Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 26, 2024
Please specify the group
Home > Featured > அன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி!

அன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி!

print
ஸ்ரீ ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் நடைபெற்றபோது, அவதாரத்தின் நோக்கத்திற்கு துணை செய்யும் பொருட்டு, தேவர்கள் பலரும் கூடவே பிறந்தனர். வானரங்களும் கோபிகைகளும் இப்படி பிறந்தவர்கள் தான். அது போல அந்நியர்களால் அடிமைப்பட்டுக்கிடந்த நம் நாட்டை மீட்க, ஜனங்களுக்கு உத்வேகத்தை அளிக்க, இறைவன் தன் அடியார்களை அனுப்பி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போரிட வைத்தான். நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்.

துரை மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் வத்தலக்குண்டு என்று ஒரு ஊர் உண்டு. அங்கே ராஜம் ஐயர், நாகம்மாள் என்கிற தம்பதிகள் வாழ்ந்துவந்தனர்.

madurai-meenaakshi-copyஓரளவு வசதி படைத்த குடும்பம் அது. நாகம்மாளின் தந்தை முன்சீப்பாக இருந்தார். எனவே நல்ல சீர் செனத்தியுடன் தான் பெண்ணைக் கட்டிக்கொடுத்தார். இயல்பிலேயே வசதி ஓரளவு இருந்ததால் ராஜம் ஐயர் குடும்பத்தை காக்கவேண்டும் என்கிற பொறுப்பில்லாமல் இருந்தார். அடிக்கடி எங்காவது சென்றுவிடுவார். சில சமயங்களில் சில நாட்களில் வருவார். சில சமயங்களில் பல நாட்களாகும். ஏன் பல மாதங்கள் கூட ஆகும். கொண்டு செல்லும் பணம் முழுதும் தீர்ந்துவிட்டபிறகு வீட்டுக்கு வருவார்.

அது போன்ற தருணங்களில் நாகம்மாள் தனது பிறந்த வீடு அமைந்திருக்கும் அய்யம்பாளையத்திற்கு சென்றுவிடுவார். தன் மகள் மீது பெரிதும் பாசம் வைத்திருந்த நாகம்மாள் தந்தை, தனது மகளின் நிலையும் மருமகனின் பொறுப்பற்ற தன்மையும் தெரிந்தவர் என்பதால் மகளை கடிந்துகொள்ளமாட்டார். மாறாக மருமகனுக்கு நல்ல புத்தி வந்து தனது மகனுடன் ஒழுங்காக குடித்தனம் நடத்தவேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக்கொள்வார். அடிப்படையில் அவர் மிகவும் நல்ல மனிதர். நேர்மையும் நாணயமும் மிக்கவர்.

ஒரு முறை இதே போல நாகம்மாள் கணவர் ராஜம் ஐயர் எங்கோ சென்றுவிட்டு ஆண்டுக்கணக்கில் திரும்பவில்லை. வழக்கம்போல நாகம்மாளும் தந்தை வீட்டுக்கு வந்து அங்கு தங்கியிருக்கலானார்.

இந்நிலையில் அவருக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்தது. கனவில் சாட்சாத் அன்னை மதுரை மீனாட்சி தோன்றி நாகம்மாளிடம் ஒரு அழகான குழந்தையை கொடுக்கிறாள். நாகம்மாள் பரவசத்துடன் குழந்தையை வாங்கி உச்சி மோந்து மகிழ்கிறாள். திடீரென குழந்தை ஒரு மரப்பொம்மையாக மாறிவிடுகிறது.

நாகம்மாள் அழுதுகொண்டே அக்குழந்தையை மீனாட்சியின் திருவடிகளில் வைக்க, மீண்டும் அது குழந்தையாக மாறிவிடுகிறது. தாடி, மீசை, சடாமுடியோடு விசித்திரமான உருவத்துடன். நாகம்மாள் நடப்பது என்ன என்று யூகிக்கும் முன்னே கனவு கலந்துவிடுகிறது.

உறக்கம் வராமல் புரண்டு படுத்தவள், காலை முதல்வேலையாக எழுந்ததும் அப்பாவிடம் சென்று தனக்கு வந்த கனவைப் பற்றி கூறினாள்.

அவர் தந்தையார் சிறந்த அறிஞர். அதுமட்டுமல்லாது சிறந்த சிவபக்தர். வீட்டில் புராணங்களை படிக்கச் சொல்லி கேட்பதில் பேரானந்தம் அடைபவர்.

அவருக்கு கனவின் பொருள் விளங்கிவிட்டது.

“அம்மா… நாகம்மா… உன் கணவன் உன்னிடம் மீண்டும் வந்து சேரப்போகிறான். உனக்கு அன்னை மீனாட்சியின் அருளால் ஒரு அழகான குழந்தை பிறக்கும் அம்மா…”

“அப்பா… அப்படியா ரொம்ப சந்தோஷம் அப்பா.. குழந்தை ஏன் மீசையுடன் ஜடாமுடியுடன் இருந்தது? அதற்கு பொருள் என்ன?”

“அது தாயே… எதன் மீதும் பற்றில்லாத, வீரம் நிறைந்த மகன் உனக்கு பிறக்கப்போகிறான். அது தான் அதன் அர்த்தம்!”

நாகம்மாள் தந்தை கூறியபடியே, அடுத்த சில நாட்களில் ராஜம் ஐயர் திரும்பி அய்யம்பாளையம் வந்தார். மாமனாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இனி ஒழுங்காக இல்லறம் நடத்துவதாக கூறி மனைவியை அழைத்துக்கொண்டு வத்தலக்குண்டு வந்தார். அங்கு தம்பதிகள் இணை பிரியாமல் இல்லறம் நடத்தி வந்தனர். இதன் பயனாக 1884 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி, ராஜம் ஐயர் – மீனாக்ஷி தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

subramaniya-siva-copy

அந்த குழந்தை தான் பிற்காலத்தில் ‘வீரத் துறவி’ என்று அழைக்கப்பட்ட தியாகி சுப்ரமணிய சிவா. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் நெருங்கிய நண்பரான இவர், மகாகவி பாரதிக்கும் நண்பராவார். இன்று சுப்ரமணிய சிவா அவர்களின் பிறந்த நாள்.

சுப்ரமணிய சிவா அவர்களை பற்றி நம் தளத்தில் ஏற்கனவே ஒரு விரிவான பதிவு வெளியாகியுள்ளது. (பார்க்க : சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!)

* இறையருளால் பிறந்ததாக கருதப்படும் சுப்ரமணிய சிவா போன்றோரின் வாழ்க்கை ஏன் அத்தனை கொடுமையாக இருந்தது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

சக்கரவர்த்தி திருமகனாக அரண்மனையில் அவதரித்த ராமன், மரவுரி தரித்து கானகம் சென்றது ஏன்?

பிறந்தது முதலே போராட்டம் போராட்டம் என கிருஷ்ண பரமாத்மா வாழ்க்கை அமைந்தது ஏன்?

சுகமாயிருந்தபடி எதிரிகளை சம்ஹாரம் செய்யமுடியாதா?

முடியும். ஆனால் அதில் நமக்கு என்ன பாடம் கிடைக்கும்? அவதார நோக்கம் அற்பமாகிவிடுமே! அது போலத் தான் தியாகிகளின் வாழ்க்கையும். நமக்கு வெளிச்சம் கிடைக்க அவர்கள் தங்களை உருக்கிக் கொள்கிறார்கள்.

பலர் பல வித தியாகங்கள் செய்து அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் அருமையை பெருமையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும், நம் தலைமுறையினருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகத் தான் இறைவன் அவர்களை அவ்வாறு படைத்தான். பிறப்பெடுக்க வைத்தான்.

ஒரு சிறு உதாரணம் சொல்கிறோம். இன்று அனைவரும் வரிக்கு வரி பாரதியையும் அவர் எழுதிய வரிகளையும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் வறுமையில் தான் வாழ்ந்தார். வறுமையில் தான் மறைந்தார். அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமில்லாத நிலையிலும் அந்த முண்டாசுக் கவிஞன் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!” என்று பாடினான். இது பற்றி அறிந்துகொண்டபோது நமக்குள் எழுந்த உறுத்தலால் தான் நாம் கடந்த நான்காண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பாரதி பிறந்தநாள் அன்று ‘பாரதி விழா’ கொண்டாடுகிறோம். ஒருவேளை பாரதி செல்வச் செழிப்பில் புரண்டு, வசதியாய் வாழ்ந்து மறைந்திருந்தால், இந்த உறுத்தல் வந்திருக்காது. அவருக்கு விழாவும் எடுத்திருக்கமாட்டோம்.

எது ஒன்று சுலபமாக கிடைக்கிறதோ அதன் அருமையை எவரும் உணர்வதில்லை. சுதந்திரத்திற்கும் அந்தக் கதி வந்துவிடக்கூடாது என்பதால் தான் இப்படி ஒரு அம்சம் இதன் பின்னே அமைந்தது.

ஆனால், நாம் அதை உணர்ந்திருக்கிறோமா?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா…
இப்பயிரை… கண்ணீரால் காத்தோம்…
கருகத் திருவுளமோ…!

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check : 

21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி!

நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன? 

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

One thought on “அன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி!

  1. அருமையான பதிவு!

    இதை படித்தவுடன் 7 ஆம் வகுப்பில் பள்ளியில் வ உ சி நாடகத்தில் சுப்ரமணிய சிவாவாக அடியேன் வேடம் இட்டு நடித்தது, தாடியாக பஞ்சை வைத்து நடித்து பின் வேடம் கலைத்து அந்த முகத்தில் இருந்த பசையை கடினப்பட்டு நீக்கியது என அனைத்தும் நெஞ்சில் நிழலாடியது.

    அப்போது இவரை பற்றி முழு விவரம் தெரியாது. நன்றி ஜி!

    அன்பன்,
    நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *