Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்!

ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்!

print
நாம் ஏற்கனே கூறியபடி, வரும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அன்று ஹனுமத் ஜெயந்தியும் வருவதால் கூடுதல் சிறப்பு.

தீபாவளியை முன்னிட்டு நம் வாசகர்களுடன் நிலாச்சாரலுக்கு சென்று உதவிகள் வழங்கிய போது ....
தீபாவளியை முன்னிட்டு நம் வாசகர்களுடன் நிலாச்சாரலுக்கு சென்று உதவிகள் வழங்கிய போது ….

டிசம்பர் 31, செவ்வாய் கிழமை இரவு 8.00 மணிக்கு நங்கநல்லூர் நிலாச்சாரலில் பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு ஸ்பெஷல் டின்னர் ஸ்பான்சர் செய்து அவர்களுடன் நேரம் செலவழிப்பது. தவிர அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரும்படி நம் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதுவும் அவர்களிடம் அன்று ஒப்படைக்கப்படும்.

உத்தர ராமேஸ்வரம்  என்று அழைக்கப்படும் - இராமநாதீஸ்வரர் கோவில்... போரூர்!
உத்தர ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் – இராமநாதீஸ்வரர் கோவில்… போரூர்!

மார்கழி மாதம் என்பதால் தினமும் அதிகாலை நாம் சென்று வரும் போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் நமது தளம் சார்பாக நம் அனைவரின் நலன் வேண்டி ஜனவரி 1 புதன் கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.

 குன்றத்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

குன்றத்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

அடுத்து சுமார் 7.00 மணியளவில் குன்றத்தூர் பயணம். குன்றத்தூர் முருகனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து நேரே பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) பயணம். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நண்பர்களுடன் தரிசிக்கவிருக்கிறோம். கடந்த மூன்றாண்டுகளாக ஜனவரி 1 அன்று நண்பர்களுடன் பேரம்பாக்கம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஒவ்வொரு வருடமும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்கூடாக கண்டுவருகிறோம்.

பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவிலின் எழில்மிகு தோற்றம்
பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவிலின் எழில்மிகு தோற்றம்
 பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவில் ராஜகோபுரம்

பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவில் ராஜகோபுரம்

பேரம்பக்கத்தில்ருந்து திரும்பி வரும் வழியில் மப்பேடு சிங்கீஸ்வரரை தரிசிக்கவிருக்கிறோம். ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள வீணை மீட்டும் ஆஞ்சநேயருக்கு நம் தளம் சார்பாக வெண்ணை காப்பிட்டு விசேஷ அர்ச்சனை நடைபெறும். முடிந்தால் வடைமாலையும் சார்த்தப்படும்.

மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவிலின் அழகிய தோற்றம்
மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவிலின் அழகிய தோற்றம்

மதியம் 1.30 அளவில் சென்னைம் திரும்ப உத்தேசம்.

இவை தவிர வழக்கமாக விஷேட நாட்களில் நாம் தளம் சார்பாக நடைபெறும் கோ-சம்ரோக்ஷனமும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/11/DSC05549.jpg

அர்ச்சனைக்கு மலர்கள்!

இவை தவிர மேற்படி நான்கு கோவில்களுக்கும் அன்று அர்ச்சனைக்கு தலா ஒரு கூடை வீதம் நான்கு கூடைகள் மலர்கள் வாங்கித் தரப்படவுள்ளது. விஷேட நாட்களில் இந்த மலர் கைங்கரியத்தை நாம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் - உள் தோற்றம்
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் – உள் தோற்றம்

புத்தாண்டு வழிபாட்டில் பயணத்தில் எங்களுடன் சேர விரும்புகிறவர்கள் எங்கு வேண்டுமானாலும் நம்முடன் சேர்ந்துகொள்ளலாம். (மேற்படி பயணம் அனைத்தும் டூ-வீலரில் தான் இருக்கும். ஹெல்மெட்டுடன் வருவது அவசியம். டூ-வீலர் இல்லை என்றாலும் பரவாயில்லை.எங்களில் எவருடனாவது அமர்ந்து வரலாம்.)

DSCN0188

* மகளிர் எவரேனும் வர விரும்பினால், மப்பேடு அல்லது நரசிங்கபுரம் அவர்கள் நேரடியாக வரலாம். இவ்விடங்களுக்கு பூவிருந்தவல்லியிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.

மேற்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 9840169215 என்ற எண்ணுக்கு தங்கள் பெயர் மற்றும் வசிக்குமிடத்தை குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். அல்லது simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

(அலைபேசியில் தொடர்புகொண்டு பேச விரும்புகிறவர்கள் மாலை 7 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்.)

எண்ணிய முடிதல் வேண்டும்;
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியை போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

யாவும் இனிதே நிறைவேற திருவருள் வேண்டும்!!

** குறிப்பிடப்பட்டிருப்பவை அனைத்தும் நண்பர்கள் அளிக்கும் பொருளுதவியை பொறுத்து கூடவோ அல்லது குறையவோ இருக்கும். உத்தேசமான விபரங்களை மட்டும் அளித்திருக்கிறோம்.

=======================================================================
நமது புத்தாண்டு நிகழ்ச்சிகளில் / வழிபாட்டில் தங்கள் பங்கும் இருக்கவேண்டும் என்று கருதுபவர்கள், கீழ்கண்ட முகவரியில் அளிக்கப்பட்டுள்ள நம் தளத்தின் வங்கிக்கணக்கில் தங்கள் நன்கொடையை செலுத்தலாம்.

http://rightmantra.com/?page_id=7762
=======================================================================

Also check :

4 thoughts on “ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்!

  1. THE AGENDA PREPARED BY YOU FOR NEW YEAR CELEBRATION IS FINE. I WILL TRY TO ATTEND TWO TEMPLES LET YOU KNOW THROUGH MAIL.

    REGARDS
    UMA

  2. வணக்கம் சுந்தர் சார்

    தங்களின் பயணம் இனிதை சிறக்க நல் வாழ்த்துக்கள் சார்

    நன்றி

  3. சுந்தர்ஜி
    தளம் சார்பாக புத்தாண்டு அன்று நடக்கும் பூஜைக்கு என் சார்பாக நன்றி. திட்டமிட்டபடி அனைத்தும் நல்லபடி நடக்க வாழ்த்துக்கள். நான் சென்னையில் இல்லாவிட்டாலும் நம் தளத்திற்காக வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி

  4. Dear Sundar,

    The Almighty chooses very few people to serve the community with kind heart. You are one among them. I am proud to be associated with good people like you and Right Mantra.

    New Year 2014 may bring prosperity, joy, happiness, good health, peace to all Right Mantra fans and followers.

    With Best Wishes,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *