Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > நீண்ட நாள் வாழ்வதற்குரிய வழி என்ன தெரியுமா?

நீண்ட நாள் வாழ்வதற்குரிய வழி என்ன தெரியுமா?

print
மூச்சு விட்டுக்கொண்டு பூமிக்கு பாரமாய் இருப்பதெல்லாம் வாழ்வதாகாது. எனவே பதிவின் தலைப்பை பார்த்து அனர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். ‘வாழ்தல்’ என்பதற்கு வள்ளுவர் தரும் இலக்கணமே வேறு. ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்கிறார் வாழ்தல் குறித்து தெய்வப்புலவர்.

வள்ளுவர் கூற்றிற்கு ஏற்ப, காலத்தால் அழியாத ஒரு காவியத்தை மொழிபெயர்த்து, அதன் மூலம் புகழ் பெற்று, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் இன்று எங்கோ உலகத்தின் மூலையில் ஒரு இணையத்தளத்தில் ஒரு பதிவாக பகிரப்பட்டு நினைவு கூறும் அளவிற்கு வாழ்ந்த ஒருவரைப் பற்றி பார்ப்போம்.

G U Pope 6

மிழகத்திற்கு கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் எத்தனையோ மேல்நாட்டு அறிஞர்கள் வந்துள்ளனர். தங்கள் மதத்தை பரப்பவேண்டும் என்கிற நோக்கிலேயே தமிழை கற்றனர். ஆனால், அவர்களுள் திரு.ஜி.யு.போப் மிக மிக வித்தியாசமானவர். காரணம் சைவைத் தமிழ் மீதும் திருவாசகத்தின் மீதும் அவர் கொண்ட ஈடுபாடு. தமிழகத்தின் உண்மை சமயம் சைவமே என்று இங்கிலாந்து சென்று எடுத்துரைத்தார்.

G U Pope 2

1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ஜி.யு.போப் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். Sacred Kural என்ற அவரது மொழியாக்கம் மிகச்சிறப்பானதாகப் போற்றப்படுகிறது.

G U Pope 3

இது தவிர நாலடியார்(1893), திருவாசகம் (1900) போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். இவைகள் தமிழ் – ஆங்கில அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.யு.போப் எழுதிய இலக்கண நூல்கள் தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்று பல பதிப்புகள் கண்டவை.

Thiruvasagam GU Popeஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப் மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது.

தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் அங்கு ஒரு வேதாகம கல்லூரியில் பணியாற்றினார். அந்தக் கல்லூரி முதல்வர் பெஞ்சமின் ஜோவேட் போப்பின் நெருங்கிய நண்பர். அவரிடம் போப் அடிக்கடி மனம்விட்டு பேசுவதுண்டு.

ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், “நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்” என்று வற்புறுத்தி இருக்கிறார்.

அதற்கு போப் தனது முதுமையினைக் குறிப்பிட்டு, “அது சாதாரண பணியல்ல. அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். நானும் சாகாவரம் பெற்றவன் அல்ல. அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை!”எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு போப்பின் நண்பர் அவரை இறுக்க அணைத்து, “உன்னதமான பணி ஒன்றில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது தான் நீண்ட நாள் வாழவதற்க்குரிய வழி. நீங்கள் நிச்சயம் இந்த மகத்தான பணியை முடிக்கும்வரை வாழ்வீர்கள்” என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்.  WHAT A POWERFUL & MEANINGFUL WORDS…

“உன்னதமான பணி ஒன்றில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது தான் நீண்ட நாள் வாழவதற்க்குரிய வழி. நீங்கள் நிச்சயம் இந்த மகத்தான பணியை முடிக்கும்வரை வாழ்வீர்கள்”

அப்போது போப்புக்கு வயது 75. இருப்பினும் 656 பாடல்களையும் ஐந்தாண்டுகளில் மொழியாக்கம் செய்து 1900 ஆம் ஆண்டு நூலாக எழுதி முடித்தார். நூல் வெளியானபோது போப்பை உற்சாகப்படுத்திய நண்பர் பெஞ்சமின் உயிரோடு இல்லை. (ஒரு சிறந்த பணியை செய்யத் தூண்டியமைக்காக நிச்சயம் அவருக்கு இறைவனிடம் ஒரு உன்னதமான இடம் கிடைத்திருக்கும்!)

தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப் தனது 88ஆவது வயதில் 12.02.1908 மரணமடைந்தார்.

G U Pope 5

G U Pope 4

மரணமடைவதற்கு முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் என்றும் தனது கல்லறையின் மீது “A Student of Tamil” “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று செதுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டையொட்டி மெரினா கடற்கரையில் ஜி. யு. போப் சிலை அப்போதைய தமிழக சட்டப்பேரவை சபாநயாகர் திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களால் திறந்ந்துவைக்கப்பட்டது.

(மாசிமக தீர்த்தவாரி கவரேஜ்க்கு மெரினா கடற்கரை சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இவை!)

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!

திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்?

பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !

ஒளவையை தேடி வந்த அனுமன்!

===============================================================================

[END]

6 thoughts on “நீண்ட நாள் வாழ்வதற்குரிய வழி என்ன தெரியுமா?

 1. மிக நல்ல செய்தி

  போப் அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வெளியானபோது பெஞ்சமின் உயிரோடு இல்லை என படிக்கும்போது கண்கள் பனித்தன.

  நேர்த்தியான புகைபடங்கள்

  நன்றி

 2. வணக்கம் சுந்தர்.திரு போப் அவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு திருகுறள்கு படித்து உள்ளேன்(எல்லாவற்றிகும் இல்லை ).ஆனால் திருவாசகத்துக்கு படித்து இல்லை.இவ்வளவு பெருமை உடன் இருந்த மொழி இன்று நாமே படிக்காத நிலைமை. விரைவில் இந்த நிலை மாறும் என்ன நம்புவோம்.நன்றி

 3. Dear Sundar Sir

  You have published a very good article. Really very good.

  Regards

  S. Chandrasekaran

 4. போப் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  புகைப்படங்கள் மிகவும் அருமை. ஒரு அயல் நாட்டினர் தமிழ் கற்று, திருவாசகத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார் என்று படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  போப்பின் நண்பர் சொன்ன வரிகள் வைர வரிகள்.

  நன்றி
  உமா வெங்கட்

 5. “உன்னதமான பணி ஒன்றில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது தான் நீண்ட நாள் வாழவதற்குரிய வழி. நீங்கள் நிச்சயம் இந்த மகத்தான பணியை முடிக்கும்வரை வாழ்வீர்கள்”

  வாழ்தல் எப்படி இருக்க வேண்டும் என்று – குறள் வழி காட்டி…போப்பின் வாழ்தலை ஒரு மையத்தில் சேர்த்து, பதிவிட்டது இனிது. மேற்கோள் காட்டிய வரிகள்..வைர வரிகள்..அதோடு அவை உயிரோட்ட வாழ்தலுக்கான வரிகள்.

  உன்னதமான பணி செய்து..ஒரு தமிழ் மாணவன் என்று கல்லறையில் எழுத வேண்டும் என்றால் அவரது தமிழ் பற்று என்னே..! சைவ பற்று என்னே!!

  வியக்க வைக்கும் பதிவு..வாழ்தலுக்கான அறம், வரலாற்று சம்பவம், தமிழ் பற்று,சைவ பற்று என இந்த பதிவு பல விசயங்களை எடுத்து பேசுகிறது.

  நன்றி அண்ணா..

 6. Very nice Article Sundar..
  G U Pope has also written a book on How to Learn Tamil…. Father of the Nation Mahatma Gandhiji had this book with him, when he was in South Africa. Gandhiji used this book to learn Tamil.. He also reportedly took Tamil classes to Children in Phoenix Farm in South Africa..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *