சென்ற வாரம் ஒரு தனிப்பட்ட அலுவல் காரணமாக திருச்சானூர் சென்றபோது அப்படியே அங்கே அலமேலுமங்காபுரத்தில் உள்ள சூரியநாராயணப் பெருமாள் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அங்கும் கோ-சம்ரட்சணம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாரப் பிரார்த்தனை பதிவின் கதைக்கு வருகிறோம்.
=========================================================
Also check : கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
=========================================================
அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா அல்லது பாராமுகமாக இருக்கிறானா என்கிற சந்தேகம் சில நேரங்களில் நமக்கு வந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு சந்தேகம் ஒரு அடியாருக்கு வந்தது. அதை ஆச்சாரியார் எப்படி தீர்க்கிறார் பாருங்கள்…
‘குறையொன்றுமில்லை’ – முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் கூறியதிலிருந்து…
எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்?
ஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்; “அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும். அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்” என்றார் அவர்.
25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை! மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம்! அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார். எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்…! திரவிய ரக்ஷணம். இவரே ஒரு ரக்ஷகர். அப்புறம் பரமாத்மா…? சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.
இது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல்! உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன். அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா…? நினைக்கத்தான் முடியுமா? அவன் தான் நம்மை எப்போதும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.
பராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் – பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்: “வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா? புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா? எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்? அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க! ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே… பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்?”
“அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா” கேட்டார் பட்டர்.
“ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்”
பார்த்தார் பட்டர். “இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன். காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர். கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார். கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.
பட்டர் கேட்டார்: “ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா?”
“சாப்பிட்டேன் ”
“நன்றாக தூங்கினீரா”?
“தூங்கினேன்”.
“எத்தனை மணிக்குப் படுத்தீர்”?
“9 மணிக்கு”
“எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது”?
“ஒரு ஒன்பதரை மணியிருக்கும்”.
“எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் “?
“காலை நாலரை மணிக்கு”
“ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா”?
“தூக்கத்திலே யார்தான் உணர்வார்கள்”?
“இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா”?
“தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்”?
“தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம். துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம். இதில் இருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றி அந்த பரமாத்மா ரட்சிக்கவில்லையா? இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா”? என்று கேட்டார் பராசர பட்டர்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!
================================================
நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு
பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.
1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.
2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.
3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!
4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.
5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.
6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.
7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.
ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?
நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
==========================================================
தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம்!
திருவருள் துணைக்கொண்டு எல்லாம் வல்ல ஈசனின் கருணையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இரண்டு நாள் பயணமாக இன்று மாலை (14/10/2016 வெள்ளி) புறப்படுகிறோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் எம் மைத்துனர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுகிறார். வரும் ஞாயிறு பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. அடியேனின் பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினர் உட்பட அனைவரும் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுவிட்டனர். நாம் தான் பிரார்த்தனைப் பதிவு இருப்பதால் செல்லவில்லை. நீண்டநாட்களாக பாரதியின் பிறந்த ஊரான எட்டையபுரம் செல்ல ஆசை. எனவே இதை பயன்படுத்திக்கொண்டு ஒரு நாள் முன்னதாக தூத்துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சென்று அங்கு முத்துசாமி தீட்சிதர் நினைவாலயம், மகாகவி பாரதி பிறந்த வீடு, பாரதி நினைவாலயம் மற்றும் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் என பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். ஞாயிறு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு முடிந்தால் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை சென்று காவிரி துலா ஸ்நானத்தில் பங்கேற்றுவிட்டு பராய்த்துறைநாதரை தரிசித்துவிட்டு வர எண்ணியிருக்கிறோம். திருவருளும் குருவருளும் துணைநின்று அனைத்தையும் நல்லபடியாக நடத்தித்தரவேண்டும்.
– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
ஒரு முக்கியமான விஷயம்!
பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)
கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நன்றி!
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : வைகுண்டவாசப் பெருமாள் கோவில் குருக்கள் திரு.ராகவன் பட்டாச்சாரியார்.
பேரம்பாக்கத்தில் சோளீஸ்வரர் கோவில் இருக்கும் தெருவுக்கு பக்கத்துக்கு தெருவின் இறுதியில் ஒரு புராதனமான பெருமாள் கோவில் உண்டு. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக்கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்த போது ஊர்மக்கள் சேர்ந்து இதை புனருத்தாரணம் செய்து கட்டியிருக்கின்றனர்.
பார்க்க ரம்மியமாக காட்சி தரும் இக்கோவில் ஸ்த்ரீ தோஷங்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று வந்து அவர்கள் வயதின் எண்ணிக்கையில் தீபமேற்றி பெருமாளையும் தாயாரையும் தரிசித்தால் ஸ்த்ரீ தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இங்கு சுவாமி பெயர் வைகுண்டப் பெருமாள். தாயார் பெயர் கமலவல்லித் தாயார்.
சோளீஸ்வரரை தரிசிக்க ஒவ்வொரு முறையும் பேரம்பாக்கம் செல்லும்போதும் இங்கு சென்று பெருமாளையும் தரிசித்துவிட்டு வருவோம். எனவே அர்ச்சகர் திரு.ராகவன் பட்டாச்சாரியார் நமக்கு நன்கு பழக்கமாகிவிட்டார்.
இரண்டு வாரத்துக்கு முன்னர் (புரட்டாசி முதல் சனிக்கிழமை) சோளீஸ்வரரை தரிசிக்க சென்றபோது கூட பெருமாளை தரிசித்துவிட்டு பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களிலும் அங்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.
நமது தளத்தை பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் ஏற்கனவே திரு.ராகவ பட்டரிடம் கூறியிருக்கிறோம். (இன்று இந்தப் பிரார்த்தனை பதிவின் பிரிண்ட்-அவுட் மற்றும் வாசகர்களின் பெயர் ராசி நட்சத்திர விபரங்கள் அவருக்கு கூரியர் அனுப்பப்படும்.)
வரும் வாரத்திலும் ஒரு நாள் நேரில் சென்று வைகுண்டப் பெருமாளையம் சோளீஸ்வரரையம் தரிசித்துவிட்டு வரவிருக்கிறோம்.
திரு.ராகவபட்டர், அற்பணிப்பு உணர்வுடன் ஆத்மார்த்தமாக பெருமாளுக்கு சேவை செய்து வருகிறார். வருவாய் குறைவாக உள்ள கோவில்களில் அர்ச்சகர் பணி செய்ய யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இவர் இந்தக் கோவில் மட்டுமல்லாது கூவத்தில் இருக்கும் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் உட்பட மேலும் சில பெருமாள் கோவில்களையும் பார்த்துக்கொள்கிறார்.
பேரம்பாக்கத்தில் வைகுண்டப் பெருமாள் கோவில் அருகிலேயே இவர் இல்லம் இருக்கிறது. விரைவில் இவரை நேரில் சந்தித்து பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்யவிருக்கிறோம்.
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…
முதல் கோரிக்கையை சமர்பித்திருக்கும் வாசகி, அயல்நாட்டில் இருக்கிறார். கணவனும் மனைவியும் ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், குருவிக்கூட்டை கலைப்பது போல சிலர் இவரை இவரது கணவரிடமிருந்து பிரித்திருப்பதாக கூறி கதறுகிறார். 19 வருடம் ராமன்-சீதை போல நாங்கள் வாழ்ந்தோம் என்று இவர் கூறுவதிலிருந்தே இவர் கணவர் மீது இவர் கொண்டுள்ள பேரன்பும் பெரும் மதிப்பும் புலனாகும். விவாகரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இவரது திருமண வாழ்க்கை பட்டுப்போகாமல் காப்பாற்றப்பட நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். விரைவில் இவரது துன்பம் தீர்ந்து மழலைச் செல்வம் உதிக்க வாழ்த்துகிறோம். பிரார்த்திக்கிறோம்.
அடுத்த கோரிக்கை சமர்பித்திருப்பவரும் அயல்நாட்டு வாசகி தான். நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்காக பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியிருக்கிறார். இவரது கோரிக்கை நமது சற்று தாமதமாக கிடைத்தது. எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனையில் இவரது பெயரை சேர்க்கமுடியவில்லை. இருப்பினும் அதற்கு பிறகு நாம் சென்ற ஆலயங்களில் எல்லாம் இவர் பெயருக்கு அர்ச்சனை செய்தோம். இந்த வார பிரார்த்தனை கோரிக்கைகளை பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராகவன் பட்டரிடம் சமர்ப்பிக்க பேரம்பாக்கம் செல்லும்போது, இவரது பெயருக்கு சோளீஸ்வரரிடம் அர்ச்சனை செய்வதாக கூறியிருக்கிறோம். பலவித அறப்பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வரும் நல்லுள்ளம் இவர். விரைவில் இவரது குறைகள் நீங்கி, ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் இறைவனருளால் கிடைக்கட்டும்.
அடுத்த பிரார்த்தனை சமர்பித்திருக்கும் வாசகி, கோவையை சேர்ந்தவர். இவர் நிலை யாருக்கும் வரக்கூடாது. ஒரு பக்கம் மகளுக்கு பிரச்னை. மறுபக்கம் பெற்ற தாய் புற்றுநோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். ஒற்றை ஆளாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் பிரார்த்தனை மீது நம்பிக்கை கொண்டு நமது மன்றத்தில் பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார் பாருங்கள்… அதன் பெயர் தான் நம்பிக்கை. மனநல பாதிப்புக்களை நீக்கும் ‘திருமுருகாற்றுப்படை’ யை படிக்கும்படி இவரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் அனைத்தும் சரியாகும் என கருதுகிறோம்.
அடுத்து நமது நண்பர் ராகேஷ் அவர்கள் அனுப்பியிருக்கும் இரண்டு கோரிக்கைகள். ராகேஷ் அவர்களை பற்றிய அறிமுகம் தேவையில்லை. நமது உழவாரப்பணிக் குழு உறுப்பினர். நமது பணிகளில் உறுதுணையாக இருந்து வருபவர். தொடர்ந்து பல அறப்பணிகளில் ஆன்மீக பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர். இந்த சோதனைகளுக்கு துவண்டுவிடாமல் ‘எல்லாம் நன்மைக்கே’ என இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு அவன் திருவடியை பற்றிக்கொள்வதே நாம் இவருக்கு அளிக்கும் யோசனை. மற்றபடி, சோதனைகள் அனைத்தும் விரைவில் கதிரவனை கண்டா பணி போல நீங்கிவிடும் என்பது உறுதி.
பொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல? இந்தப் பாதகம் விரைவில் முடிவுக்கு வந்து சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு குற்றம் வேரறுக்கப்படவேண்டும்.
இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
1) Want peaceful and happy married life!
Vanakkam,
My name is *********** and my Husband’s name is ****************. We love each other almost 19 years. After we got married, always problems arise by his parents, friends, and relatives. Now we have been separated. He hates me. Not loving me as before. He listens all the people and wanted to get divorce. I do not want to spoil my marriage. I love my husband as god Rama and Seetha. Please pray for me to reunion with my husband soon to avoid divorce. Stop him to cancel the divorce. Please please I’m suffering day and night. I have no children. I would like to have a happy married life with my husband and have a baby. I hope your prayers will help me to reunion with my husband soon. Thanks a lot.
With God love,
Don’t want to disclose the name
2) Suffering from severe nerve disorder, knee & leg pain!
Respected sir
I came across your website just yesterday. I am very impressed with the amount of work you are doing to maintain the site and also helping others with such valuable information about the various temples and gods..it is only possible with divine god’s intervention.. The prayer club is a very noble cause and we thank you immensely for this.
I have a prayer request.
I am a 45 year old previously healthy female, but for the past 5 to 6 months, I have been suffering a lot from some nerve disorder. I have tingling and numbness in hands and legs, Many many tests have been done, seen many specialists, with no clear diagnosis or treatment. I continue to suffer from above symptoms and really bad pain and stiffness in my knees and legs making it hard to walk. I am just not able to function and it is very hard to continue like this.
I believe that God can only cure me, I have faith in God only and truly believe he will bless me and heal me. I came across choleeswarar temple at perambakkam only last week, and I was just surprised to see yesterday that the same temple was mentioned in your site and you visited that temple for prayer just recently, I feel it is not coincidence that I am coming across this god that I have not previously known about. I will continue to pray to Sri Choleeswarar to cure me, though I cannot visit the temple myself now.
Can you please include me in your next prayer and pray for my cure and my family health..
– Mrs.Lakhshmi,
United States
3) பள்ளி செல்ல மறுக்கும் மகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய்…
என் மகள் தனுஷ்வினி (13 வயது) பயம் காரணமாக சில மாதங்களாக சரியாக பள்ளிக்கு செல்வதில்லை. என்ன காரணம் என்றே புரியவில்லை. ஒரே மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனி இருப்பது எனக்கு மிகவும் துயரத்தை தருகிறது. நல்லபடியாக என் மகள் பள்ளி சென்று, படித்து நன்றாக வர வேண்டும். ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
என் அம்மா ராஜாமணி அம்மாளுக்கு (63 வயது) மார்பாக புற்றுநோய் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடமாக மிகவும் கஷ்டப்படுகிறார். தற்போது உடல்நலம் மிகவும் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர் விரைவில் நலம்பெறவேண்டும்.
ஒரு பக்கம் மகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை மறுப்பக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மா என இரண்டு பக்கமும் இந்த அடியை என்னால் சமாளிக்க இயலவில்லை. என் நிம்மதியே போய்விட்டது. இதில் நான் வேலைக்கு வேறு சென்று என் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும்.என் இப்போதைய தேவை என் குடும்ப நலனும் மனஅமைதியும் தான்.
எங்களுக்காக பிரார்த்திக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி,
கோவை
4) விபத்தில் சிக்கி காயமுற்றுள்ள எங்கள் தாத்தா விரைவில் நலம்பெறவேண்டும்!
அனைவருக்கும் வணக்கம். நான் இங்கே என் தாத்தாவிற்காக பிரார்த்தனை கோரிக்கை வைக்கின்றேன்.
என் தாத்தாவின் பெயர் M.திருவேங்கடம். சற்றே வயது 70 நிரம்பியவர். இரு வாரங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு விட்டது. பின்பு மருந்து,மாத்திரை என கால் வலி குணமாகி விட்டது. தற்போது இரு வாரங்களுக்கு முன்பு ,திருமண நிகழ்விற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் மோதி ,வலது காலில் பலத்த அடி. கணுக்கால் அப்படியே பெயர்ந்து வந்து விட்டது. அந்த ஆசாமி நின்று கூட பார்க்கவில்லை.
தற்போது பூசனம்பட்டியில் கட்டு போட்டு கொண்டிருக்கிறார். 48 நாட்கள் கால் அசைக்காது இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். என் பாட்டியும் இந்த நிலையில் கண்ணீர் சிந்தி கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் நம் பிரார்த்தனை மன்றத்தை நம்பி உள்ளேன்.
வெகு விரைவில் என் தாத்தா நலம் பெற்றிட வேண்டி பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றேன் அண்ணா. மேலும் என் பாட்டியும்,தாத்தாவும் சிறப்புற்று வாழ்ந்திட வேண்டுகின்றேன்.
மிக்க நன்றி!
ராகேஷ், கூடுவாஞ்சேரி,
சென்னை
5) அக்காவின் நல்வாழ்வுக்கு ஒரு பிரார்த்தனை!
அனைவருக்கும் வணக்கம். என் தங்கை ராகிணிக்காக பிரார்த்தனை சமர்ப்பிக்கின்றேன்.
என் தங்கையின் திருமண வாழக்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது.பின்பு எதிர்பாராத நிகழ்வினால் (என் திருமண மூலமாக) என் தங்கை குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. இந்த நிகழ்விற்கு பின்பு என் தங்கை கணவர் அவளிடம் சரி வர பேசுவது கிடையாது. அவர் இஷ்டம் போல் வாழ்ந்து வருகிறார். குடிப் பழக்கத்திற்கும் ஆளாகி விட்டார். இதனால் என் தங்கை சொல்ல இயலாத பிரச்சனைகளை சமாளித்து வருகின்றாள். இந்த சூழ்நிலையில் நான், அவளுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றேன். இந்த பிரச்சினைகளுக்கு நான் தான் காரணமோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது.மேலும் என் மச்சானின் வீட்டாரும் சரியாக என் தங்கையிடம் பேசுவதும் இல்லை.
இந்த நிலையில் நான் ஒரு முறை என் தங்கை வீட்டிற்கு சென்று பார்த்த போது, பெரியவா படம் இருந்தது கண்டு வியந்தேன். என் தங்கையின் கணவர் வேண்டாத பழக்கத்திலிருந்து விடுபடவும், அவர்கள் குடும்பம் மகிழ்வோடு வாழ்ந்திடவும், மீண்டும் அவர்கள் குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பிடவும் கருணை கடலான பெரியவாவிடம் இந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றேன்.
மிக்க நன்றி!
ராகேஷ், கூடுவாஞ்சேரி,
சென்னை
* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.
** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
==========================================================
பொதுப் பிரார்த்தனை!
குறிவைத்து திட்டமிட்டு தீர்த்துகட்டப்படும் இந்து இயக்கத் தலைவர்கள்!
இந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிக சாமர்த்தியமாக திட்டம்தீட்டி இது செய்யப்படுகிறது. இதுவரை தமிழகத்திலும் கேரளாவிலும் பலர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தேசியக்கொடியை எரித்த ஒரு தேசத் துரோகியை கலந்துரையாடலுக்கு அழைத்து அழகு பார்க்கின்றனரே தவிர எந்த ஊடகமும் இது பற்றி விவாதிக்கவில்லை. அதற்கு தைரியமுமில்லை.
கோவையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட திரு. சசிகுமார் இந்து முன்னணியில் பலஆண்டுகள் சமூகப் பணிஆற்றியவர். அதே போல கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தொடர் படுகொலையை இங்கே ஊடகங்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆடிட்டர் ரமேஷில் ஆரம்பித்து சசிகுமார் வரை தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பல படுகொலைகள் சொல்லி வைத்து அரங்கேற்றப்பட்டுள்ளன.
இதே கோவையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட ஒரு மாற்றுசமூகத்தினரோ அல்லது மாற்று மதத்தினரோ இது போல கொலை செய்யப்பட்டிருந்தால் தேசிய ஊடங்கள் வரை விஷயம் பரவி, தமிழ்நாட்டில் இனப்படுகொலை நடப்பதாக சித்தரித்துவிடுவார்கள். ஆனால் கொல்லப்படுவது இந்து தானே. அதனால் யாரும் கண்டுகொள்ளவில்லை போல.
கேராளாவில் அப்பா, அம்மா, இப்போது மகன் என ஒரு குடும்பத்தையே காலி செய்துவிட்டார்கள். இதன் தீவிரம் குறித்தோ அல்லது ஆபத்து குறித்தோ பலருக்கு இன்னும் புரியவில்லை. ‘இன்று இலை அறுப்பவன் நாளை குலை அறுப்பான்’ என்பதை மறக்கக் கூடாது.
நம் தளத்திற்கு என்று ஒரு தகுதி உண்டு. எனவே இத்தோடு வார்த்தைகளை நிறுத்திக்கொள்கிறேன்.
இந்த தொடர்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரானாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரவேண்டும். தமிழகத்திலும் கேரளத்திலும் அமைதி நிலைவேண்டும்.
இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!
==========================================================
விபத்து, உடற்பிணி, கருத்து வேறுபாடு தொடர்பான பிரச்சனைகளால் தங்கள் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களுக்காக இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.
தொடர்ந்து திட்டமிட்டு இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்வதைப் போல, பெரும்பான்மை சமூகதினராய் இருந்தும் நம் நாட்டில் இந்துக்களுக்கு ஏதாவது என்றால் அதற்கு உடனே மதச் சாயம் பூசுகிரார்களே தவிர ஏன் என்று கேள்வி கேட்க இங்கு நாதியில்லை. இந்நிலை மாறவேண்டும். இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். தமிழத்திலும் கேரளாவிலும் அமைதி திரும்பவேண்டும். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராகவன் பட்டாச்சாரியார் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : 2016 அக்டோபர் 16 & 23 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கூவம் திரிபுராந்தக சுவாமிக்கு தினமும் சைக்கிளில் 12 கி.மீ. தூரத்திலிருந்து அபிஷேகத்திற்கு பால் கொண்டு வரும் திரு.குமார்
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திரு.குமார் அவர்களை (இவர் தினமும் சுமார் 12 கி.மீ. சைக்கிளில் திரிபுராந்தக சுவாமிக்கு அபிஷேகப் பால் கொண்டு வருகிறார்) கடந்த 24/09/2016 அன்று நேரில் சந்தித்து பிரார்த்தனை விபரங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட்டை அவரிடம் கொடுத்தோம்.
அவருக்கு இணையமோ வாட்ஸ் ஆப்போ பார்க்க இயலாது. எனவே பிரார்த்தனை பதிவை அளித்த அடுத்த நாள் நேரில் சென்று அவரை சந்தித்து பிரார்த்தனை கோரிக்கைகளை படித்துக்காட்டி, சுவாமி-அம்பாள் பாதத்தில் அதை பிரார்த்தனை நேரத்தில் வைத்து பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம். அவரும் ஒப்புக்கொண்டு அதன்படியே அடுத்த இரண்டு வாரங்களும் செய்தார்.
நாம் சென்றபோது கூட உச்சிகால பூஜையை கண்டுரசித்து பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களில் அர்ச்சனை செய்தோம்.
கோவில் குருக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கி பிரார்த்தனை செம்மையாக நடைபெற உதவினார்கள். திரு.குமார் அவர்களுக்கும் ஏனைய ஆலய ஊழியர்களுக்கு அர்ச்சகர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றி.
இந்த புகைப்படத்தில் காணப்படும் ஒவ்வொருவரும் (அடியேனை தவிர்த்து) ஒவ்வொரு வகையில் ஈசனின் மெய்யடியார்கள். பன்னெடுங்காலமாக திரிபுராந்தாகருக்கும் திரிபுரசுந்தரிக்கும் தொண்டு செய்து வருபவர்கள்.
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!
==========================================================
[END]
ரைட் மந்த்ரா ஆண்டவன் திருவடிக்கு வித்து !! வாழ்க தொண்டு