இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவன் மீது நமக்கு கோபமும் வருத்தமும் ஏற்படுவது உண்டு. “உன்னையே அனுதினமும் நினைக்கிறேன். ஒரு புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைத்ததில்லை நான். எனக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று நம் மனம் குமுறுவது உண்டு.
தீயவர்களின் சந்தோஷமும் சுகபோகமும் அவர்களின் கர்மவினையால் வந்தது என்றே வைத்துக்கொள்வோம். அப்போது, நல்லவர்களின் பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் மதிப்பே இல்லையா? எல்லாவற்றையும் கர்மவினை தான் தீர்மானிக்கிறது என்றால் இறைவன் எதற்கு? அவன் மீது பக்தி எதற்கு? கோயில்கள் எதற்கு? என்ற கேள்வி எழுவது இயல்பே.
இறைவனை பொறுத்தவரை அவன் மிகச் சிறந்த ஒரு நீதிபதி ஸ்தானத்தில் இருப்பவன். அவனை எதைக் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது. நமது உண்மையான பக்தியும், அன்பும் தவிர. அப்படி பக்தியையும் அன்பையும் நாம் கொடுக்கும்போது அவன் நியாயத்துக்கு புறம்பாக எந்தவித விதிவிலக்குகளையும் நமக்கு தருவதில்லை. ஆனால் தண்டனைகளை மாற்றியமைக்கிறான். அதன் கடுமையை குறைக்கிறான். அவன் அருள் கிடைக்கும்போது சராசரி மனிதர்களுக்கு தாங்க முடியாத துயரம் என்பது தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாறுகிறது. தன்னையே அனுதினமும் துதித்து உத்தமர்களாக வாழ்ந்து வரும் மெய்யன்பர்களுக்கோ அந்த கடுமையே தெரியாத அளவிற்கு அவன் தாங்கிப் பிடிக்கிறான்.
நமது முந்தைய செயல்களின் விளைவால் (பெரும்பாலும் பூர்வஜென்மத்தில் ) தற்போது நமக்கு ஏற்படும் நிகழ்வுகளே ‘கர்மா’ எனப்படுவது. இதைத் தான் அறிவியலும் “Every action has equal and opposite reaction” என்று கூறுகிறது.
கர்மா மிகவும் வலிமையானது. அதிலிருந்து யாராலும் தப்ப இயலாது. கடவுள் நம்பிக்கை தீவிரமாக உடையவர்களுக்கு கர்மாவின் கடினம் தெரியாது. அல்லது அது ஏற்படுத்தும் தீய பலன்களின் தாக்கம் குறைவாக இருக்கும். மற்றவர்களுக்கு அது மிகவும் கடுமையாக இருக்கும்.
கர்மாவையும் கடவுள் அருளையும் இதை விட எளிமையாக, ஏற்றுக்கொள்ளும்படி விளக்க எவராலும் முடியாது.
கர்ம வினையும் கடவுள் நம்பிக்கையும்!
30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை! 30 வருடம் வீழ்ந்தவரும் இல்லை . ஜோதிடத்தில் சனி ஒரு சுற்று வர 30 வருடங்கள் ஆகும். அதனால் எந்த ராசி ஆக இருபின்னும் 7 1/2 சனியின் பாதிபையோ அல்லது திசை மாற்றத்தையோ சந்தித்தே ஆக வேண்டும் . இது அனைவருக்கும் பொருந்தும் விதி.
ஒரு சிறு கதை உண்டு. சதீஷ், ரமேஷ் என இரு நண்பர்கள். சதீஷ் கடவுள் மேல் அளவற்ற அன்பு உடையவன். ரமேஷோ கடவுள் மேல் நம்பிக்கை துளியும் இல்லாதவன். தவிர மனம்போன போக்கின் படி செல்லும் தவறான ஒரு வாழ்க்கை வாழ்பவன். நண்பனை திருத்த சதீஷ் எவ்வளவோ முயன்றும் பயனில்லை. ஒரு நாள் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். சதீஷ் கோவிலுக்கு உள்ளே சென்று கடவுளை மனமார வேண்டுகின்றான். ரமேஷோ கோவிலுக்கு உள்ளே செல்லாமல், “நீ போய்விட்டு வா. நான் இங்கே காத்திருக்கிறேன்” என்று கூறியபடி வெளியே நின்று கொண்டு, காலால் மணலை தள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றான்.
சதீஷ் கடவுளை சற்று நேரம் எடுத்துக்கொண்டு ஆலய தரிசனத்தை முடித்து இறைவனை வணங்கிவிட்டு திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக கோவில் மணியில் தலையை இடித்து கொண்டு நெற்றியில் அடிபட்டு, ஒரு சிறிய ரத்தகாயத்துடன் திரும்புகிறான்.
அங்கே வெளியே மணலில் விளையாடிக்கொண்டிருக்கும் ரமேஷோ மணலில் இருந்து ஒரு ஐநூறு ரூபா நோட்டை கண்டு எடுகின்றான். ரத்த காயத்துடன் திரும்பிய தன் நண்பனை பார்த்து சிரித்த ரமேஷ், “பார்த்தாயா ! கடவுளே கதி என இருக்கும் உனக்கு ரத்த காயம்; எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கு 500 ரூபாய் நோட்டு! இதிலிருந்தே தெரியவில்லை கடவுள் இருக்கிறார் என்று சொல்வதெல்லாம் சுத்த பேத்தல்!” என சொல்லி சிரிகின்றான்.
சதீஷ் பதில் சொல்ல தெரியாது விழிக்கின்றான். இது போன்று அன்றாட வாழ்க்கையில் நமக்கு பல சமயம் நடப்பதுண்டு.
இந்த காட்சியை மேலே இருந்தபடி பார்த்துகொண்டு இருந்த அன்னை பார்வதி இறைவனிடம், ரமேஷின் கேலியை சுட்டி காட்டி விளக்கம் கேட்கிறார். பரமேஸ்வரன் புன்முறுவலுடன் சொல்கிறார் ,”பார்வதி! கர்ம வினைப்படி , இப்பொழுது சதீஷுக்கு பெரும் துன்பம் வர வேண்டிய நேரம். ஆனால் அவன் நானே கதி என நல்வழியில் வாழ்ந்ததால், அவனுக்கு வர இருந்த பெரிய துன்பம் சிறிய காயத்துடன் போயிற்று!! ராமேஷுக்கோ அவன் விதிப்படி மிக மிக அதிர்ஷ்டமான நேரமிது. பெரிய புதையலே கிடைக்க வேண்டிய தருணம். ஆனால் அவன் நல்வழியில் வாழாததால் வெறும் ஐநூறு ரூபாயோடு அவன் அதிர்ஷ்டம் முடிந்தது” என கூறினார்.
இறைவன் கூறுவதை நன்கு கவனியுங்கள். “ரமேஷ் நல்வழியில் வாழாததால் அவனுக்கு கிடைக்கவிருந்த மாபெரும் அதிர்ஷ்டம் நழுவியது” என்று தானே தவிர, “அவன் என்னை வணங்காததால்” என்று இறைவன் கூறவில்லை. (ஆண்டவனை நீங்க ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பது ஒரு விஷயமல்ல. அவன் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் உங்கள் செயல்பாடு இருக்கிறதா என்பதே விஷயம்!)
தீயவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இறைவன் அருள் செய்யும் விதம் எப்படி என்று இப்போது புரிந்திருக்குமே!
==========================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
==========================================================
Also check :
எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!
வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!
உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?
அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!
மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!
கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?
தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!
விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
==========================================================
[END]
உண்மையில் கடவுளை நம்பிநோர் கை விட படார் ,அதற்காக கடவுளை மட்டும் நம்பி கொண்டு உழைக்காமல் இருக்க கூடாது
Good story. Anna twitter la new post update link tweet pannunga.
Superb story buddy..
Nice message.. Keep going..
எனக்குமே இந்த சந்தேகம் பல சமயம் வந்ததுண்டு..
அதற்கு விடை சொல்வது போல் உள்ளது உங்கள் கதை..
இறைவன் தாங்கள் பத்தாம் தேதி வெளியிட்ட இந்த கட்டுரையை
நான் இன்று படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று வைத்துள்ளார் போல..
எல்லாம் அவன் செயல்..
Excellent…Thank you very much for your great work…
நன்றி,
இக்கதை மூலம் முன்பு எனக்கு இருந்த ஐயம் நீங்கியது
நல்ல பதிவு ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு
இங்கயும் Comment போட வந்துட்டடோம்ல
——————————————–
நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும் சிதம்பரம்.
நல்வரவு.
– சுந்தர்
ஆண்டவனை நீங்க ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பது ஒரு விஷயமல்ல. அவன் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் உங்கள் செயல்பாடு இருக்கிறதா என்பதே விஷயம்!
Super…Even I thought many times like this…
I read the below in somewhere..and it is very nice words..
God always answers as in anyone of the 3 Ways (yes/No/Wait)…
YES..and gives us what we want..
NO..and gives us the one which better suits for us..
WAIT..and searching the best for us…
எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என்று நினைகிறேன். நம்புகிறேன். உலகத்தில் எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். 🙂
நல்ல எளிமையான விளக்கம் .
அருமை.