நம் தளம் சார்பாக நடைபெறும் முதல் பொது நிகழ்ச்சி இது. முதல் நிகழ்ச்சியே ஒரு கோவிலில் நடைபெறுவது நாம் செய்த பாக்கியம்.
ஆன்றோர்களும் சான்றோர்களும் வருகை தரும் இவ்விழாவிற்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விபரத்துடன் அழைப்பிதழ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .
எத்தனையோ இன்னல்களுக்கிடையே பாலைவனங்களையெல்லாம் கடந்து கரடு முரடான முட்கள் நிறைந்த பாதையில் பயணித்து இன்று ஒரு கோவிலில் வந்து சேர்ந்திருப்பதாக உணர்கிறேன். அவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு? எல்லாம் நன்மைக்கே.
இது கனவிலும் நாம் மறக்கக்கூடாத ஒரு மாமனிதனுக்கு எடுக்கப்படும் விழா. எனவே நண்பர்கள் மற்றும் தள வாசகர்கள் அனைவரும் எந்த ஃபார்மாலிட்டியும் பார்க்காது தங்கள் குடும்பத்தோடு இந்த எளிய விழாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சமும் பாரதியை நினைவு கூர்வதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பயனுள்ள வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
கடவுள் வாழ்த்து பாடும்போதே நீங்கள் விழாவில் மிகவும் ஒன்றிவிடுவீர்கள் என்பது உறுதி.
நாள் : டிசம்பர் 09, 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை
நேரம் : 5.50 PM to 8.30 PM
இடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.
பஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
-பாரதி
வாழ்த்துக்கள் ஜி. இந்த நல்ல விழாவிற்கு ஏற்பாடு செய்தமைக்கும், நல்ல சிந்தனை விதைபதற்க்கும் மிக்க நன்றி.
ப.சங்கரநாராயணன்
I’m indeed very happy to see this.
***
From the guests, simplicity and goodness of the event, the event for the right person…all indicates indeed this is Right mantra’s event as the name tells.
***
Invitation design is so good with the very apt color and everything.
***
And I’m so excited to see all these great phenomenon and Rishi sir when i come there.
***
With all these motivations from the event, next year all of us (our team) should reach beyond the sky. I sincerely pray for that and having hope and confidence to achieve for myself (my success).
***
Keep going. Be good, Do good.
**
By,
Chitti.
“Thoughts becomes things”.
U r very much right Chitti–“thoughts becomes things”!!
Amazing design work for the invite–black and white ah irundalum chuuma nachunu iruku–thats the speciality which could not have been possible in colour font..
And the guests we have–what a treasure for everyone to be among them, infact we should be blessed to listen these great selfless souls speak!!
All credit goes to the almighty!!
this is just the beginning!!
Nothing can stop you if u decide to not get stopped!!
The countdown has just begun!!
இந்த விழா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..
Congrates in advance sundar..
————————————————-
நன்றி! நீங்க நிச்சயம் அதுல கலந்துப்பீங்கன்னு நம்புறேன்.
– சுந்தர்
எங்கள் குடும்பத்துடன் வருகிறோம் . தங்கள் தொலைபேசி தொடர்பில் இல்லை அதுதான் வருத்தம்’. அண்ணாமலையார் உங்களை காண பணித்துள்ளார் . திருவண்ணாமலை வந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும் தங்கள் தங்குவதற்கு வசதி உள்ளது . தொடர்புக்கு (ஒன்பது மூன்று ஆரூ இரண்டு எட்டு எழு ஒன்று மூன்று பூஜ்யம் பூஜ்யம் ) கிருஷ்ணமூர்த்தி மற்றும் குடும்பத்தினர்.
———————————————–
மன்னிக்கவும். 24 மணிநேரமும் அலைபேசியை ஆனில் வைத்திருக்கிறேன். தங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை.
அவசியம் வரவும்.
நன்றி….!
இந்த எண்களையும் தொடர்புகொள்ளவும். 9080329836, 9444893210
– சுந்தர்