குருஷேத்ரம் – தர்மஷேத்ரம், உத்தரவேதி, தர்மவேதி என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருஷேத்திரம் என்று பெயர் வந்தது என புராணங்கள் கூறுகிறது. பாரதப் போர் கி.மு.3102 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கருதப்படுகிறது. (கிட்டத்தட்ட 5118 ஆண்டுகளுக்கு முன்னர்).
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.
‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’ பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.
அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், “உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.
புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவி உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.
“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.
“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம். அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
“அது என்ன தத்துவம் ஐயா? எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”
“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!! கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”
“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!”
“………………..”
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிடமுடியுமா?
“………………..”
“முடியும்…! எப்போது தெரியுமா?”
வருண் மலங்க மலங்க விழித்தான்.
“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”
வருண் சற்று பெருமூச்சு விட்டான். பெரியவர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”
வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.
“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”
“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது. நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது. அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய். எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய். இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி. கீதையின் பாடமும் இது தான்.”
வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான். களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.
“அப்போது கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே. உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”
“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”
வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.
இப்போது தரையை பார்த்தான். அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான். அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.
மிகப் பெரிய உண்மையை அவனுக்கு அவனுக்கு உணர்த்திவிட்டு.
வரலாற்று தகவல் : குருஷேத்ரப் போருக்கு பின் அஸ்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும், இந்திரப்பிரஸ்தமும் ஒன்றிணைக்கப்பட்டது. அஸ்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானார். திருதராஷ்டிரன் மகன் யுயுத்சு, அஸ்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். கர்ணன் மகன் விருச்சகேது அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.
விருச்சகேது, கர்ணன் – விருஷாலி தம்பதிக்கு பிறந்த ஒன்பது மகன்களில் இரண்டாமவன். குருஷேத்ரப் போரில் விருச்சகேது தவிர மற்ற அனைத்து சகோதரர்கள், 16ஆம் நாள் போருக்கு முன், பாண்டவப் படைகளால் கொல்லப்பட்டனர். 17ஆம் நாள் போரில் கர்ணன் இறக்கும்முன், கர்ணனின் பிறப்பின் இரகசியம், குந்தியின் மூலம் பாண்டவர்கள் அறிந்ததால், குருஷேத்ரப் போருக்குப் பின் பாண்டவர், விருச்சகேதுவிற்கு இந்திரப்பிரஸ்த நாட்டின் அரசனாக முடிசூட்டினார்கள்.
(** இந்த பதிவில் காணப்படும் ‘குருக்ஷேத்திர’ புகைப்படங்கள் யாவும் நம் முகநூல் நண்பர் அம்மு காயத்ரி என்பவர் குருஷேத்திரம் சென்று நேரில் எடுத்தது. அவர் ஒரு ஆராய்ச்சியாளர். மஹாபாரதம் தொடர்பான பல இடங்களுக்கு நேரில் சென்றிருக்கிறார்.)
ரைட்மந்த்ரா வளர்ச்சி பெற்று அதன் சிறகுகள் விரியும் பட்சத்தில் குருஷேத்ரம் நேரில் சென்று பாரதப் போர் தொடர்பான இடங்கள் அனைத்தையும் நம் தளத்திற்க்காக கவர் செய்து ஒரு மினி தொடரே அளிக்க ஆசை. ஆனால் …. சரி விடுங்கள்… பார்ப்போம்…
==========================================================
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Similar articles…
மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ
கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
==========================================================
[END]
Superb sir. great explanation
மாபெரும் இதிகாசம்
மலைக்க வைக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய உன்னத பாடம் கீதை
சிந்திக்கத்தூண்டும் அரசியல் நுணுக்ககங்கள்
தர்மத்துக்கு கிடைத்த பரிசு
துரோகத்திற்கு கொடுத்த விலை
வாழ்க்கை வழிகாட்டி
மஹாபாரதம்
கீதை பிறந்த அந்த புண்ணிய பூமியை காண அனைவருக்கும் ஆவல் உண்டு
ஆனால் வாய்ப்பு – இறைவன் திருவுள்ளம்
சுந்தர் ஜி
உங்களைப்போலவே நானும் வாழ்நாள் கனவாக அந்த புண்ணிய பூமியை காண மிகவும் ஆவலோடு உள்ளேன்
நினைக்க மட்டுமே நம்மால் முடியும்
நடத்திவைக்க அந்த பரம்பொருளால் மட்டுமே முடியும்
பாரத போர் யார் யாருக்கு இடையே நடந்தது என்பற்கு முற்றிலும் புதிய, அருமையான விளக்கத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி
உங்கள் எண்ணம் ஈடேற அந்த பரம்பொருள் அருள் புரியட்டும்
மகாபாரதம் ஒரு காவியம்.
பாரத போர் எதனால்? – இதன் விளக்கம் அருமை.
இதை பற்றி பல விளக்கங்கள் பல தகவல்கள் நாம் படித்து இருந்தாலும், கேள்விப்பட்டு இருந்தாலும் நீங்கள் கொடுத்த பதில் முற்றிலும் வேறு.
சிந்தனையை தூண்டி சமன் செய்தது..
குருஷேத்ரம் செல்லும் உங்கள் ஆசை நிறைவேறினால் எங்களுக்கு சந்தோசம் தானே.
எல்லாம் அவன் செயல் அது அது நடக்கும் போது நடக்கும்
.
nandri.