Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

print
நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு பெரிய சரக்கு கப்பலில் வேலை செய்து வந்தார் அவர். ஒரு கட்டத்தில் எத்தனை கடினமான புயல்வீசும் கடற்பரப்பானாலும் அதில் லாவகமாக கப்பலை செலுத்தும் வித்தையை கற்றுக்கொண்டுவிட்டார். இவரின் திறமையை கேள்விப்பட்ட ஒரு பெரிய கப்பல் வியாபாரி, இவரை தனது பெரிய பயணிகள் கப்பல் ஒன்றின் மாலுமியாக நல்ல சம்பளத்தில் நியமித்துவிட்டான்.

தினசரி கப்பல் கிளம்பும்போது, அதை இயக்குவதற்கு முன்னர், சில நிமிடங்கள அமைதியாக அமர்ந்து “இறைவா… இன்று எங்கள் பயணத்தில் எங்களுடன் துணையிருந்து எங்களை காத்தருள்வாயாக!” – என்று பலவாறு துதித்து பிரார்த்தனை செய்வது இவர் வழக்கம்.

Ship Prayer

ஒரு முறை ஒரு கோடைக்காலத்தில் ஒரு பெரிய இளைஞர் பட்டாளத்தை கடல்வழியே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

இளைஞர்கள் கப்பலில் அமர்ந்து ஆரவாரம் செய்துகொண்டு ஆடிப்பாடிக்கொண்டு இருந்தனர். அவர்களை வழியனுப்ப வந்தவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

கப்பல் புறப்படும் முன், வழக்கம் போல நம் மாலுமி பிரார்த்தனை செய்தார். அதைக் கண்ட இளைஞர்கள் அவரை கண்டு நகைத்தனர்.

“ஐயா… கடல் அமைதியா இருக்கிறது. மழையோ புயலோ வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இப்போது எதற்கு இத்தனை தீவிரமான பிரார்த்தனை?”

இவர் பதில் ஒன்று சொல்லாமல், ஒரு சிறு புன்முறுவல் செய்தபடி கப்பலை செலுத்த போய்விட்டார்.

நடுக்கடலில் சென்றபோது, திடீரென்று ஒரு பெரிய சூறைக்காற்று வீசியது. கப்பல் குலுங்கியது. போதாக்குறைக்கு மழை வேறு பிடித்துக்கொண்டது. ஆர்பரித்த கடல் நீர், உள்ளே வந்து மிரட்டிவிட்டு சென்றது.

இளைஞர்கள் அனவைருக்கும் ஜன்னியே வந்துவிட்டது. முதல்பயனமே இறுதிப் பயணமாக போய்விடுமோ என்கிற பயம் அவர்களுக்கு…

அவரவர்க்கு கடவுள் நம்பிக்கை திடீரென்று பொத்துக்கொண்டு வந்தது.

அனைவரும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடிவெடுத்தனர். மாலுமியிடம் சென்று, தங்களுடன் பிரார்த்தனையில் இணையுமாறு கேட்டுக்கொண்டனர்.

அவர் சொன்னார்… “மன்னிக்கவும் நண்பர்களே… கடல் அமைதியாக இருக்கும்போது நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் கடல் ஆர்பரிக்கத் துவங்கி பயணம் கடினமானால், கப்பலை பத்திரமாக செலுத்துவதில் தான் நான் கவனம் செலுத்துவேன்!”

இவர் சொன்னதில் எத்தனை ஆழ்ந்த பொருள் இருக்கிறது தெரியுமா?

மீண்டும் ஒருமுறை தொடக்கத்தில் இருந்து படியுங்கள்.

கடவுள் நம்பிக்கை எப்போது தேவை, மனித முயற்சி எப்போது தேவை என்பதற்கு இதைவிட அற்புதமான உதாரணம் இருக்கமுடியாது!

வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இன்றி இருக்கும்போது, இறைவனை நாம் வணங்கத் தவறினோம் என்றால் இக்கட்டில் இருக்கும்போது இருக்கும்போது அவனருளை பெற தவறிவிடுவோம்.

ஆனால், வசந்தம் வீசும்போது அவன் மீது நம்பிக்கை செலுத்தி பக்தி செய்து வந்தால், ஆபத்தான காலகட்டங்களில், நாம் கேட்காமலே அவனருள் நமக்கு கிடைக்கும்.

ஆனால், நம்மில் பலர் செய்வது என்ன?

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (குறள் # 0337)

திருவள்ளுவர் கூறுவது போல மனித வாழ்க்கை நிலையற்றது. நொடிக்கு நொடி மாறும் இயல்புடையது. இதை உணராமல் கொண்டாடி களித்துவிட்டு பிரச்சனை என்று வரும்போது தான் ஆண்டவனை நோக்கி ஓடுகிறோம். அதுவரை நம்மை சுயநலம் தான் ஆட்டிப்படைக்கிறது. மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு எத்தனையோ விஷயங்கள இவ்வுலகில் உள்ளன. எனவே ஒவ்வொரு நொடியையும் இறைவனுக்கு அற்பணித்து வாழ்வோம். அது தான் ஆனந்தமான, அர்த்தமுள்ள, ஆபத்தற்ற வாழ்க்கை.

========================================================

இனி இந்த செயல் தொடர்ந்தால்….

சில நாட்களுக்கு நாம் வெளியிட்ட ‘ஆட்டுக்குட்டிகளும் மன அமைதியும்’ கதையை வரிக்கு வரி யாரோ அப்படியே எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். நம் தளத்தையே சுவாசிக்கும் அன்பு வாசகர்களுக்காக உயிரினும் மேலான உழைப்பில் விளைந்த பதிவு நம் தளத்தின் பெயரின்றி சுற்றிக்கொண்டிருக்கிறது.  நிச்சயம் இங்கு வரும் யாரோ ஒருவர் தான் அதை செய்திருக்கவேண்டும். இந்த தளத்திற்கு என்று சிறுதுளி கூட எதுவும் செய்யாதவர்களே (பொருளிருந்தும் மனமில்லாத காரணத்தினால்) இத்தகைய அற்பத்தனமான செயலை செய்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும். நம் தளத்தின் பதிவுகளை நமது அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு இந்த வழக்கத்தை நிறுத்திக்கொள்ளவேண்டும். இனி இந்த செயல் தொடர்ந்தால் ‘சைபர் கிரைம்’ பிரிவில் புகார் செய்யப்படும் என்று தெரிவித்துகொள்கிறோம். ஏற்கனவே இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவிடம் பேசியிருக்கிறோம். நமது பதிவுகளை பகிர விரும்பினால் அதற்குரிய வசதிகள் பதிவின் தொடக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ளன. நமது முகநூலில் பகிர்வதற்கு சுலபமாக பதிவில் பாதி வெளியிடப்படுகிறது. அவற்றை பகிரலாம்.

நாம் போகவேண்டிய தூரம் எட்டவேண்டிய உயரம் இன்னும் உள்ளது. எம்மை வாழவிடுங்கள்… வளரவிடுங்கள்!

========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

Articles on Power of prayer : 

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!”

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

==========================================================

Articles on Motivation : 

அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

==========================================================

[END]

5 thoughts on “எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

  1. அய்யா வணக்கம் . “இறை தேடுவதோடு இரையும் தேடு ” திருப்புகழ் . ஒவ்வரு மனிதருக்கும் பிரார்த்தனையும் முயற்சியும் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்பதை இன்றைய இளைஞர்களை மையப்படுத்தி சொல்லிய விதம் அருமை .
    “TIME TO PRAY GOD COME TO CLOSER”

  2. மனித முயற்சிக்கும் பிரார்த்தனைக்கும் இடையே உள்ள பந்தத்தை இதவிட அற்புதமாக விளக்க முடியாது.

    கப்பல் படமும் அதில் இடம்பெற்றுள்ள பொன்மொழியும் அருமை.

    மிக மிக பொருத்தமான திருக்குறளை பதிவில் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். வள்ளுவர் தொடாத விஷயமே இல்லை. படித்தாலே எளிதில் பொருள் விளங்கும் குறள். யாரும் மறக்கக்கூடாத குறள்.

    தளத்தின் பதிவுகளை அனுமதியின்றி காப்பி செய்து வெளியிடுகிறவர்கள் மீது எவ்வித தயவும் காட்டவேண்டாம். இந்த விஷயத்தில் உங்கள் கருத்துக்கு நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. நல்லதொரு பதிவு.
    பிரார்த்தனையின் முக்கியத்தை உணர்த்தும் இன்னும் ஒரு பதிவு.
    கடல் அமைதியாக இருக்கும் போது பிரார்த்தனை செய்வேன். கடல் ஆர்பரிக்கும் போது கப்பலை செலுத்துவதில் கவனம் செய்வேன் என்பது மிக அருமையான வரிகள். நமக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் பிரார்த்தனை செய்து கொண்டால் பிரச்னை வரும்போது அதை நாம் அணுகும் முறை சுலபமாக இருக்கும்.
    நன்றி

  4. சுந்தர் சார்,

    முதலில் படிக்கும் பொழுது இயல்பாக இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு முறை தொடக்கத்தில் இருந்து படியுங்கள் என்று சொன்னது பிறகு முதிலில் இருந்து படித்தேன். எதிர் பார்கத விளக்கம். மிக அருமை. இளைனர்களுக்கு மற்றும் அனைவருக்கும் தேவையான பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *