Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

print
வாழ்வில் சில கேள்விகளுக்கு விடை உடனே கிடைப்பதில்லை.

  • ஏன் இப்படி நடக்கிறது?
  • நாம் எந்த தவறும் செய்யவில்லையே, இருந்தும் ஏன் இது நிகழ்ந்தது? இதற்கு நாம் எந்தளவு பொறுப்பாளி?
  • இதை நாம் எப்படி எதிர்கொள்வது?
  • நமது எதிர்வினை சரிதானா?
  • அல்லது வழக்கம்போல் மௌனமாய் கடந்து போய்விடுவோமா? அப்படி செல்வதும் சரி தானா?

இவ்வாறாக… மண்டையை உடைக்கும் அளவுக்கு யோசித்தும் சில விஷயங்களை புரிந்துகொள்ளவே முடியாது.

‘சரி நமது வேலையை கவனிப்போம்… சுறுசுறுப்பான தேனீக்கு கவலைப்பட ஏது நேரம்?’ என்று நமது வேலையை கவனிக்க ஆரம்பித்துவிடுவோம்.

god-is-with-you

பதிலுக்கான தேடல் அது பாட்டுக்கு உள்ளத்தின் ஓரத்தில் போய்க்கொண்டிருக்கும். பார்க்கும் ஒவ்வொன்றும் பழகும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசான் என்கிற மனப்பான்மை ஏற்பட்டுவிட்டபிறகு, கேள்விக்கான விடை எப்போது எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். கிடைக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை கடமையை செய்வோம். இது தான் நமது வழக்கம். என்ன கண்களை திறந்துகொண்டிருக்கவேண்டும். அவ்வளவு தான்.

சில மாதங்களுக்கு முன் நமக்கு தோன்றிய ஒரு கேள்விக்கு சமீபத்தில் நமது நண்பர் ரவி ராமநாதன் என்பவரின் முகநூல் பதிவில் விடை கிடைத்தது.

அற்புதமான விடை. ஆணித்தரமான கருத்துக்கள். காயங்களுக்கு மருந்தைப் போன்ற வார்த்தைகள்.

ஒவ்வொரு வரியும் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை. ஆம்.. நம் இதயமென்னும் கல்வெட்டில்.

==========================================================

இவை ஒவ்வொன்றும் மிக முக்கிய பதிவுகள்… 

நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

நம்பிக்கை!

ஒரு துரோகத்தின் முன்னால்…

“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

==========================================================

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ?

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்…

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் “உயர்வு-தாழ்வு மனப்பான்மை” என்ற குணத்தினால் விளைவது.

perambakkam-narasimmar

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன. ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும்.

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்…..

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

என்றும் எப்போதும் ஒரு 20 நிமிடம் உஷத் காலத்திலும், மாலை ஸந்தியா வேளைகளிலும் வேலையை நிறுத்தி த்யானம் செய்ய ஆரம்பித்து பாருங்கள் மாற்றம் தெரியும்.

ஆம், ஏற்றம் பெற உற்ற வழி!

பற்று இல்லாமல் பற்று பற்று
அம்பிகையின் திருத்தாள்பற்று பற்று!!

– an fb forward….

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more information click here!

==========================================================

Also check… 

எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==========================================================

[END]

6 thoughts on “எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

  1. Ji, its difficult to copy paste content from the post here and elsewhere… so that not able to highlight remarkable points and notify errors in the post. I knew there is some fraudulent copycat RM resources…

    But its true, No one can steal ur credits and talents.

  2. Excellent Article Ji,

    The Secret of Life is adjourned in this Article.

    Thanks for Sharing This Article.

    Thanks to Your Friend Mr. Ravi For Sharing.

    Thanks & Regards,
    S.Narayanan.

  3. அருமையான பதிவு! மனம் லேசாகியது…சிந்திக்க வைத்தது. நன்றி!

  4. Ji no meant to hurt u anymore and u knew ur supporters whoever behind u. thanks for ur understandings,…. steps are reachable to get credits from god he knew who u are… no word is required….

  5. superb article sir,, really the first 4 questions are in my mind for the past 1 week due to some issues. but after reading this post , i change my way of thinking. thank u.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *