Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, June 14, 2024
Please specify the group
Home > Featured > தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

print
த்தனையோ பறவைகள் இருக்க அன்னை மீனாக்ஷி, காமாக்ஷி மற்றும் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் ஆகியோரின் திருக்கரங்களில் அமரும் பாக்கியத்தை கிளிகள் ஏன் பெற்றன தெரியுமா? கிளிகள் தெய்வாம்சம் மிக்கவை. அதுமட்டுமல்ல கிளிகளும் குழந்தைகளும் ஒன்று. எனவே தான் அவற்றை கிளிப்பிள்ளை என்று சொல்கிறார்கள்.

Kamakshi Ammanசமீபத்தில் நீங்கள் கிளிகளை பார்த்தது எப்போது ? அநேகமாக ஏதாவது மிருகக் காட்சி சாலையில் வலைக்குள்ளோ அல்லது கூண்டுக்குள்ளோ அடைக்கப்பட்டு, அவற்றின் சுதந்திரத்தை பலிகொடுத்து, நமக்கு காட்சிப் பொருளாக அவை வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். (எதிர்கால சந்ததியினர் கிளிகளை மிருகக் காட்சி சாலையில் கூட பார்க்கமுடியுமா என்பதே சந்தேகமே.) மற்றபடி கிளிகளை பார்ப்பது மிகவும் அபூர்வம். கிராமப்புறங்களிலே கூட அவற்றை பார்ப்பது அபூர்வமாகிவிட்டது.

ஆனால் AIR POLLUTION & NOISE POLLUTION அதிகம் உள்ள சென்னை நகரில் அதுவும் போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு இடத்தில் சொல்லிவைத்தார்ப் போல நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் ஏன் கிளிகள் (ஆம்… கிளிகள் தான்!) ஒரு வீட்டிற்கு பேட்ச் பேட்ச்சாக வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்கின்றன என்றால் ஆச்சரியமாக  இருக்கிறதல்லவா? அழிந்து வரும் இனங்களில் கிளியும் ஒன்று என்பது இங்கே நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

[*இந்த பதிவை பார்த்து, ரசித்து, அனுபவித்து படிக்க (எம் எழுத்துக்களை அல்ல. கிளிகளின் அழகை!) அவகாசம் தேவை என்பதால் இப்பொழுதே அளிக்கிறோம்.]

IMG_0740

எங்கே.. எப்படி… யாரால் இந்த அற்புதம் நடக்கிறது ?

தெரிந்துகொள்வதற்கு முன்னர் இது பற்றிய தகவல் நமக்கு எப்படி கிடைத்தது என்று பார்ப்போம்.

நாம தளத்தின் வாசகி வள்ளியம்மை என்பவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நமக்கு ஒரு மின்னஞ்சல்  மூலம் ஒரு காணொளி லிங்க்கை அனுப்பியிருந்தார். அதில், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மார்கழி வைபவம் நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு மார்கழி வைபவத்தை முன்னிட்டு தயாரிக்கப்படும் ஆண்டாள் கிளி பொம்மை பற்றிய ஒரு காணொளி ஒளிபரப்பானது. அந்த எபிஸோடில் சென்னையில் உள்ள ஒரு வீட்டுக்கு தினமும் இருவேளையும் ஆயிரக்கணக்கில் கிளிகள் வந்து உணவருந்திவிட்டு செல்லும் அற்புத காட்சியை விஜய் டி.வி.யினர் இணைத்திருந்தார்கள். கிளிகளுக்கு உணவு வைக்கும் அந்த வீட்டின் உரிமையாளரை நம் தளத்துக்காக பேட்டி எடுக்கவேண்டும் என்றும் வள்ளி நம்மிடம் கேட்டுக்கொண்டார்.

IMG_4228

வீடியோவை பார்த்தபோது நமக்கு ஏற்பட்ட பரவசத்துக்கு அளவேயில்லை.
அந்த ஒரு வீடியோவை பாருங்கள். மற்ற அனைத்து எபிசோடுகளையும் தானாகவே பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். அத்தனை அற்புதம் மார்கழ வைபவம் நிகழ்ச்சியின் காணொளிகள். (அந்த வீடியோ பதிவின் இறுதியில் இணைக்கபட்டுள்ளது). உடனே எப்படியோ முயற்சித்து ஊடகத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் திரு.சேகர் அவர்களின் நம்பரை பெற்றுவிட்டோம். நாம் தொடர்பு கொண்டு சந்திப்புக்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டபோது சற்று தயங்கினார். ஏனெனில் ஊடகத்தில் (ஓரிருவர் தவிர) அந்தளவு அவரிடம் நல்ல பெயர்(!) சம்பாதித்து வைத்திருந்தனர்.

DSCN0245

“ஸார்… நாம் வருவது உங்கள் பேட்டிக்காகவும் கிளிகளை புகைப்படம் எடுக்கவும் மட்டும் அல்ல. உங்கள் தேவைகளை பற்றி அறிந்து உங்களுக்கு உதவி செய்வதற்கு தான். இந்த உலகமே சுயநலத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்ற வேளையிலே, நீங்கள் செய்து வருவது அருந்தொண்டு. உங்கள் தொண்டை வெளியுலகிற்கு தெரியவைப்பது மட்டுமல்ல… உங்கள் தொண்டு சிறக்கவும், உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கே நாம் வர விரும்புகிறோம்!” என்றோம்.

“சரி… வாங்க சார்!” என்று கூறி அப்பாயிண்ட்மெண்ட் தந்தார்.

DSCN0604

சென்னை ராயபேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் உள்ள பாரதி சாலையிலிருக்கும் ஒரு வீட்டின் மாடி தான் இந்த கிளிகளுக்கு சரணாலயம். அந்த வழியே நடந்து போகின்றவர்களின் கண்களும் வாகனங்களில் பறப்பவர்களின் கண்களும் ஒரு விநாடி அந்த வீட்டின் மொட்டை மாடியை ஆச்சரியத்துடன் பார்த்துப் பரவசமாகின்றன. பின்னே கூட்டம் கூட்டமாக பச்சைக் கிளிகளின் கும்மாளத்தை பார்த்தால் யாருக்கு தான் நின்று ரசிக்க ஆசை இருக்காது?

DSCN0281
இது டாப் ஆங்கிள் ஷாட் !

அந்த அற்புத காட்சியின் திகைப்பு நமக்குள் அடங்குவதற்கு முன்னதாகவே, அருகிலிருக்கும் அரச மரத்துக்கு கூட்டமாகப் பறப்பதும், மீண்டும் மாடிக்கு திரும்புவதுமாய் இருக்கின்றன. கட்டிடங்களுக்கிடையே தொங்கிக்கொண்டிருக்கும் கேபிளில் அவை அமர்ந்திருக்கும் அழகே தனி தான். பரபரப்பான அந்தச் சாலையில் விரையும் வாகனங்களையோ, மக்களையோ அந்தக் கிளிகள் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. யாராவது பலத்த ஹார்ன் எழுப்பினால் மட்டுமே அவை நாலாபுறமும் சிதறிப் பறக்கின்றன. அது கூட பார்க்க அழகு தான்.

DSCN0306

மனிதனின் வாடை தெரிந்தாலே பறந்தோடிவிடும் கிளிகள் இத்தனை பரபரப்பான ஒரு இடத்தில் நூற்றுகணக்கில் ஏன் ஆயிரக்கணக்கில் வந்து அமைதியாக சுதந்திரமாக உணவருந்திவிட்டு செல்கின்றன என்றால் அதற்கு காரணம் சேகர் என்கிற ஒருவர் நமக்காக இருக்கிறாரே என்கிற நம்பிக்கை தான்.

DSCN0632
பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கேமிராவை நன்கு ZOOM செய்து எடுக்கப்பட்டது இந்த படம்.

சேகர், கிளிகள் வந்து அமரும் அந்த வீட்டில் வசிப்பவர். இவர் அடிப்படையில் ஒரு கேமிரா மெக்கானிக். கடந்த 36 ஆண்டுகளாக கைவிடப்பட்ட கேமராக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த மெக்கானிக். புகைப்படத் துறையில் இவரைத் தெரியாதவர்களே கிடையாது.

DSCN0311

நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே வாகனங்கள் எழுப்பும் “ஹாரன்’ ஒலிகளால் பயந்துபோய் பறப்பதும் மீண்டும் அங்கே அமர்வதுமாய் இருக்கின்றன கிளிகள். அந்தப் பகுதியில் நடப்பவர்களில் பலர் தங்களின் செல்போனின் மூலம் படம் பிடிக்கின்றனர்.

அருகே சென்றாலே பறந்துவிடும் என்பதால் யாரும் கிளிகளை அருகே சென்று படம் பிடிக்கமுடியாது. சேகர் அவர்கள் அதற்கு அனுமதிப்பதுமில்லை. ஒருமுறை அவை பறந்து சென்றால், மீண்டும் வந்து அமர்வதற்க்கு 10-15 நிமிடங்களாவது ஆகும். தேவைப்பட்டால் எதிரே உள்ள கட்டிடத்துக்கு சென்று அங்கிருந்து தான் ரசிக்க முடியும்.

நாம் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அக்கம்பக்கத்‌தில் உள்ள கட்டிடங்களுக்கு சென்று அங்கிருந்து எடுக்கப்பட்டவை தான்.

கிளிகள் வரும் நேரம் இவர் மேலே செல்வதில்லை. எனவே நாங்கள் கீழே நின்று தான் பேசிக்கொண்டிருந்தோம்.

DSC06749

“தினசரி மாலை 4-6.30 வரை இதுகளை பார்த்துக்கிறது தான் என் வேலையே. பல கி.மீ. தூரங்களில் இருந்து பசியாற வரும் இந்தக் கிளிகளை சிலர் கல்லால் அடிக்க முயற்சிப்பார்கள். அவர்களிடமிருந்து இவற்றை பாதுகாக்கவேண்டும். கிளியை பிடித்துப் போய் விற்பதற்குக் கூட சிலர் வந்திருக்கிறார்கள். ஒரு முறை ஒரு பெண், “கிளி வளர்க்க ஆசையாக இருக்கிறது, ஒன்றை பிடித்துப் போகட்டுமா?” என்று கேட்டார். இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கிளிகளைப் பாதுகாக்கத்தான் காவல் நிக்கிறேன். காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் வேற எந்த வேலையையும் நான் பார்ப்பதில்லை. நான் இருப்பது வாடகை வீடுதான். 20 வருஷமா இந்த வீட்ல தான் இருக்கேன்!” என்கிறார் சேகர்.

சாலையில் வண்டியில் போகும் பெற்றோர்களுடன் போகும் சின்னக் குழந்தைகள் பச்சைக்கிளி கூட்டத்தை வாய்பிளந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். சிலர் தங்கள் செல்போன்களால் பச்சைக்கிளிகள் கூட்டத்தை பரவசமாக படமெடுத்து செல்கிறார்கள். சென்னையின் பரபரப்பான ஒரு பகுதியில், இவ்வளவு பச்சைக்கிளிகள் இயல்பாகக் கூடுவது நிச்சயம் சாதாரண விஷயமில்லை. காரணம் சென்னையில் மரங்கள் குறைந்து, கட்டடங்கள் பெருகி விட்டதுதான்.

DSC06761

“30 வருஷத்துக்கு முன்னாடி தர்மபுரியில் இருந்து அப்பாக்கிட்ட கோபப்பட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ஒரு நல்ல கேமரா மெக்கானிக்கா ஆகணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இன்னைக்கு சென்னையில் பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு கேமரா மெக்கானிக்கா இருக்கேன். பல அரிய வகை காமிராக்கள் என்கிட்டே இருக்கு. சில வருஷங்களுக்கு முன்னாலதான் இந்த ராயப்பேட்டை வீட்டுக்குக் குடிவந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு கிளிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. எப்போ இருந்து இந்தக் கிளிகள் எல்லாம் என்னைத் தேடி இங்கே வர ஆரம்பிச்சுதுன்னும் ஞாபகம் இல்லை!”

DSC06755

“எப்படி இந்த கிளிகளுக்கு உணவு கொடுக்குற விஷயம் ஆரம்பமாச்சு?”

“என்னோட மனைவி மாடியில காக்காவுக்கு சோறு, அரிசி, கோதுமை வைப்பாங்க. அந்தப் பழக்கம் எனக்கும் வந்தது. முதலில் காக்காவோட சேர்ந்து சில தடவை புறாக்களும் வந்துச்சு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருநாள், 10 – 15 காக்காக்களுக்கு நடுவுல ஒரு கிளி சாப்பிட வந்துச்சு. எல்லாக் காக்காவும் சேர்ந்து அந்தக் கிளியைக் கொத்தி விரட்டிவிட்ருச்சு.

DSCN0572

கொஞ்ச நாள் கழிச்சு, 10 கிளிகள் சேர்ந்து கோஷ்டியா வந்து சாப்பிட ஆரம்பிச்சது. இப்போ காக்காக்களுக்கு அமைதியா வேடிக்கை பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லை. மொட்டை மாடியில் ஒரு பக்கம் கிளிகளும், இன்னொரு பக்கம் காக்காக்களும் சாப்பிட ஆரம்பிச்சது. ஒரு வாரம்தான். பத்து இருபதாகி, இருபது நாப்பதாகி இப்போ தினமும் 1000 கிளிகள் வந்து சாப்பிட்டுட்டுப் போகுதுங்க. கிளிகளுக்கு வழிவிட்டு காக்காக்கள் வர்றதை நிறுத்திச்சிருச்சு. எப்போவாச்சும் ஒண்ணு ரெண்டு காக்கா மட்டும் வரும்.”

DSCN0589

“சார்… கிளிகளுக்கு வழிவிடும்படி காக்கைகளுக்கு அன்னை மீனாக்ஷி கட்டளையிட்டிருப்பாள்…”

நமது பதிலை கேட்டு சற்று அதிசயமாக பார்த்தார்.

DSCN0577

“கிளிகளுக்கு உணவளிக்க வேண்டும்… அதுவும் தொடர்ந்து உணவளிக்க வேண்டும் என்று  தோன்றியது எப்படி?”

“வெயில் காலத்தில் மனிதர்களுக்கு நாவறண்டு போவதைப் போல பறவைகளுக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும். அவை யாரிடம் போய் தண்ணீர் கேட்கும்? இந்த யோசனை எனக்கு இருந்ததால், வாளியில் தண்ணீர் கொண்டுவைப்பதை நான் பல ஆண்டுகளாகச் செய்துவந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், வீட்டிற்குள் கேமரா சர்வீஸ் செய்துகொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் மதில் சுவரின் மேல் பார்த்தபோது, அமர்ந்திருந்த சில கிளிகள் உணவுக்கு ஏங்குவதை அறிய முடிந்தது. அன்றிலிருந்து கிளிகளுக்கு ஏற்ற தானியங்களைப் கொடுப்பதென்று முடிவுசெய்தேன்”

“இந்த இடத்தை மட்டுமே நாடி அதுவும் தங்கள் இனத்தையே அழைத்துக்கொண்டு எப்படி அவை வருகின்றன? இது ஒரு அதிசயமாச்சே…?”

“எனக்கே கூட இது புரியவில்லை. எல்லாம் இறைவன் நிகழ்த்தும் அதிசயம் தான். இயற்கையாக வாழும் இந்தப் பச்சைக்கிளிகள், எந்தத் தொந்தரவும் இல்லாததாக உணர்வதால்தான் இங்கே வருகின்றன. சமீபத்தில் இதை பார்க்க வந்த சில வெளிநாட்டுக்காரர்கள், “இது ஒரு மிகப் பெரிய அதிசயம். ஏனெனில் இது கிராமப்புறமோ காடோ அல்ல. பசுமையான  சோலையும் அல்ல. POLLUTION அதிகம் உள்ள ஒரு நகரம். இங்கு, இது போல ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சுமார் 1000 கிளிகள் வருகின்றன என்றால் இது ஒரு பேரதிசயம்… அற்புதம்” என்றார்கள்.

DSCN0636

“கிளிகளுக்கு சாப்பிட என்ன வைக்கிறீர்கள்?”

“ஆரம்பத்தில் மாடி கட்டைச் சுவரில் அரிசி, பொட்டுக்கடலை, உப்புக்கடலை போன்றவற்றை வைத்து வந்தேன். கிளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்ததால், மாடி கட்டைச்சுவர்களுக்கு இடையே மரக்கட்டைகளை வைத்து இரை வைத்து வருகிறேன்.

இதற்கென்றே பாரிமுனை, கோழிமார்க்கெட் பகுதிக்குச் சென்று தினை, நவதானியங்கள், பொட்டுகடலை, அரிசி போன்றவற்றை வாங்கி வந்து நாளுக்கு ஒன்றாக ஊறவைத்துப் போடுவேன். நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோ முதல் எட்டு கிலோ வரை தானியங்கள் செலவாகும். ஒரே தானியத்தை தினமும் போடுவதை விட நாளுக்கு ஒரு தானியம் போடுவதை வழக்கமாகக் கொண்டேன். ஆனால் இப்போது பதப்படுத்திய அரிசியையே வைக்கிறேன். காரணம், கிளிகள் மிகவும் சென்ஸிடிவ். காடுகளை போலவோ, கிராமப்புறங்களை போலவே ஆற அமர அவைகளால் இங்கே சாப்பிட முடியாது. பதப்படுத்திய அரிசி என்றால் சாப்பிட மிகவும் சுலபம்.

DSCN0661
(இந்த கிளி ஏன் இப்படி இருக்கிறது தெரியுமா? விபரங்களை பதிவில் காணுங்கள்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* மேலே காணப்படும் படத்தில் உள்ள கிளி, முடியெல்லாம் உதிர்ந்து ஏன் இப்படி கொடூரமாக காட்சி தருகிறது? அதற்கு ஏதேனும் நோயா??

“இல்லை! அது கிளிக்குஞ்சு!! கிளிக்குஞ்சுகளுக்கு முடி இருக்காது.  பார்க்கவே அருவருப்பாக இருக்கும். கிளியானது வளர வளர தான் முடி வளர்ந்து தோல் பச்சைப் பசேலென்று காட்சி தரும். மேலும், தாய்க்கிளி இரை தேட குஞ்சை பழக்குவதன் பொருட்டு வெளியே அழைத்து வந்துள்ளது. அப்போது எடுத்த படம் தான் இது”. – (திரு.சேகர் கூறிய தகவல் இது.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

“இவ்ளோ கிளிகளுக்கும் போட, ஒரு நாளைக்கு 15 கிலோ அரிசி தேவைப்படுது. இவ்ளோ ஜீவன்கள் என்னை நம்பி வருதுங்க. என் பர்ஸில் கடைசி ரூபா இருக்கிறவரைக்கும் நான் என் விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பேன் சார்!”

“இதனால் பச்சைக் கிளிகள், அணில்கள், காகங்கள், புறாக்கள் எனப் பல உயிரினங்களும் பசியாறுகின்றன. அதைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. இதனால் அந்த நேரத்தில் யாரையும் நான் சந்திப்பதைத் தவிர்க்கிறேன். என்னைப் பார்க்க வருபவர்களின் சத்தத்தால் அந்தப் பறவைகளின் அமைதி குலைகிறது. அதனால் என்னுடைய வாடிக்கையாளர்களைக் கூட அந்த நேரத்தில் வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.”

DSCN0646

“கிளிகள் மட்டும் தான் வருகின்றனவா?”

“நீங்களே பாருங்களேன்…” (அங்கு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பறவைகளை காட்டுகிறார். 90% கிளிகள் மற்றும் சில புறாக்கள் தென்பட்டன.)

“கிளிகள் மட்டுமல்ல. சிலசமயம் புறாக்களும் வருவதுண்டு. இப்போது அரிய வகை அலெக்சாண்டிரியா கிளிகள் கூட வருகின்றன. ஓரிரண்டு பஞ்சவர்ணக் கிளிகளும் வருகிறது.”

DSCN0219

“இப்படி தினசரி உணவளிப்பது சிரமமாக இல்லையா? பணத்தை கூட செலவு செய்யலாம்… நேரத்தை செலவு செய்ய முடியாதே?”

“உண்மை தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாலை 4 முதல் 6-30 மணிவரை நான் எந்த வேலையையும் பார்ப்பதில்லை. இவரின் தினசரி இரண்டரை நேரம்  இந்தப் பறவைகளுடன்தான் கழிகிறது. தினம் சில மணிநேரங்களை அந்தப் பறவைகளுக்காகச் செலவிடுவதில் என்னுடைய வருவாய் கணிசமாகக் குறையும்தான்; ஆனால் மன நிம்மதி கூடும்!”

DSCN0568

“கிளிகள் வரும் நேரம் என்ன? இந்த பணிகளில் உங்களுக்கு  உதவுகிறார்களா?”

“காலை 6.00-7.30 மாலை 4.30 – 6.00. இந்த இரண்டு நேரமும் கிளிகள் வரும். சூரிய வெளிச்சம் இருக்கும். அதேசமயம் வெயில் அதிகம் இருக்காது இந்த நேரங்களில். காலை 5.00 – 5.30 மணிக்கெல்லாம்எழுந்து விடுவேன். அப்போது கிளிகள் தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்கும். இரையை வைத்து முடிக்க அரை மணி நேரம் ஆகும். இதற்கு ஒரு நாளைக்கு 15 கிலோவுக்கு மேல் அரிசி தேவைப்படுகிறது. பரபரப்பான இந்த இடம் அவற்றுக்கு பாதுகாப்பு உணர்வைத் தராது என்பதால், உடனடியாக கொத்திச் சாப்பிடும் உணவையே போடுகிறேன்.

சென்னையில் பறவைகள் வாழ எங்கே இடம் இருக்குனு தெரியலை. ஆனா, இத்தனை கிளிகள் இங்கே இருக்குதேனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. கிளிகளில் பெரும்பாலும் சிவப்பு மூக்குக் கிளிகள்தான் வரும். இப்போ புதுசா சில பஞ்சவர்ணக் கிளிகளும் வர ஆரம்பிச்சிருக்கு!”

DSC06736
குழந்தைகளுடன் நின்று ரசிக்கும் குடும்பத்தினர்

==========================================================

செலவே இல்லாமல் ஒரு அவுட்டிங்!

உங்கள் குழந்தைகளை இங்கு ஒரு முறை அழைத்து வந்து காட்டுங்கள். (பைனாக்குலர் இருந்தால் நன்று!) ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஷாப்பிங் மால்களுக்கு அழைத்து சென்று அவர்களை ஒரு நாகரீக அடிமை ஆக்குவதற்கு பதில், இது போன்ற செலவே இல்லாத இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். கிளிகள் பறப்பதும் வருவதும் பார்க்க அத்தனை அழகு. இயற்கையை ரசிக்கும் குழந்தை என்றும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கர்ப்பஸ்த்ரீகள் இயற்கையை குறிப்பாக பறவைகளை ரசித்தால் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். அவர்கள் மனநிலை மகிழ்ச்சியாக அமைந்து ஹார்மோன்கள் சரியாக சுரக்கும். அது சுகப் சுகப் பிரசவத்திற்கு உதவியாக இருக்கும்.
==========================================================

Part II

இவர் குறை தீரவேண்டும் –   திருவருள் கண் திறக்கவேண்டும்!

சேகர் அவர்களிடம் பேசியதில் இருந்து, ஒரு சில விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது.

மிக அரிய வகை காமிராக்களை வைத்திருக்கும் இவர் அதை வைத்து ஒரு கேமிரா மியூசியம் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இவருக்கு அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை. இருப்பதோ வாடகை வீடு. வாடகை வீட்டில் இருந்துகொண்டு தினமும் கிளிகளுக்காக 4 மணிநேரம் வேறு செலவு செய்து வருகிறார்.

001

மத்திய அரசோ மாநில அரசோ தமக்கு உதவினால் நம் வருங்கால தலைமுறையினர் / விஸ்காம் மாணவர்கள் புகைப்படக் கலையின் பரிமாணத்தை தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு மியூசியத்தை வைக்க முடியும் என்று கூறுகிறார். தான் வைத்திருக்கும் காமிராக்களை சர்வதேச அளவில் ஏலம் விட்டாலே போதும் கோடிக்கணக்கில் அவை போகும்.  பிரிட்டிஷாரின் காலத்தில் பயன்பாட்டில் இருந்த காமிராக்கள் கூட இவரிடம் உண்டு. ஆனால் நம் மாணவர்களும் வருங்கால சந்ததியினரும் பயன்பெறவேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறுகிறார் சேகர்.

“எத்தனை நாள் தான் சார் நான் இப்படி போராடுவது? விற்கும் விலைவாசியில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாக உள்ள சூழ்நிலையில்  என்னை நம்பி வரும் இந்த கிளிகளுக்கு வேறு உணவளிக்க வேண்டிய சூழல்”.

DSCN0617
நம் தளம் சார்பாக ஒரு எளிய பரிசு!

இந்த கிளிகளை இவர் பார்த்துக்கொள்ளும் அந்த இரண்டு மணிநேரம் தனது தொழிலை செய்தால் ஆயிரமோ இரண்டாயிரமோ சம்பாதிக்க முடியும். அதை துறந்துவிட்டு தான் இவர் கிளிகளை பார்த்துக்கொள்ளும் பணியை செய்துவருகிறார்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, விஷயத்தை கேள்விப்பட்டு கிளிகளை பார்க்க வருபவர்களும் சரி… அந்த பக்கம் நடந்து போகும் சிலரும் சரி, கிளிகளுக்கு இவர் தான் உணவு வைக்கிறார் என்று தெரிந்ததும் இவரிடம் வந்து, “ஸார்… நீங்க செய்றது பெரிய விஷயம். எங்கள் வாழ்த்துக்கள். ரொம்ப நன்றி…!” என்று கைகுலுக்கிவிட்டு செல்கின்றனர். இவர் அருகே நாம் நின்றுகொண்டிருந்ததால் நமக்கும் சிலர் கைகொடுத்தனர். தொண்டு செய்றவங்க கூட நின்னாக் கூட அது பெருமைக்குரிய விஷயம் போல!

DSCN0340

யார் யாருக்கோ விருதும் பட்டமும் பதக்கமும் பொருளுதவியும் தந்து கௌரவிக்கும் அரசுகள் (இப்போதெல்லாம் விருதுகள் கூட அரசியலாக்கப்பட்டுவிட்டது. ஜாதி ஓட்டுக்களை குறிவைத்தே அவை வழங்கப்படுகின்றன.) இவரையும் இவரது கலைப் பொக்கிஷங்களையும், இவரை தேடி வரும் கிளிகளுக்கு உணவிடுவது பற்றியும் சிறிதும் கவலைப்படவில்லை. அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமுமில்லை.

நம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரிடம்  நம் தளம் சார்பாக ரூ.1,500/- கான காசோலையை அவர் பெயர் எழுதிக் கொடுத்தோம்.

“எதுக்கு சார் இதெல்லாம்?” என்று வாங்க மறுத்துவிட்டார்.

“கிளிகளை பார்த்துக்கொள்ள நீங்கள் எவ்வளவோ தியாகம் செய்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேல் நேரத்தை தியாகம் செய்கிறீர்கள். அதுவும் தினமும் காலை இரண்டு மணிநேரம், மாலை இரண்டு மணிநேரம்… ஏதோ எங்களால் முடிந்த அளவு உங்கள் ஒரு நாள் வருவாய் இழப்பை ஈடு செய்ய விரும்பியே எங்கள் தளம் சார்பாக இந்த சிறிய தொகையை அளித்திருக்கிறோம். இதை வைத்து நீங்கள் என்ன வேண்டுமோ உங்கள் விருப்பம் போல செய்துகொள்ளுங்கள். இனி மாதந்தோறும் கிளிகளுக்கு உணவளிக்க ஆகும் செலவில் கணிசமான அளவு எங்கள் தளமும் ஏற்றுக்கொள்ளும். தவிர உங்களது இந்த சேவையை பற்றி கூறி கிளிகளை அவை வரும் நேரம் பார்த்துகொள்ள,  உங்களுக்கு துணையாக என்.சி.சி. / என்.எஸ்.எஸ். மாணவர்களை சுழற்சி முறையில் அனுப்பி உதவவேண்டும், என்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் எழுதப்போகிறோம்! அப்படி பள்ளி மாணவர்கள் இருவர் தினமும் மாலை வந்து கிளிகளை பார்த்துக்கொண்டால், அந்த நேரம் நீங்கள் நிம்மதியாக உங்கள் தொழிலில் கவனம் செலுத்தலாம் இல்லையா?”

DSC00010

நாம் கூறி முடித்ததும் அவருக்கு நெகிழ்ச்சியில் ஒரு கணம் கண்ணீரே வந்துவிட்டது.

“சார்…  எத்தனையோ பேர் வந்து பேட்டி எடுத்துட்டு போயிருக்காங்க. யாரும் இப்படி சொன்னதில்லே. இது மாதிரி செஞ்சதும் இல்லே. (செக்கை காண்பித்து). எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.”

பணத்திற்காக இல்லையென்றாலும் நம் கஷ்டத்தை இவர் உணர்ந்து ஏதேனும் செய்ய விரும்புகிறாரே என்று தான் அவர் நெகிழ்ந்துபோனார் என்பது புரிந்தது.

சமீபத்தில் கமிஷனர்  அலுவலகத்தில் மிகப்பெரிய ரேங்கில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் கிளிகளுக்கு 25 கிலோ அரிசி வாங்கி வந்ததாகவும் கூறினார்.

“சில பத்திரிக்கைகள் / தொலைக்காட்சிகளிலிருந்து இருந்து இதை படம்பிடிக்க என்னை பேட்டியெடுக்க வருகிறார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சினிமா நட்சத்திரங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்கள் இங்கு வரும்போது குறைந்த பட்சம் இந்த கிளிகளை மனதில் கொண்டாவது அவற்றுக்கு ஒரு 20 கிலோ அரிசி வாங்கி வரலாம். ஆனால் எவருக்கும் தோன்றவில்லை. ஆனால் நீங்கள் ஒரு சாதாரண வெப்சைட் ஆசிரியர்… அதில் உங்களுக்கு விளம்பர வருவாயெல்லாம் கூட கிடையாதுன்னு தெரியுது… உங்களுக்கு தோன்றிய இந்த விஷயம் அவர்களுக்கு தோன்றாமல் போனது ஆச்சரியம் தான்!” என்றார்.

DSC06743

“சார்… பணம் தான் என்னுடைய நோக்கம் என்றால் நம்ம ரூட்டே வேறு. ஒரு பக்கம் வேலையும் பார்த்துக்கொண்டு மறுபக்கம் ஒய்வு ஒழிச்சலின்றி அலைந்து திரிந்து இரவு பகலாக எழுதிக்கொண்டு இப்படி ஒரு ஆன்மீக / சுயமுன்னேற்ற தளம் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன். நம் நோக்கமே தேசபக்தியையும் தெய்வபக்தியையும் வளர்த்து, தொண்டு செய்ய அனைவரையும் தூண்டுவது தான். மற்றவர்கள் கவனிக்கத் தவறும் / புறக்கணிக்கும் மகத்தான விஷயங்களை வெளியே கொண்டு வந்து அவற்றை உலகறியச் செய்ய இறைவன் எம்மை பணித்திருக்கிறான்! இறைவனின் விருப்படியான எம் பயணம் இருப்பதால் எமக்கு தேவையான அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். இதில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், மான, அவமானங்கள் பற்றி எமக்கு கவலை இல்லை. அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை!!!

IMG_0047

“ரொம்ப நல்ல விஷயம் ஸார். நீங்க செய்வதும் பெரிய தொண்டு தான்!”

நாம் தொடர்ந்தோம்… “நன்றி சார்… தொண்டிற்கு நேரம் செலவு செய்வது எத்தனை கடினம்…. அதுவும் எவரும் நம் தொண்டை அங்கீகரிக்காத நிலையில் அதை செய்வது எவ்வளவு கடினம்…  பொருளாதார நெருக்கடிக்கு இடையே அதை தொடர்வது இன்னும் எத்தனை கடினம் என்பதெல்லாம் எனக்கு தெரியும்! ஏனெனில், இந்த கிளிகளுக்கு நீங்கள் உணவிடுவதை எப்படி ஒரு தவம் போல எந்த இன்னல்களை பொருட்படுத்தாமல் செய்கிறீர்களோ அதே போலத் தான் ரைட்மந்த்ராவையும் நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்!

Meenakshi _ Andal

தவிர இங்கு வருபவைகளை கிளிகளாக நாங்கள் பார்க்கவில்லை. அவை எங்கள் அன்னை மீனாக்ஷியின் செல்லப் பிள்ளைகள், காமாக்ஷியின் குழந்தைகள். எங்கள் கோதை நாயகி ஆண்டாளுக்காக இறைவனிடம் தூது சென்ற தூதுவர்கள். உங்கள் தொண்டு சிறக்கவும், உங்களுக்கு உதவிகளை செய்யவுமே இறைவன் எம்மை உங்களிடம் அனுப்பியிருப்பதாக நாம் கருதுகிறோம். கவலை வேண்டாம்!” என்று கூறி விடைபெற்றோம்.

சில ஏமாற்றங்களை வருத்தங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, நாம் பரிசளித்த விவேகானந்தர் படத்தை காட்டி தான் அவருக்கு நம்பிக்கை ஊட்டினோம்!!

==========================================================

கேமிரா சர்வீஸ் & சேல்ஸ்

இவரிடம் உங்கள் கேமிராவை சர்வீஸுக்கு கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். செகண்ட் ஹாண்டில் கேமிராக்களை வாங்குவதாக இருந்தாலும் வாங்கிக்கொள்ளலாம். இவரது காமிரா சர்வீஸ் தொடர்பான விபரங்களை இவரது முகவரியுடன் கூடிய விளம்பரம் ஒன்றை தயார் செய்து நமது தளத்தில் வெளியிட்டு உதவுவதாக கூறியிருக்கிறோம்.

இவரைப் போன்றவர்களின் தொண்டு தொடரவேண்டும். அதற்கு இவரது காமிரா சர்வீஸ் செய்யும் தொழில் ரீதியாகவும் சரி.. கிளிகளை இவர் போஷிப்பதிலும் சரி… நம்மால் இயன்ற உதவிகளை இவருக்கு செய்யவேண்டும்! நிச்சயம் செய்வோம்!!

இவரைப் பற்றிய தகவலை நமக்கு அனுப்பி பேட்டி எடுக்க தூண்டுகோலாக இருந்த வாசகி வள்ளி அவர்களுக்கு நன்றி.

இவரை பேட்டி  கண்டதையும் இவரது நட்பு கிடைத்ததையும் பெருமையாக கருதுகிறோம்.

