Thursday, January 17, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!

இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!

print
குருவருளாலும் திருவருளாலும் நம் நண்பர்கள் மற்றும் வாசகர்களின் மகத்தான ஆதரவினாலும் நம் பாரதி விழாவும் ரைட்மந்த்ரா ஐந்தாம் ஆண்டு விழாவும் மிக மிகச் சிறப்பாக நடந்தேறியது.

ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக ஒரு சிறு அப்டேட். விரிவான பதிவு நாளை வெளியாகும்.

dsc_9838-1

dsc_9865விழாவைப் பற்றி எழுதவேண்டுமென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அந்தளவு விஷயம் இருக்கிறது.

நாம் முன்பே குறிப்பிட்ட படி ஒவ்வொரு விழா நடத்தி முடிக்கும்போதும் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். அறிந்துகொள்கிறோம்.

இந்த விழாவைப் பொறுத்தவரை பல்வேறு தடைகளை தகர்த்து நடைபெற்றிருக்கிறது.

dsc_9878dsc_9888dsc_9890சென்ற ஆண்டு (2015) மழை வெள்ளம் சென்னையை புரட்டிப்போட்ட நிலையில் விழாவை நடத்தவேயில்லை. இந்த ஆண்டு எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்று முடிவு செயது ஏற்பாடுகளை துவக்கிய நிலையில் வார்தா சென்னையை புரட்டிப்போட்டுவிட ஒரு வாரம் ஒத்திவைத்தோம். மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரை பற்றிய வதந்திகள் கடந்த வாரம் முழுக்க சுற்றிக்கொண்டிருந்தது. எனவே விழாவை ஒரு வித பதட்டத் தோடு தான் எதிர்நோக்கினோம்.

விழாவில் நாம் பேசும்போது குறிப்பிட்டபடி ஜனக்கட்டு அல்லது பணக்கட்டு இரண்டில் ஏதாவது ஒன்று பலமாக இருந்தால் தான் இது போன்ற விழாக்களை நடத்துவதைப் பற்றி சிந்திக்கவே முடியும். நம்மிடம் இரண்டுமே குறைவு தான். இறையருளால் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாத நண்பர்கள் மற்றும் வாசக வாசகியர் சிலர் அமையப்பெற்றதால் ஓரளவு சமாளிக்க முடிந்தது.

மற்றபடி விழாவின் வெற்றிக்கு முன்னோட்டமாக இரண்டே இரண்டு விஷயங்கள் கூற விரும்புகிறோம்…

1) நேற்று வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விஷேஷ டைரி ஒன்றை இதர விருந்தினர்களை கொண்டு பரிசளித்தோம். மங்கல இசைக் குழுவினருக்கும் டயரி அளித்தோம். இது மற்ற டயரி போல அல்ல. “இந்த டயரி நிரம்பி வழியும் அளவிற்கு உங்களுக்கு அனைத்து தேதிகளும் நிகழ்ச்சிகள் ஒப்பந்தமாக வேண்டும்!” என்று வாழ்த்தி “வான்முகில் வழாது பெய்க” பாடல் பாடி பின்னர் தான் கொடுத்தோம்.

இன்று காலை சிறப்பான மங்கல இசையை தந்த ராஜு அவர்களிடம் பேசும்போது, “டயரி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போனேன் சார்… கோவில் கும்பாபிஷேகம் ஒன்று புக் ஆகிவிட்டது சார்… முதல் நிகழ்ச்சியை அந்த டைரியில் தான் எழுதினேன்” என்றார். டயரி கொடுத்த மேலும் சிலர் உடனே இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் புக்காகிவிட்டது என்கிறார்கள். முருகா சரணம்.

dsc_0059

2) இன்னொரு நண்பர் விழா முடிந்தவுடன் நம்மிடம் கூறியது… “எப்படி இவர் இந்த நிகழ்ச்சியை நடத்துறாருன்னு பார்க்கலாம்னு நினைச்சுகிட்டு வந்தேன். இப்படித் தான் நடத்தணும்னு பாடமே எடுத்துட்டீங்க!”

dsc_9976

3) மஹா பெரியவா ஆராதனையும் நம் நிகழ்ச்சியும் ஒரே தேதியில் வந்ததால் சிலர் அரைமனதாக காஞ்சி அதிஷ்டானம் பயணத்தை ரத்துவிட்டு நம் நிகழ்ச்சிக்கு வந்தனர். ஆனால் இங்கு வந்து நம் பேனரில் மஹா பெரியவாவை பேனர்ல பார்த்தவுடனே சிலிரிப்பாயிடுச்சு. அவரு என்னை பார்த்து ஆசீர்வாதம் பண்ற மாதிரி இருந்தது என்றார்கள் அவர்கள். (இருக்காதா பின்னே? தேவாரம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம், பரதம், பண், பார்வையற்றோர் பாடிய முருகன் பாட்டு என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருந்ததே நம் நிகழ்ச்சியில்!)

dsc_0086

4) சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் கடைசி வரை உடனிருந்துவிட்டு பின்னர் தான் சென்றனர். மிகப் பிரமாதமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக சொன்னார்கள்.

5) நம்மிடம் இருக்கும் RESOURCE ஐ வைத்து இதெல்லாம் மலையை புரட்டுகிற விஷயம். எனவே பலருக்கு இருக்கும் ஒரு கேள்வி : எப்படி இது போன்ற மஹாலில் ஏற்பாடு செய்ய முடிந்தது? நம் நண்பர் மெட்ரோநகர் சாமிநாதன் என்பவர் திருமண மண்டபத்தின் உரிமையாளரிடம் பேசி சலுகை வாடகையில் மண்டபத்தை பெற்றுத் தந்தார். இல்லையென்றால் இதெல்லாம் நாம் கற்பனை கூட செய்ய இயலாது. மறக்காமல் அவரையும் மேடையேற்றி கௌரவித்தோம்.

dsc_9937

dsc_0247
இன்னும் நிறைய பேசவேண்டும். ஒவ்வொருவரைப் பற்றியும் பேசவேண்டும்.

கொஞ்சம் பொறுங்கள் நான்கைந்து நாட்களாக ஓய்வு உறக்கம் இல்லை.

மீண்டும் சந்திக்கிறேன்.

dsc_0147

dsc_0026

 

dsc_0171

dsc_0306…. to be continued!

 

3 thoughts on “இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!

  1. மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
    நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு பின்பு தங்கள் பணியை தொடரவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *