அதிருத்ர மஹாயக்ஞம் 2015 – டொரன்டோ, கனடா
கனடா நாட்டில் முதல் முறையாக அதிருத்ர மஹாயக்ஞம் டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது.
ப்ராம்டன் வேதா குழவின் சார்பில் அதிருத்ர மஹாயக்ஞம் ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை திருவாரூர் ஸ்ரீ பாலகிருஷ்ணா சாஸ்திரிகள் தலைமையில் அவரிடம் வேதம் பயிலும் 60 வித்யார்த்திகள் நடத்த உள்ளனர்.
ஸ்ரீ பாலகிருஷ்ணா சாஸ்திரிகள் கும்பகோணத்தில் வேதபாடசாலையில் சிறுவயது முதல் முறையாக வேதம் பயின்றார். கடந்த 30 வருடங்களாக டொரன்டோ மாநகரில் வேதம் கற்பித்து வருகிறார்.
ப்ராம்டன் வேதா குழவினர் இதுவரை நடத்திய முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:
- ஏகாதஸருத்ர மஹாயக்ஞம் 2011 (11 ஸ்ரீ ருத்ர அநுவாகம் மற்றும் 11 சமக அநுவாகம்)
- மஹாருத்ர மஹாயக்ஞம் 2012 (1331 ஸ்ரீ ருத்ர அநுவாகம் மற்றும் 121 சமக அநுவாகம்)
- ஸ்ரீ ஸுதர்ஸன ஹோமம் 2014 (1008 மூல மந்த்ரம்)
தற்போது நடைபெற இருக்கும்; அதிருத்ர மஹாயக்ஞத்தில் 14,641 முறை ஸ்ரீ ருத்ரமும் 1331 முறை சமகமும் ஓதப்படும்.
ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேதத்தின் இதயம் போன்று நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீருத்ரம் சிவபெருமானின் தொடக்க வழிபாடாக உள்ளது. அக்னியை வளர்த்து வேத மந்திரத்துடன் ஓதுவதை ஸ்ரீ ருத்ரம் என்பர். நமகமும் சமகமும் உள்ளடக்கியது ஸ்ரீ ருத்ரம். நமகம் – ருத்ரனுக்கு நமஸ்காரங்கள் செய்தல்; சமகம் – ருத்ரனிடம் நமக்கு வேண்டியதை பிரார்த்தனை செய்தல்.
விதி: நாம் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வது.
நிஷேதம் : நாம் எதை செய்யக் கூடாதோ அதை செய்யாமல் இருப்பது. பல சமயங்களில் நாம் நம்மை அறியாமல் எதை செய்யக்கூடாதோ அதை செய்வதனால் நம்மை பாவம் வந்து அடைந்துவிடுகிறது. அதற்காக, போன ஜென்மம் மற்றும் இந்த ஜென்மத்தின் பாவங்களை போக்குவதற்காகவே “அதிருத்ரம்” மஹா ப்ராயச்சித்தமாக அமைந்துள்ளது.
For more details and to support the yagna please check : www.vedashastra.ca
[END]
கனடாவில் முதன் முதலாக மகா யாகம் நடப்பதை அறிவதில் மிக்க மகிழ்ச்சி. கனடாவில் நடக்கும் நிகழ்ச்சியை நம் தளம் மூலமாக வாசகரகளுக்கு தெரியப் படுத்தியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
ஓம் நாம சிவாய
வாழ்க……… வளமுடன் ………
நன்றி
உமா வெங்கட்