

ஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:
தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம்

தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா

ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ
பத்தாஞ் ஜலிபுடா சேதமுவாசாக்.நிஸமீபத:

ல.நாத் பர்வதே.ந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம்

தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம்
ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர:

யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத்
தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம்

தம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படே.ந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே

காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்

இந்த காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் காய்த்ரி ஜபம் செய்த புண்ணியமும் இராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்

சமஸ்கிருத உச்சரிப்பை பழகிகொள்ள கீழே இதன் YOUTUBE VIDEO தரப்பட்டுள்ளது.

=======================================================

தமிழில் முழு ராமாயணத்தையும் விளக்கும் ஒரு அற்புதமான பாடல்

இதெல்லாம் எங்களுக்கு சரிப்படாது சார். தேனினும் இனிய தமிழில் ஏதாவது இருக்கிறதா என்றால்…. இதோ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த ‘லவகுசா’ திரைப்படத்தில் முழு ராமாயணத்தையும் விளக்கும் வகையில் இராம புத்திரர்களான லவ குசர்கள் பாடிய பாடல். கவிஞர் மருதகாசி இயற்றி பி.சுசீலா அவர்களும் பி.லீலா அவர்களும் பாடியிருக்கும் இந்த அற்புத பாடலை படியுங்கள். கேளுங்கள்.

பாடலை கேட்கும்போதே உடல் சிலிர்த்து காதலாகி கண்ணீர் கசிந்தோடும் என்பது உறுதி. ஊனையும் உருக்கும் ஒரு உன்னத பாடல். இந்த பாடலை YOUTUBE DOWNLOAD மூலம் டவுன்லோட் செய்து உங்கள் மொபைலிலோ அல்லது ப்ளாஷ் டிரைவிலோ வைத்திருந்து தினசரி கேட்டு வருவதை வழக்கமாக கொள்ளலாம்.

இந்த பாடல் வீட்டில் ஒலித்தாலே சர்வ மங்களம் பெருகும்!!

உங்கள் வசதிக்காக மூன்று பாடலின் வீடியோவும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து கேட்டு மகிழுங்கள்.

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

பாடல் 1

பாடல் 2

பாடல் 3

(தயாரிப்பில் உதவிய தளங்கள் : www.thamizhisai.com, saranagadi.blogspot.in, dayaardhra.wordpress.com, balhanuman.wordpress.com)

7 thoughts on “குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்!

    1. ராம ராம ஜெயா ராஜாராம் .ஜெய் ஹனுமாம் வாழ்க சுந்தர்

  1. இந்த பதிவினை அந்த ஸ்ரீ ராமன் அருளுளினால் அளித்ததாகவே நான் நினைக்கிறேன் .

    இராமாயணத்தின் சிறப்புக்களை எளிமையான விளக்கங்களுடன் அற்புதமாக வழங்கியமைக்கு

    நன்றிகள் பல ……

    “இராமாயணம் நடந்தது பூலோகதில்,இதை ரிஷிகளும்,தேவர்களும் தேவலோகத்தில் பாராயணம் செய்கிறார்கள்.”

    அப்படியெனில் இதன் மகிமையை என்னவென்று சொல்வது .

    பதிவினை படித்தது முதல் மனம் லேசாக உள்ளது .

  2. Sundar,

    I was told that we need to read a slokam before and after the paaraayanam (apart from the short version of ramyana). Is that right? If so can you provide those.

    Thanks.
    Ananth

  3. வால்மீகி ராமாயணத்தில் முதல் பாடலின், முதல் எழுத்தில் ஆரம்பித்து, ஒவ்வொரு ஆயிரம் பாடலுக்கும் ஒரு எழுத்தாய் மொத்தம், 24 ஆயிரம் பாடல்களில் இருந்து, 24 எழுத்துக்களை சேர்த்தால் கிடைப்பதே காயத்ரி ராமாயணம். என ராமாயணத்தை சுருக்கி எளிதாக அளித்தமைக்கு நன்றி…

  4. அற்புதமான பதிவு !!!

    நாம் எல்லோருமே ராமாயணம் பற்றி மேலோட்டமாக அறிந்திருந்தாலும் அதன் ஆழத்தையும் அந்த மாபெரும் காவியம் உணர்த்தும் அறிய குணங்களையும் பண்புகளையும் முற்றிலுமாக அறிந்தவர்கள் இருக்க முடியாது என்றே என்ன தோன்றுகிறது !!!

    ராமாயணத்துக்கு பல மகானுபாவர்கள் உரை எழுதி இருந்தாலும் கம்பர் எழுதிய உரை மணிமகுடத்தில் ஜொலிக்கும் மாணிக்க கல் போல் ஒளி விட்டு பிரகாசிக்கிறது !!!

    அதை அறிந்துகொள்ளும் பாகியம் பெற்ற நாம் இந்தி அப்பயணத்தை தொடர்வோம் !!!

    ராம லக்ஷ்மண பரத சத்ருக்ன சீதா தேவி சகித அந்த வீர மாருதி எல்லோருடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிட்டி வாழ்க்கையில் மன அமைதி, நல்ல ஆரோக்கியம், எல்லை இல்லா மகிழ்ச்சி இல்லம் எங்கும் பொங்கிட பிரார்த்திப்போம் !!!

    ஜெய் ஸ்ரீ ராம் !!!

  5. மிகவும் அருமையான பதிவு.

    சார், எனக்கு சுந்தர காண்ட பதிவு வேண்டும். என்னிடம் ஓல்ட் VERSION தான் உள்ளது. தூய தமிழில் உள்ளதால் படிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. முடிந்தால் வாங்கி தரவும்

    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *