வயோதிக ஆடிட்டர், சென்னையிலிருந்து தரிசனத்துக்கு வந்திருந்தார் குடும்பத்துடன். நாட்டுப்பெண் கையில் மூன்று மாதக் குழந்தை. “பேரன்….நட்சத்திரம் விசாகம்…இன்னும் பெயர் வைக்கலை. இவன்தான் முதல் பேரன்.. மற்றப் பையன்களுக்குக் குழந்தை இல்லை.”
நாட்டுப்பெண் குழந்தையைத் தரையில் கிடத்தினாள், பெரியவாள் பார்வைபடும்படியாக. அன்று சங்கடஹர சதுர்த்தி. மடத்தின் இன்னொரு பகுதியில் கணபத்யதர்வசீர்ஷம் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. பெரியவா, ‘கணபதி சுப்ரமண்யம்’னு பெயர் வை என்றார்கள்.
ஆடிட்டர் அக மகிழ்ந்து போனார். அன்று,சதுர்த்தி ஆனதால், கணபதி பொருத்தமான பெயர். அத்துடன் அவர்கள் குல தெய்வமான பழனி சுப்ரமணியத்தையும் சேர்த்து வைக்கச் சொல்லி விட்டார்களே! என்ன கருணை! கன்னத்தில் போட்டுக் கொண்டார், பரவசத்துடன்.
“அண்ணா மட்டும் இருந்தால் போதுமா? தம்பியும் வரட்டும்,” அதிர்ந்து போனார், ஆடிட்டர். அப்படியா! காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாதி வழியில், “வயிற்றைக் குமட்டுகிறது” என்று ஈனஸ்வரத்தில் கூறினாள், இரண்டாவது மருமகள்.
“சுப்ரமண்யம்… சுப்ரமண்யம்…என்று பழநி மலை நோக்கிக் கும்பிடு போட்டார், ஆடிட்டர். பெரியவாளின் நேத்திரங்கள், Scanning Apparatus- ஆ? இல்லை நம் அறிவுக்கு அப்பாற்பட்ட… Super Apparatus.
“அண்ணா மட்டும் இருந்தால் போதுமா? தம்பியும் வரட்டும்,” என்று பெரியவா கூறியதில் தான் எத்தனை அர்த்தங்கள்!!!!
ஆடிட்டரின் குடும்பத்திற்கு இது எப்படி சாத்தியமாயிற்று? ‘நல்லோர் தரிசனம் பாப விமோசனம்’. வேறொன்றுமில்லை!
================================================================
தேவரும் தொழும் தெய்வம்
“பெரியவா”ளின் பிள்ளையார் ச்லோகம்
அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-
த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது :
தத்-ஹேதோரிதி நீதிவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்
ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ) வ்யாத் ஸ ந :
இது தான் ‘ந்யாயேந்து சேகர’த்தின் மங்கள ச்லோகம்.
இதற்கு என்ன அர்த்தமென்றால் : ‘வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விக்நேச்வரர் அல்லாத இன்னொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விக்நேச்வரருடைய இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் ‘தத்-ஹேது ந்யாயம்’தெரிந்தவனாயிருந்தாலோ (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விக்நேச்வரர் ஒருவரை மாத்திரம் பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்துதர வல்லவராக உள்ள அந்த விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’என்பதாகும்.
– தெய்வத்தின் குரல் (5)
================================================================
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
===============================================================
தொடர் விடுமுறை காரணமாக, இன்று பிரார்த்தனை பதிவு அளிக்கப்படாது. சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
முந்தைய பதிவில் தேவாரம், திருப்புகழ் பாடிவரும் வாரியார் ஸ்வாமிகளின் கொள்ளுப்பேத்திகளின் பேட்டி இடம்பெற்றிருக்கிறது. தவறாமல் பார்க்கவும்.
===============================================================
வணக்கம்…………..
மஹா பெரியவாவின் கருணையே கருணை………..கண்கண்ட தெய்வம் அவர்………..கருவிலிருக்கும் குழந்தைக்கும் அருளும் கருணாமூர்த்தி………..விநாயகர் சதுர்த்தி அன்று பெரியவாவை பற்றியும் கணபதியை பற்றியும் 2 இன் 1 கட்டுரை படித்தது மகிழ்ச்சி…………
குருவே சரணம்……….
Hara hara sankara jaya jaya sankara
அருமையான பதிவு
விநாயகா சரணம்
மஹா பெரியவா சரணம்……
எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் .
அற்புதமான பதிவு. பிள்ளையார் சதுர்த்தி அன்று குருவின்
மகிமையை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அவர் எங்கும் நிறைந்த பரம்பொருள். சத்குருவானவர் பருவ மேகம் போன்றவர். நமது தொல்லைகளையும் , கஷ்டங்களையும் நீக்கி நம்மை மகிழ்விக்க குருவிற்கு நிகரானவர் எவரும் இல்லை. நாம் எல்லோரும் குருவின் பாதம் பணிவோம்.
//பிரஹ்மானந்தம் பரமசுகதம் கேவலம் ஞானாமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககந சத்ருசம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலமசலம் சர்வ தீஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுண ரகிதம் சத்குரும் தம் நமாமி //
குருவே சரணம்
நன்றி
உமா
Dear Sundarji,
Pillaiyar chaturthi andru kaanchi periyavarai patri padithathil mikka magizhchi.
Periyavar veitha peiya migavum azhagu.
Annanum Thambiyum!!
Siram Maaru udayan-Maarupata Thalai Vinayagar
Siram Aaru Udayan-En appan andha nayagan murugane.
Thanks & Regards
V Harish
மஹா பெரியவா ஒரு தீர்க்கதரிஷி
அவரை தரிசிக்கும் புண்ணியம் பெற்றோர் பாக்யசாலிகள்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர