Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > Featured > “கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)

“கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)

print
கா பெரியவா தான் ஸ்தூல சரீரத்துடன் இந்த பூவுலகில் இருந்த போது தம்மை நாடி வந்தவர்கள் எத்தனையோ பேரின் பாவங்களை பொசுக்கி நல்வழி காட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லாமலே தன் ஞான திருஷ்டியினால் அவர்களின் குறைகளை உணர்ந்து அவற்றை களைவதற்கு உரிய வழிகளை சொல்லியிருக்கிறார்.

காஞ்சியில் அவரை சந்தித்து தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிக்கொண்டவர்கள், பாபம் தொலைத்தவர்கள், ஜென்ம சாபல்யம் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கில் உண்டு. தினம் தினம் நூற்றுக்கணக்கான அதிசயங்கள் காஞ்சியில் நடந்தவண்ணமிருந்தன. வெளியுலகிற்கு தெரிந்தவை இங்கே குறிப்பிட்டுள்ளது போல ஒரு சில தான்.

ஸ்தூல சரீரத்தோடு தான் வாழ்ந்த காலத்தில் தான் பெரியவா நமக்கு வழிக்காட்டினார்கள் என்றில்லை. சூட்சும சரீரம் கொண்ட பிறகும் அருள் பாலித்து வருகிறார் என்பதற்கு இந்த பதிவே சாட்சி. பொறுமையாக படியுங்கள். புரியும்.

Maha-Periyava_

“கல்யாணமாகி பத்து வருஷமாச்சு… சந்ததி இல்லை”

நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்கு வந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது.

“கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. சந்ததி இல்லை” பெரியவாளிடம் வின்னபித்துவிட்டு அமைதியாக நின்றார்கள்.

‘மேலே சொல்லு’ என்று கேட்கிற மாதிரி பெரியவாள் பார்த்தார்கள்.

“ராமேஸ்வரத்தில் நாக பிரதிஷ்டை பண்ணினேன். சந்தான கோபால மந்திரம் ஆயிரக்கணக்கில் பண்ணினேன். அப்படியும் ஒன்னும் நடக்கலே. பெரியவாளைத் தான் நம்பி வந்திருக்கோம்.”

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள் தெரியுமோ?”

வந்தவருக்கு சாட்டையால் அடித்தாற்போல இருந்தது. இத்தனை பேர் எதிரில் அதை எப்படி சொல்வது? சங்கடத்தில்  சங்கடத்தில் நெளிந்தார் அவர்.

“உன் தாத்தா ரொம்ப முன்கோபி. சதா சர்வ காலமும் பாட்டியை திட்டுவார். அடிப்பார். அவர் அட்டகாசம் பொறுக்கலை. ஒரு நாள் உன் பாட்டி, கொல்லைக் கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணின்டுட்டா”

“உன் குடும்பத்துக்கு ஸ்திரீ சாபம் இருக்கு. நல்ல ஜோஸ்யர் ஒருவரைப் பார்த்து  கேட்டு பரிகாரம் செய். அப்புறம் புத்திரப் ப்ராப்தி உண்டாகும்.”

தம்பதிகள் நெகிழ்ந்தே போனார்கள்.

பாட்டி கிணற்றில் விழுந்து இறந்தது அந்த பையனுக்கு தெரியும். (அவன் மனைவிக்கு கூட அதுவரையில் சொன்னதில்லை.). அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?

அது பரம ரகசியம்.

===============================================================

Mahaperiyava in AP

“பெரியவா உத்தரவு பண்ணினால், நான் ஐந்நூறு ரூபாய் கொடுக்கிறேன்”

காஞ்சிபுரத்தில் பெரியவாள் தங்கியிருந்தார்கள். செல்வந்தர்களான தம்பதிகள் வந்து உயர்ந்த புடவை,  ரவிக்கை துண்டு சமர்பித்து நமஸ்கரித்தார்கள். சற்றைக்கெல்லாம் ஒரு சிறு பெண் வந்து இரண்டு வெள்ளிக் கொலுசுகளை அர்ப்பணித்தது.

பெரியவாள் அவர்களுடனும் மற்றுமிருந்த பக்தர்களுடனும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயம் வெள்ளாளப் பெண்மணி தரிசனத்திற்கு வந்தாள். ஏழை என்பது தெள்ளென புலனாயிற்று. ஒரு மஞ்சள் பத்திரிக்கையை தட்டில் வைத்து சமர்பித்துவிட்டு ஆசீர்வாதம் வேண்டி நின்றாள்.

அருகிலிருந்த சிஷ்யரிடம் புடவை -ரவிக்கை – கொலுசுகளை அந்த பெண்மணியிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

‘அந்த அம்மாளின் பெண், வயதுக்கு வந்திருக்கு. மஞ்சள் நீராட்டு விழா பத்திரிக்கை, ஏழை, சடங்கு செய்யனும். என்ன செய்வா?” என்றார்கள் பெரியவாள்.

அந்த பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை தான் சமர்பித்திருந்தாள். அதை தொட்டுக்கூட பார்க்காமல் ‘அது, இன்னது’ என்று எப்படி சொன்னார்கள் பெரியவாள்?

சென்னை, கணபதி & கோ. விஸ்வநாதய்யர் பெரியவாள் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தார்.  “பணத்துக்கு என்ன செய்வா?”

“பெரியவா உத்தரவு பண்ணினால், நான் ஐந்நூறு ரூபாய் கொடுக்கிறேன்” (அப்போதைய ஐந்நூறு இப்போதைய பத்தாயிரத்துக்கு சமம்.)

பெரியவாள் ஜாடையால் சம்மதம் தெரிவித்தார்கள்.

திருநீற்றுப் பிரசாதத்தையும் பெரியவாள் ஆசியையும் பெற்றுப்போக வந்த அந்த அம்மாளுக்கு ஆசிகள் புடவையாகவும் வெள்ளியாகவும் கிடைத்தன.

ஏழை பாழைகளிடம் மிகவும் பிரியம் பெரியவாளுக்கு.

(நன்றி : மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்  | தட்டச்சு : www.rightmantra.com)

===============================================================

கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள் – மகா பெரியவா கூறும் உபாயம் !

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவமும் ஒன்றுகொன்று தொடர்புடையது என்பதை தட்டச்சு செய்த பிறகு தான் கவனித்தோம். ஒன்றில் பாவம். மற்றொன்றில் பரிகாரம். (இத்தனைக்கு இரண்டும் வெவ்வேறு நூலில் வெவ்வேறு பக்கங்களில் நாம் கண்டவை. எத்தனையோ சம்பவங்கள் இருக்க, இந்த இரண்டையும் நாம் ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று தெரியவில்லை.).

தங்கள் குடும்பத்திற்கு ஸ்திரீ சாபம் இருப்பதாக கருதும் அன்பர்கள், தங்களுக்கு தெரிந்த ஏழைகள்  மற்றும் நலிவுற்றோரின் இல்லத்து பெண்குழந்தைகள் ருதுவானால், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மனமுவந்து செய்யுங்கள்.

* உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் உங்களிடம் மேற்படி தகவலை தெரிவித்தபோது நீங்கள் செய்தது என்ன?

* உங்கள் ஏழை நண்பன், தன் தங்கை ருதுவான விஷயத்தை உங்களிடம் சொல்லியபோது நீங்கள் அவனுக்கு செய்த உதவி என்ன?

* உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு கீழே உள்ளவர்கள் வீட்டில் இது போன்ற சுபங்கள் வந்தால் என்ன செய்வீர்கள்? என்ன செய்திருக்கிறீர்கள்?

நீங்கள் செய்யும் உதவியால் ஒரு ஏழைப் பெண் நெகிழ்ந்து போய் ஆனந்தக் கண்ணீர் வடித்தால் போதும், ஜென்ம ஜென்மாந்திரங்களாக உங்களை தொடர்ந்து வரும் ஸ்த்ரீ சாபங்கள் கூட ஓடிப்போய்விடும்.

“நிச்சயம் உதவி செய்வேன்!” என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்… பயனாளிகள் தாமாக கண்ணுக்குத் தெரிவார்கள்!

பரோபகாரம் செய்து வாழ்வதற்கு ஈடு இணை இந்த உலகில் இல்லை.

===============================================================

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

===============================================================

[END]

 

10 thoughts on ““கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)

  1. குருவே சரணம் … இறைவா சரணம் …

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே—திருமந்திரம் 137
    CR of http://www.voiceofvalluvar.org from Montreal, Canada

  2. சுந்தர் சார் வணக்கம்

    அனைத்தும் பதிவும் அருமையியோ அருமை சார்

    நன்றி

  3. பார்த்தவுடனும், படித்தவுடனும் நமக்கு கண்ணீர் தான் முதலில் வருகிறது.

    பரிகாரம் எனும் பெயரில் கோவிலுக்கு செல்வதை காட்டிலும், முடியாத ஏழைகளுக்கு உதவி செய்வது மிகப்பெரிய பரிகாரம் ஆகும்.

    நாமும் முடிவெடுத்து விட்டோம், நம்மால் ஆன இது போன்ற உதவிகள் செய்வது என்று.

    இது போன்ற நல்ல கருத்துகள் உங்கள் மூலமாக எங்களுக்கு தெரிவது மிக சந்தோசம்.

    குரு வாழ்க குருவே துணை.

  4. கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள். – பதிவு அருமை.
    நம் முந்திய தலைமுறை விட்ட கண்ணீருக்கு இப்போது நாம் நம் கண்ணீரால் அதை சமன் செய்ய வேண்டும்.
    ஒரு பாவம் ஒரு பரிகாரம் இரண்டும் ஒரே தொடர்புடையதாக நன்றாக உள்ளது.
    நன்றி

  5. மகா பெரியவர் நிகழ்த்திய அற்புதங்களை ஒவ்வொரு குரு வாரமும் நம் தளம் சார்பாக படிப்பதற்கு நாம் ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    கடவுள் அருளின்றி ஞானிகளின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை . ஞானிகளின் கதைகளைக் கேட்பது என்பது ஒரு வழியில் அவர்களின் சத்சங்கம் பெரிதலை நிகர்ப்பதாகும்.

    //ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு:

    குருர்தேவோ மஹேஸ்வர:
    குருஸ்ஸாக்ஷத் பரப்ரஹ்ம

    தஸ்மை ஸ்ரீ குரவே நம:

    குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பர ரோகிணாம்
    நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:

    ஸதாஸிவ-ஸமாரம்பாம் ஸங்கராச்சார்ய-மத்யமாம்
    ஆஸ்மத்-ஆசார்ய-பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
    குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம:

    ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
    நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
    ஜகதாம் குருவர்யஞ்சகாமகோடிதிவம் சிவம்
    ஸ்ரீ சந்தரசேகரம் குரும் ஸ்மராமி.//

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி

    உமா

  6. வணக்கம்……..

    இன்று மனம் நிறைவாக உள்ளது. அலுவலக நண்பர் ஒருவர் காஞ்சிபுரத்திலிருந்து பெரியவா திருவுருவ படம் ஒன்று வாங்கி வந்து இன்று கொடுத்தார். குருவின் திருவுருவை காண்பதற்கும் அவர் பெருமையை கேட்பதற்கும் குரு வாரத்தில் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    குருவே சரணம் ………….

  7. சுந்தர்ஜி

    குரு வார பதிவு மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் குருவை பற்றி போடும் பதிவுகள் மிகவும் பக்குவத்தை கொடுக்கின்றது.

    குருவே சரணம்

  8. Dear Sundarji,

    Wonderful story. You have interlinked both stories which was amazing. I am very happy to read the stories related to Kanchi Periyava on a weekly basis from right mantra blog.

    Thanks & Regards

    V Harish

  9. அருமையான பதிவு
    மகா பெரியவா சரணம்

    பிரியதர்சினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *