Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > துரை… ராஜதுரை!

துரை… ராஜதுரை!

print

திருத்தணியில் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் நடைபெறும் படிவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பஜனை குழுவினர் படிக்கட்டுகளில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலக்கு சென்று முருகபெருமானை தரிசனம் செய்வார்கள். விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசித்து செல்வார்கள்.

வள்ளிமலையில் படி உற்சவம்!
வள்ளிமலையில் படி உற்சவம்!

திருத்தணி முருகன் கோவிலில் இன்று 31–ந்தேதி படி பஜனை திருவிழாவும் நாளை ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும் நடைபெற உள்ளது. கோவிலில் உள்ள 365 படிகளிலும் தேங்காய்கள் உடைத்து உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

********************************************************************

padi-urchavam-3

படி உற்சவம் என்றால் என்ன?

மலையை சுற்றி திருப்புகழை பாடிக்கொண்டே கிரிவலம் வந்து பின்னர் அடிவாரத்தில் முதல் படியில் துவங்கி மலையில் உள்ள ஒவ்வொரு படிக்கும் கற்பூரம் ஏற்றி, தாம்பூலங்கள் வைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு திருப்புகழை பாடிக்கொண்டே மலை மீது ஏறுவார்கள். மலையுச்சியில் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமியை சென்று தரிசிப்பார்கள். இது தான் படி உற்சவம்.

இந்த படி உற்சவம் வள்ளிமலை மட்டுமல்லாது அறுபடை வீடுகளிலும் பிற்பாடு பிரபலமாகியது. நமக்கு இதை அறிமுகப்படுத்தியது வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், பிரபலப்படுத்தியது கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

********************************************************************

இங்கு மட்டும் புத்தாண்டு தரிசனம் ஆகம விதிகளுக்கு மாறானது அல்ல என்று கருதப்படுகிறது. காரணம் இதன் பின்னணியில் உள்ள வரலாறு.  படி உற்சவம் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. அது பற்றி பார்ப்போம்.

ராஜதுரை யார் தெரியுமா?

ழனியில் கல்லுக்கட்டி சாமியார் என்று அழைக்கப்பட்ட கணபதி சுவாமிகள் என்ற ஒருவர் இருந்தார். அவரோடு மைசூர் அரண்மனையில் சமையற்காரராக வேலை பார்த்த ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தற்செயலாக ஒரு நாள் கல்லுக்கட்டி சாமிகள் திருப்புகழை பாடும்போது அதை இந்த சமையற்காரர் கேட்டார். மெய்மறந்தார். மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர் இந்த சமையற்காரர் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்.

tiruttani-muruganசமையற்காரரின் சொந்த ஊர் திருச்செங்கோடு. ஆனால் மைசூருக்கு பல ஆண்டுகள் முன்பே சென்றுவிட்ட குடும்பம். அரண்மனை சமையற்காரர் என்றால் சும்மாவா? கைநிறைய பொருளை சம்பாதித்தபோதும் அதில் ஏனோ மனநிறைவு ஏற்படவில்லை. அப்படியே புறப்பட்டு பழனி வந்தவர் கணபதி சுவாமிகளிடம் திருப்புகழ் கேட்டார். திருப்புகழின் சந்தமும், ஓசை நயமும் கருத்துக்களும் பொருட்செறிவும் அவரை கவர்ந்தன. திருப்புகழுக்கு அடிமையானார்.

அதை தாம் அனுபவிப்பதிலும் பிறரை அனுபவிக்கச் செய்வதிலும் நிபுணரானர். பழநியிலிருந்து திருவண்ணாமலை வந்து, ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளைச் சந்தித்து பின்பு வள்ளிமலையை அடைந்தார். பின்பு மலைமேல் ஓர் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு வள்ளிமலை சுவாமிகளாக அங்கேயே தங்கிவிட்டார். அங்குள்ள மக்களுக்கு திருப்புகழ் பாடல்களைக் கற்பித்து வந்தார். மலைமேல் பொங்கி அம்மனுக்கு கோயில் ஒன்றும் அமைத்து வழிபட்டு வந்தார். 1950ஆம் ஆண்டு ஆஸ்ரமக் குகையில் மகா சமாதி வாய்க்கப் பெற்றார்.

வள்ளிமலை ஸ்வாமிகளை பலர் காணச் சென்றனர். திருப்புகழின் வீச்சு அவரது பேச்சால் பரவத் தொடங்கியது. வரும் அனைவருக்கும் உணவளித்தார். இதன்பொருட்டு 20 க்கும் மேற்ப்பட்ட கறவை பசுக்களை வாங்கினார்.

==========================================================

Don’t miss – A bunch of articles on Lord Muruga  

அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன? – கந்தசஷ்டி SPL 4

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

==========================================================

எப்போதும் கூட்டம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதிகாரிகள் பலர் வரத்தொடங்கினர். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டம் அதிகமில்லை. சுவாமிகள் “ஏன்?” என்று கேட்டார். அன்று ஜனவரி ஒன்று. ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால் அனைவரும் தங்கள் மேலதிகாரியை பார்க்கச் சென்றுவிடுவர் என்று பதில் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புது வருடப் பிறப்பன்று அரசுப் பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரிகளை பழங்கள் மாலைகளுடன் சந்திப்பது வழக்கம்.

வள்ளிமலை சுவாமிகள் மனம் வெதும்பி, துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல், அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி, அவர்களை திசை திருப்ப “திருத்தணி திருப்புகழ் திருவிழா ” என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

padi-urchavam-2

“எல்லோருக்கும் மேலதிகாரி முருகன் அல்லவா? வெள்ளைக்கார துரையை எதுக்கு போய் கால்கடுக்க நின்னு சந்திக்கணும்?? அதுக்கு பதில் இந்த துரையை பாருங்க. இவனைக் கேட்டீங்கன்னா எல்லாமே கொடுப்பான். ஏன்னா இவன் ராஜதுரை!” என்று மக்களுக்கு உரைத்து இறைவனை வணங்குவதற்காக வள்ளிமலை சுவாமிகளால் 31-12-1917 மற்றும் 1-1-1918 ஆம் ஆண்டுகளில் திருத்தணித் திருப்புகழ் படித்திருவிழா ஆரம்பிக்கப்பட்டது.

துரை என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர். ஆனால், நம் அருணகிரியார்  “துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே” என்று  “வஞ்சம் கொண்டும்” என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார். திருத்தணி முருகன் ‘துரைமுருகன்’  என்றே அழைக்கப்படுகிறார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா திருத்தணியில்  இன்று வரை தொடருகிறது.

இசையரசு சம்பந்தன் அவர்களின் தெய்வத் தமிழ் இன்னிசைக் குழுவினர் நமது பாரதி விழாவில் பாடியபோது....
இசையரசு சம்பந்தன் அவர்களின் தெய்வத் தமிழ் இன்னிசைக் குழுவினர் நமது பாரதி விழாவில் பாடியபோது….

நமது பாரதி விழாவில் தேசபக்தி பாடல்கள் பாடிய இசையரசு சம்பந்தன் (இவர் கிராமங்கள் தோறும் சென்று தேசபக்தி + தெய்வபக்தி பாடல்களை பாடி வருகிறார்) அவர்களின் ‘தெய்வத் தமிழ் இன்னிசைக் குழு’வினர் இன்றிரவு திருத்தணிகையில் படி உற்சவத்தை முன்னிட்டு பக்தி பாடல்கள் பாடவுள்ளனர்.

இந்த படி பூஜையும் விழாவும் உலகில் அன்பு, மனிதநேயம், நல்லெண்ணம் வளரவும், வறுமை ஒழியவும், வைதாரையும் முத்தமிழால் வாழ வைக்கும் தமிழக கடவுள் முருகப் பெருமானின் பரிபூரண ஆசீர்வாதம் உலக மக்களுக்கு கிடைக்கவேண்டி பக்தி இசை சொரூப மாமணி இசையரசு சம்பந்தன் குழுவினரின் திருப்புகழ் பஜனை தணிக்கைமலை அடிவாரத்தில் இருந்து இரவு ஏழு மணிக்கு புறப்பட்டு செங்குந்தர் மகாஜன சங்க சத்திரம் சென்று அடையும். பிறகு செங்குந்தர் மகாஜன சங்க சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இரவு 10.00 முதல் 1.00 மணிவரை சம்பந்தன் குழுவினரின் திருப்புகழ் கச்சேரி நடைபெறும். புத்தாண்டு பிறந்ததும் அதிகாலை 2.30 அளவில் செங்குந்தர் மகாஜன சங்க சத்திரத்தில் இருந்து பஜனை புறப்பட்டு முருகப்பெருமான் சன்னதியை சென்று அடையும். அதிகாலை 4.30 வரை திருப்புகழ் பஜனை நடைபெறும்.

இதில் பங்கேற்கவும் படி உற்சவத்தை காணவும் திருத்தணிகை முருகனை தரிசிக்கவும் நாம் இன்று மாலை திருத்தணி புறப்படுகிறோம்.

திருத்தணி படிபூஜையை காண நீண்ட நாள் நமக்கு அவா. அதை திருத்தணிகை வேலன் இன்று அருளியிருக்கிறான்.

படிபூஜை புகைப்படங்கள் + அனுபவம் தனிப்பதிவாக வரும்.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் ¶¶

==========================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் …. DON’T MISS!

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

Also check :

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==========================================================

[END]

2 thoughts on “துரை… ராஜதுரை!

  1. ராஜ துரை பற்றியும், திருத்தணி படி பூஜை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    முருகா சரணம்

  2. திருத்தணி படிவிழா, வள்ளிமலை ஸ்வாமிகள் பற்றி அறிந்து கொண்டோம்.
    தினம் புதுப்புது தகவல்களாக கொடுத்து அசத்துகிறீர்கள்.
    தாங்கள் சென்று வருவதால் மட்டுமே, அதைப் பற்றி பதிவுகள் போடுவதால் மட்டுமே, இதுபோல் சிறப்பு வாய்ந்த கோயில்கள், அவற்றின் மகிமைகள் குறித்து, கொஞ்சமாவது நாங்களும் அறிந்து கொள்ள முடிகிறது. தங்கள் விரிவான அனுபவ பதிவுக்காக காத்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *