Saturday, December 15, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > All in One > உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!!

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!!

print
நம் நண்பர் சுந்தர் மறைவு ஏற்று கொள்ள முடியாத பெரிய இழப்பு. நண்பர்களும், ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரிய வெற்றிடம் தான் தெரிகிறது.
அவரின் இந்த அசுர மாற்றம் கடந்த 3-4 வருடங்களில் ஏற்பட்டது. அவர் பிறவியிலேயே நல்ல எழுத்தாளர். சூப்பர் ஸ்டார் தளத்திலும் ஏகப்பட்ட வாசர்கள் உண்டு. www.rightmantra.com எந்த அளவிற்கு பரவியதோ அந்த அளவிற்கும் மேல் ரைட் மந்த்ரா சுந்தர்ஜி யின் புகழ் பரவியது.
அவரின் தொண்டு, சுய முன்னேற்றம், வேத சம்ரக்ஷணம், பாரதி / விவேகானந்தர் / திருவள்ளுவர் வழி படி எப்படி வாழ்வது, ஆன்மிகம், நீதி / பக்தி கதைகள், ஆலய தரிசனம், உடல் / மன நலம், மகா பெரியவா பதிவுகள், மாமனிதர்கள், உழவாரப்பணி, வேத பாடசாலைகளுக்கு உதவுதல், முக்கிய சந்திப்புகள், என்று அவர் அசத்தாத பதிவுகளே இல்லை.
ஒன்றை சொல்லும்போது நாம் அதற்க்கு தகுதியானவன் தானா என்று யோசித்து, அதற்கேற்ற தகுதிகளை வளர்த்து கொண்டு பிறகு தான் அந்த பதிவையே வெளியிடுவார்.
இப்பேர்ப்பட்ட ஒரு ஆத்மாவிற்ற்கு, இவ்வளவு புண்ணியம் சேர்த்தவருக்கு, இத்தனை உதவிகளை செய்தவருக்கு, இவ்வளவு உழவாரப்பணியை செய்தவருக்கு, வேத சம்ரக்ஷணமே முழு மூச்சாக செயல் பட்டவருக்கே இந்த கோர மரணமா என்று நினைக்க தோன்றுகிறது. நம் நண்பர்கள் சிலபேர் நம் ஆன்மிகத்திலும் நற் செயல்களிலும் கூட சலிப்பு ஏற்பட்டு விட்டதாக கூறினார்கள். என்ன சார் இப்படி ஒரு மனிதருக்கு இப்படி ஒரு சோகமா? என்று கேக்காதவரே இல்லை எனலாம்.
இதற்க்கு சுந்தர்ஜியே ஒரு பதிவில் விடை  தந்துள்ளார்.
எல்லா நேரத்திலும், எல்லா நிகழ்விகளும் நம் control இல் இருப்பதோ நாம் எதிர்பார்த்த படி நடந்து விடவோ  முடியாது. இது தான் விதி. நம் கர்ம வினைகளை முடிப்பதற்ற்க்கே நாம் அனைவரும் பிறவி எடுத்துள்ளோம். வந்த வேலை முடிந்ததும்  கிளம்பவேண்டியதுதான். அதற்க்கு தான் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள், உலகமே ஒரு நாடக மேடை, அதில் நாமெல்லாம் ஒரு பொம்மை. ஆட்டம் முடிந்ததும் பொம்மையை  வைத்து என்ன செய்வது. பெட்டியில் அடக்கம்.
இதற்கு  ஆண்டவனை கூறுவதோ, விதியை குறை சொல்வதோ சரியாகாது.  ஏன் இள வயதில் பாரதிக்கும், விவேகானந்தருக்கும் மரணம், ஏன் ரமண பகவானுக்கு  கொடிய நோய், அப்பேற்பட்ட மகா பெரியவாளுக்கு கூட ஜீவ உடல்  கஷ்டம் கொடுக்கவே செய்தது. இது நம் மண்ணில் வந்து திரும்பவதற்கான ஒரு  பாதை.இதில் ஜனனம் மரணம் ஒரு இயற்கை விதி.
இருக்கும் போது  உள்ளங்களை மகிழ செய்தோம் என்பது மட்டுமே  நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் தினந்தோறும் எவ்வளவளோ குறைகளுடன் தான்  கழிக்கிறோம், அவற்றை எல்லாம் நாளை முதல் ஒவ்வொன்ற்ரக list போட்டு  நாள் ஒன்றுக்கு ஒரு குறையை தவிர்ப்போம்.
எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு கோபம் அதிகமாக வரும் என்றால், நாளை முதல் நாம் ஒரு சபதம் ஏற்போம், இன்று ஒரு நாள்:
என் மனைவி மக்களிடம் கோப படமாட்டேன்,
என் சுற்றத்தாரிடம் கோப பட மாட்டேன்,
என் அலுவலக பணியாளர்களிடம் கோப பட மாட்டேன்.
இதற்க்கு ஒரு check செய்ய, கையில் 5 ஒரு ருபாய் நாணயம் வைத்து கொள்வோம், (தனியாக)  நாம் கோப படும் போது, ஒரு ரூபாயை நம் பாக்கெட்டில் இருந்து எடுத்து நம் வீட்டிலோ அலுவலகத்திலோ உள்ள ஒரு சின்ன டப்பாவில் போடவும். இரவு, அதில்  சேர்ந்த  ஒரு ரூபாய்களை எண்ணினால் நாம் எவ்வளவு முறை நம் கட்டுப்பாட்டை மீறி இருக்கிறோம் என்று  புரியும். இந்த ஒரு வழக்கம் தினமும் செய்யலாம், எந்த விஷயத்திற்கும் செய்யலாம்.
ரைட்மந்த்ரா சார்பாக சுந்தர்ஜியின் உருவ படம் ஒன்றும், அவர் ஏற்படுத்திய பிரார்த்தனை படம் திறப்பும் அன்னாரது வீட்டில்   விரைவில் திறக்க முனைந்துள்ளோம். முன்னமே தகவல் சொல்லப்படும் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொண்டு அவருக்காக வந்திருந்து மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம்.
மகா பெரியவா துணையுடன் அனைவரின் நல்லாசியுடன், சுந்தர்ஜியின் பரிபூரண ஆசீர்வாதத்தாலும் ரைட்மந்த்ரா தளம் தொடர்ந்து இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். நாம் ஆலயம் செல்லும்போது சுந்தர் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், நற்கதி அடையவும் ஆலயத்தில் ஒரு மோட்ச தீபம் ஏற்றி வேண்டிக்கொள்வோம். இதை எந்த நாளிலும் எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
வாசகர்கள் அனைவரும் அவருக்கு கொடுத்த அதே ஆதரவை இந்த தளத்திர்ற்கு தந்து உதவ வேண்டும் என்று உளமார வேண்டுகிறோம். அவரின் ஒவ்வொரு பதிவும் வாழ்க்கைக்கு ஒளி விளக்கு, நம் இருளை போக்கும் தீபம். மகா பெரியவாளும், விவேகானந்தரும் சுந்தர்ஜியின் இரு கண்கள். அவர் காட்டிய வழியில் நாம் நம் வாழ்க்கையை தொடர்வோம்.
அவரின் இந்த வலை தளத்தை தொடரவும், அவரின் ஆதரவு இல்லா குடும்பத்திற்கு தொடர்ந்து உதவுவதே நாம் அனைவரும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
வங்கி கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தங்களால் முடிந்த தொகையை மாதா மாதம் அதில் செலுத்தி உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.
==============================
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?
நீங்கள் அளிக்கும் விருப்ப சந்தாவைக் கொண்டே இந்த தளம் நடத்தப்படுகிறது என்பதை மறக்காதீர்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Rightmantra Soul Solutions |A/c No.: 9120 2005 8482 135  |Account type :Current Account  |
Bank :Axis Bank, Poonamallee, Chennai – 600 056.IFSC Code :UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==============================

இப்படிக்கு அடியேன் தாசன் ராஜ்குமார் (முக்கிய நண்பர்கள் கருத்துக்களுடன் தான் இந்த பதிவு)

==============================

வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
அகத்தியர் லோபாமுத்ரா,கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும்
குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும் சித்தர் ஹோமம், அறுபடை வீடு முருகன் கோவிலில் வரும் வியாழன் அன்று நடைபெற
உள்ளது. இத்துடன் ஹோமத்திற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.
காலை 6.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது.
குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று, தகவல்களை
பதிவு செய்து கொள்ளவும்.
கோவில் முகவரி :பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், அஷ்டலக்ஷ்மி கோவில் அருகில்,கலா ஷேத்ரா காலனி
பெசன்ட் நகர்,சென்னை – 90
இதில் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன்  கலந்து கொள்ள அன்புடன் வேண்டி கொள்கிறோம்.
அறுபடை வீடு முருகன் கோவில் பற்றி அறிய
=====================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *