சென்ற மாதம் நமது தளத்தின் பேட்டிக்காக அவர்களை சந்தித்தபோது அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற நமது விருப்பத்தை அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், நவராத்திரியின்போது குழந்தைகளை ஏதேனும் ஒரு கோவிலில் பாடவைத்தால் அதுவே போதுமானது என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மேற்படி கோவிலில் அக்குழந்தைகளின் இசை நிகழ்ச்சியை எளிமையாக ஏற்பாடு செய்திருக்கிறோம். கோவிலில் பிரமாதமான ஹால் போன்ற அமைப்பு உள்ளது. சிறிய மேடை வசதியும் உள்ளது. வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை மாலை வள்ளியும் லோச்சனாவும் அங்கு நவராத்திரி பாடல்களை ஒரு மணிநேரம் பாடவிருக்கிறார்கள். அப்போது நம் தளம் சார்பாக வள்ளி, லோச்சனா சகோதரிகள் கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.
நம் வாசகர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மேற்படி நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும். திருமுருக.கிருபானந்த வாரியாரின் அருளையும் விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதரின் அருளையும் பெறவேண்டும்.
நிகழ்ச்சியின் இறுதியில் அக்குழந்தைகளை கொண்டே பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் நடைபெறும். நிகழ்ச்சிக்காக கோவிலில் ஹாலை புக் செய்தாகிவிட்டது. மற்ற ஏற்படுகளை செய்துவருகிறோம்.
இந்த அரும்பணியில் தங்கள் பங்களிப்பை அளிக்க விரும்பும் வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும்.
முகவரி : அருள்மிகு விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில், (சங்கர மடம் அருகே) மேற்கு மாம்பலம் – சென்னை 600 033. (Land mark : தி.நகர் பேருந்து நிலையத்தையொட்டிய மேட்லி ரோடு சுரங்கப் பாதை அருகே)
M : 9840169215 | E : simplesundar@gmail.com
==============================================================
Also check:
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
===============================================================
[END]
நம் தளம் சார்பாக லோச்சனாவையும் வள்ளியையும் இந்த நவராத்திரி சமயத்தில் கௌரவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த குழந்தைகளின் கச்சேரி நிகழ்ச்சி மற்ற குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்கும்
நன்றி
உமா
இசை சகோதரிகளின் பாடல் நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்……
விழா சிறக்க வாழ்த்துகள்.