Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே! MUST READ!!

கற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே! MUST READ!!

print
குழந்தைகளை தயார் செய்து அவர்களை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவது என்பது இங்கிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய யுத்தம் போலத் தான். இத்தனைக்கும் நகர்ப்புறங்களில் பெரும்பாலான மாணவ மாணவிகள் ஸ்கூல் பஸ்ஸில் தான் தங்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அவர்களை பஸ் ஸ்டாப்பில் கொண்டு போய் விடுவதற்கே இங்கு பெற்றோர் பலருக்கு மூச்சு முட்டிவிடுகிறது. மேலும் சில மாணவர்களை பெற்றோரே பாதுக்காப்பாக ஸ்கூலில் கொண்டு போய் விடுகின்றனர். மேலும் சிலர் தாங்களாகவே சைக்கிளை ஒட்டிக்கொண்டு செல்கின்றனர். வேறு சிலர் அல்லது பலர் அரசுப் பேருந்துகளில் ‘இலவச’ பஸ் பாஸ் மூலம் செல்கின்றனர். எப்படியோ அவரவர் சௌகரியப்படியும் வசதிப்படியும் இந்த பள்ளிப் பயணம் அமைகிறது.

இந்த குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் தெரியுமா???

இத்தனை வசதிகள் நமக்கு இருந்தும் அது பற்றி குறைபட்டுக்கொண்டே இருப்பவர்கள் கீழே இந்த குழந்தைகள் எப்படி பள்ளி செல்கிறார்கள் என்பதை பாருங்கள்.

‘கற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இது சிலருக்கு நம்பமுடியாததாக இருக்கலாம். ஆனால், உலகெங்கிலும் முன்னேற்றம் அடையாத நாடுகளின் (UNDER DEVELOPED COUNTRIES) பல பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பல இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். இக்குழந்தைகளுக்கு கல்வி மீது எந்தளவு ஆர்வம் இருந்தால் இப்படி செல்வார்கள் என்பதை நினைத்து பாருங்கள்.

மலையின் பக்கவாட்டில் ஊர்ந்து….

சீனாவில் உள்ள ஜெங்குவான் என்னும் கிராமத்தில் உள்ள குழந்தைகள், தென்மேற்கு சீனாவில் உள்ள குவிசௌ மாகாணத்தில் உள்ள பள்ளிக்கு செல்ல தினசரி ஒரு மலையின் பக்கவாட்டில் ஊர்ந்து தான் செல்லவேண்டும்.

அரை மீட்டர் மட்டுமே அகலமுடைய கற்கள் நிரம்பிய கரடு முரடான நடைபாதையில் குழந்தைகள் செல்லும்போது எதிரே யாராவது வந்துவிட்டால், அப்படியே தங்கள் வயிறை உள்ளிழுத்து மலையோடு சேர்ந்து ஒட்டிக்கொள்ளவேண்டும். மாற்றுப் பாதை உண்டு. ஆனால் அதில் சென்றால் இரண்டு மணிநேரமாகும்.

[box size=”large” style=”rounded” border=”full”]அரை மீட்டர் மட்டுமே அகலமுடைய கற்கள் நிரம்பிய கரடு முரடான நடைபாதையில் குழந்தைகள் செல்லும்போது எதிரே யாராவது வந்துவிட்டால், அப்படியே தங்கள் வயிறை உள்ளிழுத்து மலையோடு சேர்ந்து ஒட்டிக்கொள்ளவேண்டும்.[/box]

இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இவர்களின் தலைமை ஆசிரியர் சூ லியாங் ஃபா என்பவரும் குழந்தைகளுடன் துணைக்கு வருவது தான்.

பாலத்தின் மிச்ச மீதியை பிடித்து தொங்கியபடி

சுமத்ரா இந்தோனேசியாவில் சுமார் 20க்கு மேற்ப்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளின் கதை இன்னும் திகிலானது. பட்டூ புசுக் என்னும் அவர்களின் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு எப்படி செல்லவேண்டும் தெரியுமா?

ஆக்ரோஷித்து ஓடும் நதியின் மீது, உள்ள கம்பியையும் கயிற்றையும் பிடித்தபடி நடந்து சென்று, பின்னர் அங்கிருந்து காடுகள் வழியே சுமார் ஏழு கி.மீ. நடந்து படாங் என்னும் நகரில் உள்ள அவர்களின் பள்ளிக்கூடம் செல்லவேண்டும். (மந்த்ரா) ஆற்றின் மீது கட்டப்பட்ட தொங்குபாலம் கடும் மழையின் காரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் சேதமடைந்துவிட்டபடியால்அது முதல் பள்ளி குழந்தைகள் இப்படி தான் பாலத்தின் மிச்ச மீதியை பிடித்து தொங்கியபடி பள்ளிக்கு செல்கிறார்கள்.

[box size=”large” style=”rounded” border=”full”]ஆக்ரோஷித்து ஓடும் நதியின் மீது, உள்ள கம்பியையும் கயிற்றையும் பிடித்தபடி நடந்து சென்று, பின்னர் அங்கிருந்து காடுகள் வழியே சுமார் ஏழு கி.மீ. நடந்து படாங் என்னும் நகரில் உள்ள அவர்களின் பள்ளிக்கூடம் செல்லவேண்டும்.[/box]

இந்தோனேசியாவின் மற்றொரு கிராமமான சான்கியாங் தன்ஜுங்கில், சிபராங் நதியின் அடுத்த பக்கத்தில் வசிக்கும் குழந்தைகள் இதே போன்று உடைந்து போன ஒரு தொங்கு பாலத்தின் வழியே தான் பள்ளிக்கு செல்லவேண்டும். வேறொரு வழி இருக்கிறதாம். ஆனால் அந்த வழியே சென்றால் கூடுதல் நேரமாகுமாம்.

நல்ல செய்தி என்னவெனில், இந்தோனேசியாவின் மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமும் சில என்.ஜி.ஓ.க்களும் இணைந்து பழைய பாலத்திற்கு பதில் சமீபத்தில் புதிய பாலம் கட்டியிருக்கிறார்களாம்.

ஒற்றையடி பாலத்தில் ஆபத்தான சைக்கிள் பயணம்

இன்னும் இருக்கிறது இந்தோனேசிய மாணவர்களின் திகில் பள்ளி பயணம் …. சுரோ மற்றும் பிலெம்புங்கன் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே ஓடும் ஒரு வாய்க்காலின் மேல், சைக்கிளில் செல்கிறார்கள். (ரைட்) இந்த பாதை சைக்கிளில் செல்லவோ நடக்கவோ அல்ல. இருப்பினும் இதில் சென்றால் பள்ளிக்கு சீக்கிரம் சென்றுவிடலாம் என்று இந்த வாய்க்காலின் மேல் இப்படி ரிஸ்க் எடுத்து செல்கின்றனர்.


இது மிகவும் ஆபத்தானது என்பதை அக்குழந்தைகள் அறிந்திருந்தாலும் இந்த பாதை மட்டும் இல்லையெனில் ஆறு கி.மீ. சுற்றி சென்று பள்ளி செல்லவேண்டுமாம்.

ரப்பர் ட்யூப்  தான் இங்கு தோணி….

பிலிப்பினோ தீவில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு கிழக்கே அமைந்து ரைசல் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கு சுற்றுப் பகுதி மாணவர்கள் எப்படி செல்கிறார்கள் என்றால், காற்றடிக்கப்பட்ட ரப்பர் டியூப்களை உபயோகித்து ஒரு ஆற்றை கடந்து தான். இப்படி இருந்து பள்ளிக்கு செல்லவும் திரும்பி வரவும் ஒரு மணிநேரத்திற்கு மேல் நடக்க வேண்டியுள்ளதாம்.

மழைக்காலங்களில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும் சமயங்களில் வகுப்பகளை மாணவர்கள் கட்டடிக்க நேர்கிறதாம். (ரைட்). மேலும் பள்ளி செல்ல முடியாமல் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துவிடுகிறார்களாம். ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்க அரசாங்கத்திடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்திருக்கிறார்களாம்.

வியட்நாம் குழந்தைகளின் நீச்சல் பயணம் ….

பிலிப்பினோ குழந்தைகளுக்காவது ஆற்றை கடக்க ட்யூப் இருக்கிறது. ஆனால் இந்த வியட்நாம் குழந்தைகளுக்கு அது கூட இல்லை. 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மின் ஹோவா மாவட்டத்தில் உள்ள டிரோங் ஹவோ கம்மூன் என்னும் இடத்தில் உள்ள தங்கள் பள்ளிக்கு செல்ல தினமும் இரு வேளை ஆற்றை நீந்தி தான் செல்ல வேண்டியிருக்கிறதாம்.

[box size=”large” style=”rounded” border=”full”]1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மின் ஹோவா மாவட்டத்தில் உள்ள டிரோங் ஹவோ கம்மூன் என்னும் இடத்தில் உள்ள தங்கள் பள்ளிக்கு செல்ல தினமும் இரு வேளை ஆற்றை நீந்தி தான் செல்ல வேண்டியிருக்கிறதாம்.[/box]

புத்தகங்களும், சீருடைகளும் இதர பொருட்களும் நனையாமல் இருக்க அவற்றை பாலித்தீன் பைகளில் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு, இவர்கள் முழு நிர்வாணமாகி தான் செல்வார்களாம். இந்த பிளாஸ்டிக் பைகள் இவர்கள் நீந்துவதற்கும் உபயோகமாக இருக்குமாம். ஆற்றின் அந்த கரைக்கு சென்றவுடன் பாலித்தீன் பைகளில் இருந்து சீருடைகளை எடுத்து அணிந்துகொண்டு பின்னர் செல்வார்களாம்.

இந்த ஆறு 15 மீட்டர் அகலமும், 20 மீட்டர் ஆழமும் கொண்டதாம்.

நேபால் : கோண்டோலா பாலத்தில் தொங்கியபடி!

அடுத்து…. நேபால். மழைப் பிரதேசமான இங்கு சாலை வசதிகள் குறைவு என்பதால் கோண்டோலா பாலங்கள் தான் இங்கு அதிகம். மரக்கட்டைகள், கயிறு மற்றும் ராட்டினம் இவைகளால் ஆனது தான் கோண்டோலா பாலம். இவை பாதுகாப்பற்றவை. உயிருக்கு எந்த வித உத்திரவாதமும் இன்றி குழந்தைகள் இதை பயன்படுத்துகின்றனர் (ரைட்). ஆகையால் தான் கடந்த பத்து ஆண்டுகளில் பல விபத்துக்கள் ஏற்பட்டு பல குழந்தைகள் இறந்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக சில என்.ஜி.ஓ.க்கள் தலையிட்டு பாதுகாப்பான பாலங்கள் மற்றும் கொண்டோலாக்களை கட்ட முயற்சிகள் எடுத்து அதற்க்கு நிதி திரட்டி வருகின்றனர்.

கொலம்பியா நாட்டில் தலைநகர் போகொடாவிளிருந்து நாற்பது மெயில் தூரத்தில் உள்ள (Rainforest) மழைக்காடுகளில் வசிக்கும் சில குடும்பங்களின் குழந்தைகள் எப்படி பள்ளிக்கு செல்கிறார்கள் தெரியுமா? எப்போதும் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் ‘கருப்பு ஆறு’ (Black river) எனப்படும் ரியோ நெக்ரோ ஆற்றின் மீது 400 மீட்டர் உயரத்தில் இரு பள்ளத் தாக்குகளையும் இணைக்கும் ஒரு ஸ்டீல் கம்பியில் தொங்கிச் சென்று தான். இது ஒன்று தான் அவர்கள் பள்ளிக்கு செல்ல இருக்கும் ஒரே வழி. இதன் நீளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை சுமார் 800 மீட்டர்.

(உங்கள் பிள்ளை பள்ளி செல்ல நீங்கள் வாங்கித் தந்த சைக்கிளை சரியாக பராமரிக்கவில்லை எனில் இந்த பதிவை அவர்களிடம் நினைவுபடுத்துங்கள்!! )

இரு பள்ளத்தாக்குகளுக்கிடையே 50 கி.மீ. வேகத்தில்….

இந்த புகைப்படத்தில் காணப்படும் டெய்சி மோரா மற்றும் அவளது தம்பி ஜாமிட் இருவரும் எத்தனை கி.மீ. வேகத்தில் செல்கிறார்கள் தெரியுமா? 50 கி.மீ. வேகத்தில். கோணிப்பையில் காணப்படுவது தான் அவளது தம்பி ஜாமிட். ஐந்தே வயதான தன் தம்பியால் தன்னந்தனியாக இந்த பள்ளத்தாக்கை கடக்க முடியாது என்பதால் அவனை சேர்த்து கோணிப்பையில் கட்டி அழைத்து செல்கிறாள். அவள் மற்றொரு கையில் பிடித்திருக்கும் ‘V’ வடிவ மரக்கட்டை தான் எமர்ஜென்சி பிரேக். இதை புகைப்படமேடுத்தவர் கிறிஸ்டோப் ஓட்டோ என்னும் புகைப்படக்காரர்.

[box size=”large” style=”rounded” border=”full”]இருவரும் எத்தனை கி.மீ. வேகத்தில் செல்கிறார்கள் தெரியுமா? 50 கி.மீ. வேகத்தில். கோணிப்பையில் காணப்படுவது தான் அவளது தம்பி ஜாமிட். ஐந்தே வயதான தன் தம்பியால் தன்னந்தனியாக இந்த பள்ளத்தாக்கை கடக்க முடியாது என்பதால் அவனை சேர்த்து கோணிப்பையில் கட்டி அழைத்து செல்கிறாள்.[/box]

இதே போல, சீனாவின் மலைப் பகுதி ஒன்றில் இருக்கும் பிலி என்னும் ஊரில் உள்ள போர்டிங் ஸ்கூலுக்கு (உறைவிடப் பள்ளி) மாணவர்கள் விடுமுறை முடிந்த பின்னர் மீண்டும் எப்படி செல்கிறார்கள் தெரியுமா? ‘ஜிங்ஜியாங் உயிகுர்’ சுயாட்சி மாகாணத்தில் உள்ள 125 மைல் நீளமுள்ள மலைத்தொடரின் வழியே தான். செல்லும் வழியில் நான்கு மிகப் பெரிய பனியாறுகள் உள்ளன.

அது மட்டுமல்ல 650 அடி நீளமுள்ள சங்கிலிப் பாலம் ஒன்று, மரப்பலகைகளால் மட்டுமே ஆனா பாலங்கள் நான்கு இவற்றின் வழியே தான் செல்லவேண்டும். (மந்த்ரா) இவர்கள் பள்ளிக்கு சென்று சேர இரண்டு முதல் நான்கு நாட்கள் ஆகுமாம். இடையிடையே செங்குத்தான மலைகள் மீதும் ஏறவேண்டும். எதிலும் பாதை கிடையாது. கால் வைக்கும் இடங்கள் தான் பாதை.

“உயிரை கொடுத்தாவது நான் படிப்பேன்”

கடைசீயில் இதோ மயிர் கூச்செறிய வைக்கும் ஒரு புகைப்படம். ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காக அம்மார் அவாத் என்னும் புகைப்படக்காரர் எடுத்த படம் இது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் நடந்துகொண்டிருக்கும்போது, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வதை பாருங்கள். சுற்றி நடக்கும் வன்முறைகள் எதையும் இந்த சிறுமி சட்டை செய்யவில்லை. “போங்கடா உங்களுக்கு வேற வேலை இல்லை. எனக்கு என் படிப்பு தான் முக்கியம். உயிரை கொடுத்தாவது நான் படிப்பேன்” என்று சொல்கிறாளோ? சிறுமிக்கு பின்னால் இருப்பவர்கள் இஸ்ரேலிய துருப்புக்கள். கலவரக்காரர்கள் வீசிய கற்கள் சாலைகளில் குவிந்துகிடப்பதை பாருங்கள்.

இப்போ சொல்லுங்க…. உங்கள் பிள்ளைகள் என்ன எங்கே படிக்கிறாங்க? எப்படி படிக்கிறாங்க?? எப்படி ஸ்கூலுக்கு போறாங்க? நினைச்ச ஸ்கூல்ல சேர்க்க முடியலியேன்னு கவலையா உங்களுக்கு????

[END]

16 thoughts on “கற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே! MUST READ!!

  1. இந்த பதிவைப்படித்தவுடன்

    அந்த மழலைகளின் நிலையை எண்ணி வருத்தபடுவதா இல்லை

    அவர்களின் மனோ தைரியத்தை எண்ணி ஆச்சர்யபடுவதா இல்லை இன்னமும் இந்த நாட்டில் இது போன்ற நிலை இருக்கிறதே என்று எண்ணி வேதனைபடுவதா இல்லை

    இந்த பள்ளியில் தான் தன் குழந்தைகள் படிக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள் என்று கண் மூடி தனமாக நம்பும் பெற்றோரின் நிலை எண்ணி ஆத்திரப்படுவதா ?

    இப்போதெல்லாம் ஏட்டு படிப்பை விட அனுபவ படிப்பு தான் பல அறிய விஷயங்களை மிக எளிமையாக அதே சமையம் பசு மரத்து ஆணி போன மனதில் பதிய வைக்கிறது !!!

    பள்ளி செல்லும் குழந்தைகளின் திகில் பயணத்தை கண்டு அவர்களுக்கு உதவ முன் வந்திருக்கும் எல்லா தொண்டு நிறுவனத்திற்கும் எல்லா நல் உள்ளத்திருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!

    நமது வாசகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்
    இந்த செய்தியை முடிந்த வரை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்து ஊடகங்கள் வாயிலாக எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன் !!!

    இந்த வீர குழந்தைகளின் கல்விப்பாதைக்கு ஒரு சிறு செங்கல் நம்முயர்ச்சியின் மூலம் போகுமானால் அதுவே நாம் நமது வாழ்நாளில் செய்யும் பேருதவி ஆகும் !!!

    இந்த செய்தியினை நமது கவனத்திருக்கு கொண்டு வந்த சுந்தர் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகள் !!!

    பணம் படைத்தோர் பணம் கொடுங்கள்
    மனம் படைத்தோர் முயற்சி எடுங்கள் – துயர் துடைக்க
    ஒன்றும் இல்லாதோர் பிரார்த்தனை செய்யுங்கள் – பரம்பொருளான அந்த இறைவன் அந்த குழந்தைகளோடு என்றென்றும் துணை நின்று பாதுகாக்க !!!

    வாழ்க வளமுடன் !!!

    1. நான் பதிவில் சேர்க்க நினைத்ததை நீங்கள் அப்படியே அட்சரம் பிசகாமல் கூறிவிட்டீர்கள். நன்றி நன்றி முருகன்.

      – சுந்தர்

  2. Your all article is very nice sir.. Ovaru parents and students kandippa parika vendiya article.. Eppdi sir correct timela ovaru article theriyapadutharanga.. Thanks sir..

  3. இந்த குழைந்தைகலை பர்க்கும்போது நெஞ்சில் திகில் உண்டாகிரது. ஆனால் இவர்கல் சர்வ சாதாரனமாக பயனம் செய்கிரார்கல்.இப்படி ஒரு படிப்பு தெவையா? என என்ன தோண்ருகிரது.திரு, முருக்ன் சார் சொண்னதை நனும் இங்கு வலியுருத்ருகிறேன்.
    கற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே’புது மொழி…
    ஆச்ச்ர்யமூட்டும் செய்திகலை அலித்தமைக்கு நன்றீகள்….

    1. சந்திரசேகரன், அவர்களுக்கு வேறு வழி இல்லை. They have no other option except to take such risks.

      கமெண்ட்டில் நண்பர் முருகன் சொன்னது போல, நமது ஏட்டுக்கல்வி போதிப்பதைவிட அவர்களின் இந்த வாழ்க்கை கல்வி அதிகம் போதித்துவிடும்.

      எதையும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிவுடன் இந்த குழந்தைகள் வளர்வார்கள் என்பது உறுதி.

      – சுந்தர்

  4. இந்த புகைப்படங்களை நிறைய வீட்டு பிள்ளைகளுக்கு காட்டி புரிய வைக்க வேண்டும் ,இங்கு அணைத்து வசதிகளும் இருந்து நிறைய பிள்ளைகள் படிக்காமல் சுத்தி கொண்டு திரிகிறார்கள் அவர்கள் எல்லாம் இவர்கள் படும் கஷ்டத்தை பார்க்க வேண்டும்

  5. நண்பர் ராஜா சொல்வது போல் இந்த பதிவும் புகைப்படங்களும் ,படிக்கும் மாணவர்களிடத்தில் அளித்து அவர்களின் கவனத்தை செம்மையாக்க வேண்டும் .

    பள்ளி ஆரம்ப நாளில் நல்ல பயனுள்ள கட்டுரை …

    \\ “நீங்கள் எதை சுலபமாக பெருகிறேர்களோ ,அதை பெறுவதற்கு ,இந்த உலகில் பலர் தவமிருக்கிறார்கள்” \\ எப்படி ஜி .

    நன்றிகளுடன் மனோகர்.

  6. சுந்தர்ஜி, மிக அருமையான பதிவு.

    இதை தயவுசெய்து முக்கிய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். அவர்களால்தான் இதை அதிகமானவர்களுக்கு தெரியபடுத்த முடியும்.

    மேலும் வாரந்தோறும் நமது பிரார்த்தனை நேரத்தில் இவர்களுக்காக நாமும் பிரார்த்தனை செய்வோம்.
    அன்பே சிவம்.

    1. இதை பற்றி தெரியப்படுத்தியமைக்கு உங்களுக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும் சார்.
      – சுந்தர்

  7. சார்
    இந்த பதிவோ அவசியமா எல்ல்றகும் அனுப்பனும்.

    எல்லா வசதி இருத்தும் படிக்காமல், காலேஜ் போகாமல் கடைசி நேரத்தில் அட்டேண்டேன்சே இல்லை, மார்க் இல்லை, என்று சொல்லி ஹால் டிக்கெட் வைங்க முடியாமல் பெற்றோர்கள் பிரின்சிபால் பார்த்து, ஹெட்டை பார்த்து கெஞ்சி கதறி அப்பா அவர்கள் எல்லாம் இந்த பதிவை கண்டிப்பாக பார்த்து திருந்த வேண்டும்

    selvi

  8. இந்த புகைப்படங்களை நிறைய வீட்டு பிள்ளைகளுக்கு காட்டி புரிய வைக்க வேண்டும் ,இங்கு அணைத்து வசதிகளும் இருந்து நிறைய பிள்ளைகள் படிக்காமல் சுத்தி கொண்டு திரிகிறார்கள் அவர்கள் எல்லாம் இவர்கள் படும் கஷ்டத்தை கண்டிப்பா பார்க்க வேண்டும்….

    இந்த பதிவோ அவசியமா எல்ல்றகும் அனுப்பனும். சார்

    மிக்க நன்றி சார்

  9. கண்டிப்பாக நம் குழந்தைகள் கொடுத்து வைத்துள்ளார்கள். இதை நம்மால் முடிந்தவரை ஸ்கூல் & காலேஜ் மொழி பெயர்த்தோ அல்லது அப்படியே கொண்டு சேர்க்க வேண்டும்.
    நம் குழந்தைகள் எதை சுலபமாக பெருகிரர்களோ அதை பெறுவதற்கு பலர் தவம் இருக்கிறார்கள்.

  10. சார் , எனக்கு எழுதின மாதிரி இருக்கு . ஓங்கி நீங்கள் அறைந்தது போல் உள்ளது . பதிவிற்கு மிக நன்றி சார் . நான் அரசு பள்ளியே படிக்கச் செய்வேன் .

  11. கல்வியின் மீது இந்த குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வம் அதற்க்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரமம், உண்மையிலேயே மிகவும் மலைப்பாக இருக்கிறது. இவர்களுடன் ஒப்பிடும்போது நாம் நிச்சயம் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வியின் முக்கியத்துவத்தை நம் குழந்தைகளுக்கு உணர்த்துவோம். அதே சமயம் வாழ்க்கையில் எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை என்பதையும் வளரும் சமுதாயத்திற்கு புரிய வைப்பது நம் கடமை.

    சுந்தர், இதுவரை நீங்கள் போட்ட பதிவிலேயே மிக முக்கியமான பதிவு இதுதான். உங்கள் உழைப்பிற்கும் சமூக அக்கறைக்கும் இது போன்ற பதிவுகள் ஒரு சான்று. நன்றி சுந்தர்.

  12. இந்த பதிவை படிக்கும் பொழுது மிகவும் திகிலாக உள்ளது. அனைத்து மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் படிக்க வேண்டிய அற்புதமான பதிவு. இந்த பதிவை ‘ நீங்கள் தளத்திற்கு புதியவரா ? பகுதியில் போடுங்கள். இதை தாங்கள் பதிவாக கொண்டு வருவதற்கு எவ்வளவு சிரமப் பட்டிருப்பீர்கள். இந்த பதிவை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.

    சுபெர்ப் article .

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *