Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)

நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)

print
முதலில் நமது தீபாவளி கொண்டாட்ட பதிவுகளில் இது இடம்பெறுவதாக இல்லை. இருப்பினும் பதிவில் உள்ள கருத்து அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்கிற காரணத்தினால் தளத்தில் அளிக்கிறோம். இதை பார்த்துவிட்டு ஒரு நான்கு பேராவது இதைச் செய்தால் மிக்க மகிழ்ச்சி.

* தீபாவளி பண்டிகையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கொண்டாடுகிறீர்களோ அதே போன்று உங்களை சுற்றியிருப்பவர்களும் உங்களை சார்ந்தவர்களும் கொண்டாடுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிலும் கீழே உள்ளவர்களுக்கு ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட தேவைகள் ஏதேனும் இருப்பின் தாரளமாக செய்யுங்கள்.

* உங்களுக்காக வேலை செய்பவர்கள், உங்களிடம் வேலை செய்பவர்கள், உங்களை சார்ந்திருப்பவர்கள் – இவர்களுக்கு இந்த தீபாவளியை முன்னிட்டு உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

* உங்கள் உற்றார் உறவினர், நண்பர்கள் எவரேனும் மருத்துவமனையில் இருந்தால் அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.

* உங்கள் உறவினர்களில் வாரிசற்ற முதியவர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு துணிமணிகள் வாங்கிக்கொண்டு சென்று அவர்களுக்கு அளித்து அவர்களிடம் ஆசிபெறுங்கள்.

* உங்கள் நண்பர்களில் எவரேனும் தீபாவளியை கொண்டாட முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உங்களால் இயன்றதை பொருளாதார ரீதியாக செய்யுங்கள். (கடன் அல்ல… உதவி!) அவர்கள் உங்களிடம் உதவி கேட்கவேண்டும் என்பதல்ல. குறிப்பறிந்து உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் உதவியால் ஒருவர் வீட்டில் தீபாவளி கொண்டாடப்பட்டால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.

* காலையோ மாலையோ மறக்காமல் ஏதேனும் தொன்மையான ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்யுங்கள். லோக ஷேமத்தை வேண்டுங்கள்.

மற்றபடி தீபாவளியை முன்னிட்டு நீங்கள் முன்னின்று செய்ய நினைக்கும் பல அறப்பணிகள் நம் தளம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துணை நிற்கும் அனைத்து நல்லுலங்களுக்கும் நன்றி.

மனநிறைவும் மகிழ்ச்சியுமே உண்மையான தீபாவளி. அந்த வகையில் நம் எல்லோருக்கும் இந்த தீபாவளி மிகவும் ஸ்பெஷல் தான்!

வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களின் இல்லங்களில் மகிழ்ச்சியையும் மன நிறைவையும், ஆரோக்கியத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வழங்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!

Rightmantra Deepavali Celebrations 2

உழைப்பவரே உயர்ந்தவர்!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது, தபால்காரர், குப்பை அள்ளுபவர், பால்காரர் போன்றர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவது நமது வழக்கம்.

நம் அலுவலகம் அமைந்துள்ள மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவின் போஸ்ட் மேன் திரு.சிவசங்கரன். போஸ்டல் காலனி தபால் அலுவலகத்தில் தற்போது போஸ்ட்மேனாக பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக தபால்துறையில் பணியாற்றி வருகிறார். சுறுசுறுப்பும் நேர்மையும் மிக்கவர்.

கூரியர், போஸ்ட் மேன் என்று யார் வந்தாலும் அவர்களுக்கு சேர் போட்டு ஒரு நிமிடம் அமரச் செய்து குடிக்கக் நீர் கொடுப்பது நம் வழக்கம். ஒருமுறை நமக்கு வந்த ஒரு ரெஜிஸ்டர் தபாலை கடும் வெயில் நேரத்தில் இரண்டாம் மாடியில் உள்ள நம் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். அவரை வரவேற்று அமரவைத்து குடிக்க நீர் கொடுத்தோம்.

அப்படியே அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பதை தெரிந்துகொண்டு மனதில் குறித்து வைத்துக்கொண்டேன்.

அவரது பணிகளில் உள்ள கஷ்ட நஷ்டம் பற்றி பேச்சு எழுந்தது.

“இப்போதெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் பெருகிவிட்டது. எல்லா வீடுகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு தபால் பெட்டி வைக்கிறார்கள். தபால்கள் இதனால் தொலைந்து போய் நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே அபார்ட்மெண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெட்டியோ அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான ஒரு வசதியோ வைத்தால் தபால்களை போட சௌகரியமாய் இருக்கும். வேலைச் சுமை வேறு அதிகரித்துவிட்டது. பலர் முகவரிகளை தெளிவாக எழுதுவது கிடையாது. பின்கோடை அவசியம் குறிப்பிடவேண்டும். ஒரே பகுதியில் உள்ள வெவ்வேறு தெருக்களுக்கு இரண்டு வேறு வேறு பின்கொடுகள் சில சமயம் வரும்.” என்றார்.

அடுத்து அவர் கூறியது தான் யோசிக்க வைக்கும் ஒன்று.

“எங்கள் தபால் துறை அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. தனியார் கூரியர் நிறுவனங்கள் பாக்ஸ் மற்றும் இதர பொருட்களை டெலிவரி செய்ய அவர்களுக்கு தோளில் மாட்டும் விசேஷ பேக் (BIG SHOULDER BAG) கொடுக்கிறது. எங்களுக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் அவற்றை எப்படி சைக்கிளில் வைத்து எடுத்துச் செல்வது? அவற்றை பத்திரமாக எடுத்துச் சென்று நாங்களும் பாதுகாப்பாக சைக்கிளை ஓட்டி உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிடவேண்டும். தனியார் கூரியர் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் எங்களுக்கு வேலை குறைந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல!” என்றார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. யாரோ பான் கார்டுக்கு அப்ளை செய்தவர் போல. தனக்கு கார்டு வந்து சேரவில்லை என்று கூறினார்.

“உங்கள் முகவரிக்கு கார்டு வரவில்லை. வேறு ஒரு டோர் நம்பருக்கு வந்துள்ளது. எனவே கார்டை தர முடியாது” என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்.

“ஏன் சார்… இத்தனை கடுமை ??” என்று கேட்டோம்.

“நீங்க வேற சார்… இப்போல்லாம் நிறையே பேர் பான் கார்டு சுலபமா கிடைக்குதேன்னு போலி முகவரி கொடுத்து ஐ.டி.ப்ரூஃபுக்கு அதை அப்ளை செஞ்சி வாங்கிடுறாங்க. அப்புறம் லோன் ஏதாச்சும் அதை வெச்சு வாங்கிட்டு எஸ்கேப் ஆய்டுறாங்க. அதுனால் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த டாக்குமெண்ட்டுகள் தவறான முகவரிக்கு வந்தால் நான் கொடுப்பதில்லை. ரிட்டர்ன் செய்துவிடுவேன்” என்றார்.

அடடா…. என்ன ஒரு கடமை உணர்ச்சி. ஒவ்வொரு அரசு ஊழியரும் இவரைப் போல தத்தங்கள் கடமையை சரிவரச் செய்தால் இந்த நாடு எத்தனை நான்றாக இருக்கும்! இவரை அவசியம் தீபாவளிக்கு விசேஷமாக கௌரவிக்கவேண்டும் என்று கருதி, இவருக்கு பட்டாசு, சுவீட், இவரது குழந்தைக்கு ஒரு ட்ரெஸ் செட் என நமது அலுவலகத்துக்கே வரவழைத்து கொடுத்தோம். இவருக்கு முன்னதாக சால்வை அணிவித்து கௌரவித்து, “அடுத்த தீபாவளிக்கு உங்களை ப்ரோமோஷனுடன் சந்திக்கவேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்தோம்.

சர்ப்ரைஸாக இதை செய்ததில் அவருக்கு மகிழ்ச்சி.

Rightmantra Deepavali Celebrations 3

இதை பகிர்வதற்கு காரணம் நீங்களும் இவரைப் போல உங்களுக்காக உழைக்கக்கூடிய PUBLIC SERVANTS களை பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்தம் சேவையை போற்றவேண்டும் என்பதற்காகத் தான்.

தீபாவளிக்கு இதைச் செய்ய முடியாதவர்கள் பொங்கலுக்கு செய்யலாமே..!

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்!

========================================================

தீபாவளி சிறப்பு வழிபாடு & அபிஷேகம் !

தீபாவளியன்று காலை சுமார் 9.00 மணியளவில் நம் தளம் சார்பாக சென்னை குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவில் எதிரே உள்ள “திருமுறை விநாயகர்” கோவிலில், சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டிற்கு வாசகர்கள் அவசியம் வந்திருந்து, விநாயகப் பெருமானின் அருளை பெறவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

Thirumurai Pillaiyaar
திருமுறை விநாயகர், குன்றத்தூர்

வரவிரும்பும் அன்பர்கள் அபிஷேகத்திற்குரிய பொருட்களை (தேங்காய், பூ, பழம், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, வெற்றிலை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே வாங்கி வரலாம்.

சிறப்பு வழிபாடு நாள் மற்றும் நேரம் : தீபாவளி (செவ்வாய்) 10.11.2015 | நேரம் :  காலை 9.00 am – 11.00 am | இடம் : திருமுறை விநாயகர், குன்றத்தூர் அடிவாரம் (கந்தழீஸ்வரர் கோவில் எதிரே).

    • இந்த திருமுறை விநாயகர் மிகவும் விசேஷமானவர். அச்சில் ஏறிய முதல் திருமுறை இந்த பிள்ளையாரிடம்தான் உள்ளது!
    • இது போன்ற விநாயகர் வழிபாடு + அபிஷேகம் இனி நம் தளம் சார்பாக அடிக்கடி நடைபெறும். உங்கள் பகுதியில் பூஜை காணாத, சரிவர பராமரிக்கப்படாத பிள்ளையார் கோவில்கள் இருப்பின் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நமது உழவாரப்பணி குழு நண்பர்களுடன் வந்து அபிஷேக, ஆராதனை செய்வித்து, நிவேதனம் செய்து விளக்கேற்றி வைப்போம். இது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய ஒன்று. (பூஜை செய்ய அர்ச்சகர் இல்லாத கோவில் என்றால் நாமே குருக்களை ஏற்பாடு செய்து அழைத்து வருவோம்!)

அனைவரும் வருக! ஆனைமுகனின் அருளைப் பெறுக!

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

Also check…

அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

Our 2015 Deepavali Celebrations

திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

Our 2014 Deepavali Celebrations

பாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் !

இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

Our 2013 Deepavali Celebrations

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

வண்ணத்து பூச்சிகளுக்கு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

=========================================================

[END]

 

4 thoughts on “நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)

  1. நன்றி. சார்,

    நான் இதுவரை கிட்டத்தட்ட 26 வருடங்களா என்னுடன் எங்கள் வீட்டில் பால், தபால் , கொரிஎர், குப்பை எடுபவர்கள், எனது ஆபீசில் வேலை பார்க்கும் டீ கொடுக்கும் நண்பர்கள் பேர், சலவை செய்து தரும் நண்பர், மற்றும் வீட்டில் வேலை பார்க்கும் நபர் என்று எல்லோருக்கும் தவறாமல் தீபாவளி, மற்றும் பொங்கல் நாள்களில் பணம் மற்றும் ச்வீட் உடன் அவர்களை மரியாதையுடன் நடத்துவது என் வழக்கம் . இதை என்னும் தொடர்ந்து செய்துவருகிறேன்
    அன்றைய தினம் பார்க்கும் பசுக்களுக்கும் பழங்கள் கொடுப்பது வழக்கம்.

    உங்கள் செயல் எனக்கு இன்னும் சந்தோசமாக இருக்குது சார்.

    மிக்க நன்றி
    தங்களின்

    சோ. ரவிச்சந்திரன்

    1. மிக்க மகிழ்ச்சி சார். ஒவ்வொரு வாசகரிடமும் இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.
      உங்கள் உதவும் எண்ணத்துக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் மனைவிக்கும் எனது நன்றி + வாழ்த்துக்கள்.

      1. மேலும் மேலும் ஊக்கிவிப்பதனால் இந்த காரியங்களுடன் இன்னும் சில நல்ல காரியங்களை செய்யுங்கள் என்று என் மனைவியும் ஊக்கம் கொடுக்கிறர்கள்.

        மிக்க மிக்க நன்றி சார்.

        தங்களின்
        RAVICHANDRAN

  2. தீபாவளி என்றால் எப்படி கொண்டாடவேண்டும் என்கிற எண்ணத்தையே மாற்றிவிட்டது உங்கள பதிவுகள். இப்படி கொண்டாடுவது தான் உண்மையில் தீபாவளி. \

    தபால்காரர்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் முற்றலும் உண்மை. அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படவேண்டும்.

    எங்கள் பகுதியில் உள்ள போஸ்ட்மேனுக்கு பொங்கலுக்கு நிச்சயம் ஏதாவது செய்கிறோம். என் கணவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்.

    ரைட்மந்த்ரா அலுவலகத்தின் புகைப்படங்களை பார்க்கும்போது, தவறவிடக்கூடாத இடங்களுள் நம் அலுவலகமும் ஒன்று என்று தோன்றுகிறது. சென்னை வரும்போது நிச்சயம் அலுவலகம் வருவேன்.

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *