Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > வாயில்லா ஜீவன்கள் வாழ்க்கையுடன் விளையாடலாமா?

வாயில்லா ஜீவன்கள் வாழ்க்கையுடன் விளையாடலாமா?

print
க்கத்து வீட்டுக்காரர்கள் வளர்க்கிறார்கள், எதிர் வீட்டுக்கார்கள் வளர்க்கிறார்கள், நம்ம குழந்தை ஆசைப்படுகிறது என்றெல்லாம் சிலர் ஆசை ஆசையாய் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வாங்கி வளர்க்கிறார்கள். இந்த அவசர யுகத்தில் மனிதர்களை கவனிக்கவே  யாருக்கும் நேரமிருப்பதில்லை. விலங்குகளுக்கு? வாழ்க்கையின் ஓட்டத்தில் ஈடுகொடுக்கவே சிரமப்படுபவர்கள் அவற்றை வளர்க்க முடியாமல் திடீரென அனாதையாக விட்டுவிடுகிறார்கள். பிராணிகளை வளர்ப்பதோ வளர்க்காமல் இருப்பதோ அவரவர் விருப்பம். ஆனால் அவற்றை அலைகழிப்பது? எது எத்தனை பெரிய பாவம்? வாயில்லா ஜீவன்களுடன் விளையாடலாமா?

Cant speakபிராணிகளை வளர்க்க இயலாதபோது முறைப்படி அதை பாதுகாப்பாக விட்டுவிடவோ அல்லது வளர்க்கவேண்டும் என்றால் தத்தெடுக்கவோ BLUE CROSS OF INDIA என்கிற அமைப்பு இருக்கிறது. உங்கள் ஐ.டி. மற்றும் அட்ரெஸ் ப்ரூப் எடுத்து சென்றால், நீங்கள் உங்கள் செல்லப் பிராணியை வளர்க்க இயலாதபோது இங்கே விட்டுவிடலாம் அல்லது விரும்பினால் தத்தெடுக்கலாம். இதன் முகவரி : BLUE CROSS OF INDIA, 72, VELACHERY MAIN ROAD, GUINDY, CHENNAI – 600032. Ph : 9840297942, 9840253484.

இவர்களின் பணி சாதாரணமானது அல்ல. பிரசவிக்க முடியாமல் அவஸ்தை பட்ட பசுவுக்கு பிரசவம் பார்த்தது, குறைபாட்டுடன் பிறந்த கன்றுக்குட்டியை ‘இறைவனின் அதிசயம்’ என்று கூறி ஊர் ஊராக காட்டி பிச்சையெடுக்க முற்பட்ட கும்பலிடமிருந்து அந்த கன்று குட்டியை மீட்டது, கால்கள் உடைந்து அல்லது பாதிப்படைந்து நடக்க முடியாமல் சிரமப்படும் கால்நடைகளை பிராணிகள் ஆம்புலன்ஸில் மீட்டு கொண்டு வந்து உரிய சிகிச்சை அளிப்பது என எத்தனையோ நல்ல விஷயங்களை செய்து வருகிறது.

பசுவுக்கு பிரசவம் பார்த்தது!
பசுவுக்கு பிரசவம் பார்த்தது! இதைவிட ஒரு பெரிய புண்ணிய காரியம் இருக்க முடியுமா?

சமீபத்தில் தினத்தந்தி நாளிதழில் படித்த செய்தி இது. நெஞ்சை உருக்கியதால் இங்கே பகிர்ந்திருக்கிறோம். வாசகர்கள் அனைவரும் முழுமையாக படித்து உங்கள் நட்பு வட்டத்திடம் பகிரவும்.

=================================================================

வாயில்லா ஜீவன்கள் வாழ்க்கையுடன் விளையாடலாமா?

டந்த 2 மாதங்களில் பொதுமக்களால் செல்லமாக வளர்க்கப்பட்ட 124 பிராணிகள் அனாதையாக விடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் செல்ல பிராணிகளை பாசத்துக்காக வளர்க்கிறார்களா? அல்லது கவுரவத்திற்காக வளர்க்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

FE_1703_MN_13_Cni8023பிற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் விதமாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை குடும்பத்தில் ஒருவரை போல மக்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர். ஆனால் பாசமாக வளர்த்து வரும் பிராணிகள் பிடிக்காமல் போனாலோ, அதன் தோற்றத்தில் குறைபாடு ஏற்பட்டாலோ, நோய் தாக்குதலுக்கு ஆளாகும்போதோ அந்த பிராணிகள் மீது வெறுப்பு அடைந்துவிடுகிறார்கள்.

FE_1703_MN_13_Cni7953இதனால் அதுபோன்ற செல்லப்பிராணிகளை பெரும்பாலானோர் தெருக்களிலோ, குப்பை மேடுகளிலோ போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். கடந்த 2லு மாதங்களில் செல்லமாக வளர்த்த 124 பிராணிகள் பொதுமக்களால் இவ்வாறு அனாதையாக விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து புளூகிராஸ் சொசைட்டி அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

பிராணிகளும் நம்மைப் போல உயிரினம் தான். நமக்கு இருப்பது போன்றே அன்பு, பாசம், விசுவாசம், நன்றி உள்ளிட்ட எல்லா குணநலன்களும் பிராணிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக மக்களிடத்தில் இருந்துவந்த விலங்குகளின் மீதான பாசம் குறைந்து வருகிறது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

Cat feeding

முன்பு விலங்குகளின் மீதான பாசத்தில் நாய், பூனை போன்ற பிராணிகளை வீட்டில் வளர்த்தார்கள். ஆனால் தற்போது பகட்டு கவுரவத்திற்காக பிராணிகளை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். பிறரை பார்த்தோ அல்லது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ வெளிநாட்டு நாய்கள் மற்றும் உயர்ரக நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள்.

ஆனால் இந்த வகை நாய்கள் சில நேரங்களில் எஜமானர்களின் ஆணைகளுக்கு கீழ்படியாதபோது அவைகளின் மீது வெறுப்பு அடைகிறார்கள். சென்னை போன்ற நகரங்களின் சீதோஷ்ணநிலை வெளிநாட்டு நாய்களை பாதிக்கும். இதனால் முடி உதிர்வு, தோல் நோய் போன்ற சில பாதிப்புகளால் நாய் அவலட்சணமாக மாறிவிடும். ஒரு சிலர் தான் அந்த நிலையிலும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலானோர் இதுபோன்று பாதிக்கப்பட்ட நாய்களை வெறுத்து தெருவில் அனாதையாக விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் நாய்களை இரவிலோ அல்லது அதிகாலையிலோ எங்கள் நிறுவன வாயிற்கதவில் கட்டிப்போட்டு சென்று விடுகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் பொதுமக்களால் அனாதையாக விடப்பட்ட 124 செல்லப் பிராணிகளை மீட்டு உள்ளோம். அவற்றுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகிறோம்.

இந்த நாய்களை மீட்டு சிகிச்சை அளிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பலருக்கும் தெரிவதில்லை? நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் எப்போதுமே பாசத்துக்காக ஏங்குபவை. தனது எஜமானரை பார்க்க வேண்டும், பழைய பாசத்தை மீண்டும் பெறவேண்டும், பழைய இடத்துக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற மனஉளைச்சல் அவைகளுக்கும் ஏற்படும்.

அந்த ஏக்கத்தில் நாய்களும் தங்கள் வாழ்க்கையை வெறுத்துவிடும். எந்த சிகிச்சை அளித்தாலும், இதுபோன்ற எண்ணத்தில் உள்ள நாய்களின் மனநிலையை மாற்றுவது மிக கடினம். சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, சுவரில் மோதிக்கொள்வது, இடைவிடாமல் குரைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு சில நாட்களில் இறந்துவிடும்.

Compassion

இந்த வருட தொடக்கத்தில் இருந்து சாலை விபத்து மற்றும் நோய் தாக்குதலுக்கு ஆளான நாய், பூனை, கன்றுக்குட்டி, மாடு உள்ளிட்ட 1,259 பிராணிகளை நாங்கள் மீட்டுள்ளோம். இதில் குதிரை, ஆந்தை, கிளி, பாம்பு, குரங்கு, நீர்ப்பறவைகள் போன்ற உயிரினங்களும் அடங்கும். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 893 நாய்கள் 2லு மாதங்களில் மீட்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த வருடத்தில் 1,956 நாய்கள் மற்றும் 52 பூனைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து உள்ளோம். ஆக இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 1,259 பிராணிகளை மீட்டு சிகிச்சை அளித்துள்ளோம். இந்த பிராணிகள் உரிய பராமரிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

11025769_10153110353462170_628815536044075564_n

மாதம் ஒருமுறை பிராணிகள் தத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில் பிராணிகளின் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு பிடித்தமான பிராணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இந்த பிராணிகளை உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் வளர்க்கிறார்களா? என்று எங்கள் உறுப்பினர்கள் மூலம் கண்காணிப்போம். தத்தெடுப்பு நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்ற விவரத்தை ‘ஆன்-லைன்’ அல்லது ‘பேஸ்-புக்’ மூலமாக வெளிப்படுத்துவோம்.

Blue Cross of India

தினமும் எங்களுக்கு பொதுமக்களிடமிருந்து சராசரியாக 150 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனால் எங்களது சேவைகளில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் கூறுவதையும் நாங்கள் உணர்கிறோம். எங்களிடம் உள்ள வாகன வசதிகளும், ஆட்களின் எண்ணிக்கையும் குறைவு. எங்கள் அமைப்புக்கு அரசின் உதவி கிடையாது.

ஒருவேளை உதவிகள் கிடைத்தால் இன்னும் சிறப்பாக பணிபுரிய முடியும், இன்னும் அதிகமான பிராணிகளை காப்பாற்ற முடியும். எங்களுக்கு வரும் அழைப்புகளில் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுபவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

=================================================================

இந்த அமைப்புக்கு நிதி உதவி அளித்திட :
http://bluecrossofindia.org/?page_id=2034

இவர்கள் முகநூல் பக்கத்திற்கு :
https://www.facebook.com/bluecrossofindia?fref=ts

மேற்படி பக்கத்தை லைக் செய்து, பிராணிகள் நலனை காப்போம். இது போன்ற செய்திகளை பகிர்ந்து பிராணிகள் வதைக்கெதிரான விழிப்புணர்வு பரவ முயற்சி செய்வோம்.

முகநூலில் பயனற்றவைகளை பேசிக்கொண்டும் ஷேர் செய்துகொண்டும் நேரத்தை வீணடித்து வருபவர்கள், குறைந்தபட்சம் இந்த பக்கத்தை ‘லைக்’ செய்து பிராணிகள் வதைக்கெதிரான செய்திகளை பகிர்ந்துவந்தால், போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

நன்றி!

=================================================================

Also check :

DSCN0663

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)

நாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே?

தாயை இழந்து தவிக்கும் குரங்குக் குட்டி மீது சிறுத்தை காட்டும் பாசம்! MUST WATCH VIDEO!!

நான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

புண்ணியம் நல்கும் ஜடாயு மோட்சம் உணர்த்தும் நீதி! – Rightmantra Prayer Club

விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

=================================================================

[END]

8 thoughts on “வாயில்லா ஜீவன்கள் வாழ்க்கையுடன் விளையாடலாமா?

  1. An excellent and timely article in our site supporting the cause of helpless/abandoned pets and animals. Now only I feel that our site is complete in its contents by highlighting the sufferings of animals also. May be in our next prayer we should pray for these animals and also for those who help them as an individual and Blue Cross of India.

    He who is cruel to animals cannot be a good man – Golden words of Schopenhauer.

    The sweet face of the small puppy fellow holding the placard is really heart breaking. He straightaway touches our hearts even without the placard through his eyes. As human beings we are in a much better position to help all living beings including plants. Being the crown of God’s creation, It is our foremost duty to speak for the voiceless and help them in need.

    Thank you very much Sundar for this article!

  2. ப்ளூ கிராஸ் செய்யும் சேவை மிகவும் மகத்தானது. நாம் நன்றாக விலங்கினங்களை வளர்க்க முடிந்தால் கண்டிப்பாக தத்து எடுத்து வளர்க்கலாம். நானும் எங்கள் வீட்டில் நான்கு வருடங்களுக்கு முன் நாயை வளர்த்தேன். மிகவும் பாசத்துடன் வளர்த்த அந்த நாயை என்னால் பார்த்துக் கொள்ள முடியாமல் தெரிந்தவர்களுக்கு கொடுத்து விட்டேன். அந்த நாய் என்னிடம் காட்டிய பாசத்தை மறக்க முடியாது. அதை பிரிந்து ஒரு மாதம் அதன் நினைவுடன் இருந்தேன். நாயும் , பூனையும் உற்ற நண்பன்.

    நாமும் ப்ளூ கிராஸ் நிறுவனத்திற்கு நம்மால் முடிந்த உதவி செய்து விலங்குகளுக்கு நம்மால் முடிந்த உதவி செய்வோம்.

    நன்றி
    உமா வெங்கட்

  3. வாயில்லா ஜீவன்களின் வலிகளை உணர்த்தும் பதிவு……… எங்களால் முடிந்த வரை அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்………..

  4. வாழ்க வளமுடன்

    ஐந்த்தறிவுக்காவது ப்ளு கிராஸ் என்ற அமைப்பு உள்ளது, மனிதர்களுக்கு அது கூட இல்லையே. காசு, பணம், துட்டு, மணி, மணி என்று வந்த பிறகு மனிதனாவது, மிருகமாவது. மனிதனை, மனிதன் அடித்து தின்னும் காலம் வெகு விரைவில் வரும்.

    நன்றி

    1. ஏன் இப்படி ஒரு பின்னூட்டம்? மனிதர்களுக்கு தான் ‘ரெட் கிராஸ்’, 108, 1066 போன்ற பல உள்ளதே.

      தங்களின் குறைகளை வாய் விட்டு சொல்ல இயலாத விலங்குகளையும் கொஞ்சம் பார்ப்போம். மேலும் எந்த விலங்கும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்யும் ஒரே விலங்கு மனிதன் தான்.

      மேலும் மனிதனை மனிதன் அடித்து தின்னும் காலமெல்லாம் 60 வருடத்துக்கு முன்பே வந்துவிட்டது.

      மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
      மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை.

      1956 ஆம் ஆண்டு ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தில் மருதகாசி எழுதிய பாடல் இது.

  5. எதற்எதற்கோ, வரைமுறை இல்லாமல் இலவசங்களை வாரி வழங்கும் அரசு, அரசாங்கத்தின் வேலையை செய்யும் blue cross போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அரசு உதவி இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம்.

    இதற்காலம் விடிவே இல்லையா

    1. சூப்பர் கமெண்ட் சார். உண்மை தான். எது எதற்கோ வாரி (?) வழங்கும் நம் அரசாங்கம், அவர்கள் வேலையை செய்து வரும் ப்ளூ கிராஸ் அமைப்புக்கு நிச்சயம் உதவவேண்டும். பட்ஜெட்டில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட 15 கோடிகள் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். என்ன செய்வது…

  6. சூப்பர் சுந்தர் அருமயான தகவல் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *