Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > Featured > சூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்!

சூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்!

print

ரு முறை தேவாசுர யுத்தம் முடிந்த பின்னர் தேவேந்திரன் தேவகுரு பிரகஸ்பதியை சந்திக்கச் சென்றான். தேவேந்திரனின் முகம் வாட்டத்துடன் இருப்பதை பார்த்த பிரகஸ்பதி, “அது தான் மகாவிஷ்ணுவின் உதவியால் வெற்றி பெற்றுவிட்டீர்களே இன்னும் என்ன கவலை?” என்று வினவினார்.

“குருவே போரில் வெற்றி பெற்றுவிட்டாலும், போரினால் ஏற்பட்ட காயம் மற்றும் காயத்தின் தழும்புகள் தேவர்களை வருத்தமுறச் செய்கின்றன. அவர்கள் வேதனையிலிருந்து எப்படி மீட்பது என்று தெரியவில்லை. எனவே தான் வாட்டத்துடன் இருக்கிறேன்!”

dsc01898

“தேவேந்திரா கவலை வேண்டாம். வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியனான அந்த வைத்தியநாதனை பூவுலகில் சென்று வழிபடுவோம். வழிபிறக்கும்” என்று ஆலோசனை கூற அனைவரும் பூவுலகம் வந்து ஈசனை வழிபட்டனர்.

தேவர்கள் வந்து வழிபட்ட அந்த தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்கிற வைத்தீஸ்வரன் கோவில்.

இங்கு வந்து அம்மையப்பனை தினமும் பயபக்தியுடன் தேவர்கள் வழிபட்டு வர, தேவர்களை காக்க திருவுளம் பூண்ட பரமேஸ்வரனும் பார்வதியும் ஒரு வைத்திய தம்பதிகள் போல வேடமிட்டு வந்தனர். ஈசன் வைத்தியராகவும், அவர் உதவியாளர் போன்று அன்னையும் வந்தாள்.

இருவரும் தேவர்கள் தலைவனை சந்தித்து தாங்கள் காயங்களை ஆற்ற உதவுவதாக கூற, “சாட்சாத் அந்த ஈசனே, உங்களை அனுப்பியிருக்கிறார்… உடனே செய்யுங்கள் ஐயா” என்றான் இந்திரன்.

தொடர்ந்து வைத்தியர் அன்னையின் கையிலிருந்த தைலப் பாத்திரத்திலிருந்த தைலத்தை ஒரு மயிலிறகால் எடுத்து தேவர்களின் காயங்கள் மீது தடவ, அடுத்த நொடி காயங்கள் மறைந்து தேவர்கள் மேனி பொலிவு பெற்று ஒளிவீசியது.

தேவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

“ஆ… என்ன அதிசயம்! வைத்தியரே, நீங்கள் யார்? உங்கள் கையால் மருந்தை இட்டவுடன் எங்கள் காயங்கள் ஆறிவிட்டதே….”

அடுத்த நொடி வைத்தியத் தம்பதிகள் மறைந்து அங்கு இறைவன் பார்வதி பரமேஸ்வரனாய் காட்சியளித்தார்.

“ஆ… அம்மையப்பனா எங்களை காக்க வந்தது…”

கீழே விழுந்து வணங்கினார்கள்.

(இக்கோயிலில் வைத்தீஸ்வர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.)

உடனே தேவர்கள் ஒரு பெரிய பொற்கிண்ணம் நிறைய முத்துக்களை கொடுத்து, “இதை எங்கள் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

முத்துக்களை பார்த்த அன்னைக்கு அதை தன் மைந்தன் குமரனுக்கு சூட்டிப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை அரும்பியது. (சிக்கலை அடுத்து சூரபன்மனை அழிக்க இங்கு தான் அன்னை முருகனுக்கு வேல் கொடுத்தாள் என்பது குறிப்பிடத்தக்கது!)

இதையடுத்து அதை ஆபரணமாக செய்து முருகனுக்கு அணிவித்து அழகு பார்த்தாள் அன்னை. எனவே தான் இங்குள்ள முருகனுக்கு ‘முத்துக்குமார சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது.

முத்துக்குமார சுவாமி தந்தையைப் போலவே திருவிளையாடலில் கைதேர்ந்தவர். தீராத பிணிகளை தீர்ப்பதில் எக்ஸ்பர்ட்.

muthukumaraswamy

முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்!!

முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப்படும் இந்த முத்து ஆபரணங்கள் எத்தனையோ படையெடுப்புக்களில் இருந்து தப்பித்து வந்துள்ளன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.

அது நவாப்கள் ஆட்சி செய்த காலம். நமது கோவில் சொத்துக்கள் பல கொள்ளையடிக்கப்பட்டன. பல கோவில்கள் தகர்க்கப்பட்டன. அப்போது ஒரு படை அதன் தளபதி தலைமையில் தென்தமிழ்நாட்டில் உள்ள குடந்தை, மயிலாடுதுறை உள்ளிட்ட தலங்களை குறிவைத்து புறப்பட்டது. வரும் வழியில் பல கோவிகளுக்குள் இப்படையினர் புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்தனர்.

வைத்தீஸ்வரன் கோவிலில் சரவணப் பிள்ளை என்பவர் அப்போது பொக்கிஷ காப்பாளராக இருந்தார். இத்தலத்தே எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி மீது பேரன்பும் பெரும் பக்தியும் கொண்ட அவர் முருகனுக்கு அடிக்கடி முத்து ஆபரணங்களை சூட்டி அழகு பார்ப்பார். கோவில் நகைகள் அனைத்திற்கும் உரிய கணக்குகளை நிர்வகித்து வந்த அவர், அவற்றை பத்திரமாக கையாண்டு முறையாக பராமரித்து வந்தார். நகைகளை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பார். அதன் பொலிவு எந்தவகையிலும் குறைந்துவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இப்படையினர் குடந்தைக்கு அருகவே ஒரு கோவிலில் கொள்ளையடித்தனர். அந்தக் கோவிலில் பணியாற்றிய சரவணப் பிள்ளையின் மைத்துனன் உடனே தனது மாமாவுக்கு இது குறித்து தகவலை தெரியப்படுத்தி அவரை உஷார்படுத்தினான்.

நவாப்பின் படைகள் விரைவில் வைத்தீஸ்வரன் கோவிலை முற்றுகையிடப் போகின்றனர் என்பதை அறிந்த சரவணப் பிள்ளை பதறி துடித்தார். “கொடியவர்கள், ஆண்டாண்டு காலமாக இங்குள்ள நகைகளை பறித்துச் சென்றால் என் செய்வேன்? முருகா நீயே துணை… உன் பொருளை காக்க என் உயிர்போனாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கதறியபடி முத்துக்குமார சுவாமியிடம் முறையிட்டார். பின்னர் கோவிலேயே கண்ணயர்ந்துவிட்டார்.

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முத்துக்குமரன், “அன்பனே கவலை வேண்டாம். வரும் படைத்தளபதிக்கு நாம் சூலை நோயை தருகிறோம். அவன் வயிற்று வலியால் துடிப்பான்… என்ன மருந்து உட்கொண்டாலும் அவனுக்கு நோய் நீங்காது. நாளை காலை நீ அவனை சந்தித்து திருச்சாந்துருண்டையுடன் இந்த மருந்தைக் கொடு. இதை உட்கொண்டவுடன் அவனுக்கு வலி நீங்கிவிடும். பிரதியுபகாரமாக கோவில் நகைகளை காப்பாற்றிக்கொள்” என்று கூறிவிட்டு மறைந்தான்.

திடுக்கிட்டு விழித்த சரவணப்பிள்ளை, தனது தலைமாட்டுக்கு அருகில் ஒரு சிமிழிக்குள் மருந்து இருப்பதைக் கண்டார்.

“முருகா… முத்துக்குமரா… கண்கண்ட தெய்வமே… உன் கருணையே கருணை” என்று முருகனின் கருணையை எண்ணி எண்ணி உருகினார்.

மறுநாள் விடிந்தது, தளபதியை தேடிப் புறப்பட்டார். புள்ளிருக்கு வேளூருக்கு சற்று தொலைவில் ஒரு இடத்தில் படைகள் கூடாரமிட்டு தங்கியிருப்பதை பார்த்தார்.

அங்கு சென்று விசாரித்தபோது, தளபதிக்கு உடல் நலமில்லாத காரணத்தால், மேற்கொண்டு படையை செலுத்தாமல் ஓய்வெடுப்பதாக வீரர்கள் கூறினர்.

==========================================================

Please check :

இவர் தீர்க்காத நோய் இல்லை – வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர்

==========================================================

அவர்களிடம் “உங்கள் தளபதியின் நோயை தீர்க்கும் மருந்து என்னிடம் உள்ளது. நீங்கள் அனுமதித்தால் அவரை சந்தித்து இதைக் கொடுப்பேன்” என்றார்.

காவலாளிகள் உடனே கூடாரத்தின் உள்ளே சென்று வலியால் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த தளபதியிடம் விஷயத்தைக் கூற, “உடனே அவரை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

உள்ளே வந்த சரவணப் பிள்ளையையும் அவரது சிவப்பழமான தோற்றத்தையும் பார்த்தவுடனே அவனுக்கு அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டது.

“நான் பக்கத்து ஊருக்கு செல்லும் வழியில் இங்கே உங்கள் படையினர் முகாமிட்டிருப்பதை பார்த்தேன். என்ன ஏது என்று விசாரித்தபோது தாங்கள் உடல்நலமின்றி இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னார்கள். உங்களுக்கு விருப்பம் என்றால், என்னிடமுள்ள சரவரோக நிவாரணி ஒன்றை தருகிறேன். அதை உட்கொண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலி உடனே அகன்றுவிடும்!” என்றார் சரவணப் பிள்ளை.

‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இருந்த தளபதிக்கு இவர் கூறியது அந்த ஆண்டவனே கூறியது போலிருந்தது.

“எத்தனையோ வைத்தியர்கள் இதுவரை வைத்தியம் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் பலனில்லை. நேரம் செல்ல செல்ல வலி தான் அதிகரிக்கிறது. உங்களைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. நீங்கள் மட்டும் என் நோயை குணப்படுத்திவிட்டால் நீங்கள் கேட்பது எதுவானாலும் தருகிறேன்” என்றான்.

“முதலில் நீங்கள் இம்மருந்தை சாப்பிடுங்கள் தளபதியாரே… பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றவர், அந்த மருந்தை எடுத்து முருகனை தியானித்து சடாக்ஷர மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தபடி தேனில் குழைத்து அதனுடன் வைத்தியநாதரின் பிரசாதமான திருச்சாந்துருண்டையும் தந்து உண்ணும்படி கேட்டுக்கொண்டார்.

நவாப்பின் தளபதியும் மருந்தை உட்கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வயிற்று வலி படிப்படியாக குறைந்து பின்னர் முற்றிலும் போயே போய்விட்டது.

தளபதிக்கு ஒரே மகிழ்ச்சி. “ஐயா… தக்க சமயத்தில் வந்து என் நோயை குணப்படுத்தினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்”

“ஐயா.. நான் உங்களிடம் கேட்கப்போவது ஒன்றுமில்லை… புள்ளிருக்கு வேளூர் கோவிலை கொள்ளையடிக்கும் தங்கள் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் இப்போதே உங்கள் நவாப்பிடம் திரும்பிச் செல்லவேண்டும்”

இதை சற்று எதிர்பாராத அத்தளபதி, “இதென்ன விசித்திரமான் வேண்டுகோளாக இருக்கிறதே?” என்றான்.

சரவணப் பிள்ளை நடந்த அனைத்தையும் கூறினார். உடனே இஸ்லாமியரான அந்த தளபதிக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.

“என் நோய் நீக்கிய உங்கள் ஆண்டவனை நான் பார்க்கவேண்டும்” என்று தன் விருப்பத்தை தெரிவித்தான். சரவணப் பிள்ளை சற்று தயங்கினார்.

“உங்கள் கோவில் நகைகள் ஒன்றைக் கூட தொடமாட்டேன் இது சத்தியம்” என்று பிள்ளை அவர்களிடம் சத்தியமும் செய்துகொடுத்தான்.

பின்னர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து உள்ளே நுழையாமல் முத்துக்குமார சுவாமியை முன்மண்டபத்தில் எழுந்தருளச் செய்து கண்குளிர தரிசித்தான்.

மேலும் சூலைநோயை நீக்கிய முத்துக்குமார சுவாமிக்கு தன்னிடம் உள்ள முத்துப்பந்தல், ஆலவட்டம், குடை, பல்லக்கு, கொடி, சாமரம் போன்ற பொருட்களை காணிக்கையாக கொடுத்தான். விசேஷ நாட்களில் தீபாராதனை முடிந்தவுடன், தனக்காக மற்றொரு தீபாராதனை செய்யும்படி பல நிபந்தங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றான். இன்றும் இது வைத்தீஸ்வரன் கோவிலில் வழக்கத்தில் உள்ளது. நேரில் சென்றால் பார்த்து மகிழலாம்.

இத்தோடு முடிந்துவிட்டதா முத்துக்குமரன் திருவிளையாடல்?

கடல் வற்றினாலும் கந்தன் கருணை வற்றுமா?

டல் வற்றினாலும் கந்தன் கருணை வற்றுமா? சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதருக்கும் இதே போலே முத்துக்குமார சுவாமி அருள்புரிந்ததுண்டு.

Muthuswami dikshitarசியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்களில் முத்துசாமி தீட்சிதர் (மார்ச் 24, 1776 – அக்டோபர் 21, 1835) முத்துக்குமார சுவாமி அருளால் பிறந்தவர் என்பதால் பெற்றோர் அவருக்கு அந்தப் பெயரையே வைத்தனர்.

முத்துசாமி தீட்சிதருக்கு மூப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் பார்வை மங்கியது. இதனால் மிகவும் துன்புற்ற அவர், முருகனிடம் முறையிட்டார். அவர் கனவில் தோன்றிய கந்தவேள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து, சித்தாமிர்த குளத்தில் நீராடி தம்மை தரிசிக்கும்படி கட்டளையிட்டான்.

தீட்சிதரும் உடனே வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புறப்பட்டு வந்து திருக்குளத்தில் நீராடி அம்மையப்பனை தரிசித்து முருகனை தரிசித்தார். சில நாட்களில் அவருக்கு பார்வை மீண்டும் கிடைத்தது. முருகனின் கருணையை வியந்து முத்துக்குமார் சுவாமி மீதும் பாடலைப் பாடி, 1835 ஆம் ஆண்டு தீபாவளித் திருநாள் அன்று முருகனோடு இரண்டறக் கலந்தார்.

* தீராத நோய்களால் அவதிப்படுவோர் ஒரு முறை அவசியம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வரவேண்டும். அந்த மண்ணை மிதித்தாலே பலனுண்டு. கோவில்கள் வணிகமயமாகிவிட்ட இன்றைய காலங்களில் சிலருக்கு இதுபோன்ற பரிகாரத் தலங்களில் செய்யப்படும் பரிகாரங்கள் முறைப்படி செய்யப்படுகின்றனவா எல்லாம் அவசர கதியில் இருக்கின்றனவே என்று தோன்றலாம். நீங்கள் பரிகாரம் முதாலனவைகளை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. சம்பந்தப்பட்ட தலத்திற்கு சென்று இறைவனை தரிசித்து அந்த தலம் தொடர்புடைய திருமுறைகளையும் திருப்புகழையும் அங்கு அமர்ந்து ஓதினாலே போதும். இறைவனின் அருள் தானாக சுரக்கும். செய்து பாருங்கள்.

==========================================================

Please check :

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

==========================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS!

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

Also check :

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *