ஒரு பக்கம் புண்ணியம் சேர்த்துக்கொண்டே சென்றாலும் மறு பக்கம் அந்த புண்ணியம் பலனற்று போகும் விதம் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சற்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும். ஒட்டைப் பாத்திரத்தில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிற்காமல் ஒழுகிக்கொண்டே இருப்பதை போல, நமது புண்ணியச் செயல்கள் பலனளிக்காமல் போவதற்கு இவை காரணமாக இருக்கலாம்.
எனவே நமது புண்ணியச் செயல்களை பலனற்று போகச் செய்யும் சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.
அவற்றில் முதலில் சினிமா நட்சத்திரங்களை பற்றிய கிசுகிசுக்களை படிப்பது பேசுவது.
இது மிகப் பெரிய பாவம்!!
ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதை மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அதில் தலையிடவோ கருத்து சொல்லவோ நமக்கு எந்த வித உரிமையும் இல்லை. “எங்களால் தானே அவர்கள் பிழைக்கிறார்கள். எனவே எங்களுக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச உரிமை இருக்கிறது” என்று எவரும் வாதிடக்கூடாது. எந்த நடிகரும் நடிகையும் நம் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போய் தியேட்டரில் அவர்களின் படத்தை பார்க்க சொல்வதில்லை. நாமாக விரும்பி பார்க்கிறோம். அந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?
இப்போது புற்றீசல் இப்போது சினிமா இணையதளங்கள் பெருகிவிட்டன. இவற்றில் பல இணையதளங்கள் பார்வையாளர்களின் மலிவான ரசனையை தூண்டுவது, நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றிய செய்திகளை வெளியிடுவது, கிசுகிசு என்கிற பேரில் தனிப்பட்ட விஷயங்களை அம்பலப்படுத்துவது என்று இவை செய்கின்றன.
இப்படிப்பட்ட இணையங்கள் பொருளீட்டுவது போல தோன்றும். ஆனால் இப்படி ஈட்டப்படும் செல்வம், பாவமூட்டைகளை சம்பந்தப்பட்டவர்களின் மீது சுமத்துவதோடு நிலைக்கவும் நிலைக்காது.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. (குறள் 660)
இவற்றை சுவாரஸ்யம் கருதியும் பொழுதுபோக்கு கருதியும் பலர் படிக்கின்றனர். (மேற்படி தளங்களில் கூறப்படும் செய்திகள் 95% உண்மைக்கு புறம்பானவை என்பது அந்த தளங்கள் அடுத்தடுத்து வெளியிடும் தலைப்புக்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.) அப்படிப்பட்ட தளங்களை தங்கள் முகநூலில் FOLLOW வும் செய்கின்றனர். அதை பெருமையாகவும் நினைக்கின்றனர். பாவமூட்டைகளை கட்டி கூடவே இழுத்துக்கொண்டு செல்வதை பெருமையாக நினைப்பவர்களை என்ன சொல்ல?
நீங்கள் எவரை பற்றியாவது புறம் பேசினாலோ அல்லது உண்மை தெரியாமல் அவதூறு கூறினாலோ உங்கள் அன்றைய நாளின் புண்ணியம் முழுதும் அவர்களுக்கு போய்விடும் என்பது தெரியுமா?
சினிமா நட்சத்திரங்களுக்கு தாரை வார்க்கவா நாம் பாடுபட்டு புண்ணியம் சேர்க்கிறோம்?
ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். ஊடங்களால் அதிகளவு கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்கள் வாயில் அவலாக உள்ள ஒரு நடிகை தான் தற்போது அதிகபட்ச சம்பளம் பெறுகிறார். காரணம் வேறு ஒன்றுமில்லை… அத்தனை பேரின் புண்ணியமும் அவருக்கு சென்றுகொண்டிருக்கிறது!!
நம் தள வாசகர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் இது தான்… சினிமா நட்சத்திரங்களை பற்றிய கிசுகிசுக்களை படிப்பது, அவற்றை உங்கள் நண்பர்களிடம் டிஸ்கஸ் செய்வது போன்றவற்றை நீங்கள் அறவே தவிர்க்க வேண்டும்.
சில இணையங்களில் கமெண்ட் பகுதியில் நடைபெறும் தனி மனித தாக்குதல்கள் குறிப்பாக சினிமா நடிகர், நடிகைகளை பற்றிய அருவருப்பான கருத்துக்களை படித்து இன்புறும் வழக்கம் எவருக்கேனும் இருந்தால் அதை இத்தோடு விட்டுவிடுங்கள். மிக மிகப் பெரிய பாபம் அது.
சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. திருமண வாழ்க்கை தோல்வியுற்று விவாகரத்து பெற்ற நடிகை ஒருவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதற்காக அவரை மிக மிக தரக்குறைவாக ஊடகங்களில் இணையங்களில் விமர்சித்தவர்கள் பலர். அப்படி விமர்சித்தவர்களின் கருத்துக்களை படித்து அதை ரசித்தவர்கள் இன்னும் பலர். “இப்போ எதுக்கு இவங்க கல்யாணாம் பண்ணிக்கணும்? எல்லாம் அதுக்கு தான்…” என்ற ரீதியில் பலர் விமர்சித்தனர். ஆனால் எந்த சூழ்நிலையில் அந்த நடிகை மறுமணம் செய்துகொண்டார் என்ற உண்மையை அறிந்துகொண்டால் அந்த நடிகைக்காக இவர்கள் அனைவரும் மிகவும் பரிதாபப்படுவார்கள்.
சினிமா உலகம் வெளியில் இருந்து பார்க்கத்தான் பளப்பளவென்று இருக்கும். உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் அதன் உண்மை தன்மை. பல நட்சத்திரங்கள் தாங்கள் நிம்மதியாக இருப்பதை போன்று நடிக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. சினிமா உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. எதையாவது இழந்து தான் எதையாவது பெறமுடியும் என்பது பிரபஞ்சத்துக்கே பொருந்தும் விதியானாலும் சினிமா உலகில் அது தான் அடிப்படை விதி.
பணம் ஒன்று தான் வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வேண்டுமானால் சினிமா உலகம் மகோன்னதமாக தெரியலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களும் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை சீக்கிரம் புரிந்துகொள்வார்கள்.
எனவே உண்மைக்கு புறம்பான, மலிவான உணர்சிகளை தூண்டும் செய்திகளை வெளியிடும் இணையங்களை படிப்பதை தவிர்க்கவும். நடிகர் நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களை, செய்திகளை படிப்பதை தவிர்க்கவும். நமது ஆற்றலை நடிகர் நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களை செய்திகளை படிப்பதில் விரயம் செய்ய வேண்டாம்.
இப்படி சொல்வதால் சினிமாவிலிருந்து விலகி இருங்கள் என்றோ திரைப்படங்களே பார்க்கவேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. பொழுது போக்கு என்பது வாழ்க்கைக்கு தேவை தான். எனவே மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்துக்கு ஒருமுறையோ திரைப்படங்களுக்கு சென்று வாருங்கள். அத்தோடு உங்கள் வேலையை பாருங்கள். அவ்வளவே…! சினிமா நட்சத்திரங்களுக்கும் சினிமா ரசிகனுக்கும் இடையே உள்ள பந்தம் / தொடர்பு தியேட்டர் வாசலோடு முடிந்துவிடவேண்டும்.
எனக்கு தெரிந்து ஒருவர். நல்ல செய்திகளை, ஆன்மீக தகவல்களை பகிர்ந்து வருகிறார். கூடவே சினிமா நட்சத்திரங்களை பற்றிய தனிநபர் தாக்குதல்கள், கிசுகிசுக்கள் என்றும் பகிர்கிறார். ஜான் ஏறி முழமல்லவா சருக்கிகொண்டிருக்கிறார். என்ன புண்ணியம் சேர்த்து என்ன பயன்?
=========================================================
Also check similar articles :
ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
=========================================================
சிலரது முகநூலை பார்க்கும்போது எனக்கு அது தான் தோன்றும். ஒரு பக்கம் ஆன்மிகம், கோவில், தர்மம், சைவம், வைணவம். திருமலை திருப்பதி, யோகா, தியானம், மூலிகை, வாழும் கலை, உடற்பயிற்சி என்று உன்னத விஷயங்கள். கூடவே மலிவான உணர்சிகளை தூண்டும், ரசனைகளை மழுங்கச் செய்யும், வக்கிரங்களை கூவி கூவி விற்கும் சினிமா மற்றும் கிசு கிசு இணையங்களை ஃபாலோ செய்துகொண்டிருப்பார்கள். என்ன பயன்?
நமது நேரத்தையும் ஆற்றலையும் ஆக்கப்பூர்வமான நமது முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய விஷயங்களை நோக்கி திருப்பவேண்டும்.
நமது நேரத்தை வீணடிக்கும், ரசனைகளை மழுங்கச் செய்யும், வக்கிரங்களை தூண்டும் எதையும் நாம் ஏறெடுத்தும் பார்க்க வேண்டாம்.
நாம் மகத்தான காரியங்களை சாதிக்க பிறந்தவர்கள். இறைவன் நம்மை இந்த பூமிக்கு அனுப்பியதற்கு காரணமும் அது தான். அற்ப விஷயங்களில் நமது கவனத்தை செலுத்தி ஏன் நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளவேண்டும்?
ஒரு நாள் பாரதியார், ஊரில் தண்டோரா போடுபவனை அழைத்து, “சாகாமல் நீண்ட நாள் வாழ்வது எப்படி” என்பது பற்றி தான் பேசப்போவதாகவும், அதனால் ஊர் மக்கள் எல்லோரையும் ஊர்த் திடலில் மாலை 5 மணிக்கு கூடும் படியும் அறிவிக்கச் சொன்னார். அவனும் ஊரில் சென்று, எல்லா தெருக்களிலும் அவ்வாறே அறிவித்தான்.
சாகாமல் இருப்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எவருக்கு இருக்காது? அனைவரும் மாலையில் ஊர்த்திடலில், பாரதியாரின் அந்த பேச்சை கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் பாரதியார் அங்கு வந்தார். திடலில் ஒரு நாற்காலி போட்டு அதில் ஏறி நின்றார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.
“சாகாமல் இருப்பது எப்படியென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அதெற்கெல்லாம், முதலில் உயிரோடு இருக்க வேண்டுமே! எப்பொழுதும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அடுத்தவரைப் பற்றி புறம் பேசியே காலத்தைக் கழிக்கும் நீங்கள் எல்லாம், ஏற்கனவே இறந்த பிணங்கள் தான்! உங்களால் எப்படி சாகாக் கலையை கற்றுக்கொள்ளமுடியும்?” – என்று பேசி விட்டு, இறங்கி வேகமாக நடந்து போய் விட்டார்.
பாரதி சொன்னது எத்தனை உண்மை?
நாம் பிணங்களா? அல்லது உயிர் வாழ்பவர்களா?
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Also check :
பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!
பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ
சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ
பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!
ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க? கண்டதும் கேட்டதும் (8)
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
==========================================================
[END]
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் !!! எத்தனை சூப்பர் சொன்னாலும் தகும் இந்த தரமான கட்டுரைக்கு! இந்த பதிவில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, ஆழமான வலுவான கருத்து.
சுந்தர், இதை இதை இதை இதைதான் உங்களிடம் எதிர்பார்த்தேன்.
நானும் பல சமயம் யோசித்ததுண்டு நாம் செய்யும் புண்ணியம் எங்கே போகிறது என்று. இந்த பதிவை படித்த பிறகு தெளிவு பிறந்துள்ளது. இதை என்னைபோன்றவர்களுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் உங்களுக்கு புண்ணியம். கோடானுகோடி நன்றி சுந்தர்.
டியர் சுந்தர்ஜி
மிகவும் அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு
நன்றி
உமா
wonderful article
நீங்கள் எழுதியுள்ள எல்லா வார்த்தைகளும் உண்மை.
படித்து முடித்தவுடன் மனமே ஒரு சுமையாகி போனது போல் இருந்தது.
ஆன்மிகம், சமூக தொண்டு அல்லாமல் பொதுபடியாக நீங்கள் எழுதும் கட்டுரைகளில் இது முதன்மையானது.
கமெண்ட் சொல்ல முடியவில்லை ஆரம்பம் முதல் முடிவு வரை மனதை தொட்டது மட்டும் நிஜம்.
டியர் சுந்தர்ஜி
ஏதோ எனக்காகவே எழுதியது போன்ற உணர்வு..சிந்திக்க வைத்தமைக்கு
நன்றி.
பாலு
சுந்தர் சார்
புறம் பேசுபவர்களை விட்டு ஒதுங்கிநளை போது சார்
மிக மிக மிக அருமையான பதிவு..
நன்றி
பெஸ்ட் போஸ்ட்… நன்றி சுந்தர்…
திங்கள்கிழமை சிறப்பு பதிவில் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக அற்புதமான பதிவு
தங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்
நன்றி
சுந்தர்ஜி
எல்லோரையும் சிந்திக்க வைக்கும் நல்ல ஒரு அருமையான பதிவு. இது தொடர் கட்டுரை என்பதால் இன்னும் நிறைய நம்மை திருத்திக்கொள்ள பாடம் வரும் என நினைக்கிறேன். நன்றி
சுந்தர்ஜி
உங்கள் கட்டுரை மிக மிக மிக அருமை நீங்கள் எழுதும் கட்டுரை அனைத்தும் ஒரு முத்து..என்ன சொன்னாலும் தகும். உங்கள் கட்டுரை படித்து நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம். வரும் காலத்தில் நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர் ஆக வாய்ப்பு உள்ளது. நீங்கள் நிறைய எழுதி அனைவரும் பயன் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்
Dear Sundarji,
Excellent article..
Regards
Harish.V
சுந்தர் ஜி ,
அதிகமான நாள் மனதுக்குள் இருந்த அழுத்ததின் வெளிப்பாடு தான் இந்த பதிவிற்கு காரணமாக அமைந்துள்ளது .நிச்சயம் தாங்கள் கூறும் அணைத்தும் ஏற்றுக்கொள்ள கூடியது ….
எல்லோரும் மாறவேண்டும் …
-நன்றி
-மனோகர்
ரொம்ப நல்லா இருக்கு!! இந்த சமூகத்தை கெடுப்பவர்களே நடிக நடிகைகள் தான். இப்போ வர படத்தையோ அல்லது பாடல்களையோ அல்லது காம (நெடி)டி களையோ பார்க்கவோ கேட்கவோ முடியுமா? இவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க இந்த சமூகத்தை கெட்டவர்களாக மாற்றி விட்டார்கள். சினிமா நடிகர் நடிகைகளின் ஸ்டைல், நடை, உடை பாவனை என எல்லாம் நம் மீது திணிக்கப் பட்டுவிட்டது. இன்று எந்த டி வீ சேனல் எடுத்தாலும் சினிமா சினிமா சினிமா தான். நம்முடைய வாழ்வில் கலந்து விட்ட ஒரு செயல் எல்லோரும் வெளிப் படுத்துகிறார்கள். உங்கள்ளால் முடிந்தால் இந்த தவறை சரி செய்யுங்கள். இதை படிப்பவர்கள் நிச்சயமாக திருந்தப்போவதில்லை. சினிமா இப்போது நல்லவர்கள், சமூக அக்கறைக் கொண்டவர்கள் கையில் இல்லை. எல்லோரும் ஒரே இரவில் பணம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு ஒரே கேவலமான வழி காதல், காமம், களவு, கொள்ளை என்ற வழி
என்பதே பிரதானப் படுத்தி படம் எடுக்கிறார்கள். இதனை பார்ப்பவர்கள் அப்பாவி பொது மக்கள், இதனை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். உங்களால் இந்த நிலையை மாற்ற முடியும் என்றால் அது நல்ல பணி. எப்போதும் உங்கள் தளத்தில் நடிகர் நடிகைகளைப் பற்றி பெட்டியோ, படங்களோ, செய்திகளோ தேவை இல்லை இது ஒரு வகை நிலைப்பாடு. சொந்த வாழ்க்கையில் நல்லவங்க (அவங்களுக்கு மட்டும்) ஆனா மக்கள் பார்க்கும் படங்களில் வில்லன் என இன்றைய நடிக நடிகைகள் இருப்பது ஒரு சமூகக் கேடு.
திரு சுந்தரேசன் அய்யா அவர்களுக்கு நன்றிகள்! மக்களின் மீது இருக்கும் நல்ல எண்ணமும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்ற எண்ணமும் மிக மிக வரவேற்க்கத்தக்கது, ஆனால் தனி ஒரு மனிதனாக இருந்து கொண்டு நம் எல்லோருடைய வாழ்க்கை தரமும் உயர வேண்டும் என்று நினைக்கும் திரு . சுந்தர் அவர்கள் எப்படி இந்த தவறை சரி செய்ய முடியும் அவர் சொன்ன படி சினிமா பார்ப்பதோடு நம் வேலையை முடித்துக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் அது முடியுமா (நான் சினிமாவுக்கு சென்று 10 வருடங்கள் ஆகிறது அதற்காக கவலை படுவதும் இல்லை ) தொடர்ந்து எந்த படமும் சரியாக ஓட வில்லை என்றால் எந்த நடிகர் அடுத்த படம் நடிப்பார்? எனவே ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை மாற்றிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் இது என்னுடைய கருத்து மட்டும் அல்ல இந்த சமூகம் மாற வேண்டும் என நினைத்த மிகப்பெரிய ஞானிகளின் கருதும் கூட எல்லாம் தனி மனிதன் கையில்தான் இருக்கிறது. நான் இன்றிலிருந்து என்னை சுற்றி உள்ளவர்களை மாற்ற முயற்சி செய்கிறேன் நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன். இந்த சமூகத்தின் மேல உங்களுக்கு உள்ள அக்கறைக்கு மீண்டும் தங்களுக்கு நன்றிகள் பல , தொடரட்டும் தங்களின் சமூகப்பணி.