Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > ஆண்டவனை ஆழம் பார்க்கலாமா?

ஆண்டவனை ஆழம் பார்க்கலாமா?

print
ரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.

ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.

“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”

“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”

“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு  சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.

அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.

மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.

“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”

“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”

“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம்.

பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.

“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.

அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.

சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.

கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.

பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல.

இந்த வார கூட்டு பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

=============================================================

கார் விபத்தில் காயம்

நம் தள வாசகரும் என் நண்பருமான திரு.பழனியப்பன் அவர்களின் நெருங்கிய உறவினர் திரு.சிங்காரம் (70) வெளியூர் சென்று காரில் திரும்பிக்கொண்டிருக்கையில் கார் விபத்துக்குள்ளாகி படுகாயமுற்று தற்போது வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்து கட்டத்தை அவர் தாண்டிவிட்டாலும், அவர் இன்னும் எழுந்து நடக்க முடியாத சூழல் நிலவுகிறது. திரு.சிங்காரம் அவர்கள் பரிபூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
=============================================================

திரு.பழனியப்பன் அவர்கள் மிகவும் தர்மசிந்தனை படைத்தவர். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு  செல்வி. வினோதினி தீவிர சிகிச்சை பெற்று வரும்போது அது குறித்த நம் பதிவை பார்த்தவிட்டு, அவரும் அவர் நண்பர்களும் மட்டுமே சேர்ந்து சுமார் ரூ.17,000/- நிதியை தயார் செய்து வினோதினியின் தந்தை ஜெயபாலனிடம் நேரிலேயே சென்று அளித்தார். அதுமட்டுமல்ல தற்போது பிரேமவாசம் பற்றிய நம் பதிவை பார்த்துவிட்டு குழந்தைகள் ஸ்கூல் பேக் வாங்க மிக பெரிய நிதி ஒன்றை தமது அசோசியேஷன் சார்பில் பிரேமவாசம் சென்று அளித்திருக்கிறார். (இது பற்றியும் இரண்டாம் கட்ட சீருடைகள் மற்றும் விளையாட்டு சாமான்கள் அக்குழந்தைகளுக்கு நாம் வழங்கியது பற்றியும் தனியாக பதிவு விரைவில் வரும்.)

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஜூன் 9, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=============================================================

7 thoughts on “ஆண்டவனை ஆழம் பார்க்கலாமா?

 1. நம் பிரார்த்தனை கிளப் மூலமாக நடைபெறும் பிரார்த்தனைகள் நிறைவேற தொடங்கி விட்டதை உஷா மேடம் மூலமும், சிவா சார் மூலமும் நமக்கு தகவல்கள் வந்துவிட்டது.
  அதேபோல் திரு.பழனியப்பன் சார் உறவினர் விரைவில் குணமாக நாம் பிரார்த்தனை செய்வோம். அவர் நலமுடன் வீடு திரும்புவார்

 2. திரு.பழனியப்பன் அவர்களின் நெருங்கிய உறவினர் திரு.சிங்காரம் விரைவில் குணமடைய நானும் எனது நண்பர்களும் மனபூர்வமாக பிரார்த்திக்கிறோம் .

  கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்று சுந்தர்ஜி விளக்கம் அருமை .

  வாரம் வாரம் இந்த கூட்டு பிரார்த்தனையில் ஜாதி, மத பேதம், குலம், கோத்திரம் இன்றி எல்லா மக்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்ய வரவேண்டும் .

 3. வணக்கம் சார், கடவுள் மேல் உள்ள நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என அருமையான கதை . அந்த பெண்ணின் நம்பிக்கை போல் நாமும் பிரார்த்திப்போம் . விரைவில் திரு. சிங்காரம் அவர்கள் குணமடைய வேண்டுவோம் . அவர் விரைவில் குணமடைவார்.

 4. பக்தியின் மேன்மையையும்
  நம்பிக்கையின் ஆழத்தையும் உணர்த்தும் உன்னதமான கதை !!!

  பக்தி ஒரு நொடி என்றாலும்
  அந்த நொடிப்பொழுது பூரண சரணாகதி அடைதோமேயானால் இறைவன் அருள் கிடைப்பது திண்ணம் !!!

  இதற்க்கு புராணங்களில் பல உதாரணங்கள் உள்ளன !!!

  நல்லதே நினைப்போம் !!!
  நல்லதே நடக்கும் !!!

  மனக்குறை நீங்கி
  பூரண உடல் நலம் பெற
  எல்லோருக்காகவும் பிரார்த்திப்போம் !!!

 5. நன்றி எனும் வார்த்தை மிக மிக சிறியது
  இருப்பினும் கோடான கோடி நன்றி நம் இறைவனுக்கும் நம் நண்பர்களுக்கும் …

 6. Dear Sundar Anna,
  First and foremost a heartfelt thanks and gratitude to all those who prayed for the well being of my peripa-Mr Santhanam and also for you who put the prayer request on ur own without me requesting for it.
  Peripa was discharged from hospital on Saturday night. He is better now and is under medication, will have to go for regular check-up.

  It was the prayers of all the good souls that made this possible-anything could have happened-BRAIN STROKE is not a trivial issue or problem-So to recover from this is a wonderful thing to happen.

  Another sincere request to OUR RIGHTMANTRA readers—
  BRAIN and HEART are the 2 most delicate/subtle parts of our body so we need to take full care of it which we regularly avoid.
  We rather put unwanted thoughts into it and create unwanted problems for all. Its better to share these things with GOD/people and clear our mind and heart.
  Today’s society will definitely make us put pressure on our brain and heart, but its we who have to protect these from all the dangers.
  There is no point in worrying over things that has happened, let us ALL BE GOOD AND DO GOOD and leave everything to the ALMIGHTY.
  I am sure that no one can escape from the LAW OF KARMA, so people will have to face the consequences of what they do.
  LET US free ourselves and make it our AIM to have a healthy and heart and clear mind.

  Regards
  R.HariHaraSudan.
  “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *