நமக்கு மூர்த்தி பேதம் கிடையாது. அப்பன் மீது வைக்கும் அந்தப் பற்றை அவன் மகன் சுப்பன் மீதும் வைக்க முடியும். அவன் மாமன் மீதும் வைக்கமுடியும். யாரைத் தொழுகிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும். மற்றது தானே நடக்கும் என்பது அடியேன் தெளிந்தது.
திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீனிவாசனை பேயாழ்வார் எப்படி பாடுகிறார் பாருங்கள்….
தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்,
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து!
ஓம் நமோ நாராயணாய!
பதிவைப் படித்ததும் திருஊரகப் பெருமாளை உடனே தரிசிக்கவேண்டும், உழவாரப்பணிகளில் பங்கேற்க என்று உங்களுக்கு தோன்றினால் அதுவே நம் வெற்றி.
=========================================================
ஆணும் பெண்ணும் கூடுவதோடு சரி. அதற்கு பிறகு ஒரு பெண் கருத்தரித்து அந்தக் கரு தாயின் கருப்பையில் சீராக வளர்ந்து நல்லபடியாக பிரசவித்து வெளியே வரும் வரை – எதுவுமே மனிதனின் கைகளில் இல்லை. இந்தப் பத்து மாத காலகட்டம் என்பது மிக மிக முக்கியமான காலகட்டம். “கடவுள் நம்பிக்கையே எனக்கு இல்லை” என்று நெஞ்சை நிமிர்த்தி திரிபவர்கள் கூட ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருப்பார்கள்.
என் தங்கை அன்னபூரணி இரண்டாம் முறை கருத்தரித்து டெலிவரி எதிர்நோக்கியிருந்தாள். ஜனவரி 6 DELIVERY DATE குறித்திருந்தார்கள். ஆனால் 6 ஆம் தேதி காலை வரை வலி வரவில்லை. எனவே நேற்று முன்தினம் காலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டோம்.
அவளை பரிசோதித்த டாக்டர் எப்போது வேண்டுமானால் வலி வரலாம் என்று கூறினார்கள். இதற்கிடையே மாப்பிள்ளையும் என் பெற்றோரும் தங்கையுடன் கூட இருந்தாலும் நானும் இருக்கவேண்டும் என்று வீட்டில் விரும்பினார்கள். ஆனால் அடியேனோ வைகுண்ட ஏகாதசி சிறப்பு உழவாரப்பணியை முன்பே ஒப்புக்கொண்டுவிட்டேன். ஒப்புக்கொண்ட உழவாரப்பணியை கேன்சல் செய்ய எனக்கு விருப்பமில்லை. “நீங்கள் அவளுடன் இருங்கள். நான் அந்நேரம் அரங்கனுக்கு தொண்டு செய்த்துக்கொண்டிருப்பேன். அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்” என்று ஏதோ சமாதானம் கூறிவிட்டு பணிக்கு குழுவினருடன் குன்றத்தூர் திருவூரகப் பெருமாள் கோவிலுக்கு வந்துவிட்டேன்.
இதற்கிடையே நேற்று காலை வரை அவளுக்கு வலி வரவில்லை. எனவே மாத்திரைகள் கொடுத்தனர். பின்பு டிரிப்ஸ் கொடுத்தனர்.
இங்கு உழவாரப்பணியில் இருந்த எனக்கு மாப்பிள்ளையும் அம்மாவும் ஃபோன் செய்து அவ்வப்போது அப்டேட் செய்தனர். நானும் பதட்டத்துடன் விசாரித்தபடி இருந்தேன்.
சற்று நேரத்தில் “குழந்தை எடை கொஞ்சம் கூட இருப்பதால் நிலைமை கொஞ்சம் COMPLICATED ஆக இருக்கிறது. இன்னும் இரண்டு மணி நேரம் பார்க்கலாம். கூடுமானவரை சுகப் பிரசவத்துக்கு முயற்சிப்பதாகவும், அது முடியாத பட்சத்தில் சிசேரியன் தான் செய்யவேண்டும்” என்று டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தனர்.
நாம் உடனே திருவூரகப் பெருமாளிடம் சுகப் பிரசவத்துக்கும் தாய் சேய் நலனுக்கும் பிரார்த்தித்துக்கொண்டேன். பட்டரிடமும் தனியே விஷயத்தை சொல்லி திருஊரகப் பெருமாளிடம் பிரார்த்திக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். “ஒன்னும் பயப்படாதீங்க. எல்லாம் நல்ல படியா முடியும்” என்று தைரியமூட்டினார்.
நானும் அரங்கன் மேல் பாரத்தை போட்டுவிட்டு சற்று கஷ்டமாக இருந்தாலும் பணியில் கவனம் செலுத்தினேன்.
அடுத்த 20 நிமிடத்தில் மாப்பிள்ளையிடமிருந்து அலைபேசி வந்தது. பதட்டத்துடன் தான் அட்டென்ட் செய்தேன். “ஆண் குழந்தை சுப ஜனனம்… நார்மல் டெலிவரி…” என்று தெரிவித்தார்.
“திருவூரகப் பெருமாளே நன்றி” உடனே ஓடிப்போய் பட்டரின் கைகளை பிடித்து விஷயத்தை அவரிடம் முதலில் சொல்லி நன்றி தெரிவித்தேன். பின்னர் எங்கள் குழுவினருக்கு விஷயத்தை சொன்னேன்.
அப்போது தான் பலருக்கு நான் எந்த ஒரு சூழலில் அங்கு இருக்கிறேன் என்று தெரிந்தது. பின்னர் அனைவருக்கும் இனிப்புக்கள் கொடுத்தேன்.
தங்கைக்கு இது இரண்டாவது குழந்தை (முதலில் பெண் குழந்தை சாய் நிவேதிதா வயது ஏழு). இருந்தாலும் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி போல. அது ஒரு வகையில் புனர்ஜென்மம். அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்.
சிக்கலாக மாறவிருந்த பிரசவத்தை சுகப் பிரசவமாக மாற்றி அருள் செய்தான் அரங்கன் என்பதே உண்மை.
பிரசவம் பார்த்த டாக்டர் ராதா மாப்பிள்ளையிடம் கூறியது என்ன தெரியுமா?
“I thought it would be complicated. It’s really a miracle!!”
அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது?
========================================================
Don’t miss these articles…
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!
“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?
========================================================
இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
========================================================
Also check :
பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?
95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!
கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….
கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா?
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
========================================================
[END]
Congrats Sundarji for an new Born baby in your family.
Thanks to Ranganatha.
Congrats Sundar….faith move mountains…
வாழ்த்துக்கள் சுந்தர் ஐயா!
Dear SundarJI,
Congrats..
Ramesh
அரங்கன் அருள் கடாக்ஷத்துடன் தங்கள் வீட்டு குட்டி பாப்பா பிறந்துள்ளான்..
இனிப்பான செய்தி…!
நெஞ்சம் கனிந்த நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சுந்தர் சார்.