சென்னையில் ஒரு ரியல் ஹீரோ இவர் என்றால் மிகையாகாது. இவரை பேட்டி காணச் சென்றபோது தான் இவர் வீட்டுக்கு சற்று எதிரே உள்ள நேதாஜியின் வீட்டை  பார்த்தோம். அதற்கு பிறகு நடந்தவை தான் உங்களுக்கு தெரியுமே! (சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்!)

* இது போன்ற ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்களில் நம்முடன் பங்கேற்க விரும்புகிறவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும்.

==========================================================
இவர் முகவரி : கேமிரா சேகர்,  புதிய எண் : 242, 2வது தளம், பாரதி சாலை, (எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ எதிரே), ராயப்பேட்டை, சென்னை – 600014.
மொபைல் : 9444464967
==========================================================

Vijay TV  | Margazhi Vaibhavam 2013 | E 18 | Video

[END]

27 thoughts on “தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

 1. கண்ணீரை தவிர வேறு எதுவும் இப்போது என்னிடம் இல்லை. எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதியும், மா மகரிஷி சுகரும் இவருக்கும் உங்களுக்கும் துணை புரிய வேண்டும்.

 2. இந்தப் பேட்டியை / கிளிகளைப் பார்க்கும்போது நாமும் அய்யா சேகர் வசிக்கும் தெருவில் வசித்திருக்ககூடாத என்று ஏக்கம் வருகிறது. கிளிகளை கூட்டமாகப் பார்க்கும் போது மனம் குதூகலிக்கிறது..! தொடரட்டும் உங்கள் பணி…!

  நானும் எனது வீட்டில் சென்ற கோடை காலம் முதல் தினமும் வீட்டு சுவற்றில் உணவும், தானியங்களும், தண்ணீரும் வைத்து வருகிறேன். வேகமாக அழிந்துவரும் குருவிகள் காலையில் எங்கள் வீட்டில் வந்து கீச்சிடுவதைக் கேட்பதே அலாதி சுகம். தற்போது அடிக்கடி இரண்டு கிளிகள் வந்து செல்கின்றன. ஆனால் உணவைத் தொடுவதில்லை. இடப்பற்றாக்குறை போலும். நாளை முதல் உணவை வீட்டின் மொட்டை மாடியில் வைக்க எண்ணி இருக்கிறேன்..கிளிகள் வந்து தானியங்களை உண்டால் தினமும் அவைகளுக்கும் சேர்த்து உணவினை வைக்க எண்ணியுள்ளேன்.இறைவன் திருஅருளால் நடக்கும் என நம்புகிறேன்…!

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

  விஜய் ஆனந்த்

 3. sundar சார்

  மிகவும் அருமையான பதிவு

  கண்களில் கண்ணீர் வர வைக்கிறீங்க சார்

  nandri

 4. சுந்தர்ஜி
  இதுவரை ஆலயங்களுக்கும், பல வகையில் சிரமப்படும் மனிதர்களுக்கும், பசுக்களுக்கும் சேவை செய்ய உதவிய நம் தளத்தை பறவைகளுக்கும் உதவுமாறு திரு.சேகர் மூலம் இறைவன் தங்களை அழைத்து இருக்கிறார்கள். தளத்தின் வாசகி வள்ளியம்மைக்கும் நாம் நன்றி சொல்வோம். இதையும் மகா பெரியவா அவர்களின் அருள் என்றே சொல்லலாம். ஏன் என்றால் அவர் அருளால் சாட்சாத் அந்த காமாட்சியின் அம்சமான கிளிகளுக்கும் மற்றும் அவள் பரிவாரமான அவள் சன்னதியில் கிளிகளாக வந்த தேவர்களுக்கும் நாம் உணவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. சேகர் நகரத்தில் வாடகை வீட்டில் கிளிகளுக்கு உணவிடுவது போல் கிராமத்தில் கூட வாய்ப்பு உள்ளதா எனத் தெரியவில்லை . தொடரட்டும் அவரது சேவையும் நம் தளத்தின் சேவையும் இறைவன் பெரும் கருணையுடன்! நன்றி

 5. சுந்தர்ஜி
  கிளிகள் என்று சொன்னால் நமக்குள் ஒரு பரவசம். கிளிகள் பச்சை நிறமும், சிகப்பு நிறமும் பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி.சேகர் நகரத்தில் வாடகை வீட்டில் கிளிகளுக்கு உணவிடுவது ஒரு சாகசம் தான். தொடரட்டும் அவரது சேவையும் நம் தளத்தின் சேவையும் .

 6. டியர் சார்

  உங்கள் பதிவை படித்து கண்ணீர் வந்து விட்டது . வள்ளியம்மைக்கு என் நன்றிகள்.

  திரு சேகரின் செயல் மிகவும் அற்புதமானது, திரு சேகர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  சார், உங்கள் தேடுதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்.

  நன்றி
  உமா

 7. Hi Sundar,

  Very nice.

  Only in human being we have lazy beggars no animal or bird beg for food they find their own food.

  See how bird share their food. Yearly Human Food produced for 1800 crore people but still 50% 400 crore human people are in poverty without food. Economic forum have said top 80 people have 400 crore people money in their account nearly each 1 lakh crore in account selfish human other suffering without food

 8. அன்று நான் சென்னை யில் இல்லையே என்று சிறிய வருத்தம்
  ….
  என்ன சொல்வந்தென்ரெ தெரியவில்லை

  அந்த கிளிகளுகாக இவரை படைத்தானோ ஆண்டவன்

  ///மற்றவர்கள் கவனிக்கத் தவறும் / புறக்கணிக்கும் மகத்தான விஷயங்களை வெளியே கொண்டு வந்து அவற்றை உலகறியச் செய்ய இறைவன் எம்மை பணித்திருக்கிறான்!///

  எவளவு தெளிவு இருப்பின் நீங்கள் இப்படி கூறுவீர்கள்…

  ெரிய விஷயம் ….

 9. அண்டவன் செயல் ..கிளிகள் மூலமாக உங்களுக்கு நேதாஜி வீட்டை காட்டினாரோ
  ஆச்சரியம் ஆச்சரியம் …சொல்வதற்கு வார்த்தை வரவில்லை

 10. இந்த கிளிகளை பார்க்கும்போது மனது அவ்வளவு சந்தோசப்படுகிறது..
  புகைப்படத்தை பார்க்கும்போதே இப்படி என்றால் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் …ஆஹா.. சூப்பர் ..

 11. நம் முன்னோர்களும், நீங்களும் செய்த/செய்யும் கைய்ங்கரியத்திற்க்கு முன்னால் எனக்கு ‘நன்றி’ என்பதெல்லாம் மிக பெரிய வார்த்தை.
  “சர்வமும் சிவார்ப்பணம்”

 12. //”எமக்கு தேவையான அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். இதில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், மான, அவமானங்கள் பற்றி எமக்கு கவலை இல்லை. அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை!!!“//

  சரியாக சொன்னீர்கள் சுந்தர் சார். மிகவும் நல்ல காரியம் பண்ணி இருக்கீர்கள். வாழ்க வளமுடன்.

 13. திரு சுந்தர் அவர்களுக்கு,

  என்னுடைய வாழ்நாளின் மிக பெரிய திருப்புமுனை, நமது தளத்தினை பற்றி அறிந்து கொண்டது.கடந்த ஆறு மாதங்களாக நமது தளத்தினை தினமும் வாசிக்கிறேன்.

  இதனால் எனது மனம் மிகவும் பக்குவபட்டுள்ளது.மிக்க நன்றி

  இக்கட்டுரையின் முத்தாய்ப்பாக தாங்கள் கூறிய கருத்துத்தான் நம்மை வழி நடத்தி செல்லுகிறது

  “இறைவனின் விருப்படியான எம் பயணம் இருப்பதால் எமக்கு தேவையான அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். இதில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், மான, அவமானங்கள் பற்றி எமக்கு கவலை இல்லை. அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை!!!“

 14. சொல்வதற்கு வார்த்தையே இல்லை … விரைவில் என்னால் முடுந்த உதவியை திரு . சேகர் அவர்களை சந்தித்து கொடுப்பேன் !

  உங்கள் மகத்தான பதிவுக்கு என் வாழ்த்துக்கள் சுந்தர் !!

 15. பட்சிளம் கிளிகள் … பசியாறும் காட்சிகள்……அருமை அருமை நன்றி ஜி.

 16. கடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.

 17. நான் இந்த பதிவை மிக தாமதமாகத்தான் பார்த்தேன். மிகவும் ஆச்சரியமாகவும் அதே சமயம் கண்களில் நீருடனும் படித்தேன். இந்த சேவையில் சேகருடன் உதவிட நினைக்கிறேன். பொருள் மற்றும் நேரம் , என்னால் முடிந்தவரை உதவ, எனக்கு நீங்கள் உதவ வேண்டும். தொடர்புக்கு: ஈமெயில் : parthasow@yahoo.co.in
  அன்பன்: r .பார்த்தசாரதி, வேளச்சேரி.

  1. தாரளமாக. மிக்க நன்றி.

   உங்கள் மொபைல் எண்ணை எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

   – சுந்தர்
   9840169215

 18. Awesome சேகர் சார் நீங்க அந்த கிளிகளுக்கு கடவுள் போல … நீங்க சொன்ன செய்தி சந்தோசம் தருகிறது சேகர் சார் … நீங்கள் நூறு ஆண்டுகள் மேல் vaazha vendum ….

 19. இப்படி ஒரு நல்ல பகிர்வை இங்கு நீங்கள் எழுதியமைக்கு நன்றி. எங்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வை ஏர்ப்படுத்தியுள்ளது. நல்ல பதிவு.

 20. சார், அற்புதம் ,
  //மற்றவர்கள் கவனிக்கத் தவறும் / புறக்கணிக்கும் மகத்தான விஷயங்களை வெளியே கொண்டு வந்து அவற்றை உலகறியச் செய்ய இறைவன் எம்மை பணித்திருக்கிறான்!/ என்ன வார்த்தைகள் சார்/ கடவுள் உங்களை ஆயுள் முழுவதும் நல்ல வைத்திருப்பார்.

  இந்த கிளிகளை பார்க்கும்போது மனது அவ்வளவு சந்தோசப்படுகிறது..
  புகைப்படத்தை பார்க்கும்போதே இப்படி என்றால் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் …ஆஹா.. சூப்பர் ..அந்த இடத்தில இல்லாமல் போய்விட்டோமே// என்கிற வருத்தம் தாங்கமுடியலை சார்.

  நானும் தினமும் 50/60 புறகளுக்கு காலையில் உணவு இடுகிறேன்// இப்போ அதுகூட 10/15 சிட்டுக்குருவிகள் கலை 6 டு 7.00 மணிக்கும் மாலையில் 4.30 டு 5.45 வரையிலும் வருகிறது . காலையில் நானும் மாலையில் என் மனைவியும் உணவு இடுகிறோம். இப்போ இந்த கூட்டத்தை இன்னும் அதிக படுத்த முயற்சி செய்கிறேன் . கிளிகள் இருக்குது ஆனால் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை . மீனாக்ஷி அருளால் வரும்.

  மனமார்ந்த நன்றி நம்ம வாசகி வள்ளி அவர்களுக்கும் திரு சேகர் அவர்களுக்கும்.

  சென்னை வரும் பொது கட்டாயம் அவர்கள் வீட்டுக்கு சென்று அந்த அதிசயத்தை பார்ப்பேன் . உதவி செய்து விட்டு வருவேன் சார். இது அத்தனைக்கும் தங்கள் மனது தான் காரணம். தங்களின் தாய் தந்தையர்க்கு மிக்க நன்றி.

  தங்களின்
  சோ. ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *