சென்ற புத்தாண்டுக்கு ‘பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!’ என்ற பதிவை அளித்திருந்தது நினைவிருக்கலாம். ஸத்ஸங்கம் அதாவது நல்லவர் சேர்க்கை என்பது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று. ஒரே ஒரு நல்லவர் நட்பு போதும் உங்கள் வாழ்க்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுவிடும். ஆனால் தீயவர்கள் சேர்க்கை உங்களை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுவிடும். எனவே இந்த புத்தாண்டில் நல்லவர்கள் நட்பை ஏற்படுத்திக்கொண்டு நல்ல விஷயங்களை மனதுக்குள் விதையுங்கள்.
சரி ஓ.கே. புத்தாண்டு பிறந்துவிட்டது. கடந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருந்தது?
நிச்சயம் உங்கள் எண்ணம் போலத் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த பிரபஞ்சம் ஒரு அற்புதமான PLAYBACK RECORDER. நீங்கள் என்ன கொடுத்தீர்களோ அதையே தான் உங்களுக்கு இந்த ஆண்டு திரும்பி கொடுத்திருக்கும். நீங்கள் என்ன எண்ணங்களை விதைத்தீர்களோ அதைத் தான் அறுவடையும் செய்தீர்கள். சரி தானே?
சரி போனது போகட்டும் விடுங்கள்… இந்த 2017 ஐ நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
எண்ணங்களின் வலிமையை உணர்ந்ததால் தான் ஞானிகள் எண்ணங்களை ஒருமுகப்படுத்த தியானத்தில் பெரும்பகுதி செலவிட்டார்கள். நேரடியாக தியானம் செய், எண்ணங்களை ஒருமுகப்படுத்து என்றால் பின்பற்ற கஷ்டமாக இருக்கும் என்று தான் விரதம், வழிபாடு, பாராயணம் என்று பல வழிமுறைகளை கொண்டு வந்தார்கள்.
நீங்கள் கற்பனை செய்வதைவிட பலமடங்கு சக்திமிக்கது எண்ணங்களின் அலைகள். அதாவது மனதின் ஆற்றல்.
மனதின் ஓரம் ஒரு சிறு தவறான எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது என்று வையுங்கள். உங்களையுமறியாமல் மனம் அதற்கு உங்களை தயார்படுத்திவிடும். அதை சந்தர்ப்பம் பார்த்து செயல்படுத்தியும்விடும். எனவே தவறான எண்ணங்களை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். ஆனால் அது சுலபமான காரியமா? எனவே தான் சிந்தனையை செம்மைப் படுத்த ஆலய தரிசனம் செய்வது, திருமுறை, திருப்புகழ், திவ்யபிரபந்தங்களை ஓதுவது என கொண்டு வந்தார்கள்.
அதே நேரம் நல்ல எண்ணங்களை விதைத்தீர்கள் என்றால் அதற்கும் நம்மை தயார்படுத்த ஆரம்பித்துவிடும். ஆனால் நாம் கேட்டால் தானே?
“எனக்கு அதிர்ஷ்டமேயில்லை சார். நான் நினைச்சது எதுவுமே 2016 ல நடக்கலை. பிளடி 2016” என்று அலுத்துக்கொள்பவர்கள் பலர் உண்டு.
இதில் துளியும் நியாயம் இல்லை.
பிரயாணத்துக்கு டாக்சி ஒன்று புக் செய்கிறீர்கள். நீங்கள் எங்கே போகச் சொல்கிறீர்களோ அங்கே உங்களை கொண்டு போய்விடவேண்டியது டிரைவரின் கடமை. நீங்கள் அங்கே இங்கே சுற்றிவிட்டு கடைசியில் போகவேண்டிய இடத்திற்கு மிகவும் தாமதமாக செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் டிரைவரிடம் “என்னப்பா இப்படி லேட் பண்ணிட்டீயே… ஒரு மணி நேரத்துல வந்து சேர வேண்டிய இடத்துக்கு நாலு மணி நேரமா?” என்று கேட்டால் டிரைவர் என்ன சொல்வார்?
“நீங்க எங்கெல்லாம் போகச் சொன்னீங்களோ அங்கே தான் நான் போனேன். கடைசியில என்ன குறை சொல்றீங்களே…” – இது தானே சொல்வார்…!
இந்த பிரபஞ்சமும் அப்படித் தான். நீங்கள் எங்கே, எப்படி செல்லவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது.
ஆனால், கிளம்பிய வேலையை மறந்துவிட்டு அங்கே இங்கே சுற்றிவிட்டு கடைசியில் டிரைவர் மீது பழியைப் போட்ட மேற்சொன்ன பிரயாணியின் மனநிலைத் தான் பெரும்பாலானோருக்கு உள்ளது.
எனவே நல்ல விஷயங்களை மனதில் லட்சியமாக கொண்டு அதற்காக உங்கள் எண்ணங்களை அர்ப்பணித்து வாழ்ந்தால் அது பிரபஞ்சத்தின் துணையோடு மனம் அதை முடித்துக்கொள்ளும். சும்மா பரீட்சித்து பாருங்களேன்..
பிரபஞ்சம் ஒரு அற்புதமான ரெக்கார்டர் என்று சொன்னோம் இல்லையா… நீங்கள் நல்ல விஷயங்களை கூடுமானவரை பேசி, செயல்படுத்தி வந்தால் நிச்சயம் அது உங்களுக்கு அதை பன்மடங்கு ஏதாவது ஒரு விதத்தில் திருப்பித் தரும்.
இந்த புத்தாண்டில் உங்களுக்கு பிடித்தவர் பிடிக்காதவர் நண்பன் எதிரி என்கிற மாறுபாட்டையெல்லாம் தூக்கியெறிந்து அனைவருக்கும் நெஞ்சார வாழ்த்துக்களையும், ஆசிகளையும் சின்னச் சின்ன பிரார்த்தனைகளையும் கொடுத்துப் பாருங்களேன். எந்த சூழலிலும் கோபப்படாமல், யாரையும் சபிக்காமல், தூற்றாமல் வாழ்த்திப் பாருங்களேன்.
ஒரு சேஞ்சுக்கு இந்த புத்தாண்டு முதல் தீய சொற்கள், அமங்கலச் சொற்கள் போன்றவற்றை கூறமாட்டேன். நல்லதே பேசுவேன் என்று ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள் உதாரணத்துக்கு வாழ்க வளமுடன், நல்லாயிருங்க, நலமோடு வாழ்க, எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும், God bless you… இப்படி பாசிட்டிவ்வான சொற்கள் உங்கள் நாவிலிருந்து எந்த சூழலிலும் வரட்டும்.
அடுத்தவர்களை பற்றி மட்டுமல்ல உங்களை மட்டமாக விமர்சிக்கும் சொற்களை கூட நீங்கள் சொல்லக்கூடாது. “நான் அதிர்ஷ்டம் கெட்டவன், எனக்கு லக் இல்லை, நான் துரதிர்ஷ்டசாலி” போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. “நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன்… I am blessed always” என்று சொல்லிப் பழகுங்கள். கடவுளுக்கு அந்த வார்த்தை மிகவும் பிடிக்கும்.
(உண்மையான ஆன்மீக நாட்டம், பக்தி இருந்தால் இதெல்லாம் தானாக வந்துவிடும். எனவே தான் ஆன்மீகமும் சுயமுன்னேற்றமும் ஒன்றுக்கொன்று இன்றியமையாதது என்று நாம் நம் தளத்தில் வலியுறுத்தி வருகிறோம்!)
மேற்கூறிய விஷயங்களை வருடம் முழுதும் செயல்படுத்திப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நடப்பதை உணர்வீர்கள். இதற்கு ஆங்கிலப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு என்கிற பேதமெல்லாம் கிடையாது. இதை செயல்படுத்தி பலனை உணர குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். அவ்வளவே. உங்கள் வாழ்க்கை மாற, ஒரு ஆறு மாதம் பொறுத்துக்கொள்ளமாட்டீர்களா என்ன? ¶¶
==========================================================
Support for the smooth functioning of this website…
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!
‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?
ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !
“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!
“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்”
நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?
துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !
மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
ஆயிரங்காலத்து பயிர் படும் பாடு!
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா?
==========================================================
[END]
Excellent Article Ji,
Welcome 2017.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை மிக நேர்த்தியாக விளக்கும் பதிவு. இந்த புத்தாண்டு தங்களுக்கு எல்லா வளமும் நலமும் அள்ளித்தர வாழ்த்துகள்.
Sir
Excellent. Please note I do have computer in my home. But, I want to show this message to my kids. I am unable to take print out of this. Can you please tell me how I can take the print out of this message. Please help me sir.
Regards
Lohabiraman.
Sir, please wait for a day. I will install Print/PDF option. So that you can easily make pdf or take print.
many thanks.
Ok thanks sir. I will wait for the same. Today I had sent an e-mail to you via editor@rightmantra.com wrt “Temple Cleaning Volunteer”. Please have a look on it and suggest me to proceed further.
Kind Regards
Lohabiraman.
Pondicherry
Sir
Thanks I got the print out to show to my family.
Regards