Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

print
ரண்டு புத்தகங்கள் வெளியிடும் இந்த மலையை தாண்டும் நிகழ்வு எப்படி நமக்கு சாத்தியமானது என்று உங்களில் பலருக்கு ஒரு சந்தேகம் இருப்பது நமக்கு தெரியும். அதற்கு விடை கூறுவதற்கு முன்பு உங்களிடம் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறோம்.

நம் தளத்தின் வளர்ச்சி குறித்து நமக்கு மிகப் பெரும் நம்பிக்கை இருக்கும் அதே நேரம், நமக்கு ஒரு அச்சம் அடிமனதில் இருந்து வந்தது. CONCEPT THEFT எனப்படும் ‘எண்ணத் திருட்டு’ குறித்த பயம் தான் அது.

Rightmantra Book Release

மிகவும் கஷ்டப்பட்டு, பல அடிகள் வாங்கி, அவமானங்கள் பட்டு, முதுகில் குத்தப்பட்டு, வீழ்த்தப்பட்டு, துரோகமும் பொறாமையுமே பார்த்து பார்த்து வெறுத்துப் போய் கோவில் பக்கம் கரை ஒதுங்கி RIGHTMANTRA என்கிற ஒரு CONCEPT ஐ உருவாக்கி அதை ஒரு தளமாக செதுக்கி, மூன்று வருடங்களுக்கும் மேல் அதை தொடர்ந்து எந்த வித வணிக சக்தியும் இன்றி நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் அளித்து இந்த நம்பிக்கை கோட்டையை ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கியிருக்கிறோம்.

இன்று வேண்டுமானால் நம் தளத்தை சில ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமே பார்த்து வரலாம். ஆனால் நாளை உலகம் நம் கையில் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் தளத்தையும் எண்ணங்களையும் (பதிவுகளை அல்ல) சிலர் சுலபமாக காப்பியடித்துவிட வாய்ப்பிருக்கிறது. ஒரு நுட்பத்தை ஒருவர் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தால் மற்றவர்கள் அதில் சுலபமாக பயணம் செய்வார்கள். இது யதார்த்தம். எனவே தான் “தளம் இயல்பாக BY WORD OF MOUTH மூலம் வளரட்டும். நாம் ப்ரோமொட் செய்யும் வேலைகளில் இறங்கவேண்டாம்” என்று விட்டுவிட்டோம்.

இந்த புத்தக வெளியீடு தொடர்பான பணிகளில் நாம் விரும்பியோ விரும்பாமலோ, சில பதிப்பகங்கள் ஏறி இறங்கும்போதும், REFERENCE க்காக சிலரிடம் பேசும்போதும் சிலர் கவனத்திற்கு தளம் ஆளாகும் சூழ்நிலை. அதை நாம் விரும்பவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. அரும்பாடுபட்டு தாங்கள் உருவாக்கிய கதையை படமெடுக்க தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி, அதை ஒட்டுமொத்தமாக பறிகொடுத்த பல துணை இயக்குனர்கள் இங்கு உண்டு. பதிப்புலகிலும் அது போல பல கதைகள் உண்டு. எனவே இதை எப்படி எடுத்துக்கொள்வது, அணுகுவது என்கிற ஒரு அச்சம் மனதில் இருந்து வந்தது.

இது குறித்து நம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டபோது அவர் சொன்னார் : “உங்கள் பாணியை காப்பியடிக்க யாரேனும் முயற்சிக்கக்கூடும் என்கிற உங்கள் அச்சம் புரிகிறது….. ஆனால் அவர்களால் உங்களை போல வெற்றி பெற முடியாது….” என்றார் உறுதியாக.

“அது எப்படி உறுதியாக வெற்றி பெற முடியாது என்று சொல்கிறீர்கள்? பணமும் ஆள்பலமும் இருந்தால் நான் கஷ்டப்பட்டு கட்டிய கோட்டையை அவர்கள் சுலபமாக கட்ட வாய்ப்பிருக்கிறதே!” என்றோம்.

அதற்கு அவர், “கட்டலாம் ஆனால் வெற்றி பெற முடியாது. ஏனெனில் உங்களிடம் இருக்கும் FIRE அவர்களிடமும் இருக்கவேண்டுமே? புறக்கணிப்புக்கள், துரோகங்கள், அவமானங்கள் இவற்றால் “ஜெயித்தே தீரவேண்டும்” என்கிற வெறி உங்களிடம் இருக்கிறது. அது தான் உங்களுக்கு உந்து சக்தி. உங்களை இந்த அளவு அது தான் கொண்டு வந்தது. அது அவர்களுக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒருவர் வாழ்வில் வெற்றி பெற அவமதிப்பும் அவமானமும் தரும் FIRE மிக மிக முக்கியம். அது இல்லாதவர்கள் பிரகாசிப்பது கடினம்…” என்றார்.

உண்மை தான். சரித்திரத்தில் மாற்றாந்தாய் அமையப்பெற்றவர்கள் பலர் உண்டு. ஆனால் துருவனுக்கு மட்டும் தானே துருவ நட்சத்திரம் அந்தஸ்து கிடைத்தது…!

இன்று நாம் சந்திக்கக்கூடிய அத்தனை சாதனையாளர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் மிக மிக பெரியதொரு அவமரியாதைக்கும் அவமானத்திற்கும் உள்ளாகியவர்கள் தான். எனவே வாழ்வில் வெற்றி பெற அவமதிப்பு, ஏமாற்றம் IGNITE செய்யும் FIRE மிக மிக முக்கியம். அதை நாம் நிறையவே சந்தித்திருக்கிறோம்.

உதாரணத்துக்கு ஒன்று….

சில மாதங்களுக்கு முன்பு சில முன்னணி பதிப்பகங்களை அணுகி நம் திட்டத்தை விளக்கி “என் தளத்தின் பதிவுகளை சற்று மெருகேற்றி இப்படி இரண்டு நூல்களை வெளியிடவிருக்கிறேன்.. நீங்கள் வெளியிட முடியுமா?” என்று கேட்டபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு பிரபல பதிப்பக நிறுவனரை நமக்கு பர்சனலாகவே கடந்த சில ஆண்டுகளாக தெரியும். அவரை தொடர்புகொண்டு அப்பாயிண்ட்மென்ட் நேரில் சென்று நமது புத்தக வெளியீடு பற்றி கூறி, நீங்கள் உங்கள் பதிப்பகம் சார்பாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

“இல்லேப்பா… இதெல்லாம விக்காது. உன் பேரைப் போட்டு புக் போட்டா யாரு வாங்குவாங்க??” என்பது தான் அவர் நம்மிடம் பாலீஷாக கூறியதன் சாராம்சம்.

“சார்… என்னோட படைப்பு மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு… நிச்சயம் இது நல்லா போகும்… சாம்பிளுக்கு ஒரு நாலஞ்சு கட்டுரைகள் அனுப்புறேன்… நீங்களே அப்புறம் சொல்வீங்க… புரிஞ்சிக்குவீங்க….” என்றோம்.

“அனுப்புங்கள் பார்க்கலாம்” என்றார்.

DSC_2353 copy

நாமும் ஆவலோடு சில முக்கிய கதைகளை கட்டுரைகளை அனுப்பினோம். ஆனால் கடைசி வரை அவர் அந்த மின்னஞ்சலை ஓப்பன் செய்து கூட பார்க்கவில்லை.

மிக மிக தரமான (!) படைப்புக்களை வெளியிடுவதில் அவர்கள் நிறுவனம் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் நமது படைப்புக்கள் புறக்கணிக்கப்படுவது நமக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

வேறு ஒரு பதிப்பகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, “நீங்களே புத்தகம் அச்சடிக்க ஆகும் தொகையை கொடுங்கள். நாங்கள் எங்கள் பதிப்பகத்தின் பெயரில் அச்சடித்து தருகிறோம். பின்னர் அதை உங்களிடம் தருவோம். கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடமே வாங்கிக்கொள்வோம்” என்று ஒரு அருமையான டீலை (?!) சொன்னார்கள்.

“சூப்பர்… என் கைக்காசை போட்டு, உங்க பேர்ல புக்கடிச்சு, அதை என்கிட்டேயே நானே வித்துக்கனுமா? நீங்களும் உங்க ஃபார்முலாவும்” என்று வெறுத்துப் போய் வந்துவிட்டோம்.

இப்படி தொடர்ந்து பதிப்பகங்களாக ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருக்கும்போதே, நம் படைப்புக்கள் பல இங்கே திருடு போய்க்கொண்டிருந்தன. நம் முகநூல் நண்பர்கள் சிலரே அவற்றை எங்கெங்கோ இருந்து எடுத்து சுட்டுப் போட்டு நமக்கு பி.பி.யை ஏற்றிக்கொண்டிருந்தனர். (நம்ம தளத்திலிருந்து காப்பியடிச்சவங்க கிட்டே இருந்து இவங்க காப்பியடிச்சு போட்டுக்கிட்டு இருந்தாங்க!!).

எனவே ஒரு கட்டத்திற்கு மேல் நகர முடியவில்லை. தேக்கநிலை தொடர்ந்தது.

Rightmantra Book Release 2

நண்பர் ‘குறள்நெறிச் செல்வர்’ விசாகை திரு.ராஜேந்திர IRS அவர்களிடம் ஒரு நாள் இது குறித்து நாம் பேசி, புத்தகம் வெளியிட நாம் படும் சிரமத்தை பற்றி கூறிக்கொண்டிருந்தோம்.

அவர் “கவலைப்படாதீங்க சுந்தர்… நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் சென்னையில இருக்கார். அவர் பதிப்பக துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவசாலி… அவரை தொடர்புகொண்டால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்” என்றார்.

மாரிமுத்து என்கிற அவரை தொடர்புகொண்டு அலுவலகம் வரச் செய்து பேசியபோது, பதிப்பக துறையின் மறுபக்கத்தை அவர் குறிப்பிட்டபோது நமக்கு தலைசுற்றியது. “நாம எந்தக் காலத்துல புக் பப்ளிஷ் செஞ்சி எந்தக் காலத்துலே மேலே வர்றது…ஹும்…” சலிப்பு தான் ஏற்பட்டது.

அப்போது தான் அவர் ஒரு யோசனை கூறினார். “பேசாம நீங்களே பப்ளிஷ் பண்ணுங்க சார்… நான் உங்களுக்கு எல்லாம் எக்கானமியா முடிச்சு தர்றேன்… லாபமோ நஷ்டமோ உங்களோட போயிடும்…” என்றார்.

நாம் தயங்கினோம். ஏனெனில் புத்தகம் வெளியிட தேவைப்படும் தொகையை புரட்ட நாம் இருக்கும் நிலையில் முடியாது அல்லவா? ‘விருப்ப சந்தா’ கேட்டே இங்கே நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விக்கல் எடுக்கிறது. இதில் புத்தகத்தை எங்கே வெளியிடுவது?

அப்போது தான் அவர் சொன்னார்… “உங்கள் ரெக்கார்ட் நீட்டாக இருக்கும் பட்சத்தில் பேசாமல் வங்கியில் லோன் கேளுங்களேன்..” என்று.

நமக்கு தயக்கம். இருப்பினும் கேட்டுப்பார்ப்போமே… கிடைத்தால் லாபம்… இல்லாவிட்டால் என்ன நஷ்டமாகிவிடப்போகிறது என்று தோன்றியது.

இறைவன் அருளால் கொஞ்சம் லோன் கிடைத்தது.

Rightmantra Wrapper2

Rightmantra Wrapper1

இதற்கிடையே லே-அவுட் பணிகளை துவக்கினோம். நமக்கு புத்தக வடிவமைப்பு (LAYOUT DESIGNING) தெரியுமென்றாலும் நேரமின்மை காரணமாக வெளியே டிசைன் செய்ய கொடுத்தோம். ஆனால் அவர்கள் செய்த டிசைன் நமக்கு திருப்தி அளிக்கவில்லை. பணி ஏனோ தானோ என்றிருந்தது. இத்தனைக்கும் நாமும் இந்த துறையில் அனுபவம் உள்ள நபர் தான் பார்த்து செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்தும் கூட அவர்கள் சரியாக செய்யவில்லை. நமக்கு முதல் நூலாயிற்றே…. முத்திரை பதிக்கவேண்டுமே… ரிஸ்க் எடுக்க முடியுமா? எனவே நாமே களத்தில் இறங்கினோம். வழக்கமான பதிவுகள் எழுதுவது, சந்திப்புக்களுக்கு செல்வது என்று நம் அலுவலக நேரம் போக அலுவலகத்தில் இரவு வரை இருந்து தினசரி டிசைன் செய்தோம். அதாவது நமது நூலை நாமே சிற்பி செதுக்குவது போல செதுக்கினோம். மேலும் நாமே டிசைன் செய்ததால் திருத்தங்கள் CORRECTIONS, ADDITIONS, OMISSIONS இதெல்லாம் மிகவும் சுலபமாக இருந்தது.

அட்டைப் படங்கள் இரண்டும் பிரமாதமாக அமைந்தது. (உண்மையா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்!)

லே-அவுட் மற்றும் அட்டைப்பட டிசைனிங் முடிந்த நிலையில், பிழைத் திருத்தங்கள் துவங்கியது. நண்பர்கள் சிலரிடம் கொடுத்து பிழைத் திருத்தங்கள் செய்தோம்.

அடுத்து புத்தகம் அச்சிடும் பூர்வாங்க பணிகளை துவக்கினோம்.

Rightmantra Book Release 3
நூல் வெளியீட்டு விழாவில் தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறை பாடும் காட்சி…

லோனாக கிடைத்த தொகை நிச்சயம் போதாது. மேலும் வெளியீட்டு விழா வேறு இருக்கிறது. நிச்சயம் விளம்பரத்துக்காகவாவது வெளியீட்டு விழா நடத்தவேண்டும். பாக்கி தொகையை நமது நண்பர்கள் சிலரிடம் CLOUD FUNDING முறையில் கேட்டுப் பெற்றோம். அவரவர் சக்திக்கு ஏற்றவாறு உதவினர். ஏற்கனவே சிலரிடம் நம் கடன்பட்டுள்ளதால் அவர்கள் உதவ தயாராயிருந்தும் நமக்கு கேட்க தயக்கம்.

திரு.மாரிமுத்து அவர்கள் கௌரவிக்கப்ப்படும்போது...
திரு.மாரிமுத்து அவர்கள் கௌரவிக்கப்படும்போது…

அனைத்து பணிகளும் முடிந்து ஒரு ‘மாதிரி புத்தகம்’ தயாரித்து அணிந்துரைக்கு அனுப்பினோம்.

“உன் வாழ்க்கை உன் கையில்!” நூலுக்கு திரு.ராஜேந்திரன் அவர்களும், “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” நூலுக்கு திரு.வீ.கே.டி. பாலன் அவர்களும், ‘திருப்புகழ் செம்மணி’ நீதியரசர் திரு.சேது முருகபூபதி அவர்களும் அணிந்துரை வழங்கினார்கள்.

திருப்புகழ்ச்செம்மணி நீதிபதி திரு.சேது முருகபூபதி
‘திருப்புகழ்ச்செம்மணி’ நீதிபதி திரு.சேது முருகபூபதி

திரு.சேது முருகபூபதி அவர்கள் வழங்கிய அணிந்துரையில் கூறியிருப்பதாவது :

“நூலாசிரியர் திரு.‘ரைட்மந்த்ரா’ சுந்தர் அவர்கள் தன்னுடைய எழுத்தை தனது அனுபவத்தின் கருவியாக கையாண்டுள்ளார். எளிய மக்களும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறு சிறு கட்டுரைகளாக அவர் கோர்த்துள்ளது நல்ல தெளிவு தரும் மாலையாக தெரிகிறது.

காலத்தையும் வென்று நிற்கும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் சொல்லி நாம் சந்திக்கும் சூழ்நிலைகளையும் சொல்லி அவைகளை தீர்வாக மட்டுமில்லாமல், தெளிவாகவும் படிப்பவர்கள் மனதில் பதியும் வண்ணம் சொல்லியுள்ளது பாராட்டக்கூடியது.

அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்கள் மட்டும் போதாது. இது போன்ற சிந்தனைத் தெளிவைத் தரும் நூல்களும் இளைய தலைமுறைகளுக்கு துணை செய்யும். படித்து பயனடையலாம். இதைப் படிப்பவர்கள், எல்லாம் வல்ல  இறைவனின் அருளை பரிபூரணமாக பெற்று இகபர சுகங்களை அடைய வாழ்த்துகிறேன்.

வாழ்க அன்னாரின் ஆன்மிகத் தமிழ்த் தொண்டு!”

– சேது முருகபூபதி.

எத்தனை பெரிய பாக்கியம்…!

விழாவின் நன்றியுரையில் மறக்காமல் ஒன்று குறிப்பிட்டோம் : “I AM THANKFUL TO ALL THOSE WHO SAID “NO” TO ME. BECAUSE OF THEM, I DID IT MYSELF” – WAYNE W.DYER என்கிற மேற்கோள் தான் அது.

"

புத்தக வெளியீட்டு விழா நடந்து முடிந்த ஞாயிறு (20/09/2015) இரவு மிகவும் தாமதமாகத் தான் உறங்கச் சென்றோம். சுமார் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் உறங்கியிருப்போம். ஆனால் அது தான் நீண்ட நாட்களுக்கு பின்னர் நமக்கு கிடைத்த உண்மையான உறக்கம். ஏனெனில் புத்தகங்களை வெளியிடும்வரை நமக்கு உறக்கமே வரவில்லை. உறக்கம் வராமல் நடு இரவில் எழுந்து அமர்ந்த சம்பவங்கள் பல உண்டு.

கலாம் தான் அருமையாக கூறியிருக்கிறாரே….

kalam quote

(மலையை தாண்டிய கதை தொடரும்….)

**** புத்தகம் எங்கு எப்படி பெறுவது உள்ளிட்ட முழு விபரங்கள் நாளை! **** 

==============================================================

Also check :

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

==============================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

[END]

18 thoughts on “இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

  1. அண்ணா எங்க ஊர்ல எங்க கிடைக்கும்னு சீக்கிரம் சொல்லுங்க. கன்னியாகுமரி .

  2. தங்களுக்கு என்று இருக்கும் உண்மை சுடரை போலி நபர்களால் அழிக்க முடியாது.

    அதனால் கவலை கொள்ள வேண்டாம். இதுவரை நீங்கள் கவலை கொண்டதில் அர்த்தம் இருக்கிறது. புத்தக வெளியீட்டின் மூலம் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதால் கவலை கொள்ள வேண்டாம்.

    கூடிய விரைவில் தாங்கள் கடனை அடைத்து, தங்களின் புத்தகங்கள் மகத்தான சாதனை பெறும் என்பதில் ஐயமில்லை.

    சேது முருக பூபதி அவர்கள் என் ஊர் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன் தங்களுக்கு எப்படி தெரியும், தங்கள் புதுவை வந்தீர்களா என்று.

    எல்லாம் நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்.

    வெற்றி நிச்சயம்.

  3. டியர் சார், வாழ்த்துக்கள். உங்கள் புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைக்க மஹா பெரியவாளை பிரார்த்தனை செய்கிறேன் ! மேலும் உங்கள் சேவை தொடரட்டும் !

  4. சுந்தர்ஜி உங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்கள் பட்ட கஷ்டங்களை படிக்கும் பொழுது, உங்கள் நண்பர் சொன்னது போல் சாதிக்க வேண்டுமென்ற வெறியுள்ளவனால் மட்டுமே இது முடியும். தேனடையிலிருந்து தேனை களவாடும் மற்ற உயிரினங்களுக்கு தேனின் ருசி மட்டுமே தெரியும். ஆனால் அதை உருவாக்கும் கலை தேனீக்களுக்கு மட்டுமே உரியது. நீங்கள் தேனீ போன்றவர். உங்கள் முயற்சிக்கு என் அருணாச்சலம் துணையிருப்பான். தொடர்ந்து முன்னே செல்லுங்கள்.

  5. அன்புள்ள சுந்தர் சார்,

    தங்கள் மன உறுதிக்கும், கடும் உழைப்பிற்கும் தலை வணங்குகிறோம்.. நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.. உங்கள் எழுத்துகளை புத்தகமாக வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம்.

  6. ஒரு ஒரு முறை வரும் தடை களும் உங்களுக்கு மேலும் ஒரு உயர்வையே கொடுக்கிறது
    நடந்தவை நடப்பவை நடக்போரவை எல்லாம் நன்மைக்கே
    ரொம்ப நாள் கழித்து ஒரு புத்தகத்தை கையில் எடுக்க வைதிருகீர்கள்
    அதிலும்
    அந்த போகும் பாதையில் புயல் கதை மிகவும் என்னை கவர்ந்தது
    இது அம்மா எனக்கு அடிகடி கூறும் அறிவுரை…
    உங்கள் அனுபவ கதைகள் அது போன்றவையே
    மேலும் பல அவதாரங்களை எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்

    நன்றி
    ஹரி.சிவாஜி

    1. நன்றி ஹரிசிவாஜி. உங்களுக்குத் தான் நடந்தது நடப்பது எல்லாம் தெரியுமே…

      அந்தவகையில் ஒவ்வொரு கதையும் உங்களைப் பொறுத்தவரை புதிய அர்த்தத்தை கொடுக்கும்.

      விழாவுக்கு வந்து முழுதும் இருந்து ரசித்து நூல்களையும் தவறாமல் வாங்கியமைக்கு மிக்க நன்றி. அதுவும் உங்கள் திருமதி நிறைமாதத்தில் இருக்கும்போது.

      உங்களை சரியாக கவனிக்கக் கூட முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம். மன்னிக்கவும்.

  7. தாங்கள் பட்ட அவமானங்களும் வேதனைகளுமே தாங்கள் பதிப்பகத் துறையில் காலடி வைத்து இரண்டு மாபெரும் அறிய நூல்களை வெளியிட்டு தங்கள் பொன் முத்திரையை பதித்து இருக்கிறீர்கள்.

    நான் இரண்டு நூல்களையும் படித்து விட்டு மெய் சிலிர்தேன், என்ன தான் தங்கள் பதிவை தங்கள் தளத்தில் படித்தாலும் புத்தக வாயிலாக படிக்கும் பொழுது இன்னும் சிறப்பாக மனதில் பதியும் விதமாக அமைந்துள்ளது, ஒவ்வொரு பதிவும் ஒன்றை ஒன்று விஞ்சு நிற்கிறது. இந்த இரண்டு நூல்களும் எல்லோருக்கும் காலம் காலமாக பயன் படும் விதத்தில் எழுதி இருப்பது தங்களின் சிறப்பு. நூல்கள் கைகளில் இருப்பதால் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது.

    தாங்கள் நண்பர் தங்களுக்கு சொன்ன அட்வைஸ் வைர வரிகள். இந்த வைர வரிகள் எனக்கு ஒரு புதுவித உத்வேகத்தை அளித்துள்ளது

    தங்களின் முதல் போட்டோவை பார்த்தால் தாங்கள் அடைந்த சாதனையின் வெற்றியை மிகவும் மகிழ்ச்சியோடு அண்ணாந்து பார்ப்பது போல் உள்ளது.

    தங்கள் ஆன்மிகத் தொண்டிலும், பதிப்பகத் துறையிலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

    என் அம்மாவிடமும் தங்கள் புத்தக நூல் வெளியீட்டு விழாவைப் பற்றி போன வாரம் கூறினேன். நேற்று அவர்கள் போன் செய்து விழாவை பற்றி விசாரித்து , தங்களிடம் வாழ்த்தையும் , ஆசியையும் தெரிவிக்க சொன்னார்கள்.

    வாழ்க .. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  8. சார், இன்னும் புத்தகத்தை பார்க்க கூட இல்லை நாங்க| .
    அதுக்குள்ளே கமெண்ட்ஸ் வந்துக்கிட்டே இருக்குது ஆவலை அடக்க முடியவில்லை சார் .

    PLEASE GIVE THE DETAILS ABOUT THE AVAILABILITY/METHOD ஏறக்

    ஆவலுடன்
    தங்கள்

    சோ. ரவிச்சந்திரன்
    கரவார், கர்நாடக
    9480553409

  9. பாராட்டுக்கள்; சுந்தர்ஜி !

    எல்லாம் நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்!

    1. தம்பி, உங்களுக்கு என்னைக்கு தான் கமிட்மென்ட் இல்லே? இந்த உலகத்திலேயே பிஸியான ஆளு நீங்க தான்றது எனக்கு மட்டுமில்லே எல்லாருக்கும் தெரியும். (ஆனா பாருங்க… எங்களுக்கு தான் வேலைவெட்டி இல்லே!)

      ஒன்னு மட்டும் சொல்றேன்… நீங்க நல்லா வருவீங்க. ரொம்ப நல்லா வருவீங்க.

  10. Dear sundar,

    very very heartful congratulations to you and for RM.more to come sundar ji. keep going and keep motivating the society.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *